Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Posted: 10 Feb 2015 01:57 PM PST

சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து. பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ...

பெயரில் என்ன இல்லை?

Posted: 10 Feb 2015 01:40 PM PST

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. குல தெய்வம், திருத்தல தெய்வம், அம்பிகை பெயர்கள் வைக்கப்படும். தாத்தா - பாட்டி பெயர்கள் வைக்கப்படும்போதும் தெய்வப் பெயர் வைக்கப்படுவது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதையே பொருளாகக் கொண்டு, பல்லாண்டு ஆராய்ச்சி செய்து பெயர் அகராதி வெளியிட்டவர் மேனகா காந்தி. மரங்கள் பற்றியும், விலங்குகள் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் மேனகா நிறைய நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய ...

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847)

Posted: 10 Feb 2015 01:39 PM PST

தாமஸ் ஆல்வா எடிசன் (1847-1931) தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன். இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ...

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 10 Feb 2015 01:19 PM PST

70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது. இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் ...

கு.காமராஜ்

Posted: 10 Feb 2015 01:17 PM PST

பெயர்:கு.காமராஜ்
சொந்த ஊர்:அகஸ்தீஸ்வரம், குமரிமாவட்டம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் தகவல்கள் தேடும்போது
பொழுதுபோக்கு: கவிதை, கட்டுரை,மேடைப்பேச்சு
தொழில்:அரசுப்பணி
மேலும் என்னைப் பற்றி:இரண்டு முதுகலைப்பட்டங்களும், தமிழில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளேன் தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துவருகிறேன்.

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 10 Feb 2015 01:13 PM PST

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்

Posted: 10 Feb 2015 12:57 PM PST

100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்.. அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்.. ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல.. வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 ...

என்னைப் பற்றிய அறிமுககம்..

Posted: 10 Feb 2015 12:50 PM PST

பெயர்: நா.முத்துநிலவன் சொந்த ஊர்:புதுக்கோட்டை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் தேடுபொறி பொழுதுபோக்கு: படிப்பது, எழுதுவது, பேசுவது தொழில்: அரசுப் பள்ளியில் 34ஆண்டுப் பணிநிறைவுத் தமிழாசிரியர் மேலும் என்னைப் பற்றி: தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் திரு லியோனி அவர்களின் குழுவில் அணித்தலைவராக 15ஆண்டுகளாகப் பேசிவருகிறேன். எனது http://valarumkavithai.blogspot.com/ எனும் வலைப்பக்கத்தில் எழுதிவருகிறேன். (1)புதியமரபுகள் (கவிதைகள்), (2) முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!(கல்விக் கட்டுரைகள்)ஈ ...

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே - கடித இலக்கியம்

Posted: 10 Feb 2015 10:38 AM PST

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!------- நா.முத்துநிலவன் ---------------- (கடிதஇலக்கியம்) என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு  நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.             அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை ...

உங்கள் தோழியாக !!!

Posted: 10 Feb 2015 10:35 AM PST

பெயர்:நித்யானந்தி
சொந்த ஊர்:ஈரோடு
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையத்தளம் மூலம்
பொழுதுபோக்கு:புத்தகங்கள் படிப்பது
தொழில்:கூட்டுறவு சங்க பணியாளர்
மேலும் என்னைப் பற்றி:உங்கள் தோழியாக என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

தெரிஞ்சுக்கோங்க!............. ஆசியா - ஆப்பிரிக்கா யானை!

Posted: 10 Feb 2015 10:28 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

முட்டை !

Posted: 10 Feb 2015 10:22 AM PST

ஒரு பணம் தா!

Posted: 10 Feb 2015 10:13 AM PST

கொல்லூர் என்ற ஊரில் வீரபாண்டி என்பவன் இருந்தான். பிறரை ஏமாற்றியே, அவன் வாழ்க்கை நடத்தி வந்தான். தன்னிடம் உள்ள பொருள்களைப் பிறருக்குக் குறைவான விலைக்கு விற்பான். பிறகு அவர்களை ஏமாற்றி, அந்தப் பொருள்களைப் பிடுங்கிக் கொள்வான். இப்படிச் செய்வது அவன் வழக்கமாக இருந்தது. அந்த ஊரில் நிறைய பேர் அவனிடம் ஏமாந்தனர். அவன் இயல்பை அறிந்த யாரும் அவன் வழிக்கே செல்வது இல்லை. அவனிடம் எந்தப் பொருளையும் வாங்குவது இல்லை. வெளியூரில் இருந்து கோபி என்பவன் தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடி வந்தான். அங்கேயே ...

கடவுளே... கடவுளே....

Posted: 10 Feb 2015 10:10 AM PST

புளியமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்த மைனா, ஒருநாள், இரை தேடிவிட்டு திரும்பி வரும் வேளையில், அந்த மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மரக்கிளையில் நின்றபடி, அந்த முனிவரின் முகத்தை உற்று நோக்கியது மைனா. முனிவர் முகத்தில் சோகம் நிழலாடியது. அவர் ஏதோ கவலையுடன் எதையோ நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பது போன்று மைனாவுக்குத் தோன்றியது. உடனே அந்த மைனா அவர் முன்னே பறந்து வந்து நின்றது. ""முனிவரே வணக்கம்! நான் நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மரத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போது தான் இரை ...

சினிமா - ஒரு பக்க கதை

Posted: 10 Feb 2015 10:05 AM PST

அடமானமாய் என்ன தருவீங்க...?

Posted: 10 Feb 2015 10:01 AM PST

ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி. அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். "எதுக்காகப் பணம் வேணும்...?" அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார். "கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்...!" "அடமானமாய் என்ன தருவீங்க...?" ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். "அடமானம்னா என்ன..?". "நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் ...

இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Posted: 10 Feb 2015 10:00 AM PST

- அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்... அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது ஒரு கலை..! - -itzNandhu - ---------------------------------- - ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் அவர்களுடைய கைரேகை போலவே பிரத்யேகமானது..! - -settaaikaaran - --------------------------------------- - நகர வாழ்க்கையில் ஆரோக்கியம் கெடுகிறது. கூடவே அதற்கு நல்ல வைத்தியமும் கிடைக்கிறது - Pethusamy - ------------------------------------- - இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது பூரா பழைய பானட்டன் ...

உன்னைப் பார்க்க முடியாமல் நான்...

Posted: 10 Feb 2015 09:54 AM PST

- நீ என் அருகில் வந்து பேசினாய் எல்லோரும் என் கண்களுக்கு தூரமாய்த் தெரிந்தார்கள் - என்னைக் கடந்து சென்ற எந்தப் பெண்ணும் என்னைக் கடத்திச் சென்றதாய் என் நினைவில் இல்லை என்னை நீ கடந்து சென்றபின் என்னிடம் கடத்தி செல்ல எதுவும் இல்லை - பூட்டி இருக்கும் உன் ஈடு நடை சாத்திய கோயில்! - எங்கு வரிசையில் நான் நிறக நேர்ந்தாலும் எனக்கு முன்பாக நீதான் நின்று கொண்டிருக்கிறாய் நீழலாகவோ அல்லது நினைவாகவோ - நீ நின்றுவிட்டுப் போன இடங்களிலெல்லாம் என் நிழல் நின்று கொண்டே இருக்கிறது - உன்னைப்பற்றி யாரிடமும் ...

உன் நினைவை எப்படிப் பாதுகாக்க..

Posted: 10 Feb 2015 09:52 AM PST

- விடிந்துவிடு இரவே விழித்திருக்கிறான் கூர்க்கா. – —————- – வாழ்த்து அட்டை முகவரியில் வருடினேன் எழுதிய கையை. – —————– – எப்படிப் பாதுகாக்க குடைக் கம்பியில் உன் கைரேகை. – —————– – தொட்ட நினைவு புரட்டிய பக்கத்தில் கூந்தல் முடி. – —————- – பாவம் தூண்டில்காரன் தக்கையின் மீது தும்பி. – —————– – மரக்கிளையில் குழந்தை வரப்பில் பண்ணையார் பயிரில் சிந்துகிறது பால். – ——————- –அறிவுமதி

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி.

Posted: 10 Feb 2015 09:50 AM PST

வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம். 'கொ… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள். உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், ...

சீனர்களின் கருணைக் கடவுள் இவர்..

Posted: 10 Feb 2015 09:44 AM PST

Guan Yin சீனர்களின் கருணைக் கடவுள் இவர்.. இந்த பெயரின் அர்த்தம் உலகில் இருக்கும் கண்ணீரின் ஒலியை கேட்கும் தாய் என்பது... - இவருக்கு 1000 கண்கள் 1000 கைகள் இருந்ததாக அவர்கள் நம்புகின்றனர்.. இந்த கருணை தாயை போற்றும் விதமாக சீனர்கள் 1000 கைகள் நடனத்தை ஒரு பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.... - - - - >தினேஷ்மாயா

விதவிதமான நிறங்களில்...

Posted: 10 Feb 2015 09:44 AM PST

- கப்பல்களைச் செய்து பக்கெட் நீரில் விட்டுச் சலித்தவள் விதவிதமான நிறங்களில் மைழையை வரைந்து உயிர்ப்பிக்கின்றாள் மணல் அள்ளியே மறைந்த ஆறுகளையும் வெட்டப்பட்ட முற்றத்து மரங்களையும் பின்பு... - கணினியின் வாசனைகளை உடைத்து விடுவிக்கும் ஆதி விளையாட்டுகளின் அடர்வில் கூடு கட்டத் தொடங்குகிறது அத்துவான நகரத்தில் குட்டிகளுடன் சுற்றித்திரிந்த மயிலிறகு! - =============================== >சி.கலைவாணி, வேலூர்

எந்தவொரு சிக்னலும் அதன் முழுப் பலனைத் தர, கூடவே ஒரு...

Posted: 10 Feb 2015 09:42 AM PST

- ராத்திரி தூங்கும்போது போற கரன்டும், பகல்ல தூங்கும் போது வர்ற ப்ரெண்டும்தான் ஒரு மனிதனின் கழுத்தறு நிலை..! - -செல்லி சீனிவாசன் - ------------------------------------- - உலகக் காதலர்களின் ஒரே கடவுள், அலெக்சாண்டர் கிரகாம் பெல்..! - வித்யா குருமூர்த்தி - --------------------------------------- - பூரிப்புடன் கும்மென்று இருப்பதால்தான் அது பூரி-என்றழைக்கப்படுகிறது. சுற்றளவில் சற்றே பெரிய வடையே அடை- என்றழைப்பபடுகிறது புரட்டிப் புரட்டி அடிக்கப்படும் ஆட்டாவே புரோட்டா என்றழைக்கப்படுகிறது - -வெங்கடேஷ் ...

காதலர்கள் தொலைபேசியில் இப்பிடித்தானோ?

Posted: 10 Feb 2015 09:40 AM PST

- இரண்டு காதலர்கள் (அதாவது ஒரு காதலன், ஒரு காதலி ) தொலைபேசியில என்னத்தத்தான் அப்பிடிக் கதைப்பாங்கள் எண்டு மண்டையப் போட்டு பிசையுறாக்களுக்காக…. - காதலி மிஸ்ட் கோல் குடுக்கிறா…. உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்… அவா: ஹலோ… இவர்: ஹாய்டா…. சொல்லு… அவா: இல்ல… சும்மா தான் கோல் பண்ணினன்… இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ கோல் பண்ணினாய்… எப்பயுமே மிஸ்ட் கோல் தானே… இவர்: ஓ! என்ன பண்றாய்? அவா: இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன். சேர் என்ன பண்றீங்க? இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 21 அம்பிகா சிவம்

Posted: 10 Feb 2015 09:32 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 21 சுபாஷ் சந்திரபோஸ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தகுந்தவர் நேதாஜி என்று அன்பாக அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ். காந்தியடிகள் அகிம்சை முறையில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வேண்டிக் கெஞ்சிக்கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது, அடிக்கு அடி கொடுத்தால்தான் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள் என்று வீரத்துடன் தன் போராட்டத்தைத் தொடங்கியவர் நேதாஜி. நேதாஜி என்றால் தலைவர் என்று அர்த்தம். அன்றைக்கு ...

ஆம் ஆத்மி சாதித்ததை 2016- ல் பாமக சாதிக்கும்: அன்புமணி ராமதாஸ்

Posted: 10 Feb 2015 09:23 AM PST

ஆம் ஆத்மி சாதித்ததை 2016- ல் பாமக சாதிக்கும்: அன்புமணி ராமதாஸ் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததுபோல 2016-ல் தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும். இன்று டெல்லியில் கேஜ்ரிவால் சுனாமி, அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாமக சுனாமி" என்றார். நன்றி : tamil ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 23 அம்பிகா சிவம்

Posted: 10 Feb 2015 09:18 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 23 தாமஸ் ஆல்வா எடிசன் நம் வாழ்வில் எத்தனையோ துன்பங்கள், துயரங்கள், மன வேதனைகள் வரலாம். ஆனால் அவையெல்லாம் நம் வெற்றியை பாதித்து விடாது. இன்ப,துன்பங்கள் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்வில் சாதனைபுரிந்த அத்தனை பேருடைய வாழ்க்கையுமே பல கசப்பான அனுபவங்கள் நிறைந்ததுதான். யாரும் எடுத்தவுடனேயே உச்சத்தைத் தொட்டுவிடவில்லை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடி வாழ்வின் உச்சத்தை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்தான் தங்கள் துறையில் ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 22 அம்பிகா சிவம்

Posted: 10 Feb 2015 09:14 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 22 மைக்கேல் ஜோர்டான் வாழ்வில் அனைவருமே வெற்றிபெற விரும்புபவர்கள்தான். ஆனால் எல்லோருக்கும் வெற்றி சாத்தியமாகி விடுவதில்லை. ஏன் அப்படி? நமது லட்சியம் என்ன? அதற்காக நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நாம் வெற்றியடைய முடியும். ஆசையிருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்றொரு பழமொழி உண்டு. தாசில் பண்ண ஆசையிருப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் அதைவிட்டுவிட்டு வெறுமனே ஆசைப்படுவதில் அர்த்தமில்லை என்பதைக் குறிப்பதற்கே ...

12-2-2015 ஜீனியர் விகடன் தரவிறக்க

Posted: 10 Feb 2015 09:11 AM PST

யானை கனவில் வந்த என்ன நடக்கும்?

Posted: 10 Feb 2015 08:54 AM PST

யானை கனவில் வந்த என்ன நடக்கும். எனக்கு இன்று 3 தடவை accident ஆகுற மாதிரி நடந்தது .

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 24 அம்பிகா சிவம்

Posted: 10 Feb 2015 08:45 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 24 அப்துல்கலாம் சிலர் எதற்கெடுத்தாலும் ஏதாவது காரணம் சொல்கிறார்கள். நான் அப்படியிருந்திருந்தால் பெரிய ஆளாகியிருப்பேன், நான் அங்கு பிறந்திருந்தால் எப்படி ராஜவாழ்க்கை வாழ்ந்திருப்பேன் என்று கற்பனையில் மிதப்பதையே வாழ்க்கையாக வைத்துள்ளார்கள். பிறப்பது என்பது நம் கையில் இல்லை. எப்படி, எங்கே பிறந்தாலும் நம் மன வலிமையால் எத்தகைய உயர்ந்த பதவியை வேண்டுமானாலும் பெறமுடியும். நாம் இலக்கை நிர்ணயித்து அதைநோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டால் பிரபஞ்சமே நமக்கு உதவியாக ...

புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க

Posted: 10 Feb 2015 08:44 AM PST

அன்பு உறவுகளே ,

ஈகரை தமிழ்க்களஞ்சியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களாக "விமந்தனி" , "மதுமிதா" ஆகிய இருவரையும் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


தங்களது தனித்தன்மை வாய்ந்த பதிவுகளால் ஈகரையை சிறப்பித்துக்கொண்டிருக்கும் இருவரையும் வாழ்த்தி மேலும் இது போல பல சிறப்புகளை அடையவும் தொடர்ந்து ஈகரைக்கும் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.

Posted: 10 Feb 2015 08:37 AM PST

வாண்டுமாமா - நந்து சுந்து மந்து காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பார்வதி சித்திரக்கதை-வாண்டுமாமா படங்கள் -செல்லம் http://www.mediafire.com/download/rv3rj9u64zlga49/Nandu+Sundu+Mandu.pdf

மூன்று மந்திரவாதிகள் - வாண்டுமாமா சித்திரக்கதை.

Posted: 10 Feb 2015 08:34 AM PST

வாண்டுமாமா - மூன்று மந்திரவாதிகள் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பார்வதி சித்திரக்கதை-வாண்டுமாமா படங்கள் -ராமு http://www.mediafire.com/download/vylabpcdyrr7zmy/Vaandumama+-+Moonru+Manthiravathigal.pdf

பொழுதுகளின் புலப்பாடு

Posted: 10 Feb 2015 08:25 AM PST

தொந்தி குறைக்க தெருநாய்கள் குரைக்க - அதிகாலை ஓடும் மனிதர்கள். காபி விற்க கடற்கரையில் நிற்க - அம்மாக்கள் எழுப்பும் சிறுவர்கள். எல்லோருக்கும் சமைத்து அதனால் களைத்து - வேலைக்கு செல்லும் பெண்கள். பள்ளி பாடவேளையில் அவசரமாக வீட்டுவேலையில் - முழ்கும் பிஞ்சு மழலைகள். அவசரத்தால் மாறிய கோப்பால் மாட்டிய - அலுவலரின் முகக் கோணல்கள். சாப்பிடும்போது வந்த அழைப்பால் நொந்த - சர்வரின் பழகிய பாவனைகள். பணியிடையே வெந்நீர் கிடைத்தாலும் தேநீர் - போலருந்தும் அநேக ஆசிரியர்கள். மாலை ...

விற்பனையில் வண்ணத்துப் பூச்சி…

Posted: 10 Feb 2015 07:17 AM PST

- அவசரக் காற்று முதல் மழை புளியம் பூக்கள். – —————– – மழைவிட்ட நேரம் தேங்கிய நீரில் முகம் பார்த்தது தெருவிளக்கு. – —————– – விற்பனையில் வண்ணத்துப் பூச்சி துடிக்கிறது பூச்செடி. – —————— – தாய்க்காகக் காத்திருக்கிறேன் மரத்தில் சாய்ந்தபடி. – —————— – இறந்த வீரன் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது பாதி எழுதிய மடல். – ———————- –அறிவுமதி

இறைவன் உறையும் இடம் கோவில்!

Posted: 10 Feb 2015 06:59 AM PST

- நம் கோவில்கள் ஒவ்வொன்றும் ஞான நிலையம். கோவில்கள் எல்லாம் தெய்வம் சாந்நித்யம் நிறைந்த இடங்கள். இதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி இது: – நாராயணபுரத்தை யாதவன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். சிவபக்தரான அவரது ஆட்சியில், மக்கள் எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர். அரண்மனை பணியாளர்கள் கூட, சிவ பக்தியில் சிறந்தவர்களாக, அனைவரிடமும் அன்போடு நடந்து வந்தனர். – அவர்களில் பொற்கொடி எனும் பெண், அரசர் உணவு உண்ணப் பயன்படுத்தும் தங்கப் பாத்திரங்களை தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள். ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (92)

Posted: 10 Feb 2015 06:04 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தொடத் தொடத் தொல்காப்பியம்(342)

Posted: 10 Feb 2015 05:33 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Posted: 10 Feb 2015 04:40 AM PST

- ஒட்டி இருக்கிற 2 கொசு வர்த்தி சுருள பிரிக்கிறதே இம்புட்டு கஷ்டமா இருக்கு. எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..! - -thotta - ---------------------------------- - அதன் பிறகு எதையும் சிந்திக்க வேண்டியதில்லை என்பதே மரணத்தின் மிகப்பெரிய வசதி - -dhanalakshmiirs - ----------------------------------- - எவ்வளவு பேசினாலும் கடைசியில் ஆரம்பித்த இடத்திஇலேயே இருப்பதற்குப் பெயர்தான் விவாதம் - -jerenjit - ------------------------------------- - எப்போதும் ...

சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்

Posted: 10 Feb 2015 03:25 AM PST

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்) காப்பு அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. 0 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 1 அக்ஷர நிலை ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் ...

Book request /மின் புத்தகம் தேவை

Posted: 10 Feb 2015 03:25 AM PST

ungalin padivirankangal miga miga arumai. (உங்களின் பதிவிரங்கங்கள் மிக மிக அருமை ).
atharkaga enathu perum nanri.  Oru request (அதற்காக எனது பெரும் நன்றி .  ஒரு ரிக்வெஸ்ட் )


Aru Ramanathanin " Veerapandian manaivi" minpadivetram seiya mudiyuma (அரு ராமநாதனின் " வீரபாண்டியன் மனைவி " மின்படிவேற்றம் செய்ய முடியுமா )

anbudan அன்புடன்

அமைதி காக்க

Posted: 10 Feb 2015 03:14 AM PST

ஈகரை பதிவில் என் முதல் பதிவு

கோவில் என்பது ஒரு புனிதமான இடம். அங்கு நாம் போகும் போது அமைதி காக்க வேண்டும். சில பேர் அங்குதான் அவர்கள் வீட்டு பிரச்சனையை பேசுவார்கள். அது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைப்பது இல்லை.

இதனால் சாமியை நிம்மதியாக கும்பிட முடிவதில்லை. இனிமேலாவது நாம் கோவில் போக்கும் போது அமைதி காப்போம்.

ராஜி rani


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™