Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை உறுதி

Posted:

கோலாலம்பூர்: ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக, மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை, அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.மலேசியாவின் பிரதான எதிர்க்கட்சி பக்தான் ரக்யாத். இதன் தலைவர் அன்வர் இப்ராகிம், 67. இவரின் கட்சி, மலேசியாவில் மூன்று மாகாணங்களில் ஆட்சி செய்கிறது. கடந்த, 2008ல், தன் உதவியாளர் முகமது செய்புல், 30, என்பவருடன், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அன்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மலேசிய விசாரணை கோர்ட், அன்வரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து, அரசு தரப்பில் ...

காற்றாலை சீசன் போது தான் பராமரிப்பு பணி: தமிழக மின் வாரியத்திற்கு கண்டிப்பான அறிவுரை

Posted:

காற்றாலை சீசன் துவங்கிய உடன், அனல் மின் நிலையங்களில், பராமரிப்பு பணி மேற்கொள்ள, மத்திய மின் துறை அதிகாரிகள், தமிழக மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை என, நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின் உற்பத்தித் திறன், 4,770 மெகாவாட். அனல் மின் நிலையங்களில் உள்ள, ஒவ்வொரு அலகிலும், ஆண்டுக்கு ஒருமுறை, 'ஓவர்ஹாலிங்;' இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, 'கேபிடல் ஓவர்ஹாலிங்' ஆகிய பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். அதன்படி, 'ஓவர்ஹாலிங்' பராமரிப்பு பணியின் போது, 15 நாட்கள், மின் உற்பத்தி ...

அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும் ஆதார் கட்டாயம்; "கிடுக்கிப்பிடி' உத்தரவால் அதிர்ச்சி

Posted:

திருப்பூர் :"அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்,' என்ற உத்தரவால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய, மாநில அரசு திட்டங்களில், பெரும்பாலும் வங்கி கணக்கு வாயிலாகவே பண பரிவர்த்தனை நடக்கிறது. தேசிய அடையாள எண்ணுள்ள ஆதார் அட்டை இன்னும் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் 69 சதவீதம் பேர் ஆதார் பதிவு செய்திருந்தும், அவர்களில் 50 சதவீதம் பேருக்கு கூட, இன்னும் கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக, விடுபட்டோருக்கு ஆதார் பதியும் பணி நடந்து வருகிறது.இருப்பினும், காஸ் சிலிண்டர் ...

தமிழகத்தில் காய்கறி விளைச்சல் அமோகம்: ரூ.5 முதல் 25 வரை விலை சரிந்தது

Posted:

தமிழகத்தில் காய்கறி விளைச்சல் அமோகமாக இருப்பதால், விலை சரிந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் வாரம் வரை, வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது; இதன் எதிரொலியாக, மானாவரி மற்றும் கிணற்றுப்பாசன பகுதிகளில் காய்கறி பயிரிடப்படும் பரப்பு அதிகரித்தது. தற்போது, மும்முரமாக அறுவடை நடந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரிய காய்கறி சந்தை மையங்களான சென்னை - கோயம்பேடு, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சேலம் - தலைவாசல் மற்றும் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை ஆகிய சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும் காய்கறிகளின் வரத்து, இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ...

அத்துமீறல் தவறுதான்: தொப்புள் கொடி உறவுகளை வாழவிட வேண்டும்: தமிழக மீனவ அமைப்புகள் வெளிப்படை

Posted:

'இலங்கையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் ஏற்புடையது அல்ல; ஒரு சில மீனவர்களால், தமிழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. 'தொப்புள் கொடி உறவுகளை வாழ விடுங்கள்' என்ற, யாழ்ப்பாண மீனவர்களின் கோரிக்கைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்' என, தமிழக மீனவ அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.இலங்கை கடற்பகுதியில், யாழ்ப்பாணம், வடமறாச்சி பகுதிக்கு, கடந்த, 6ம் தேதி இரவு, 100க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழக மீனவர்கள் சென்றனர். அங்கு மீன்பிடித்த யாழ்ப்பாண மீனவர்களை விரட்டி அடித்ததோடு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வலைகளை அறுத்து, படகுகளையும் சேதப்படுத்தினர். இது, ...

தமிழகத்தில் எல்லாமே இரண்டு தான்: தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கிண்டல்

Posted:

திருச்சி:""தமிழகத்தில் முதல்வர், மக்கள் முதல்வர் போல, டி.ஜி.பி., தலைமை செயலர் உள்ளிட்ட எல்லாமே, இரண்டாக இருப்பதால், வாக்காளர்களின் ஓட்டுக்கும், 2,000 ரூபாய் கொடுத்துள்ளனர்,'' என, இடைத் தேர்தல் பிரச்சாரத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம், இன்று மாலை, 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. தி.மு.க., வேட்பாளர் ஆனந்த்துக்கு ஆதரவாக, திருவள்ளூர் தெற்கு மாவட்ட, தி.மு.க.,வினர், கம்பரசம்பேட்டை பகுதியில், தங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், இரண்டாவது நாளாக நேற்று, கம்பரசம்பேட்டை பகுதியில் ...

நில அபகரிப்பை விசாரிக்க பிறப்பித்த அரசாணைகள் செல்லாது: சிறப்பு நீதிமன்றங்களையும் ரத்து செய்தது ஐகோர்ட்

Posted:

சென்னை: 'நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க, 39 தனிப் போலீஸ் பிரிவுகள் மற்றும் 28 சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த, இரண்டு அரசாணைகளையும், உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சி யின் போது, நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன; தி.மு.க., பிரமுகர்கள் மீதும், ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க, போலீசில் தனிப் பிரிவாக, 39 பிரிவுகள் அமைக்கப்பட்டன. இதற்கான அரசாணை, 2011 ஜூலை, 28ம் தேதி ...

கெஜ்ரிவால், கிரண்பேடி, அஜய் மாக்கான் பெற்ற ஓட்டுக்கள்

Posted:

டில்லி சட்டசபைத் தேர்தலில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ., வேட்பாளர் நுபுார் சர்மாவை விட, 31 ஆயிரத்து 583 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்துடன், கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட, நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண் பேடி, ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, எஸ்.கே.பக்காவிடம், 2,277 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். காங்., முதல்வர் வேட்பாளரான, சர்தார் பஜார் தொகுதியில் போட்டியிட்ட அஜய் மக்கான், 16,331 ஓட்டுகள் மட்டுமே பெற்று, ...

டில்லி சட்டசபை தேர்தலில் பொய்த்த கருத்து கணிப்புகள்

Posted:

புதுடில்லி: டில்லி சட்டசபைத் தேர்தல் குறித்து, வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பொய்த்து விட்டன. துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்ட, ஆம் ஆத்மி அசுரத்தனமான வெற்றி பெறப் போவதை, எந்த கருத்துக் கணிப்புமே துல்லியமாக வெளியிடவில்லை. தேர்தல் நாளான, கடந்த 7ம் தேதி, ஓட்டுப்பதிவுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் எதுவுமே, ஆம் ஆத்மி கட்சி, அபார வெற்றி பெறும் என்பதை, துல்லியமாக கணிக்க தவறி விட்டன. இதுகுறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறியாவது:தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்புகளில், பெரும்பாலானவை, ஆம் ஆத்மி வெற்றி பெற்று, ...

மீண்டும் முதல்வரானார் கெஜ்ரிவால்

Posted:

அரவிந்த் கெஜ்ரிவால், 1968 ஆக., 16ல், அரியானாவில் பிறந்தார். இவரது பெற்றோர் கோபிந்த் ராம் கெஜ்ரிவால் - கீதா தேவி. இவரது தந்தை, எலக்ட்ரிக்கல் இன்ஜினியர். அதனால், கெஜ்ரிவாலின் இருப்பிடம் மாறியபடியே இருந்தது.பள்ளிப் படிப்பை, அரியானாவின் சோனாபட் மற்றும் உ.பி.,யின் காசியாபாத் ஆகிய இடங்களில் முடித்தார். காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற கெஜ்ரிவால், 'டாடா ஸ்டீல்' நிறுவனத்தில் சேர்ந்தார்.சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வதற்காக, 1992ல், அந்த வேலையை விட்டு விலகினார். கோல்கட்டாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் தங்கி தேர்வுக்கு தயார் ...

டில்லியை அள்ளிய கெஜ்ரிவால் துடைப்பம்: காணாமல் போனது காங்கிரஸ்; கரைந்தது பா.ஜ.,

Posted:

புதுடில்லி:மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய சூட்டோடு மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்த, பா.ஜ., டில்லி சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது; ஆம் ஆத்மி கட்சி, அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.அபார வெற்றிக்கு காரணங்கள்1.காங்கிரசுக்கு முழுக்கு:கடந்த, 2013ல் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு, 24.70 சதவீதம் ஓட்டுகளும், உதிரி கட்சிகளுக்கு, 11.42 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்தன. ஆனால், தற்போது, முறையே, 9.85 சதவீதம் மற்றும், 3.06 சதவீதம் ஓட்டுகள் தான் இவற்றுக்கு கிடைத்துள்ளன. இந்த கட்சிகளுக்கு முழுக்குப் போட்ட, 23.21 சதவீதம் வாக்காளர்களும், பா.ஜ.,வுக்கு, 'டாட்டா' ...

'டில்லியை போலவே பீகாரிலும் நடக்கும்': நிதிஷ்குமார்

Posted:

பாட்னா: ''டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கருத்து கணிப்பாகும். இதேபோன்ற முடிவையே, பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., சந்திக்கும்,'' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான நிதிஷ்குமார் கூறியுள்ளார். டில்லி சட்டசபை தேர்தல் முடிவு கள் குறித்து, அவர் கூறியதாவது: டில்லி தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கருத்துக் கணிப்பாகும். பா.ஜ.,வின் ஒன்பது மாத ஆட்சியிலேயே, மோடிக்கு எதிராக மக்களின் மனநிலை மாறி உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த ...

வாக்குறுதிகள் எதையும், பா.ஜ., நிறைவேற்றவில்லை: டில்லி தேர்தல் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து

Posted:

டில்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ். இளங்கோவன்:லோக்சபா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும், பா.ஜ., நிறைவேற்றவில்லை. லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து, காங்கிரஸ் கட்சி இன்னும் மீளவில்லை.தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்:காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி, நிரந்தர தோல்வி இல்லை. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட காங்கிரஸ், அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.ம.தி.மு.க., பொது செயலர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™