Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Posted: 01 Feb 2015 02:11 PM PST

சொந்தக்காரங்கள கண்டாலே வெறுப்பா இருக்கு; பொறாமைப்பட்டு சாகுறாங்க... நான் கஷ்டப்பட்ட போது எவனாவது உதவி செய்ய முன் வந்தானுங்களா?' என்று வெறுப்பை கக்கி, நெருப்பை உமிழ்கிறவர்களை நிறைய பார்க்கிறோம். உறவு, தாமாக வந்த பந்தம்; நட்பு, நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பந்தம். நம் மனச் சவுகரியத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது, மன அலைவரிசைகளை பார்க்கிறோம். 'நாம் மத்திய அலை; அவர்கள் சிற்றலையா? அப்படியானால் வேண்டாம்...' என முடிவு செய்து, ரயில் சந்திப்பில், பெட்டிகளைக் கழற்றி விடுவது போல கழற்றி ...

காமராஜரின் உன்னதத் திட்டங்கள்

Posted: 01 Feb 2015 02:08 PM PST

- பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல் அமைச்சராக இருந்த போது, அவரது ஆட்சிக் காலத்தை பொற்காலம் என்று சொல்கிறோம். - அவரது ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட உன்னதத் திட்டங்கள் சில இங்கே தரப்பட்டுள்ளன - அமராவதி அணை - ஆரணியாறு அணை - வைகை அணை - மணிமுத்தாறு அணை - மலம்புழா அணை - சாத்தனூர் அணை - மேட்டூர் கால்வாய் - குந்தா அணை - வாலையார் அணை - கீழ்பவானி அணை - கிருஷ்ணகிரி அணை - புள்ளம்பாடி வாய்க்கால் - பரம்பிக்குளம் – ஆழியாறு அணை - —————————————————- –இரா.மோகனப்ரியா

முதுமை தொல்லையா?

Posted: 01 Feb 2015 01:51 PM PST

"மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா" மண்ணுக்கு மரமும், மரத்துக்கு இலையும், கொடிக்கு காயும், குழந்தை தாய்க்கும் பாரமில்லை. ஆனால் இன்று...பெற்ற பிள்ளைகளுக்கு பெற்றோரே பாரமாகி விட்டார்கள். முதுமை ஒரு செல்லாக்காசு. இப்படி சொல்வதற்கு காரணம். முதுமையினால் தள்ளாமை, தள்ளாமையினால் இயலாமை, இயலாமையினால் மற்றவர்களின் உதவியை நாடியே தீர வேண்டிய கட்டாயம். எப்பொழுதும் யாரோ ஒருவரின் கையை எதிர்பார்த்தே வாழ வேண்டிய சூழ்நிலை. சொந்தங்களோ, சுற்றங்களோ, ...

சுய விளக்கம்

Posted: 01 Feb 2015 01:46 PM PST

என் ெபெயர் முத்துக் குமார் தமிழ் நாட்டின் திருெநெல்ேவேலி மாவட்டத்தில் பிறந்த நான் தற்ெபெொழுது குசராத் மாநிலத்தில் வசித்து வருகிேறேன் நண்பர்களின் அன்பான ஆதரைவை நல்குகிேறேன்

சுய விளக்கம்

Posted: 01 Feb 2015 01:45 PM PST

என் ெபெயர் முத்துக் குமார் தமிழ் நாட்டின் திருெநெல்ேவேலி மாவட்டத்தில் பிறந்த நான் தற்ெபெொழுது குசராத் மாநிலத்தில் வசித்து வருகிேறேன் நண்பர்களின் அன்பான ஆதரைவை நல்குகிேறேன்

'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!

Posted: 01 Feb 2015 01:38 PM PST

'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி: சீனாவில் உள்ள இலக்கை தாக்க வல்லது! பாலாசோரே: இந்தியாவின் அதிநவீன, 'அக்னி - 5' ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணையானது, 5,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது; 1,000 கிலோ எடையுள்ள, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும். இந்த ஏவுகணை மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். ராணுவத்தில்...: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான - டி.ஆர்.டி.ஓ., ராணுவத்திற்கு தேவையான ...

விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்!

Posted: 01 Feb 2015 01:37 PM PST

விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! ராமேஸ்வரம்: தனுஷ்கோடி பகுதியில் கடல் புறாக்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. கடல் புறாக்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் கடலிலும், மீதி நேரம் அடர்ந்த சவுக்கு மரக் காடுகளிலும் வசிக்கும். கடலின் மேல் மட்டத்தில் வசிக்கும் சிறிய மீன்களை இரையாக கொள்ளும். மீனவர்கள் இவற்றை 'காவாய் பறவை' என்பர்.சில மீனவர்கள் இரட்டைமடி போன்ற தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் மீன்வளம் குறைகின்றது. இதனால் இரை கிடைக்காமலும், சவுக்கு மரக்காடுகளில் மனிதர்களின் நடமாட்டத்தாலும் தனுஷ்கோடி ...

வாட்ஸ் அப்... ஆப்பா?

Posted: 01 Feb 2015 01:33 PM PST

'சோஷியல் நெட்வொர்க்' - சமூக வலைதளங்களுக்கு பலரும் அடிமையான சூழ்நிலை உருவாகியுள்ளது. எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் அந்த, 'சைட்' - தளத்திலேயே வீழ்கின்றனர்; விபரீதத்தில் போய் சிக்குகின்றனர். திருமணமானவர்கள் கூட இந்த தவறை செய்கின்றனர்; அதனால் குடும்ப வாழ்க்கையே சீரழித்து விடுகிறது. இளைஞர்கள் இன்று இன்டர் நெட், பேஸ்புக், வாட்ஸ் அப் என, மூழ்கி கிடக்கின்றனர். ஆனால், அதிலொன்றும் ஈடுபடாதவர்களுக்கு, இது என்னவென்று கூட தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டியது ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 01 Feb 2015 01:31 PM PST



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ'

Posted: 01 Feb 2015 01:17 PM PST

பழந்தமிழ் நாட்டில் மாதம் 3 முறை தவறாது மழை பெய்ததாக நாம் இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே அறிகிறோம். இன்று, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளைச்சல் கண்டாலே மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இன்றைக்கு அதிக செலவு பிடிக்கும் தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. விவசாயம் நலிவடைய காரணம் மழை இன்மையே. மழை பொய்த்து போக கருவேலமரம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மரங்களால் ஒரு சிலரின் வாழ்வாதாரம் சிறப்படையலாம். ஆனால், அடுத்த தலைமுறை வரை பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை பொழிவு ...

கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted: 01 Feb 2015 01:16 PM PST

காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள். ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம். படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் ...

தவறான பாதை – திரைப்படம்

Posted: 01 Feb 2015 01:12 PM PST

- * சூர்ய தேஜா, நவீன், ஜாக்ஸன், லஷ்மண், சுரபி, ஸ்வாதி உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகும் படம் "தவறான பாதை.' அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை, ஸ்ரீ ஆருண் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். – படம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில்….""லஞ்சம், ஊழல் எல்லாம் நம் கலாசாரமாகி விட்டன. லஞ்சம் கொடுப்பது தவறெனப் பேசிக் கொள்ளலாமே தவிர, காசு கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்பது நமக்கு பிறக்கும்போதே தெரிந்து விடுகிறது. – எல்லா தவறுகளுக்கும் அரிச்சுவடி ...

மேல்நாட்டு மருமகன் – திரைப்படம்

Posted: 01 Feb 2015 01:10 PM PST

- * ஸ்கை மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "மேல்நாட்டு மருமகன்.' ராஜ்கமல், ஆண்ட்ரீயன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் மறைந்த வி.எஸ்.ராகவன் இதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். திரைக்கதை அமைத்து இப்படத்தை எம்.எஸ்.எஸ். இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர்…. – "கலாசாரம் என்றால் என்ன? என்பதை இந்தத் தலை முறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு வெப்பமான பிரதேசம். இரவு படுக்கும் போது கொஞ்சமாவது சாப்பாட்டை மிச்சம் வைக்க வேண்டும். ...

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது…!!

Posted: 01 Feb 2015 01:09 PM PST

- - - * ஏ.டி.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.' பாபி சிம்ஹா, லிங்கா, சரண்யா, பனிமலர், அல்போன்ஸ் புத்ரன், சுகன்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் மருதுபாண்டியன். படம் குறித்து பேசுகையில்…"" சென்னைதான் தமிழர்கள் முத்து தேடி அலையும் கடல். விவசாயமும், பரம்பரைத் தொழில்களும் பொய்த்து விட்ட இந்த காலத்தில், அடுத்தடுத்த தலைமுறைகள் பிழைப்பு தேடி வரும் ...

தைப்பூசம்... 31000 வது பதிவு- கிருஷ்ணாம்மா :)

Posted: 01 Feb 2015 12:36 PM PST

தைப்பூசம் - பிப்ரவரி 3. தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் ஸ்கந்தகு முருகப் பெருமானுக்கு கொண்டாடப் படும் விழாவாகும்.தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம், பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். இந்தநாளின் மற்ற சிறப்புகள் : *தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். *முருகன் தேவ சேனாதிபதி ...

காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம்,

Posted: 01 Feb 2015 12:07 PM PST

- பிரபல ஹங்கேரி நாடக ஆசிரியர் ஃபுரெங் மோல்னார் அளவு கடந்த காபி பிரியர். முதல் உலகப் போர் முடிந்திருந்த சமயத்தில் புடாபெஸ்ட் நகரிலிருந்தார். ஒரு ஹோட்டலில் காபி அருந்திக் கொண்டிருந்தவர். திடீரென இரண்டாவது உறிஞ்சலில் காபிக் கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு அருகிலிருந்த நண்பரிடம் காபியைக் காட்டிப் பேசினார். ""இந்தக் காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம், ஒரு மர்மம் அடங்கியுள்ளது'' ""சொல்லுங்கள், என்ன அவை?'' என்றார் நண்பர். "" ஒரு நல்ல விஷயம் - இதில் சிக்கரி கலக்கப்படவில்லை. ...

ஒட்டகத்துக்கும் உடை வாங்கலாம் வாங்க!

Posted: 01 Feb 2015 11:35 AM PST

ஐக்கிய அரபு நாடுகளில், விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும், அல் - ஷிப்லால் நிறுவனம், இப்போது, புதுமையான வியாபார தந்திரத்தை பின்பற்றுகிறது. அரபு நாடுகளில் ஒட்டகங்கள் அதிக அளவில் உள்ளதால், அவற்றுக்கு உடை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஒட்டகங்களின் அளவுக்கேற்ப, வித விதமான உடைகளை தயாரிக்கிறது, அந்த நிறுவனம். ஒட்டகத்தின் கழுத்து மற்றும் தலை ஆகியவற்றை தவிர, மற்ற அனைத்து பாகங்களையும் மறைக்கும் வகையில், கச்சிதமான உடைகள் தயாரிக்கப்படுகின்றன. ...

நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!

Posted: 01 Feb 2015 11:32 AM PST

சீனாவின் செங்கோஜ் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றால், அங்கு மாட்டப்பட்டிருக்கும் போர்டை பார்த்து, ஆச்சர்யப்படுவீர்கள். ஆம், 'நீங்கள் அழகாக இருந்தால், எங்கள் ஓட்டலில் இலவசமாக சாப்பிடலாம்...' என, அந்த போர்டில் எழுதப்பட்டுள்ளது. அதற்காக, சாப்பாட்டு ராமன்கள் எல்லாம், 'நானும் தான் அழகு' என கூறி, அவ்வளவு சாதாரணமாக, ஓட்டலில் ஓசியில் தூர் வார வந்து விட முடியாது. ஓட்டலின் நுழைவாயிலிலேயே, நம் அழகை மதிப்பீடு செய்து, மார்க் போடுவதற்கு அழகு கலை நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு உள்ளது. இந்த குழு, ...

ஸ்னூக்கர் விளையாட்டில் தமிழ்ப் பெண்!

Posted: 01 Feb 2015 11:25 AM PST

- கடந்த ஆண்டு அயர்லாந்தில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா பிள்ளை வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்தார். - இவருக்கு திருச்சி சொந்த ஊராக இருந்தாலும், வித்யா பிள்ளை படித்தது, வளர்ந்தது, ஸ்னூக்கர் விளையாடப் பழகியது எல்லாம் சென்னையில்தான். - தமிழகத்தில் மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டியில் 12 முறை இவர் வெற்றி பெற்றுள்ளார். - தற்போது, கர்நாடக ஸ்னூக்கர் அணிக்கு ஆடி வரும் வித்யா பிள்ளை, தேசிய அளவில் மட்டுமல்லாது, ...

செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர்

Posted: 01 Feb 2015 11:24 AM PST

தாம்பரத்தில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞரை தலைமைக்காவலர் ஒருவர் துரத்திச் சென்று பிடித்தார். - தாம்பரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி முத்துலட்சுமி (59). இவர்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.அப்போது அவர்கள் வீட்டருகே சென்ற போது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் முத்துலட்சுமி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். - இதேவேளையில் பணிமுடிந்து தலைமைக்காவலர் ...

இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரை...

Posted: 01 Feb 2015 11:24 AM PST

- காதலன்: நள்ளிரவு ஊரை விட்டு ஓடலாம்னு சொல்லிட்டு இப்ப என்ன யோசிக்கிற? - காதலி: எதிரே என் பழைய காதலர் வந்தா ராசியா இருக்கும்னு அவரை வரச் சொல்லியிருக்கேன். - டி.கீதா, சென்னை-116. - ----------------------------------------------------- - "என்னங்க, நம்ம வீட்டில திருடினவன் நான் சமைச்சு வெச்சதையெல்லாம் சாப்பிட்டுப் போயிருக்காங்க'' - "திருடுனவன் அவனுக்குத் தண்டனையை அவனே தந்துக்கிட்டான்டி'' - அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. - ---------------------------------------------------- - "எதிர்வீட்டுப் ...

பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!

Posted: 01 Feb 2015 09:04 AM PST

ரமேஷ் க்கு இன்றுடன் 27 வயதாகிறது, அவனுடைய அப்பாவும் அம்மாவும் அவனுக்கு  1 வருடமாக பெண் பர்த்துவருகிரர்கள்..ஒன்றும் திருப்திகரமாக இல்லை. ஒருவருக்கு பிடித்தால் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பது போல தட்டிக்கொண்டே போயிற்று. காலில் விழுந்து வணங்கிய அவனை, "இந்த வருடமாவது கல்யாணம் ஆகணும், வரும் தீபாவளி  தலை தீபாவளியாக இருக்கணும்"  என்று ஆசிர்வதித்தார்கள் . அவனும் சிரித்துக்கொண்டே, "கல்யாணம் ஆகிறதோ இல்லையோ, நான் வெளிநாடு போகணும் 1வருடத்திற்கு"  என்றான். அவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக ...

அம்மா -கவிதை

Posted: 01 Feb 2015 09:04 AM PST

- பேச்சு வரும் முன் முந்தி வரும் வார்த்தை அம்மா! பள்ளிக்கு வெளியே பலர் நின்றிருந்தாலும் கண்ணுக்கு தெரிவது அம்மா மட்டுமே! ஓடி வந்து கட்டிக் கொண்டு ஓராயிரம் புகார் வாசிப்பேன்... தலைகோதி ரசித்திடுவாள்! ஒரு கையில் புத்தகப் பை மறுகையில் நான்... இழுத்துச் சென்றவள் கையை இழுத்தபடி துள்ளிக்குதிக்க... 'வலிக்குதடா... தொங்காதே' என்றாலும் வலிந்து அணைத்து சிரித்திடுவாள்! பள்ளி நாடகத்தில் நடித்த போது ஒரு வார்த்தை வசனத்திற்கு ஓயாத கை தட்டல் மேடைக்கு கீழே அம்மா! கல்விச் சுற்றுலா... அனுப்ப ...

ஆனந்தம் ஆரம்பம்!

Posted: 01 Feb 2015 09:03 AM PST

- மனதில் ஆனந்தம் நிறைந்திருந்தால், சிலருக்கு ஆட்டம், பாட்டு வரும். ஆனந்த சொரூபமான சிவனும் அப்படித்தான்! - தன் பக்தர்கள் தன்னையே நினைத்திருக்கும் போது ஆனந்தம் அடைந்து, ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவார். அதனால், அவருக்கு நடராஜர் என பெயர் வந்தது. - இந்நிகழ்ச்சியை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் தரிசிக்கலாம். - கணவர் ஆனந்தமாக இருந்தால், மனைவியும் ஆனந்தமடைந்து, அவரது மகிழ்ச்சியில் பங்கு கொள்வாள். சிவன், ஆனந்த நடனம் புரிந்த போது, ஒரு கட்டத்தில் பார்வதியும் ...

சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!

Posted: 01 Feb 2015 08:33 AM PST


-

பாடிய முதல் பாட்டு

Posted: 01 Feb 2015 04:08 AM PST

- -  பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. -  டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. -  பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' -  ...

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை

Posted: 01 Feb 2015 02:32 AM PST

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம். Whatsapp கணினியில் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும். இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது ...

ரமணியின் கவிதைகள்

Posted: 01 Feb 2015 02:26 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ஈகரைக்கு வணக்கம்

Posted: 01 Feb 2015 02:26 AM PST

பெயர்:                                              கார்த்திக்.S
சொந்த ஊர்:                                   மேல்மங்கலம்
ஆண்:
ஈகரையை அறிந்த விதம்:    நண்பன் மூலமாக
பொழுதுபோக்கு:                     புத்தகம் படிப்பது
தொழில்:                                      தனியார் துறை
மேலும் என்னைப் பற்றி:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™