Tamil News | Online Tamil News |
- வழக்கொழிந்த 1,741 சட்டங்களை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை
- ஓராண்டில் மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.600குறைந்தது
- வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை: சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி
- அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
- மேடை பேச்சில் மட்டுமே பெண்ணுரிமை: செயல்படுத்த தயங்கும் அரசியல் கட்சிகள்
- ராணிப்பேட்டை விபத்து: திடீரென விழித்து கொண்ட தமிழக அரசு: கருணாநிதி குற்றச்சாட்டு
- ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் : மக்களை ஏமாற்ற முடியுமா?
- 1 கோடி பேரை உறுப்பினராக சேருங்கள்: மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் கண்டிப்பான உத்தரவு
- ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தில் சேர முயன்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ௯ பேர்
- ரயில்களில் 'வேக்குவம் டாய்லெட்!' அறிமுகம்
| வழக்கொழிந்த 1,741 சட்டங்களை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை Posted: புதுடில்லி: நடைமுறையில் பயன்படுத்தப்படாத, வழக்கொழிந்துபோன, 1,741 சட்டங்களை ரத்து செய்யும்படி, பிரதமர் அலுவலக கமிட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.கடந்த 1998ல், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, வழக்கொழிந்து போன, நடைமுறையில் பயன்படுத்தாத, 1,380 சட்டங்களை ரத்து செய்யும்படி, பி.சி.ஜெயின் கமிட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், 315 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபின், கடந்தாண்டு செப்டம்பரில், பிரதமர் அலுவலக முன்னாள் செயலர், ராமானுஜம் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.'பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ... |
| ஓராண்டில் மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.600குறைந்தது Posted: மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை, கடந்த ஓராண்டில், 600 ரூபாய்அளவுக்கும், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை, 951 ரூபாயும், அதிரடியாக குறைந்துள்ளதால், ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, வர்த்தக பயன்பாடு (19 கிலோ), வீட்டு பயன்பாடு (14.20 கிலோ) என, இரண்டு வகையான, சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. வீடுகளுக்கான சிலிண்டர்கள், மானியம் மற்றும் மானியம் அல்லாதது என, இரு பிரிவுகளாக ... |
| வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை: சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி Posted: புதுடில்லி:தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு பணமாகவோ, பொருட்களாகவோ லஞ்சம் கொடுத்தால், இரண்டாண்டு சிறை தண்டனை வழங்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது.இப்போதுள்ள சட்டங்களின் படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை தான் விதிக்கப்படுகிறது. அதுவும், நீதிமன்ற கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டால் தான், குற்றவாளி கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குப் பின், தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.'இவ்வாறு மென்மையான தண்டனை உள்ளதால் தான், தேர்தல்களில் பண பலம் அதிகரித்துள்ளது; லஞ்சம் ... |
| அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் Posted: புதுடில்லி: 'இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சலுகைகளை அனுபவிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்' என, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய துாதரக அதிகாரி தேவ்யானி, அவர் வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு முறைகேடாக பாஸ்போர்ட் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தேவ்யானியை விசாரித்த அமெரிக்க போலீசார், அவரின் உடைகளை களைந்து சோதனை நடத்தியது, அப்போது, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, இந்தியாவில் பணியாற்றும் ... |
| மேடை பேச்சில் மட்டுமே பெண்ணுரிமை: செயல்படுத்த தயங்கும் அரசியல் கட்சிகள் Posted: புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஆம் ஆத்மி, காங்., கட்சிகளின் சார்பில், வெறும் 19 பெண்கள் மட்டுமே வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.மொத்தம், 70 தொகுதி களை உடைய டில்லி சட்ட சபைக்கு, இம்மாதம், 7ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ., - ஆம் ஆத்மி மற்றும் காங்., கட்சி களைச் சேர்ந்த வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.டில்லியல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தங்கள் கட்சியின் சார்பில் முன்னாள் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள பா.ஜ., மொத்தமுள்ள, 70 ... |
| ராணிப்பேட்டை விபத்து: திடீரென விழித்து கொண்ட தமிழக அரசு: கருணாநிதி குற்றச்சாட்டு Posted: சென்னை:'ராணிப்பேட்டை விபத்தில் பலியான, 10 தொழிலாளர்கள் குடும்பத்திற்கும், தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். |
| ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் : மக்களை ஏமாற்ற முடியுமா? Posted: சென்னை:வாக்காளர்களில் இன்னமும் விவரம் அறியாதவர்கள் உள்ளதாகக் கருதி, அரசியல் கட்சிகள் அவர்களை ஏமாற்ற நினைப்பதை, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.யுக்தியாக...:தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போது, தேர்தலின் போது பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த, அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பெயரை கொண்டவர்களை, சுயேச்சை வேட்பாளர்களாக களமிறக்குவதை மாற்று கட்சிகள் ஒரு யுக்தியாக கடைபிடித்தன.இதனால், ஆளுங்கட்சி வேட்பாளருக்கு விழும் ஓட்டுகளில் சிறிதளவை மாற்றலாம். இது ... |
| 1 கோடி பேரை உறுப்பினராக சேருங்கள்: மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் கண்டிப்பான உத்தரவு Posted: தே.மு.தி.க., உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காததால், எரிச்சல் அடைந்த விஜயகாந்த், மாவட்ட செயலர்களை கண்டித்து உள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும், 'சகாப்தம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இவ்விழாவிற்கு, தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கோபம்:விழாவை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ... |
| ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தில் சேர முயன்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ௯ பேர் Posted: பெங்களூரு:துருக்கி வழியாக சிரியா நாட்டிற்கு, சுற்றுலா விசாவில் நுழைய முயன்ற, சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட ஒன்பது பேரை, துருக்கி அதிகாரிகள், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். கடந்த, டிச., 24ம் தேதி, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டூரிஸ்ட் விசாவில், சென்னையைச் சேர்ந்த முகமது அப்துல் அஹத், 46, என்பவர், மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன், துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டார்.இவர்களுடன், தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஜாவித் பாபா, 24, கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் ... |
| ரயில்களில் 'வேக்குவம் டாய்லெட்!' அறிமுகம் Posted: புதுடில்லி:ரயில்களில், 'வேக்குவம் டாய்லெட்' எனப்படும், புதிய கழிப்பறைகளை அறிமுகப்படுத்த, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 2016 மார்ச் 31ம் தேதி வரையிலான, 1915 - 16ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட், இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில், பல புதிய அறிவிப்புகள் இடம்பெற உள்ளன.நாசம் செய்து:அந்த வகையில், ரயில்களில் இப்போது சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'பயோ டாய்லெட்' முறையுடன், வேக்குவம் டாய்லெட்டும் அறிமுகப்படுத்தப்படும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ரயில்களில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 02,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |