Tamil Star |
- பகல்- இரவு ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்றீங்களா? இதோ அதிர்ச்சி தகவல்
- குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள்
- அதிநவீன இலத்திரனியல் ஸ்கூட்டர்
- Lenovo அறிமுகம் செய்யும் மற்றுமொரு ஸ்மார்ட் போன்
- யாழில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி! பாதுகாப்பு உச்ச நிலையில்
- மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்! யாழில் சுவரொட்டிகள்
- வில்லியம்சன் மிரட்டல்: நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை
- கழற்றிவிடப்பட்ட முரளிவிஜய், யுவராஜ்: மகனை தெரிவு செய்த தந்தை
- ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: மறுக்கும் வசுந்தரா
- சவாலாக போகும் சுனந்தா கொலை வழக்கு?
- 15 வருடத்திற்கு முன் ஹொட்டலில் பாத்திரம் கழுவிய அமைச்சர்
- அமெரிக்காவை தரைமட்டமாக்குவோம்: மிரட்டும் வடகொரியா
- ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிப்பு
| பகல்- இரவு ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்றீங்களா? இதோ அதிர்ச்சி தகவல் Posted: 07 Jan 2015 04:15 AM PST
இந்த அதிர்ச்சி தகவல் அமெரிக்காவின் ஹார்வார்ட் மெடிக்கல் பள்ளியின், மருந்தியல் துறை பேராசிரியர், ஈவா ஸ்கெர்ன்ஹாமர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 22 வருடங்களாக 75 ஆயிரம் நர்சுகளின் வாழ்க்கை முறை இதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பிறரை காட்டிலும், ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் பெண்களின் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நல்ல தூக்கம் அவசியம். ஆனால் ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் போது தூக்கம் கெட்டுவிடும். இது இதயத்தை பாதிக்கும் விடயங்களில் முக்கியமான ஒன்றாகும். ஈவாவின் இந்த ஆய்வு கட்டுரை அமெரிக்க மருத்துவ இதழிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கருத்தில் வைக்க வேண்டிய முக்கியமான விடயம் இதுவாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள் Posted: 07 Jan 2015 04:13 AM PST
இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பசலைக் கீரை பசலைக் கீரையில் அதிகளவு சத்துக்கள் உள்ளது, இதனை உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை பாதுகாக்கும். கொய்யாப் பழம் இந்த பழத்தில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடிய இப்பழம், அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது, இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் குளிர்காலத்தில் சாதாரண பழங்களை சாப்பிடுவதை விட, நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் கிருமிகள் எளிதில் தாக்காமல் உடலை பாதுகாக்கும். கேரட் கேரட் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண்களுக்கு நல்லது என்பது தான், கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே உணவில் கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது. வேர்க்கடலை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வேர்க்கடலை, இதனை வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ எடுத்துக் கொண்டால் உடலில் வெப்பம் சரியான அளவு இருப்பதுடன் புரோட்டீனும் அதிகம் கிடைக்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிநவீன இலத்திரனியல் ஸ்கூட்டர் Posted: 07 Jan 2015 04:12 AM PST
Gogoro எனும் இலத்திரனியல் ஸ்கூட்டர் ஒன்று CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் மின்கலத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் 4.2 செக்கன்களில் 50km/h எனும் வேகத்தினை அடையக்கூடியதாகவும் இருக்கின்றது. எனினும் இதன் விலை வெளியிடப்படாத நிலையில் இந்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் Megan Zaroda தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Lenovo அறிமுகம் செய்யும் மற்றுமொரு ஸ்மார்ட் போன் Posted: 07 Jan 2015 04:11 AM PST
Lenovo நிறுவனம் Vibe X2 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக்கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64-bit Qualcomm Snapdragon Processor இனையும் கொண்டுள்ளது. இவை தவிர தலா 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுThis posting includes an audio/video/photo media file: Download Now |
| யாழில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி! பாதுகாப்பு உச்ச நிலையில் Posted: 07 Jan 2015 04:09 AM PST
ஜனாதிபதி தேர்தல் நாளைய தினம் நடைபெறவிருக்கும் நிலையில் யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து இன்றைய தினம் காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்கான மத்திய நிலையமாக யாழ்.மத்திய கல்லூரி இயங்கவிருக்கும் நிலையில், இன்றைய தினம் மாவட்டத்தில் செயற்படும் 526 வாக்களிப்பு நிலையங்களுக்கும் குறித்த வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தலை ஒட்டி யாழ்.மத்திய கல்லூரிக்குள் நுழையும் சகல வீதிகளும் உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்! யாழில் சுவரொட்டிகள் Posted: 07 Jan 2015 04:07 AM PST
"ஆண்ட இனம் மீண்டும் ஆள்வதற்கு மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும். எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம்" துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது என சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் நேற்றய தினம் யாழ்.நகர் பகுதி களில் ஒட்டப்பட்டுள்ளது. திட்டமிட்டு தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு, தேர்தல் திணைக்களத்திடம் இது தொடர்பில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வில்லியம்சன் மிரட்டல்: நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை Posted: 07 Jan 2015 04:05 AM PST
இறுதி வரை போராடிய திரிமன்னே 144 பந்துகளை சந்தித்து 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார். முன்னதாக சங்கக்காராவின் அபாரமான இரட்டைச்சதத்தின் உதவியுடன் 135 ஓட்டங்களால் தமது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்தது. தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் வோல்டிங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் 365 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 524 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் வில்லியம்சன் மற்றும் வோல்டிங் ஆகியோர் தலா 242 மற்றும் 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாற்றத்தை எதிர் கொண்டது. திரிமன்னே மற்றும் சில்வாவை தவிர ஏனையவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடாதமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களினால் 365 ஓட்ட இணைப்பாட்டத்தினையும் பிரிக்க முடியாது போனமையே தோல்விக்கு முக்கியமான காரணமாகும் மேலும் சங்கக்காரா சர்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்து வீசிய கிரேய்க் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டார். இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற என்ற அடிப்படையில் தொடரை நியூசிலாந்து வெற்றி கொண்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கழற்றிவிடப்பட்ட முரளிவிஜய், யுவராஜ்: மகனை தெரிவு செய்த தந்தை Posted: 07 Jan 2015 04:05 AM PST
இதிலிருந்து 15 பேர் கொண்ட இந்திய அணியை தெரிவு செய்வதற்கான கூட்டம் தெரிவுக்குழுத் தலைவர் சந்தீப் படேல் தலைமையில் நடந்தது. இதில்,அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சர் 'வீடியோ கான்பெரன்சிங்' முறையில், அவுஸ்திரேலியாவில் இருந்து பங்கேற்றனர். பின்னர் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து இன்னும் மீளாத ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டது சர்ச்சை கிளப்பியுள்ளது. மேலும் ரஞ்சிக்கிண்ன தொடரில் 'ஹாட்ரிக்' சதம் அடித்ததால் எப்படியும் அணியில் இடம் பெறுவார் என்று நம்பப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு, ஏமாற்றம் தான் கிடைத்தது. இதேபோல, தற்போதைய அவுஸ்திரேலிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முரளி விஜய்க்கும் வாய்ப்பு தரப்படவில்லை. உலகக்கிண்ண போட்டி நடக்கும் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் என 4 பேர் இடம் பெற்றனர். இவர்களுடன், ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடுவும் அணியில் இடம் பிடித்தனர். இந்திய அணி தெரிவாளர்களில் ஒருவர் ரோஜர் பின்னி. கடந்த 1983 உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். நேற்று நடந்த தெரிவுக்குழுவில் பங்கேற்ற இவர், ஐ.பி.எல் சூதாட்ட அறிக்கையில் இடம் பெற்ற தனது மகன் ஸ்டூவர்ட் பின்னியை தெரிவு செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: மறுக்கும் வசுந்தரா Posted: 07 Jan 2015 04:02 AM PST
இவற்றை அவரே செல்பியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அவரது ஆபாச காணொளியும் இணையத்தில் வெளியானது. இவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. இதை பார்த்து அதிர்ச்சியான வசுந்தரா, இந்த ஆபாச படம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து இதை வெளியிட்டு உள்ளனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சவாலாக போகும் சுனந்தா கொலை வழக்கு? Posted: 07 Jan 2015 04:00 AM PST
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது, இறந்தவரின் உடல் இல்லாமல் விசாரணை நடத்துவது மிகவும் கடினம். நடந்தது பற்றி பிரேதத்தில் இருந்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் அது மிகவும் முக்கியம். பொலோனியம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு எப்படி வந்தனர் என்பதை டாக்டர்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் பொலோனியம் இருப்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. உடலில் உள்ள கதிர்வீச்சை அளவிட தனி கருவி தேவை. கதிர்வீச்சானது காமா துகள்களாக இருந்தால், அதை வெளியில் வைத்து அளவிடலாம். அதேசமயம், அது ஆல்பா துகள்களாக இருந்தால், அது உடலுக்குள்ளேயேதான் இருக்கும். அதை அளவிடுவது கடினமாகும். அதுபோன்ற சமயத்தில் உடல் உள் உறுப்புகளின் மாதிரியை எடுத்து அளவிட வேண்டும். அது இன்னும் கடினமானதாகும், சுலபமானதல்ல. எனவே இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்பதே உண்மை என பேசியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| 15 வருடத்திற்கு முன் ஹொட்டலில் பாத்திரம் கழுவிய அமைச்சர் Posted: 07 Jan 2015 03:57 AM PST
நேற்று டெல்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது தனது உரையில் அவர் கூறியதாவது, திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் அடிக்கடி கூறுவார். எனவே எந்தத் திறமையாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும். ஒருவர் மெக்கானிக்காக இருக்கலாம் அல்லது பிளம்பராக இருக்கலாம். அதற்காக அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது. மெக்கானிக்காக இருப்பதிலோ, பிளம்பராக இருப்பதிலோ அல்லது கார்பென்டராக இருப்பதிலோ எந்த அவமானமும் கிடையாது. ஒரு அமைச்சராக இருக்கும் நான், 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹொட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் இருந்தேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை, பெருமைப்படுகிறேன். இந்த நாடு வாய்ப்புகளைத் தேடுவோருக்கு சொர்க்கபுரியாகும். இந்த நாட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவை தரைமட்டமாக்குவோம்: மிரட்டும் வடகொரியா Posted: 07 Jan 2015 03:53 AM PST
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ பற்றிய கதையான "தி இன்டர்வியூ" படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அமெரிக்காவில் இணையதளம் முடக்கப்பட்டது. மேலும் தங்களது இணையதளத்தையும் முடக்கி கொண்ட வடகொரியா, அமெரிக்காவை குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவை தாக்க சிறிய அணு குண்டுகளை கிம் ஜாங் தலைமையில் வடகொரியா தயாரித்து வருவதாக தென் கொரியா கூறியுள்ளது. மேலும் இந்த அணு குண்டுகள் வீசப்பட்டால் கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து நகரங்களையும் தாக்கக் கூடிய வகையிலான திறனை சீக்கிரமே வட கொரியா பெறும் என்றும் தற்போது 6000 ஹாக்கர்களை கொண்ட வடகொரியா அமெரிக்காவின் இணையதளத்தை முற்றிலுமாக அழிக்க திட்டமிட்டுள்ளது எனவும் தென் கொரியா எச்சரித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிப்பு Posted: 07 Jan 2015 03:52 AM PST
கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் தற்போது விமானத்தின் வால் பகுதி ஜாவா கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானத்தின் வால் பகுதியில் தான் விமானத்தின் ஒலி மற்றும் விமானப் பறத்தல் தொடர்பான பதிவுகள் செய்யப்படும் கருவி இருக்கும் என்பதால் இந்த கருவிகள் விரைவில் மீட்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

























