Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லி கோர்ட்டில் வாக்கு மூலம்: இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்

Posted: 07 Jan 2015 11:40 PM PST

கடந்த மாதம் 5–ந்தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உபேர் கால் டாக்ஸி நிறுவனத்தைச் சேர்ந்த டிரைவர் ஷிவ் குமார் யாதவை கைது செய்தனர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் டெல்லி கோர்ட்டுக்கு சென்று வாக்கு மூலம் அளித்தார்.

சுனந்தா பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சசிதரூர்: இரைப்பை மற்றும் வாத நோயால் அவதி

Posted: 07 Jan 2015 10:00 PM PST

திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். முன்னாள் மத்திய மந்திரியான இவரது மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த ஆண்டு இவர் டெல்லி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். டெல்லி போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஓராண்டு ஆன நிலையில் சுனந்தா புஷ்கர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

காஷ்மீரில் யாரும் ஆட்சி அமைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது?: கவர்னர் ஆலோசனை

Posted: 07 Jan 2015 09:40 PM PST

காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி–28, பா.ஜ.க–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன.

சிமி தீவிரவாதிகள் பதுங்கல்: திருப்பதி, ஸ்ரீஹரிகோட்டாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 07 Jan 2015 09:38 PM PST

தடை செய்யப்பட்ட சிமி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் 1–ந்தேதி மராட்டிய மாநிலம் கஞ்த்வா சிறையில் இருந்து தப்பினர். இவர்களில் 3 பேர் ஆந்திராவில் பதுங்கி இருக்கிறார்கள் என்றும்,

டெல்லி ராம்லீலா மைதானத்தில் மோடி பிரசார கூட்டத்துக்கு 2,000 சிறப்பு பஸ்கள்

Posted: 07 Jan 2015 09:35 PM PST

டெல்லி சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிரசார களத்தில் இறங்கியுள்ளது.

சுனந்தா எப்படி இறந்தார்?: சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்

Posted: 07 Jan 2015 09:30 PM PST

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஆண்டு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. என்றாலும் அவர் மரணம் அடைவதற்கு முன்பு சசிதரூருடன் சண்டை போட்டிருந்ததால் சந்தேகம் நீடித்தப்படி இருந்தது.

பா.ஜனதாவை பலப்படுத்த ஆந்திரா – தெலுங்கானாவில் அமித்ஷா சுற்றுப்பயணம்

Posted: 07 Jan 2015 09:07 PM PST

பாரதீய ஜனதாவை வலுப்படுத்தும் முயற்சியில் கட்சி தலைவர் அமித்ஷா தீவிரமாக களமிறங்கி உள்ளார். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அமித்ஷா நேற்று இரவு ஐதராபாத் வந்தார். சம்சாவாத் விமான நிலையத்தில் அவருக்கு தெலுக்கானா மாநில பா.ஜனதா

ஆந்திர பஸ் விபத்தில் மாணவர்கள் பலி: குழந்தைகள் நல கமிஷன் வழக்கு

Posted: 07 Jan 2015 08:54 PM PST

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் மர்காசிரா என்ற இடத்தில் இருந்து பெனுகொண்டாவை நோக்கி ஆந்திர அரசு போக்குவரத்து கழக பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 70–க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பெனுகொண்டா அருகே மலைப்பாதையில் பஸ் சென்றபோது திடீரென நிலை

டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: டாக்டர் உள்பட 9 பேர் பாதிப்பு

Posted: 07 Jan 2015 08:47 PM PST

டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், தொற்று நோய் தடுப்பு அலுவலகர்களும் அவசர கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்கள்

100 டாலரிலிருந்து 50 டாலராக சரிந்த கச்சா எண்ணெய்: பெட்ரோல் விலை எப்போது 38 ரூபாய்க்கு குறையும்?

Posted: 07 Jan 2015 08:37 PM PST

சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கவலை அடைந்துள்ளன. நியூயார்க்கில் உள்ள இன்டர்மீடியட் வகை கச்சா எண்ணெய் நேற்று முன்தினம் 47.75 டாலர் அளவிற்கு குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக கார்களுக்கான விபத்து சோதனை விதிமுறைகள்: 2017 முதல் அமலாகிறது

Posted: 07 Jan 2015 08:06 PM PST

இந்தியாவில் பயன்படுத்தும் கார்கள் விபத்தில் சிக்கினால், அதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்புக்கு எவ்விதமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என எந்த கார் தயாரிக்கும் நிறுவனங்களும் இது வரை மக்களுக்கு தெரிவித்ததில்லை.

மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி: அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கு 12-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Posted: 07 Jan 2015 07:01 PM PST

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அன்புமணி ராமதாஸ் உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10-ந்தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு

Posted: 07 Jan 2015 06:55 PM PST

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வருகிற 10-ந்தேதி தாக்குதல் நடக்கும் என்று தீவிரவாதிகள் பெயரில் விமான நிலைய கழிவறையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்காள திரையுலகை சேர்ந்த நடிகை ரூபா கங்குலி பா.ஜனதாவில் இணைந்தார்

Posted: 07 Jan 2015 06:44 PM PST

'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்றவர், நடிகை ரூபா கங்குலி (வயது 48). தற்போது வங்காள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் இவர், தேசிய விருது பெற்றவர் ஆவார்.

கபில்தேவின் தொண்டு அமைப்புக்காக ஓவியராக மாறிய பிரதமர் மோடி

Posted: 07 Jan 2015 06:26 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ஏழைகள், ஆதரவற்றோர் சமூக மேம்பாட்டுக்காக 'குஷி' என்ற தொண்டு அமைப்பினை நடத்தி வருகிறார்.

சுனந்தா புஷ்கர் கொல்லப்பட்டதாக தகவல்: என்னை சிக்க வைக்க போலீசார் முயற்சி- சசிதரூர் குற்றச்சாட்டு

Posted: 07 Jan 2015 06:26 PM PST

சுனந்தா புஷ்கர் மரணம் அடைந்த விவகாரத்தில் தன்னை சிக்க வைக்க டெல்லி போலீசார் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

நிலக்கரி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: மத்திய மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Posted: 07 Jan 2015 12:45 PM PST

மத்திய அரசின் நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை மற்றும் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நிலக்கரி தொழிலாளர்கள், கடந்த 6-ந் தேதி அன்று 5 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

பலூன் விற்கும் குழந்தைகள் மூலம் டெல்லியில் போதைப்பொருள் விற்றவர் கைது

Posted: 07 Jan 2015 09:29 AM PST

புதுடெல்லியில் பலூன் விற்கும் மற்றும் சாலையோர சிறுவர்கள் மூலம் 'ஸ்மாக்' எனப்படும் போதைப்பொருளை விற்ற பலே பேர்வழியை போலீசார் இன்று கைது செய்தனர். டெல்லியில் உள்ள வீடற்ற சிறுவர்கள் மற்றும் பலூன் வியாபாரம் செய்யும் சிறுவர்கள் ஆகியோரை தனது போதைப் பொருள் விற்பனையில்

குஜராத் அரசு நடத்திய விழாவை காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி புறக்கணித்தார்

Posted: 07 Jan 2015 08:12 AM PST

தேசத் தந்தை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு திரும்பிய ஜனவரி மாதம் 9-ம் தேதியை வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் இந்திய மக்கள் 'ப்ரவாசி பாரதிய திவாஸ்' தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆண்டுதோறும் இந்த நாளில் தங்களது சொந்த மாநிலத்துக்கு வந்து இவ்விழாவில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. இவ்வகையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழாவினை இவ்வாண்டு வெகு விமரிசையாக கொண்டாட

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9 சதவீதமாக உயர்வு

Posted: 07 Jan 2015 08:02 AM PST

கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. தொழிலாளர் அமைப்பான லேபர் பீரோ வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய அளவில் 2012-13ம் நிதியாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்தது. அது 2013-14ம் நிதியாண்டில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™