Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீன கம்யூ., சாதனையைமுறியடிக்க பா.ஜ., முடிவு

Posted:

புதுடில்லி:பத்து கோடி உறுப்பினர்களை சேர்த்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை முறியடிக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதம், மத்தியில் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சியைக் கைப்பற்றியது பா.ஜ., அதற்குப் பிறகு நடைபெற்ற, நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆட்சி அமைத்த அக்கட்சி, ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., கட்சியுடன் இணைந்து, கூட்டணி அரசை ஏற்படுத்த முயற்சிக்கிறது.சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஓராண்டிற்குள், 6.38 கோடி உறுப்பினர்களை சேர்த்த ...

பெங்களூரு சர்ச் தெரு குண்டு வெடிப்புபு:எம்.பி.ஏ., மாணவர் உட்பட 3 பேர் கைது

Posted:

பெங்களுரு:பெங்களூரு சர்ச் தெருவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, இந்தியன் முஜாஹூதின் அமைப்பை சேர்ந்த, எம்.பி.ஏ., மாணவர் உட்பட, மூன்று பேர், பெங்களூரு, பட்கல்லில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த டிசம்பர், 28ம் தேதியன்று, இரவு, 8:30 மணியளவில் பெங்களுரு, எம்.ஜி., ரோடு அருகில் உள்ள, சர்ச் ரோட்டில் குண்டு வெடித்தது. இதில், சென்னையை சேர்ந்த பவானி பலியானார். மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரு போலீசாரும், கர்நாடகாவிலுள்ள தேசிய விசாரணை ...

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்: சமரசம் ஏற்பட்டதால் கோர்ட் அறிவிப்பு

Posted:

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு எதிராக, வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்கு, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது. இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதால், வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து, அவர்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர், பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், 1991 - 92, 92 - 93ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா, சசிகலா, தனிப்பட்ட முறையில், 1993 - 94ம் ...

இந்தியாவை மாற்றி அமைக்க இங்கே வாங்க: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் அழைப்பு

Posted:

காந்திநகர் : நேற்றைய வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில், 4,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ''வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பு, நம் நாட்டின் மிகப்பெரிய மூலதனம். இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவை மாற்றி அமைக்க, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்' ஒவ்வொரு ஆண்டும், ஜன., 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநாடு நடைபெறும். இந்த அமைப்பின், 13வது மாநாடு, குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நேற்று ...

கல்வி துறைக்கு கூடுதல் நிதி: அருண் ஜெட்லியிடம் கோரிக்கை

Posted:

புதுடில்லி : வரும், 2015 - 16ம் நிதியாண்டில், கல்வித் துறைக்கு, குறிப்பாக அடிப்படை கல்வி மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம், பல்வேறு சமூகநல அமைப்புகளின் பிரதிநிதி கள் வலியுறுத்தினர்.துறைவாரியாக, பட்ஜெட்டிற்கு முந்தைய கருத்துக் கேட்பு கூட்டத்தை, அருண் ஜெட்லி நடத்தி வருகிறார். இதன்படி நேற்று, சமூகநல அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் அவரை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கும், நிதி ஒதுக்கீட்டிற்கும் உள்ள ...

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜாக்பட்: பொங்கல் போனஸ் ரூ.3,000; சிறப்பு போனஸ் ரூ.1,000

Posted:

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 1,000 முதல் 3,000 ரூபாய் வரை, பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க, முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஆண்டுதோறும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்கப்படுகிறது. அதன்படி, 2013 - 14க்கு, 'சி' மற்றும் 'டி' தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும். *'ஏ' மற்றும் 'பி' தொகுதியைச் சார்ந்த அலுவலர் மற்றும் ஆசிரியர்கள்; நிதியாண்டில் குறைந்த பட்சம், 240 நாட்கள், ...

பொங்கல் பண்டிகைக்கு 7,250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Posted:

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, 7,250 சிறப்பு பஸ்களை இயக்கப்படுகின்றன. வரும், 14ம் தேதி, போகி; 15ம் தேதி பொங்கல்; 16ம் தேதி மாட்டு பொங்கல்; 17ம் தேதி காணும் பொங்கல் என, தொடர்ச்சியாக பண்டிகைகள் வருகின்றன. இதில், 15ம் தேதி முதல், 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை, நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக அமைகிறது. எனவே, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு அதிக மக்கள் செல்வர். தொலைதூர ரயில்கள், அரசு விரைவு பஸ்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே, சிறப்பு பஸ்களை நம்பியே, பெரும்பாலான பயணிகள் ...

ஸ்டாலினுக்கே தலைவர் பதவி: பொதுக்குழுவில் எழுப்பப்படும் குரல்

Posted:

இன்று நடக்கும் தி.மு.க., பொதுக்குழு மூலம், 11வது முறையாக, கட்சியின் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். பரபரப்பாக கூடும் இந்த பொதுக்குழுவில், தலைவர் பதவியை, கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுக்குமாறு கோஷம் எழுப்ப, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிவாலயத்தில்...:தி.மு.க.,வின் 14வது உட்கட்சித் தேர்தல் மூலம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், இன்று காலை 9:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.தலைவர் பதவிக்கு கருணாநிதி, பொதுச் செயலர் பதவிக்கு அன்பழகன், ...

அரசு வக்கீலை தமிழக அரசு எப்படி நியமிக்க முடியும்? அன்பழகன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசிற்கு நோட்டீஸ்

Posted:

பெங்களூரு: 'பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு மீதான, மேல் முறையீட்டு வழக்கில் வாதாட, அரசு வழக்கறிஞரை, தமிழக அரசு எப்படி நியமிக்க முடியும்,' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், வழக்கறிஞர், நாகேஷ் கேள்வி எழுப்பினார். 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு மீதான மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக, பவானி சிங் தொடரக் கூடாது' என, தி.மு.க., பொதுச் செயலர், அன்பழகன் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நேற்று மதியம் 12:00 மணிக்கு, நீதிபதி அப்துல் நசீர் முன், விசாரணைக்கு வந்தது. அன்பழகன் தரப்பில், ...

'குடி'யில் முதலிடம்; விடியுமா திருப்பூருக்கு?புத்தாண்டு நாளில் ரூ.8.48 கோடி மது விற்பனை

Posted:

உழைப்பின் மறுபெயர், திருப்பூர். தமிழகத்தின் பிற மாவட்டத்தினர் மட்டுமின்றி, வெளிமாநிலத்தவர்களும் அதிகளவில் தங்கி, பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ?? ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி ஈட்டித்தரும் நகரம், என்ற பெருமை திருப்பூருக்கு உண்டு. அதே வேளையில், கவுரவப்பட்டுக்கொள்ள முடியாத, இன்னொரு பெருமையையும் பெற்றிருக்கிறது இந்த மாவட்டம்; அது, மது விற்பனையில், மாநில அளவில் முதலிடம் என்பது.புத்தாண்டில்...: திருப்பூர் மாவட்டத்தில், 238 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. நகரில் மட்டும், 118 கடைகள் உள்ளன; ...

இலங்கை அதிபர் தேர்தல்: 74,731 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை

Posted:

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்ரீசேனா ,74,731 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி வேட்பாளராக ஸ்ரீசேனா களமிறங்கினார். , இலங்கை அதிபர் தேர்தல், மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இலங்கை தேர்தலில் 70 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் மக்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™