Tamil News | Online Tamil News |
- மோடி பொதுக்கூட்ட குண்டுவெடிப்பு சம்பவம்: சதிகாரர்கள் 11 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
- கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
- 'பினாமி' சொத்துகளை கையகப்படுத்த அரசு திட்டம்: புதிய சட்டத்தை தயாரிக்க சட்ட துறைக்கு உத்தரவு
- ஒரு நதியைத் தேடி...!கானல் நீராகும் திட்டம்! எக்ஸ்.செல்வக்குமார் மற்றும் ஏ.சிவகுருநாதன்
- நியூட்ரினோ புரியாத புதிர்: 5 ஆண்டுகளில் துகள் குறித்த ஆராய்ச்சி துவங்கும்
- முதலில் பணியாற்றிய மாவட்டத்திற்கு குடும்பத்தினரோடு போங்க: மத்திய அரசின் செயலர்களுக்கு மோடி உத்தரவு
- அடுத்தடுத்து அடி வாங்கியும் திருந்தாத பாக்., படை எல்லையோர கிராமங்களை குறி வைத்து தாக்குதல்
- கங்கை நம் நாட்டின் சொத்து; அதை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
- ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்'
- கதிரியக்க தன்மை கொண்ட விஷம் காரணமாக சுனந்தா மரணம்; டாக்டர்கள் குழு தகவல்
- கூட்டணி கட்சிகளின் மிரட்டலை சந்திக்க தமிழக பா.ஜ.,தயார்: தே.மு.தி.க., - பா.ம.க.,வை தாஜா செய்ய திட்டவட்ட மறுப்பு
- நதிகளை இணைக்க நிதியுதவி செய்யுங்கள்: மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தல்
| மோடி பொதுக்கூட்ட குண்டுவெடிப்பு சம்பவம்: சதிகாரர்கள் 11 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு Posted: பாட்னா: பீகாரில், 2013ல் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில், இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி அமைப்பைச் சேர்ந்த, 11 பேர் மீது, நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.பீகாரில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் அரசு உள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரான பாட்னாவின், 2013 அக்., 27ல், பா.ஜ., சார்பில், பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், தற்போதைய பிரதமரும், அப்போதைய குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்றுப் ... |
| கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் Posted: கோல்கட்டா: கோல் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த, 3.5 லட்சம் தொழிலாளர்கள், நேற்று முதல், ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், பல மாநில மின் நிலையங்களில், நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதை நிறுத்த வேண்டும்; அந்த நிறுவனத்தை படிப்படியாக, தனியார் மயமாக்க முற்படுவதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த, 3.5 தொழிலாளர்கள், நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ... |
| 'பினாமி' சொத்துகளை கையகப்படுத்த அரசு திட்டம்: புதிய சட்டத்தை தயாரிக்க சட்ட துறைக்கு உத்தரவு Posted: பெங்களூரு: சட்ட விரோதமாக, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு, மலையளவு பணம் சம்பாதித்த பெரிய பெரிய, சுரங்க முதலைகளின் பினாமி சொத்துகளை கையகப்படுத்த, கர்நாடக அரசு, அதிரடி முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத்தை தயாரிக்கும்படி, சட்டத் துறைக்கு, அரசு உத்தரவிட்டு உள்ளது.சட்ட விரோதமான சுரங்கத் தொழில் குறித்து, லோக் ஆயுக்தாவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு விசாரணைப் படை, விசாரணை நடத்த உள்ளது. சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் செய்து வந்தவர்களின், பினாமி சொத்துகளை, அரசு வசம் வரும் வகையில், புதிய சட்டத்தை கொண்டு வரவும், அரசு உத்தரவிட்டு உள்ளது. ... |
| ஒரு நதியைத் தேடி...!கானல் நீராகும் திட்டம்! எக்ஸ்.செல்வக்குமார் மற்றும் ஏ.சிவகுருநாதன் Posted: கவுசிகா நதியை அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென்று சொல்வதெல்லாம் சரி. அந்த திட்டமே கானல் நீராக இழுக்கும் போது, அதிலே இதை இணைப்பது சாத்தியமா? என்றொரு கேள்வி எழுகிறது. இந்த இடத்தில்...அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக்...எளிமையாகச் சொல்வதென்றால், பில்லுார் மற்றும் பவானி சாகர் அணை நிரம்பிய பின், காவிரியில் சங்கமித்து, கடலில் கலக்கும் உபரி நீரில் 2 டி.எம்.சி., தண்ணீரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, கால்வாய் மூலமாகத் திருப்பி, 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை ... |
| நியூட்ரினோ புரியாத புதிர்: 5 ஆண்டுகளில் துகள் குறித்த ஆராய்ச்சி துவங்கும் Posted: தேனி மாவட்டம் போடி அருகே அம்பரப்பர் மலையில் ரூ. 1500 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள "நியூட்ரினோ' ஆய்வு மையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூட்ரினோ என்றால் என்ன?:"நியூட்ரினோ' என்பது எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உருவாகத் துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், ... |
| முதலில் பணியாற்றிய மாவட்டத்திற்கு குடும்பத்தினரோடு போங்க: மத்திய அரசின் செயலர்களுக்கு மோடி உத்தரவு Posted: புதுடில்லி: 'முதல் முதலாக பணியாற்றிய மாவட்டத்திற்கு சென்று, அங்கு அமலில் உள்ள மத்திய அரசு திட்டங்களின் நிலவரம் அறிந்து, அறிக்கை தாருங்கள்' என, மத்திய அரசின் அனைத்து துறைச் செயலர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, மத்திய அரசில், செயலர்கள் அந்தஸ்தில், 93 அதிகாரிகள் உள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, மத்திய பணியாளர் நலத்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:* மத்திய அரசில் துறை செயலராக பணியாற்றும் ஒவ்வொரு ... |
| அடுத்தடுத்து அடி வாங்கியும் திருந்தாத பாக்., படை எல்லையோர கிராமங்களை குறி வைத்து தாக்குதல் Posted: ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், எல்லையை ஒட்டிய, 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினரின் ஏராளமான நிலைகளை குறி வைத்து, பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தாக்குதல் நடத்தினர்.சரியான பதிலடி:இந்தியா - பாக்., இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., படையினர் சமீப நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர், சரியானபதிலடி கொடுத்தும், அவர்களின் கொட்டம் அடங்கியபாடில்லை.புத்தாண்டு தினத்தை ஒட்டி, பாக்., படையினர் ... |
| கங்கை நம் நாட்டின் சொத்து; அதை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் Posted: புதுடில்லி: கங்கை நதியை தூய்மையாக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஜ் ஜாவடேகர் ஆகியோர் பங்கேற்றனர்.இதில், பிரதமர் மோடி பேசியதாவது: கங்கை, நம் நாட்டின் சொத்து; அதை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. கங்கை நதியோரத் தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள், அதில் கலப்பதால் தான், அதிகம் மாசு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட தொழிற்சாலைகள், கங்கை நதியில் ... |
| ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்' Posted: பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான, இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று நடந்தது.நீதிபதி குமாரசுவாமி: வழக்கு விசாரணையை தொடரலாம்.ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: 1991 - -96 வரை, ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்தார். அப்போது, மாதத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.நீதிபதி (குறுக்கிட்டு): வீட்டு வாடகை படி, பயணப்படி, கார், டிரைவர், தொலைபேசி உட்பட, ஏதாவது வசதிகளை, முதல்வர் என்ற முறையில் பெற்றிருந்தாரா?வழக்கறிஞர்: இல்லை. மாதத்துக்கு, ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே ... |
| கதிரியக்க தன்மை கொண்ட விஷம் காரணமாக சுனந்தா மரணம்; டாக்டர்கள் குழு தகவல் Posted: புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய 11 மாதங்கள் ஆனது ஏன் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. பொலோனியம் 210 அல்லது தல்லியம் என்ற கதரியக்க தன்மை கொண்ட விஷம் கொடுக்கப்பட்டு இறந்திருக்கலாம் என டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி, காங்கிரசின் எம்.பி.,யும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான, சசி தரூரின், 58, மூன்றாவது மனைவி சுனந்தா, 51; கடந்த ஆண்டு ஜன., 17ல், டில்லி நட்சத்திர ஓட்டல் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த ... |
| Posted: கூட்டணிக் கட்சிகளின் மிரட்டலை சந்திக்க, தமிழக பா.ஜ., தயாராகி விட்டது; தே.மு.தி.க., - பா.ம.க., போன்ற கூட்டணி கட்சிகளை தாஜா செய்யும் எண்ணத்தில், அக்கட்சி இல்லை என்று பா.ஜ., வட்டாரங்களில் திட்டவட்டமாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு மாற்றாக, புதிய கூட்டணி ஒன்றை ஏற்படுத்த விரும்பியது, பா.ஜ., இதற்காக, ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி ஒன்றையும் அக்கட்சி அமைத்தது. நீண்ட இழுபறிக்குப் பின் அமைந்த இக்கூட்டணி, தமிழகத்தின் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட்டு, கன்னியாகுமரி ... |
| நதிகளை இணைக்க நிதியுதவி செய்யுங்கள்: மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தல் Posted: சென்னை: 'தமிழக நதிகளை இணைக்க, மத்திய அரசு நிதி ஒதுக்கி, திட்டத்தை விரைவாக செயல்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.டில்லியில், நதிகள் இணைப்பு சிறப்பு குழு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில், பொதுப்பணித் துறை செயலர் பழனியப்பன் பங்கேற்று, முதல்வர் உரையை வாசித்தார். அதன் விவரம்: தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில், காவிரி - வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்த, மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும். மத்திய நீர்வள ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 07,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |