Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எனக்கும் பத்ம பூஷண் வேண்டும் :- குத்துச் சண்டை வீரர் விஜேந்தர்

Posted: 06 Jan 2015 03:23 PM PST

- பத்ம பூஷண் விருதுக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தனது பெயரை பரிந்துரை செய்யாதது ஏன் என்று சாய்னா நேவால் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில்,அவரது விண்ணப்பக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், அவரதுபெயரையும் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்வதாகக் கூறியது. இந்த நிலையில், சுஷில் குமார் மற்றும் சாய்னா நேவால் போன்று தனது பெயரையும் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யுமாறு குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் கோரிக்கை வைத்துள்ளார். இது ...

சென்னையில் முதன் முறையாக-08/01/2015 சொரியாசிஸ் மருத்துவ பரிசோதனை முகாம்

Posted: 06 Jan 2015 12:57 PM PST

சென்னையில் முதன் முறையாக, சொரியாசிஸ் சிகிச்சையில் லிம்கா மற்றும் உலக சாதனை நடத்திய மும்பை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம் ( 08/01.2015) மும்பை மற்றும் இந்தியா முழுவதும் சொரியாசிஸ் நோய்க்கு சிகிச்சை செய்துவரும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் மற்றும் பெங்களுரு இந்தியன் சொரியாசிஸ் பவுண்டேஷன் இணைந்து சென்னையில் ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் (தொடர்புக்கு 90 4333 6444 ) வருகிற 08/01.2014 வியாழன் கிழமை காலை பதினொரு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை ...

வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்!

Posted: 06 Jan 2015 11:12 AM PST

மும்பை: மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷானி ஷிங்பூர் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் வங்கியில் முன்பக்க கதவுகள் இல்லை. வீடுகளில் உள்ள பணம் பத்திரமாக இருக்கும் என அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தங்களை சனி பகவான் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல தலைமுறைகளாக தங்கள் வீடுகளில் கதவுகள் இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் பக்தர்கள் கனவில் வந்த சனி பகவான், வீடுகளில் கதவுகள் பொருத்த வேண்டாம். நான் உங்களைபாதுகாத்து வரும்போது, வீடுகளில் கதவு எதற்கு என ...

வசந்தம் …

Posted: 06 Jan 2015 10:43 AM PST

- பனிப்போர்வை போன்று எங்கும் பசுமையான மரங்கள் குன்றாத வளமை. எங்கு பார்த்தாலும் பறவைகளின் கீச்சிடும் ஓசை. அதுமட்டுமல்லாது அருவிகளின் தாலாட்டுடன் அங்கு மகிழ்ச்சியாக குருவிகள் வாழ்ந்து வந்தன. - சிட்டுக்குருவி ஒன்று தன் தாய் தந்தையிடம் நம் கானகத்தில் பொழுதுபோக்குவதற்கு இடமே இல்லை. எப்பொழுதும் பார்த்த மரங்களையே பார்த்து அலுத்துவிட்டது. எனவே நாம் நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றது. - தாய் குருவி தந்தையிடம் பழகப் பழக பாலும் புளிக்கும். அதுபோல்தான் இருக்கிறது நம் மகன் கூறியதும். அவன் கூறியவாறு ...

ஒருபக்க கதை - தவணை!

Posted: 06 Jan 2015 10:38 AM PST

அண்ணாச்சி கடை பணத்தை எண்ணவிட்டு தலை நிமிர்ந்து சிவராமனைப் பார்த்தார் அண்ணாச்சி. "என்ன சார், கொடுக்க வேண்டிய பாக்கியிலயே பாதி கூட இல்லை?' சிவராமன் பவ்யமாக, "அப்புறம் மீதி தர்றேன்' என்றார். "என்ன? கொடுக்க வேண்டிய பணத்தை இப்படித் தவணை முறையிலே கொடுத்தா நான் எப்படி வியாபாரம் பண்றது?' "கொஞ்சம் பொறுத்துக்குங்க.' கல்லூரி கரஸ் அறை எதிரே நிற்கும் அண்ணாச்சியை பார்த்தார் கல்லூரி கரஸ் கனகரத்தினம். "ஐயா, கடையிலே பணம் சரியா வசூல் ஆகலை. அதனால பையனோட காலேஜ் ஃபீஸை இப்ப கொஞ்சம் கட்டறேன். மீதியை பின்னாடி ...

அடேய்...யாரங்கே கறுப்பாக, படுத்திருப்பது..!?

Posted: 06 Jan 2015 10:37 AM PST

என்னால் மறக்க முடியாத தருணம் - கே.பி குறித்து அமீர்கான்!

Posted: 06 Jan 2015 10:32 AM PST

கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி 'தூம் 3' படத்தின் புரோமஷனுக்காக தமிழகம் வந்த அமீர்கான் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரை சந்தித்தார். அதை நினைவு கூர்ந்து தன்னால் மறக்க முடியாத தருணம் அவரை சந்தித்தது எனவும் மேலும் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் அமீர் கான். அவர் ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, கே.பாலச்சந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பு. சினிமா ...

இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!

Posted: 06 Jan 2015 10:27 AM PST

இரண்டு வாரத்தில் ரூ.278 கோடி வசூல்: அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை! மும்பை: அமீர் கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகி உள்ள 'பிகே' படம் இரண்டு வாரத்தில் ரூ. 278 கோடி வசூலித்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று நாடு முழுவதும் ரிலீஸான 'பிகே' படம், உலகெங்கும் 4000 அரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ரூ 26.63 கோடியை வசூலித்த பிகே, இரண்டாம் நாளில் ரூ 30.34 கோடியை ஈட்டியது. அடுத்த நாளில் ரூ 38.44 கோடியைக் குவித்து ...

லிங்கா படம் நஷ்டம் :(

Posted: 06 Jan 2015 10:26 AM PST

லிங்கா படம் நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி மனு! சென்னை: 'லிங்கா' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளிவந்த படம் லிங்கா. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் தோல்வி அடைந்ததால், படத்தின் வசூல் பாதித்தது. 45 ...

ஆன்டிபயாடிக் ஆபத்துக்கு அணைபோடும் பப்பாளி!

Posted: 06 Jan 2015 10:21 AM PST

எங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமான பப்பாளி, அள்ளி அள்ளித் தரும் பலன்கள் எண்ணிலடங்காதது! *பொதுவாக, மலம் சிக்கல் இன்றி வெளியேறினாலே, பெரும்பாலான நோய்களைத் தள்ளி வைக்க முடியும். இதற்கு கைகொடுக்கிறது... பப்பாளி. இது மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும். * பப்பாளி, ...

ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா!

Posted: 06 Jan 2015 10:18 AM PST

மத்தியப் பிரதேசத்தின் செந்த்வா ஏரியாவைச் சேர்ந்த டெரர் சப்-இன்ஸ்பெக்டர், மோனிகா சிங். இப்போது, 'க்யூன் ஆப் செந்த்வா'வும் மோனிகாதான். ஆண் போலீஸ்கள், என்கவுன்ட்டர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்றால், அம்மணி, ஈவ்டீசிங் ஆசாமிகளை நையப்புடைப்பதில் செம எக்ஸ்பர்ட். இப்போது செந்த்வா பகுதியில், ஓரளவுக்கு பெண்களால் சுதந்திரமாக நடமாட முடிவதற்குக் காரணம் மோனிகா சிங்தான் என்று இந்த லேடி இன்ஸ்பெக்டரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள் அந்த ஏரியா பெண்கள். மோனிகாவின் சமீபத்திய அட்டாக் - ரொம்ப நாட்களாக பெண்களிடம் வம்பு ...

காதல் கவிதை தருவீர்களா

Posted: 06 Jan 2015 10:09 AM PST

அன்பு உறவுகளே, இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம். பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன். முதலில் நான் விரும்பும் கவிதை "யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே" -செம்புலப் பெயல்நீரார் குறுந்தொகை பொருள்: "என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் ...

வந்தார்கள் வென்றார்கள்- மதனின் ஒலி புத்தகம்.

Posted: 06 Jan 2015 09:46 AM PST

ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரா?' என்று சிலர் நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால், 'ஆர‌ம்பித்த‌ நேர‌ம் ...

மீத்தேன் திட்டம்

Posted: 06 Jan 2015 09:08 AM PST

மீத்தேன் திட்டம் என்றால் என்ன? நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும். 2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார். அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் ...

“மம்மி நா டேட்டிங் போறேன்…”

Posted: 06 Jan 2015 07:14 AM PST

"கல்யாணத்துக்கு முன்னாடி
பாதுகாப்பா உறவு
வெச்சிக்கலாம் தப்பில்ல…"
"மம்மி நா டேட்டிங் போறேன்…"
"அடிச் செருப்பாலே நாயே…
அப்ப என்னவோ நான்
ஒரு பேச்சிக்கு சொன்னேன்
கொன்னுப்பூடுவேன் கொன்னு
ஒழுக்கமா இருந்துக்கோ"

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....?

Posted: 06 Jan 2015 07:14 AM PST

அமெரிக்க நாட்டைச் சார்ந்த திரு.லூயிஸ் பீட்டரின் கண்டுபிடிப்பு. ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....? . அது மாணவர்களின் தவறு கிடையாது, அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை.. வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய குறை.. உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்.. . 1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்.. மற்ற நாள்கள் 313 (365-52=313) . 2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம். மீதி 263 ...

ரெட்டை வால் ரெங்குடு - பழசுதான்...மீண்டும் ரசிக்க..!!

Posted: 06 Jan 2015 05:40 AM PST


-

-

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்

Posted: 06 Jan 2015 05:06 AM PST

அனைத்துலக ஆண்கள் நாள் (International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. -- விக்கிபீடியா & ஒன் இந்தியா

வெள்ளிக்கிழமை விரத கதை - அஷ்ட ஐஸ்வரியங்களும் பெற .

Posted: 06 Jan 2015 04:12 AM PST

காசோலை எங்கே - சிறுவர் கதை

Posted: 06 Jan 2015 03:50 AM PST

எம்‌ஜி‌ஆர் படங்களின் தரவிறக்க சுட்டி வேண்டும்....

Posted: 06 Jan 2015 02:31 AM PST

எனக்கு எம்‌ஜி‌ஆர் நடித்த படங்களின் தரவிறக்கம் வேண்டும் .... கிடைக்குமா ??? உதவுங்க நண்பர்களே......

Real in Rio ...(காணொளி)

Posted: 06 Jan 2015 12:22 AM PST

இடையூறு செய்யாதீரகள் - (கவிதை ) - அறிவுமதி

Posted: 06 Jan 2015 12:08 AM PST


-

தலைமுடிக்கு ஹேர்பின்தான் மாட்டிக்க முடியும்...!

Posted: 06 Jan 2015 12:04 AM PST

புதுக் கவிதைகள்

Posted: 05 Jan 2015 11:58 PM PST

திருமண உறவுகளில் கசப்பினைத் தவிர்க்க...

Posted: 05 Jan 2015 11:26 PM PST

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக தேவை...

Posted: 05 Jan 2015 10:01 PM PST

கண் நோயினைத் தடுக்கும் வைட்டமின் - ஏ - ஜலதோஷம் மற்றும் சளிக்கு காரணமாவது - வைரஸ் பாதிப்பு - நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து உடலைக் காக்கும் வைட்டமின் - சி - உணவுகள் நம் உடலில் ஜீரணிக்க உதவும் அமிலம் - ஹைட்ரோ - எல்லா ஓட்டல்களிலும் தேவையற்ற உப்பு உபயோகிக்கிறார்கள்,அது - அசினமோடோ - ஆரோக்கியமான உடலை பெற குறைத்துக் கொள்ள வேண்டியவை - கொழுப்பு - கிளைசீமிக் இன்டெக்ஸ் என்ற வார்த்தை சர்க்கரை அளவைக் குறிக்க பயன்படுவதாகும் - இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக தேவை - ஹீமோகுளோபின் - மஞ்சள் ...

அதிருப்தி எதிரொலி: பத்ம பூஷண் விருதுக்கு சாய்னா பெயர் பரிந்துரை

Posted: 05 Jan 2015 09:29 PM PST

- சாய்னா நேவால்-கோப்பு படம் --------------------------------------------------- பத்ம பூஷண் விருதுக்கு பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பெயரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சாய்னா நேவாலின் சாதனைகளை கருத்தில் கொண்டு அவரது பெயர் பத்ம பூஷண் விருதுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு முடிந்துவிட்டாலும், சிறப்பு அந்தஸ்து வழங்கி ...

கருட ஒலி

Posted: 05 Jan 2015 08:46 PM PST

- - பறவைகளிலேயே ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு மிகவும் சக்தி உண்டு கூறுவர். இந்த ஒலியை 'கருடத்வளி' என்று கூறுவர். இது சாம வேதத்வனியாகும். திருமணத்தில் திருமாங்கல்யம் கட்டும்போது கருடத்வனி ராகத்தில் நாதஸ்வரத்தில் இசைப்பார்கள். அவ்வளவு மகிமை வாய்ந்தது - ——————————————————————- -எஸ்.பாரதி – (மங்கையர் மலர்)

மழைத்தும்பிகள் - அறிவுமதி

Posted: 05 Jan 2015 08:41 PM PST

காதல் காதல் - இணையத்தில் ரசித்தவை

Posted: 05 Jan 2015 08:22 PM PST


-

-

இயற்கை வேளாண்மை புத்தகம்

Posted: 05 Jan 2015 06:59 PM PST

இயற்கை வேளாண்மை புத்தகம் லிங்க் :
http://www.mediafire.com/view/vv797fwd8tr1uw6/iyrrkai_veellaannmai_a_mutl_H_v_-_ponnn.pdf

கலாஷேத்திரா நிறுவப்பட்ட நாள் -ஜனவரி 6

Posted: 05 Jan 2015 06:14 PM PST

- கலாக்ஷேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும். ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள். அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது. 1962 இலிருந்து கலாக்ஷேத்திரா சென்னையில் திருவான்மியூரில் ...

வட்டியும் முதலும் புத்தகம்

Posted: 05 Jan 2015 06:01 PM PST

வட்டியும் முதலும் மென்புத்தகம்

லிங்க் :

பள்ளி சீருடை

Posted: 05 Jan 2015 05:01 PM PST


-

முக்கனி - சிறுவர் பாடல்

Posted: 05 Jan 2015 04:54 PM PST



-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™