Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்ப பெற மாட்டேன் : இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிரிசேனா அறிவிப்பு

Posted:

கொழும்பு:தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இலங்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என, அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும், மைத்ரிபாலா சிரிசேனா தெரிவித்து உள்ளார்.இலங்கையில், வரும் 8ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர், மகிந்த ராஜபக் ஷே, மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மைத்ரிபாலா சிரிசேனா களம் இறக்கப்பட்டு உள்ளார்.சிரிசேனாவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை ...

ஆறு இருக்கு, 'போர்' இருக்கு...ஆனால் நீர் இருக்கா? எக்ஸ். செல்வக்குமார்- மற்றும் ஏ.சிவகுருநாதன்

Posted:

காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று, நொய்யல்; நொய்யலின் கிளை ஆறு தான், இந்த கவுசிகா நதி. நொய்யல் துவங்கி, காவிரி வரையிலும் எல்லா நதிகளும், சாயக்கழிவுகள், சாக்கடைகளால் மாசுபட்டு வரும் நிலையில், கவுசிகா நதி இன்று வரையிலும், கழிவுகள் கலக்காமல், தூய்மையான நதியாக இருக்கிறது என்பது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அதிசயங்களில் ஒன்று. நொய்யலில் கலப்பதற்கு முன்பாக, ஒரு கி.மீ., தூரத்தில் இந்த நதியில் ஊற்றாகப் பொங்கி வழிந்து, கண்ணாடியின் தெளிவோடு பாய்கின்ற தண்ணீரே இதற்கு சாட்சி. ஆனால், இந்த நதி, நொய்யலில் சங்கமிக்கும் இடத்திலேயே சாய ஆலை ஒன்றிலிருந்து நொய்யல் ...

மலிவு விலையில் 'அம்மா சிமென்ட்': தமிழகத்தில் விற்பனை துவக்கம்

Posted:

ஏழை மக்களுக்கு, குறைந்த விலையில் சிமென்ட் வழங்கும், 'அம்மா சிமென்ட்' திட்டம், நேற்று திருச்சி மாவட்டத்தில் துவங்கியது. 'வரும் 10ம் தேதிக்குள், தமிழகம் முழுவதும் விற்பனை துவக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.'அம்மா சிமென்ட்' விற்பனை திட்டத்தை, கடந்த ஆண்டு, செப்., 26ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, 'அம்மா சிமென்ட்' விற்பனை திட்டம், நேற்று திருச்சி மாவட்டத்தில் துவங்கியது. இதற்காக, அரியலூர் மாவட்டம், செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தில் இருந்து, 400 டன் சிமென்ட் மூடைகள், லாரிகள் மூலம், திருச்சி கொண்டு வரப்பட்டன. துறையூர், முசிறி, ...

எல்லையில் பாக்., படை முகாம்களை பார்வையிட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீது

Posted:

புதுடில்லி:எல்லையை ஒட்டியுள்ள பாக்., பகுதிக்கு, சமீபத்தில், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய சதிகாரனான ஹபீஸ் சயீது வந்து சென்றதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அத்துமீறி தாக்குதல்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, இந்திய பாதுகாப்புப் படையினரின் நிலைகள் மீது, சமீப நாட்களாக, பாக்., படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், எல்லையை ஒட்டி உள்ள பாக்., பகுதியில் உள்ள, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரின் ...

ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் முன்னேற்றம்

Posted:

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, இரு வாரங்களாகியுள்ள நிலையில் அங்கு ஆட்சி அமைக்கும் விஷயத்தில், முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பதாக பா.ஜ., தெரிவித்திருக்கிறது.பெரும்பான்மை: இதுபற்றி ஆலோசிக்க ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ., தலைவர்கள், நேற்று டில்லியில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்தனர். ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், கடந்த மாதம் வெளியாகின. இதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பது தொடர்பான விஷயத்தில், இழுபறி நிலைமை நீடிக்கிறது. தேர்தலில், அதிக ...

ரயில் பயணிகளுக்கு காத்திருக்கிறது ராஜ உபசாரம்

Posted:

மும்பை:ரயில் பயணிகளுக்கு, இனி ராஜ உபசாரம் காத்திருக்கிறது. ஸ்டேஷனில் வந்து இறங்கியது முதல், வீட்டுக்கு செல்லும் வரை, பயணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, ரயில்வே துறையில் பல அதிரடியான திட்டங்களைசெயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பயணிகளுக்கு மிகவும் உதவும் வகையிலான ஒரு திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரி கூறியதாவது:தற்போது, ...

படகில் வந்தவர்கள் பயங்கரவாதிகளே! ராணுவ அமைச்சர் பாரிக்கர் தகவல்

Posted:

புதுடில்லி:''பாகிஸ்தானிலிருந்து, கடந்த 31ம் தேதி நள்ளிரவு, இந்திய கடல் பகுதிக்கு, படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகளே,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார்.டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரிக்கர் கூறியதாவது:பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகேயுள்ள, கீத்பந்தர் என்ற இடத்திலிருந்து, படகில் புறப்பட்ட பயங்கரவாதிகள் சிலர், கடந்த 31ம் தேதி இரவு, இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவினர். அப்போது, கடலோர காவல் படையினர், அவர்களை வழிமறித்த போது, படகில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர். ...

'நிடி ஆயோக்' துணை தலைவராக பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகரியா நியமனம்

Posted:

புதுடில்லி:உலகின் தலை சிறந்த பொருளாதார நிபுணரும், கொலம்பியா பல்கலை பேராசிரியருமான, அரவிந்த் பனகரியா, திட்ட கமிஷனுக்கு பதிலாக, மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள, 'நிடி ஆயோக்' என்ற அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக கொண்டுள்ள, 'நிடி ஆயோக்', வளர்ச்சித் திட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பதில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படும். இப்புதிய அமைப்பில், முழு நேர உறுப்பினர்களாக, பொருளாதார நிபுணர் பிபெக் தெப்ராய் மற்றும் பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைவர், வி.கே.சரஸ்வத் ...

7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

Posted:

மும்பை:மும்பையில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, இந்திய அறிவியல் மாநாட்டில், புராணங்களையும், இதிகாசங்களையும் சுட்டிக்காட்டி, விஞ்ஞானிகள் என்ற பெயரில் சிலர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளது, சர்வதேச விஞ்ஞானிகள் பலரையும் வியப்படைய செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட அறிவியல் மாநாடு தேவையா என, விமர்சிக்கவும் வைத்துள்ளது.மும்பையில், 102வது இந்திய அறிவியல் மாநாடு, கடந்த, 3ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்கிறது. இந்த ஐந்து நாள் மாநாட்டில், விஞ்ஞானிகள் பலர், ஆக்கப்பூர்வமான பல அறிவியல் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.அதே நேரத்தில், 'இந்தியாவில், 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே ...

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ., அப்பீல் மனு மீதான விசாரணை விறுவிறுப்பு : உடனே விவாதத்தை துவக்க ஜெ., வக்கீலுக்கு நீதிபதி கண்டிப்பு

Posted:

பெங்களூரு:கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்ய அப்பீல் மனு மீதான விசாரணை, நேற்று முதல் விறுவிறுப்பாக துவங்கியது. 'மேல்முறையீட்டு மனுவில் வாதிட, டில்லி சென்று மூத்த வழக்கறிஞரை அழைத்து வர வேண்டும் என்பதால், விசாரணையை, இரண்டு நாள் தள்ளி வைக்க வேண்டும்' என, ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் கோரிக்கையை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசுவாமி நிராகரித்தார்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ...

பிரேசில் சென்ற கோவா எம்.எல்.ஏ.,க்கள் 'அல்வா'

Posted:

பனாஜி:கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக, அரசு செலவில், பிரேசில் சென்ற கோவா மாநில எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், அதற்கான செலவு தொகையை, அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.கோவா மாநில எம்.எல்.ஏ.,வும், மீன்வளத் துறை அமைச்சருமான, அவர்டானோ பர்தாடோ, அம்மாநில எம்.எல்.ஏ.,க்கள் கார்லோஸ் அல்மெய்டா, கிளன் டிக்ளோ மற்றும் பெஞ்சின் சில்வா ஆகியோர், பிரேசில் நாட்டில், கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க, மாநில அரசின் செலவில் சென்றனர்.கல்விச் சுற்றுலா என்ற பெயரில், அவர்கள் பிரேசில் சென்றது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™