Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


‘லிங்கா’ பட நஷ்டம்: ஜனவரி 10-ம் தேதி விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted: 05 Jan 2015 02:50 PM PST

- கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளி வந்த படம் லிங்கா. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படத்தின் வசூலும் அப்படியே. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தாங்கள் பெரிதும் நஷ்டப்பட்டுவிட்டதாக புலம்பிய படியே இருக்கிறார்கள். எனவே, நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும்" என்று அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், லிங்கா படத்தால் ஏற்பட்ட ...

இரவு-பகல் சுழற்சிப் பணி செய்தால் இருதய நோய்க்கான வாய்ப்பு

Posted: 05 Jan 2015 02:44 PM PST

இரவிலும், பகலிலும் சுழற்சி முறையில் பணியாற்றுபவர்களுக்கு இருதய நோய்களும், நுரையீரல் புற்று நோயும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. - இரவு நேரப் பணியாற்றுபவர்களை புற்று நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு 2007-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. - இந்நிலையில், பகல் அல்லது மாலை நேரப் பணியுடன், மாதமொன்றுக்கு குறைந்தது 3 இரவுகளாவது பணியாற்றுபவர்களின் உடல் நிலை குறித்து சர்வதேச ஆய்வுக் குழு அண்மையில் ஆய்வு நடத்தியது. அமெரிக்காவில் ...

தூய்மை இந்தியா திட்டம்: தூதரானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்

Posted: 05 Jan 2015 02:39 PM PST

- - பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்துக்கான ஆந்திர மாநில தூதர்களாக கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லஷ்மண், செஸ் வீரர் கொனேரு ஹம்பி, திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இதனை அறிவித்தார். ============ -தினமணி

நாட்டில் முதன்முறையாக நகராட்சி மேயராகியுள்ள திருநங்கை

Posted: 05 Jan 2015 02:36 PM PST

- நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் முதன் முறையாக நகராட்சி மேயராக ஒரு திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்வில், ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர் (35) என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மஹாவீர் குருஜியை 4,537 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 8ம் வகுப்பு வரை படித்துள்ள மது கின்னர், திருநங்கையாக மாறியதால் படிப்பைத் தொடர முடியாமல் பல்வேறு வேலைகளைச் செய்து ...

திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!

Posted: 05 Jan 2015 11:38 AM PST

1) குடிக்க கூடாது.எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது 2) எப்பவும் பிரண்ட்ஸ் கூட அதிக நேரம் இருக்ககூடாது 3) கோபப்படகூடாது 4) வேலை செய்யும் இடத்தில் பெண்கள்கிட்ட பேசக்கூடாது. 5) சண்டை போட்டா மாமானர் மாமியரை திட்டக்கூடாது. அடுத்தவங்க முன்னாடியும் திட்டக்கூடாது. 6)சீரியல் பார்க்கற அப்ப t.v சேனலை மாத்தக்கூடாது. 7) பொய் சொல்ல கூடாது 8) சண்டை சச்சரவுகளுக்கு போகக்கூடாது 9)தன்னை வீட்டில் விட்டுவிட்டு பிரண்ட்ஸ் கூட டூர் மற்றும் பங்கஷனுக்கு போக கூடாது. 10) எப்பவும் அடுத்தவங்கள ...

நான் வெற்றியின் முதல் படியில் இருக்கிறேன்..!

Posted: 05 Jan 2015 11:22 AM PST

பொய்!

Posted: 05 Jan 2015 11:18 AM PST

பொய் சொல்லுவது என்பது

குழந்தைக்கு அது பாவம்

வயதுக்கு வந்தவருக்கு அது தவறு

காதலர்களுக்கு அது கலை

வக்கீலுக்கு அது தொழில்

அரசியல்வாதிக்கு அது தேவை

அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி

வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு

திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம்...!


-யாரோ தெரியவில்லை.

முழுமையான தானம்.

Posted: 05 Jan 2015 11:15 AM PST

அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான். கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,''என்றார். அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து ...

ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Posted: 05 Jan 2015 11:08 AM PST


-
ஜோக் முடிவை சொல்லுங்க..!!

உடல் விற்பவள்...!! -Mano Red

Posted: 05 Jan 2015 10:35 AM PST

அது விசித்திரமான தொழில் தான், அவளும் ஒரு சித்திரம் தான்..!! பழக்கப்பட்ட அவளும் கண்ணீர் சிந்தியிருப்பாள், கசங்கிய ரூபாய்க்குள் கதைகள் ஆயிரம் வைத்திருப்பாள்..!! கேடு கெட்டவர்களின் முன் கொஞ்சம் விசேஷமானவள் அவள்..!! அவள் தெருக்களில் சுற்றியே வாய்ப்பைக் கவர்கிறாள், அவள் எங்கோ இருந்துகொண்டே தன்னைக் கூவி விற்கிறாள், இன்னும் அவள் வேறு எங்கெங்கோ காத்துக் கிடக்கிறாள்...!! அவளை வசைபாடும் உங்களில் யார்தான் யோக்கியம் இங்கே...?? உடலை விற்பதும் ஒரு கலைதான் என்பதோடு சிரமமானதும் ...

"காதலர் தினம்"

Posted: 05 Jan 2015 09:28 AM PST

கி.மு.  . 4ஆம் நூற்றாண்டில் . உரோமானியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில், பங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள் அனுபவித்து வந்த பெண்களை ஆண்டுக்கு ஆண்டு அதே குலுக்கல் முறையில் மாற்றிக் கொள்ளவும் செய்தனர். அக்கொடுமை கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்து வந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் நடந்து வந்த காமக் கொடுமைக்குத் துணை நின்ற உரோமானிய அரசு, காதலுக்கும் காதல் வாழ்வுக்கும் தடை விதித்தது. தடுக்கப்பட்ட தடைவிதிக்கப்பட்ட ...

எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Posted: 05 Jan 2015 09:26 AM PST

- "உங்க ஊர்ல பப்பாளி சீப்பா கிடைக்குமா?'' "எங்க ஊர்ல இல்ல. நீங்க துபாய் போனாக் கூட  சீப்பா கிடைக்காது. சிங்கிளாத்தான் கிடைக்கும். - அம்பிகா மயில், - ---------------------------------- - "டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்குப் போய் நீ  எங்கேன்னு உங்கப்பாகிட்ட கேட்டேன். அதுக்கு அவர்  அந்த மாடு எங்கேயாச்சும் மேயப் போயிருக்கும்னு  சொன்னார்'' - "அது கூட பரவாயில்லை மாப்பிள்ளை... நான் திரும்பிப்  போனதும் உன்னைத் தேடி ஒரு எருமை வந்துச்சுன்னு  சொன்னாருடா'' ஜோ.ஜெயக்குமார்,  - ------------------------------------. - எங்க ...

லேப்டாப்பில் இருந்து mobilukku wifi connect செய்வது எப்படி ?

Posted: 05 Jan 2015 08:45 AM PST

லேப்டாப்பில் இருந்து mobilukku wifi connect செய்வது எப்படி ?

கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை!

Posted: 05 Jan 2015 08:01 AM PST

சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது. ஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான். படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை ...

முகனூலில் முகர்ந்தவை

Posted: 05 Jan 2015 07:48 AM PST

முகனூலில் முகர்ந்தவை : *பையன்: உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன். பொண்ணு: நீயே போட்டுவிடு பையன்: இப்படி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்..... ************************************** *அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது? மகன்: நிலா மாதிரி! அப்பா: நிலா மாதிரின்னா? மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!! ************************************** *அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா? மகன்: ச்சீ..சீ.. நாலு ...

லேப்டாப்பில் இருந்து mobilukku wifi connect செய்வது எப்படி ?

Posted: 05 Jan 2015 07:40 AM PST

லேப்டாப்பில் இருந்து mobilukku wifi connect செய்வது எப்படி ?

"படித்ததில் பிடித்தது - விமந்தனி"

Posted: 05 Jan 2015 07:39 AM PST

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்... அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே! நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்! ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் ...

தன்னம்பிக்கை – கவிதை

Posted: 05 Jan 2015 07:22 AM PST

- - மண்ணிலே வீழ்ந்தாலும்! மனச்சோர்வு கொள்ளாதே நன்மரமாய் விழி மலர்ந்தே நற்பலன்கள்தாம் தருவாய்! - கடும் பாலையில் புதைந்தாலும் சோகம் கொண்டு விடாதே – சுடர் சோலையென நீ மலர்ந்தே சுகம் ஈந்து மகிழ்ந்திருப்பாய் - நதியதனில் மூழ்கிடினும் நாதியற்றுப் போய்விடினும் – ஆங்கே நாணலாய் முளைத்தெழுவாய் உன் இருப்பதனை உணர்த்திடுவாய் - நடுக்கடலில் வீழ்ந்தாலும் மீளும் வழி இழந்தாலும் நன்முத்தாய் விளைந்திடுவாய் புவி சேர்ந்து புகழ் கொள்வாய் - நெருப்பிலிட்டு எரித்தாலும் நீறு பூத்து மறைத்தாலும் சக்கரவாகப் ...

வாட்ஸ் அப் / முகநூல் --நகைச்சுவை

Posted: 05 Jan 2015 06:13 AM PST

வாட்ஸ் அப் / முகநூல் --நகைச்சுவை வாட்ஸ் அப்பில் நீந்தி வரும் செய்தி காதலன் : ஹாய் காதலி : ஹலோ ! காதலன் : என்ன பண்ணிண்டு இருக்கே . காதலி : என் அப்பாவோட BMW இல் க்ளப் இக்கு போயிண்டு இருக்கேன் . டிரைவர் என்னை இறக்கி விட்டு விட்டு போய் விடுவார் . க்ளப்பில்லிருந்து நேராக மாலுக்கு போய் ஷாப்பிங் முடித்துக்கொண்டு , உனக்கு கால் பண்ணறேன் . இப்போ எங்கே இருக்கே ? காதலன் : அன்பே , 11 H பஸ்சுலே உன் சீட்டுக்கு பின்னால் உட்கார்ந்து இருக்கேன் . உனக்கும் சேர்த்தே நான் டிக்கட் எடுத்துட்டேன் ...

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 05 Jan 2015 06:11 AM PST

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 05 Jan 2015 06:04 AM PST

நித்திய வாழ்க்கை…!! * நல்ல காலம் பிறந்து விட்டதென்று அவசர அவசரமாய் கல்யாணப் பொறுப்புகளைப் படபடவென்று பார்க்கத் தொடங்கினர். ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது ஒன்பது பொருத்தம் பார்த்தனர். இலட்சங்களை வாரி இரைத்து இறுமாப்போடு ஊர்ப் போற்றும் சீர்வரிசையோடு திருமணம் செய்து முடித்தனர். எத்தனை நொடிகள்? நிமிடங்கள்? எத்தனை நாள்கள்? மாதங்கள்? எத்தனை வருடங்கள்? தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியோடு வாழ்ந்தாய். சின்னச் சின்னச் சிணுங்களின் சிக்கல்களில் விழுந்தாய். சிந்தைத் தடுமாறினாய் மனஇறுக்கமானாய் மனமுறிவு ...

எங்கோ படித்தது

Posted: 05 Jan 2015 05:57 AM PST

இரவு 12 மணி இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை. மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக. இத்தனை வருடங்கள்  நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது என்று மத்திய ...

சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…!

Posted: 05 Jan 2015 05:41 AM PST

- பொறுமை - சைவம் சாப்பிடும் ஓவியர் அருவருப்போடு வரைந்தார்   மீன் படம் - ———————————————– - பதிலுக்குப் பதில் - பொய்யான கூந்தல் புதுசாய் சூடினாள் வாசமில்லா மலர்..! - ———————————————— - குரைப்பு - பக்கத்து வீட்டக்காரர்கள் சண்டை சந்தோஷமாய் இருந்தன இருவர் வீட்டு நாய்களும் - —————————————————— - இளமை - இளமையில் கல்' என்பதை படிக்காமலேயே பிடித்துக்கொண்டார் மாணிக்க கல்வியாபாரி - ————————————————————- - சிரிப்பு - சிரிப்பே சிறப்பு' என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார் நகைச்சுவை ...

இலங்கை அதிபர் தேர்தல்: நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்

Posted: 05 Jan 2015 05:04 AM PST

- இலங்கையில் வரும் 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபட்ச மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மைத்ரிபாலா ஸ்ரீசேனா போட்டியிடுகிறார். இரு தரப்பிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாளை நள்ளிரவு 12ம் மணியுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இலங்கையில், வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் ...

விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...

Posted: 05 Jan 2015 04:31 AM PST

எங்க சின்னம்மா பையனுக்கு எங்க ஊரில்(இளையான்குடி) கல்யாணம் . இன்னைக்கு சாயந்திரம் 5 மணி ட்ரைனுக்கு கெளம்புறோம்... ஜனவரி 4ந்தேதி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.....

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி!

Posted: 05 Jan 2015 04:14 AM PST

வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து.' ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம் தருவதாம். ஓர் இளம்பெண் அணியும் அணிகலன்களிடையே, நன்கு ஆராய்ந்தறிந்து மங்களகரமாக அணிவது, மூக்குத்தி தான். மூக்குத்தி அணிந்திருப்பதே ஒரு பெண்ணிற்கு பெருமையும், கவுரவத்தையும் கொடுக்கிறது. உலகம் முழுவதும் அணியப்படுகிற உடைகளாகட்டும், நகைகளாகட்டும், ...

காதல் – ஒரு பக்க கதை

Posted: 05 Jan 2015 03:35 AM PST

காவ்யாவுக்கு பயம்தான். இருந்தாலும் தைரியமாகச் சொன்னாள். - "அப்பா, ஆனந்தை நான் மூணு வருஷமா காதலிக்கிறேன். நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கிறார். நாளைக்கு உங்க ஆபீஸுக்கு வரச்சொல்றேன். அவர உங்களுக்கும் பிடிக்கும். நீங்க சம்மதிப்பீங்கன்னு நம்பறேன்பா' என்றாள். - சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, ஆனந்தைச் சந்திக்க ஒப்புக் கொண்டார், காதலுக்கு எதிரியான அப்பா ரகுநாதன். - ரகுநாதன் எதிரில் ஆனந்த் அமர்ந்திருந்தான். நல்ல அழகு. வியர்த்துப் போயிருந்தான். ரகுநாதன், "இதப்பாரு, என் மகளோட வாழலாம்னு ...

சிபாரிசு - ஒரு பக்க கதை

Posted: 05 Jan 2015 03:31 AM PST


-
>ஜெ.கண்ணன் - குங்குமம்

தடையின்றி மழை பெய்ய வேண்டும்

Posted: 05 Jan 2015 02:59 AM PST

- - மழையே மழையே – நீ எப்படி உருவானாய்? துளி துளியாய் – நீ சிந்துவதெப்படி சொல்? - இறைவன் படைப்பில் – நீ ஈடில்லாத செல்வம் எல்லா உயிர்களுமே – உன் வருகையை எதிர்நோக்கும் - மண்ணில் உன் காலடி பட்டால்தானே வளம் பெருகும் எந்த நாளும் மழையே – நீ இங்குப் பெய்திட வேண்டும்! - ——————————————————- -ம.அருள்வேந்தன் (சுட்டி மயில்)

சூப்பர் செல்ஃபி - இது குரங்கு செல்ஃபி

Posted: 05 Jan 2015 02:50 AM PST

- - அட! உண்மைதாங்க. இது குரங்கு வேலையேதான். காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான டேவிட் ஸ்லேடர் இந்தோனேஷியா காட்டுப் பகுதியில் சுற்றி வந்தபோது திடீரென்று ஒரு கருங்குரங்கு அவர் கேமராவைப் பிடுங்கிக்கொண்டது. இது என்ன பெரிய விஷயம் நான் கூடத்தான் செல்ஃபி எடுப்பேன் என்பதுபோலக் கேமரா பட்டனை அழுத்தியதில் நூற்றுக்கணக்கான செல்ஃபிகள் வந்து விழுந்தன. இது நடந்தது 2011-ல். - ஆனால் ஏன் இப்போது இதைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், குரங்கின் செல்ஃபி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட விக்கிப்பீடியாவுக்கும் டேவிடுக்கும் ...

படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.'

Posted: 05 Jan 2015 02:50 AM PST

கணக்கு..............

மனைவி இன்
உதட்டு சாயத்துக்கு
பார்க்காத கணவன்..............

தாயின் மருத்துவ
செலவுக்கு
பார்ப்பது ................

சொர்ணாம்பிகை
பாளையங்கோட்டை

கழுதையை பார்! – ஞானம் வரும்..!!

Posted: 05 Jan 2015 02:47 AM PST

- ஒரு குடும்பஸ்தருக்கு திடீரென்று வாழ்வில் வெறுப்பு தோன்றியது. தானும் சிறந்த ஞானம் பெற்று ஒரு பெரிய ஞானியாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. - அந்த ஊரில் இருந்த ஞானி ஒருவரிடம் சென்று தன் ஆசையைச் சொன்னார். இவரது ஆர்வத்தை நன்கு புரிந்து கொண்ட அந்த ஞானி, உபதேசம் மூலம் இவருக்கு ஞானத்தைத் தெரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். - சில நிகழ்வுகளை உணர வைத்தே இவருக்கு ஞானத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் ஞானிக்குப் புரிந்தது. - ""உங்கள் வீட்டு வழியாக சலவைக்காரன் பொதி சுமக்கும் கழுதையைத் ...

அவன் - ஒரு பக்க கதை

Posted: 05 Jan 2015 02:44 AM PST


-
-கே.ஆனந்தன் - குங்குமம்

அவனுக்கு ஒரு வேலை – ஒரு பக்க கதை

Posted: 05 Jan 2015 02:41 AM PST

வசந்தன் கடந்த இரண்டு வருஷமாக அந்த ஓட்டலில் தான் சாப்பிடுகிறார். வழக்கமாக ஜன்னலோரம் ஒரு குறிப்பிட்ட மேஜையில்தான் அமர்வார். அந்த டேபிளை கவனிக்கும் சர்வர் பையனின் சுறுசுறுப்பும் கனிவான உபசிரிப்பும் அவருக்கு ரொம்ப பிடிக்கும் - அவனுக்கு சம்பளம் இங்கே வெறும் 750 ரூபாய்தான் என்பதை ஒருமுறை அவனிடம் பேச்சுக் கொடுத்து தெரிந்து வைத்திருந்தார் - இன்று அவனுக்கு இன்ப அதிர்ச்சி பொடுக்கலாம என்று, "என்னப்பா என் ஹவுளிக் கடைக்கு வேலைக்கு வந்துடறியா? 2000 ரூபாய் சம்பளம் தர்றேன்" என்றதும், பையன் குஷியாகி ...

உயிர் தந்த தந்தையே..!

Posted: 05 Jan 2015 02:19 AM PST

- உங்கள் உதிரத்தில் உதித்த முத்து நான் உறங்கும் போது உங்கள் தாலாட்டு உண்ணும்போது உங்கள் உணவு உண்மையான உறுதியான உற்சாகத்துடன் உயிர் கொடுத்து இப்புவியில் தவழவிட்டீர் தவமான என் தந்தையே பூமியில் நல்லதை விதைத்த உயிர் தந்த என் தந்தையே இந்த உடல் சாயும் வரை உங்களை மறவேன் என் தந்தையே..! - ——————————————— -கீர்த்தியாணி - இடைநிலைப் பள்ளி மாணவி ({சுட்டி மயில்)

மழை நீர் செகரிப்பு - சிறுவர் பாடல்

Posted: 05 Jan 2015 02:18 AM PST

துணி சுமந்த கழுதை…

Posted: 05 Jan 2015 02:14 AM PST

- தொழில் சுத்தம்..! - கெட்டவனாய் இருந்தவனுக்கு நல்ல பேர் கிடைத்தது சினிமாவில் வில்லன்..! - ————————————————— - சகிக்கவில்லை..! - துணி சுமந்த கழுதை கொடூரமாகக் கத்தியது அழுக்குத்துணி நாற்றம் - —————————————————– - இயல்பு - சைவம் சாப்பிட்டவன் கோபமாய் கத்தினான் மிருகம் போல்..! - —————————————————- - சகிப்புத் தன்மை - 'சாப்பாடு தயார்' பலகையை நிறுத்தியவன் பசியோடிருந்தான்..! - ============================ –டி.என்.இமாஜான்

தென்னை மரம் - சிறுவர் பாடல்

Posted: 05 Jan 2015 02:11 AM PST

இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி:

Posted: 05 Jan 2015 01:29 AM PST

- காந்தஹார் விமான கடத்தலைப் போன்று ஏர் இந்தியா விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. குறிப்பாக டெல்லி-காபூல் ஏர் இந்தியா விமானத்தை தீவிர வாதிகள் கடத்த முயற்சிக்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அந்த விழாவைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருவதாக உளவுத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™