Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நதி நீர் இணைப்புக்கு நிதி கொடுங்க! மத்திய அரசிடம் கேட்க டில்லி செல்கின்றனர் நீர்வளத்துறையினர்

Posted:

நதி நீர் இணைப்புக்கான ஏற்பாடுகளை துவக்க, மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு நிதி கேட்டு, தமிழக அதிகாரிகள், விரைவில் டில்லி செல்ல உள்ளனர்.இரண்டு கட்டப்பணி:தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு, காவிரி - வைகை - குண்டாறு, பெண்ணையாறு - பாலாறு, காவிரி - சரபங்கா ஆகிய நதிகளை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இதில், தாமிரபரணி -- கருமேனியாறு - - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை, அரசு துவங்கியுள்ளது. நான்கு கட்டமாக இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு, இரண்டு கட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.மற்ற நதி ...

பொங்கல் பரிசு தொகுப்பு இந்த ஆண்டு வழங்கப்படுமா?

Posted:

வேலூர்:தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு தொகுப்பு, இந்த ஆண்டு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகையை, எல்லா தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக, கடந்த தி.மு.க., ஆட்சியில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு அடங்கிய பொங்கல் பை வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ ...

கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் வேண்டுகோள்

Posted:

புனே: விவசாய கடன் திட்டங்களால் யாருக்கு நன்மை என்பது குறித்து ஆராய வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், கடன் தள்ளுபடி திட்டங்களை கைவிட வேண்டும் என, வங்கிகளும் ஒருமித்த குரலெழுப்பியுள்ளன.புனேயில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில், வங்கித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.குறிப்பாக, வங்கித் துறை வளர்ச்சிக்கு, தடையாக உள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டங்கள் குறித்து, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, கூட்டத்தில் ...

'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தை கைகழுவி 'சுகோய்' வாங்க முடிவு?

Posted:

புதுடில்லி:பிரான்சில் இருந்து, 'ரபேல்' போர் விமானங்கள் 18ஐ வாங்கவும், 108 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கவும், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன், 2007ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படாமல், இழுபறியில் உள்ளது. இதனால், ரஷ்யாவிடம் இருந்து, சுகோய் - 30 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு தயாராக உள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சின், 'டஸ்ஸால்ட்' என்ற விமான தயாரிப்பு நிறுவனத்திடம், 2007ல், அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு, ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன் படி, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 18 ரபேல் ரக விமானங்களை வாங்குவது, பெங்களூருவில் உள்ள, எச்.ஏ.எல்., ...

மனித கழிவை மனிதன் உண்ணும் அவலம்: மத்திய அரசின் அதிர்ச்சி 'ரிப்போர்ட்'

Posted:

புதுடில்லி: கழிப்பறை இல்லா கிராமங்களில் வசிப்போர், தங்களை அறியாமலே, மனிதக்கழிவு கலந்த உணவை உண்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அறிக்கை:பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், 'கிராம பஞ்சாயத்துகளில் துப்புறவுக்கான அடிப்படை நூல்' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம்:1,200 பேர் வசிக்கும், கழிப்பறை வசதியற்ற ஒரு கிராமத்தில், ஒரு நாளைக்கு, 300 கிலோ, மனிதக்கழிவு வெளியேற்றப்படுகிறது. அங்கு ஒருவர், தினமும் தன்னையறியாமலே, 3 கிராம் மனிதக்கழிவு கலந்த உணவை உண்கிறார்.இந்த கணக்கின் படி, இக்கிராமங்களில், ஒருவர் ஒருநாள் உண்ணும் ...

சோனியா மருமகன் வாத்ராவுக்கு துவங்கியது சிக்கல்: 200 ஏக்கர் நிலம் பறிமுதல்

Posted:

ஜெய்ப்பூர்: காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் மாவட்டத்தில், குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கி, அதிக விலைக்கு விற்றது குறித்து, விசாரித்து வரும் ராஜஸ்தான் மாநில அரசு, 18 ஒப்பந்தங்களை ரத்து செய்து, அவரின், 200 ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்துள்ளது. இதனால், ராபர்ட் வாத்ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.குறுகிய காலத்தில்: சாதாரண, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ராபர்ட் வாத்ரா, ரியல் எஸ்டேட் தொழிலில், குறுகிய காலத்தில் கோடிகளை குவித்தார். அரியானா மாநிலத்தில், அவரின் முறைகேடான ஒப்பந்தங்களை ...

மருத்துவ செலவு ஆண்டுதோறும் அதிகரிப்பதால், நோயால் வறுமைக்கு தள்ளப்படும் 6 கோடி பேர்

Posted:

புதுடில்லி: நோய்களால் ஏற்படும் செலவினத்தை தாங்க முடியாமல், ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டில், 6.3 கோடி பேர், வறுமை நிலைக்கு தள்ளப்படுவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும், தேசிய சுகாதார கொள்கை வெளியிடப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுகாதார கொள்கையின் வரைவு அறிக்கை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.பெரிய தடை:அதில் கூறப்பட்டுள்ள தாவது:நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்காக, ...

காபூல் செல்லும் 'ஏர் - இந்தியா' விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் சதி : உளவுத்துறை எச்சரிக்கையால் பதற்றம்

Posted:

புதுடில்லி: டில்லியிலிருந்து, ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு செல்லும் 'ஏர் - இந்தியா' விமானத்தை கடத்த, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.நேற்று முன்தினம், 'ஏர் - இந்தியா' விமானத்தை கடத்தப் போவதாக மர்ம நபர் ஒருவர், கோல்கட்டா விமான நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, கோல்கட்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், உளவு அமைப்பு விடுத்து உள்ள எச்சரிக்கை:டில்லியிலிருந்து, ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு செல்லும், 'ஏர் - இந்தியா' விமானத்தை கடத்த, பயங்கரவாதிகள் சதித் ...

தி.மு.க.,வில் ஸ்டாலின் தரப்பு நடத்திய ராஜினாமா டிராமா: கருணாநிதி முடிவால் பொதுச்செயலராகும் வாய்ப்பு பறிப்பு

Posted:

'கட்சியின் பொதுச் செயலர் பதவியை பெறுவதற்காக, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய ராஜினாமா நாடகம், கருணாநிதியின் உறுதியான முடிவால், எடுபடாமல் போய்விட்டது' என, அந்த கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.தி.மு.க., உட்கட்சி தேர்தல் முடிவடைந்து, வரும், 9ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில், தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உட்பட, கட்சியின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர், வரும், 7ம் தேதி, கட்சித் தலைமையிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ...

'மாஜி' முதல்வர்கள் காங்.,கிற்கு முழுக்கு?ராகுலின் சொதப்பலால் அதிருப்தி

Posted:

புதுடில்லி : பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங், அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர், காங்., துணை தலைவர் ராகுலின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், காங்கிரசிலிருந்து வெளியேறி, இருவரும் புதிய கட்சி துவங்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த லோக்சபா தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த, அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும், காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது.கட்சியின் துணை தலைவர் ராகுலின் சொதப்பலான நடவடிக்கைகளால் தான், இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக, ...

வல்லுனர்கள் நியமனம் தாமதம்: தொடர்கிறது 'கொலீஜியம்' முறை

Posted:

புதுடில்லி : நீதிபதிகள் நியமனத்திற்காக, 20 ஆண்டுகளாக அமலில் இருந்த, 'கொலீஜியம்' எனப்படும், நீதிபதிகள் குழு முறை மாற்றியமைக்கப்பட்டு, தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிட்டி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், பழைய முறையை ரத்து செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. கமிட்டி: புதிய, தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிட்டிக்கான இரண்டு வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பொறுப்பேற்கும் வரை, தற்போதைய கொலீஜியம் முறையே தொடரும் என, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.'கொலீஜியம் முறையில், நீதிபதிகள் நியமனம் சரிவர நடைபெறவில்லை; தகுதியில்லாத ...

கறுப்பு பணம் மோசடி: கண்காணிக்க சிறப்பு பிரிவு

Posted:

புதுடில்லி: கறுப்பு பண பரிவர்த்தனை மற்றும் சுங்க வரி மோசடியை கண்காணிக்கும் நோக்கில், வெளிநாடுகளில், ஏழு புலனாய்வு பிரிவுகளை அமைக்க, வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. 'கஸ்டம்ஸ் ஓவர்சீஸ் இன்டெலிஜன்ஸ் நெட்ஒர்க் - காய்ன்' எனப்படும் இப்பிரிவுகள், கொழும்பு (இலங்கை), டாக்கா (வங்கதேசம்) மற்றும் பாங்காங் (தாய்லாந்து) ஆகிய நகரங்களில், தலா ஒன்று என்ற வீதத்தில் அமைக்கப்படும்.இதேபோல் சீனாவில், பீஜிங், குவான்ஸோ நகரங்களில் தலா ஒன்றும், பிரேசிலின், பிரேசிலியா மற்றும் தென்னாப்ரிக்காவின் பிரிட்டோரியா நகரங்களில், தலா ஒரு பிரிவும் செயல்படும்.சீனாவில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™