ஈகரை தமிழ் களஞ்சியம் |
- புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
- எம்ஜிஆர் படங்களின் தரவிறக்க சுட்டி வேண்டும்....
- மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!
- வேடிக்கையான போட்டோக்கள் ...பார்த்துமகிழ :)
- சுவாரஸ்யமான சில குறிப்புகள்:)
- சென்னையில் 2வது நாளாக இன்றும் பனிமூட்டம்... வாகன, விமானப் போக்குவரத்து பாதிப்பு !
- பீர் டின்னில் காந்தி படம் ... அமெரிக்க நிறுவனத்தின் திமிர்த்தனம்... மன்னிப்பு கோரியது !
- மிஸ்டர்.மோடி ?
- நிலவழகித்தாய்
- நண்பர்களே உதவி தேவை?எந்ந கணினி வாங்கலாம்?
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- உணவில் "கொள்ளு" - கொள்ளு இட்லி !
- விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்!
- பல ஃபைல்கள் பெயரை ஒரே நேரத்த்ில் மாற்றம் செய்யும் மென்பொருள்
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- திருவாதிரைக் களி
- தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
- கணவன் - மனைவி சண்டைக்கு தீர்வு!
- Jan 5th - திருவாதிரை ! - ஆருத்திரா தரிசனம் !
- தெரிஞ்சுக்கோங்க!....மிஸ்ட்லெட்டோ!
- ஊழல் எப்போது ஆரம்பமானது..?
- 2015–ல் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், மிலாடிநபி பண்டிகைகள் 2 முறை வருகிறது
- கஷ்டம் பார்த்தால் நஷ்டம் உண்டு!
- செய்தற்கு அரிய செயல்!
- யார் இவர்? - மைக்கேல் பாரடே!
- படித்ததில் பிடித்தது :) -- வியக்க வைத்த புரோகிதர்!
- பார்த்ததில் பிடித்தது :)
- காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு
- சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்!
- வீட்டின் மரணம்...!! -Mano Red
- உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!
- இட்ஸ் ஏ அடிக்கல் மிராக்கிள்...!
- ஜனஸ்ரீ பீமயோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
- ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட தேதி? - பொது அறிவு
- மார்கழியில் தரிசிக்க மாலவனின் திருக்கோயில்கள் - தொடர் பதிவு
- கட்சி கூட்டத்தில் ஆம்பளைகளையே காணோம்...!
- துணிவே துணை – கவிதை
- ஆர். டி. பர்மன் -
- சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு தங்கத்தினாலான மஞ்சம்:
- பொங்கலுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே: முழு விவரம்
| புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Posted: 04 Jan 2015 02:52 PM PST - |
| எம்ஜிஆர் படங்களின் தரவிறக்க சுட்டி வேண்டும்.... Posted: 04 Jan 2015 12:47 PM PST எனக்கு எம்ஜிஆர் நடித்த படங்களின் தரவிறக்கம் வேண்டும் .... கிடைக்குமா ??? உதவுங்க நண்பர்களே...... |
| மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! Posted: 04 Jan 2015 10:45 AM PST வாழ்க்கைத் துணையிடம் தோற்போம்... வாழ்வில் ஜெயிப்போம்' - என்ற எண்ணத்துடன், தெளிந்த நீரோடை போல் ஆரம்பிக்கும் இல்வாழ்வு, பலருக்கு காலக் கிரமத்திலேயே கலங்கிய குட்டை போல் ஆகி விடுவது, தற்போது வாடிக்கையாகி விட்டது. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்காய் இயன்றது அறம் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைகள் இன்று செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகி விட்டது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும் இன்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதே, குடும்ப உறவின் முதல் கடமை. ஆண், பெண் இருவரும் ... |
| வேடிக்கையான போட்டோக்கள் ...பார்த்துமகிழ :) Posted: 04 Jan 2015 10:39 AM PST ![]() |
| Posted: 04 Jan 2015 10:27 AM PST பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். இட்லிக்கு ... |
| சென்னையில் 2வது நாளாக இன்றும் பனிமூட்டம்... வாகன, விமானப் போக்குவரத்து பாதிப்பு ! Posted: 04 Jan 2015 09:42 AM PST சென்னை: சென்னையில் நிலவி வருகின்ற கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் காலைப் பொழுதில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே செல்லும் வாகனங்கள் சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். காலை 7 மணி வரை பனி காணப்பட்டதால் ஓரிரு இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனியால் ஐக்கிய அரபு எமிரேட் இலங்கை மற்றும் மஸ்கட்டில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபாத்திற்கு திருப்பிவிடப்பட்டன. அதே போல துபாயில் இருந்து சென்னை வந்த ... |
| பீர் டின்னில் காந்தி படம் ... அமெரிக்க நிறுவனத்தின் திமிர்த்தனம்... மன்னிப்பு கோரியது ! Posted: 04 Jan 2015 09:37 AM PST வாஷிங்டன் : மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பீர் டின்னில் போட்டதற்காக அமெரிக்கக் கம்பெனி மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் காந்தி பாட் என்ற புதிய வகை பீர் டின் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பீர் டின்களில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வெளியிட்டது. அமெரிக்க நிறுவனத்தின் இச்செயலுக்கு கண்டனம் கிளம்பியது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை ... |
| Posted: 04 Jan 2015 09:02 AM PST கழிவு மேலாண்மையில் (Waste management) கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது எவ்வளவு அபத்தம்.எளிதில் மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் ,எலக்ட்ரானிக் கழிவுகளை பிரித்தாலே போதும் மற்ற குப்பைகள் ( காய்கறி கழிவுகள், காகிதங்கள், இறந்த உடல்கள் ,etc) மட்குண்ணிகளால் (decomposers) ஒரு சில மாதங்களில் சிதைக்கப்பட்டு மண்ணிற்கு உரமாகிவிடும். இதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் மண் எங்கே ? நகரத்தையும் ,கிராமத் தெருக்களையும் கான்கிரிட்டால் மூடிவிட்டோம். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. குப்பை அப்படியே ... |
| Posted: 04 Jan 2015 09:02 AM PST நிலவு ஆசை கலைந்ததே அன்பே அழகான உன்னை தொட்டு பார்க்க ஆசைப்பட்டேன் தொலைந்து போனாய் தண்ணீரில் நிலா ........ அழகி பறவைகள் நாம் அழைக்காமலே நம் கண்ணிற்கு விருந்து வைக்க வந்த வெளி நாட்டு அழகிகள் .......... தாய் கல்லில் செதுக்கிய கடவுளை விட கருவில் சுமந்த தாயே மேல் ......... |
| நண்பர்களே உதவி தேவை?எந்ந கணினி வாங்கலாம்? Posted: 04 Jan 2015 08:30 AM PST நண்பர்களே கணினி வாங்கலாம் என்று இருக்கிறேன், என்ன கணினி வாங்கலாம்? என்னுடைய பட்ஜெட் 20,000ரூபாய்... அல்லது இந்த கணினி வாங்கலாமா? Check out this AllInOneDesktop on Flipkart! - http://www.flipkart.com/item/AIODWXX4ZR3XQSUB |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 04 Jan 2015 08:30 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| உணவில் "கொள்ளு" - கொள்ளு இட்லி ! Posted: 04 Jan 2015 06:30 AM PST கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் |
| விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Posted: 04 Jan 2015 06:20 AM PST இப்போதெல்லாம், கோவில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. உண்டியல் வசூல் பொங்கி வழிகிறது. இதைப் பார்க்கும் போது, பக்தியும், வளமையும் அதிகரித்திருப்பதாக தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல! மருத்துவமனைகளின் கூட்டம் அதிகரித்து, பணம் ஏராளமாக வசூலாகிறது என்றால் ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது என்பதா பொருள்? அதுபோல, கோவில்களில் கூட்டமும், உண்டியல் வசூலும் அதிகரித்திருக்கின்றன என்றால், அந்த அளவிற்கு பிரச்னைகள் அதிகரித்திருக்கின்றன என்பது தான் உண்மை. சரி! பிரச்னைகளில் இருந்து விடுபட என்ன தான் வழி? வியாச பாரதம் ... |
| பல ஃபைல்கள் பெயரை ஒரே நேரத்த்ில் மாற்றம் செய்யும் மென்பொருள் Posted: 04 Jan 2015 04:05 AM PST சில நேரங்களில் நாம் இணையத்த்திலிருந்து தரவிறக்கம் செய்யும் பாடல்கள் பெயருடன் அது தரவிறக்கப்பட்ட தளத்த்தின் பெயரும் இணைந்திருக்கும்.அந்த பைல்களின் பெயரில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீஇக்கலாம் எளிதாக .... [noguest]தரவிறக்க[/noguest] |
| Posted: 04 Jan 2015 02:24 AM PST தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| Posted: 04 Jan 2015 01:51 AM PST திருவாதிரைக் களி இதை இன்று, (திருவாதிரை அன்று ) செய்வது ரொம்ப விசேஷம் . தேவையானவை: பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்க்ச்யில் பொடிக்கவும் ) பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் – 3 / 4 கப்* தேங்காய்துருவல் - 4 டேபிள் ஸ்பூன் நெய் – 3 டேபிள்ஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி செய்முறை: பருப்புகளை வெறும் வாணலி இல் சிவக்க வறுக்கவும். அரிசிரவையும் நன்கு வறுக்கவும். mixer grinder இல் பருப்புகளையும் ரவை போல் பொடிக்கவும். ... |
| தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு! Posted: 03 Jan 2015 11:48 PM PST 25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் ... |
| கணவன் - மனைவி சண்டைக்கு தீர்வு! Posted: 03 Jan 2015 10:38 PM PST நாங்கள் சண்டையே போடாத ஜோடி தெரியுமா?' என்று எந்த ஜோடியாவது பெருமை அடித்தால் நம்பாதீர்கள். சண்டை என்றால் இந்த ஜோடி குடுமிப்பிடி, அடிதடி மற்றும் வாக்குவாதம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு எல்லாம் நிகழ வேண்டிய அவசியமில்லை. பேச்சற்ற இடைவெளியே, சண்டையின் ஒரு வடிவம் தான். வெவ்வேறு சூழலில் வாழ்ந்தவர்கள் வாழ்வில் இணையும் போது, தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை தான் சரி என்றும், தாங்கள் பேசுவதெல்லாம் நியாயம் என்றும், தாங்கள் செய்வதெல்லாம் அணுவளவும் முறையானவை என்றும் நம்புகின்றனர். இப்படி இருவருமே ... |
| Jan 5th - திருவாதிரை ! - ஆருத்திரா தரிசனம் ! Posted: 03 Jan 2015 10:35 PM PST திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய ... |
| தெரிஞ்சுக்கோங்க!....மிஸ்ட்லெட்டோ! Posted: 03 Jan 2015 10:29 PM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 03 Jan 2015 10:12 PM PST ஊழல் எப்போது ஆரம்பமானது..? |
| 2015–ல் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், மிலாடிநபி பண்டிகைகள் 2 முறை வருகிறது Posted: 03 Jan 2015 10:11 PM PST 2015–ல் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், மிலாடிநபி பண்டிகைகள் 2 முறை வருகிறது ! 2015–வது ஆண்டு வியாழக்கிழமை பிறக்கிறது. இந்த ஆண்டு பல விசேஷங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக வருகிற 2015–ம் ஆண்டில் மிலாடிநபி, வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் 2 தடவை வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வரும் 2015ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதியிலும், டிசம்பர் 21–ந்தேதியும் வருகிறது. நடராசருக்கு உகந்த ஆருத்ரா தரிசனம் வரும் ஜனவரி 5ம் தேதியும், வருட கடைசியில் ... |
| கஷ்டம் பார்த்தால் நஷ்டம் உண்டு! Posted: 03 Jan 2015 10:06 PM PST புறப்படும் போதே பைக் மக்கர் செய்தது. பதினைந்து ஆண்டுகளாக உழைத்து ஓய்ந்து விட்ட பைக். விற்றுவிட்டு புதுசு வாங்க முடியவில்லை. மெக்கானிக் கடை வரை தள்ளியே கொண்டு போய், கடை திறக்க காத்திருந்து அவசரமாக சரி செய்து கொண்டு புறப்பட, ஒருமணி நேர தாமதம் என்றால், எக்கச்சக்க வாகன நெரிசல் கடும் இம்சை. நத்தை போல் ஊர்ந்து சென்று, சிக்னலில் சிக்கிக் கொண்டேன். பக்கத்தில் உரசினார் போல் வந்து நின்றது ஒரு கார். ''ஏன் உரசர... ஒரேயடியா மேல ஏத்திடேன்,'' என்று கடுப்புடன் சொன்ன நேரம், டிரைவிங் சீட்டின் கண்ணாடியை ... |
| Posted: 03 Jan 2015 10:03 PM PST அவுட்டோர் ஷூட்டிங்கில், தன் கேரவனுக்குள் அமர்ந்து, 'ஏசி'யின் ஜில்லிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பிரபல நடிகை ஸ்வஸ்திகா. தொடர்ந்து, ஆறு வெற்றிப் படங்களில், கதாநாயகியாக நடித்து, தமிழ்த் திரையுலகின் நம்பர், 'ஒன்' ஆகி, தற்போது இந்தித் திரையுலகிலும், காலடி எடுத்து வைத்துள்ள நடிகை ஸ்வஸ்திகா, இன்றைய தினத்தில் ஆண்களின் கனவுக்கன்னி. கேரவனின் கதவு நாசூக்காகத் தட்டப்பட,''யெஸ்... கம் இன்,'' என்றாள், உதட்டுச்சாயம் கலையாமல். மெல்ல உள்ளே வந்த அவளது மேனேஜர் பிரசாத், அங்கு வியாபித்திருந்த இனிய நறுமணத்தை ... |
| Posted: 03 Jan 2015 09:57 PM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| படித்ததில் பிடித்தது :) -- வியக்க வைத்த புரோகிதர்! Posted: 03 Jan 2015 09:39 PM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 03 Jan 2015 09:35 PM PST இந்த விளம்பரத்தை ஒரு கடையில் ஜெராக்ஸ் எடுக்கும்போது பார்த்தேன். ரொம்ப 'catchy ' யாக இருந்தது. அது தான் இங்கு பகிறுகிறேன். நீங்களும் நீங்கள் பார்த்ததை இங்கு பகிருங்களேன் நண்பர்களே ! ![]() |
| காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு Posted: 03 Jan 2015 09:16 PM PST ஐதராபாத்: - - காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் ... |
| சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்! Posted: 03 Jan 2015 09:03 PM PST சென்னை : சொத்து வரி வசூலை தீவிரப்படுத்தும் வகையில், 300 கையடக்க இயந்திரங்களை, சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது. சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளில் சொத்து வரி வசூலிக்கும் பணியில், 274 வரி வசூலிப்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பு மையங்கள், வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.வரி வசூலிப்பாளர்கள் நேரடியாக சென்று, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வசூல் செய்ய வசதியாக, கையடக்க கருவிகள் வழங்கப்பட்டன.அவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ... |
| Posted: 03 Jan 2015 08:56 PM PST காலத்தின் புழுதியை சுவர்களில் அப்பிக்கொண்டு நெடுநாட்களாக ஊரை விட்டுத் தள்ளி வாழ்ந்து கொண்டிருக்கிறது அந்த வீடு...!! கடந்த காலத்தில் ஒரு ஓரமாய் அங்கே குழந்தை அழுதிருக்கலாம், உறவுச் சண்டைகள் அரங்கேறியிருக்கலாம், அதெல்லாம் அந்த வயதான தூண்களுக்குத் தான் தெரியும்..!! நாட்கள் செல்லச் செல்ல துரத்தப்பட்ட நாய்களின் கூடாரமாகவும், நடைபாதையின் நிழலாகவும், அதற்குப் பின் அவசரத்துக்கு ஒதுங்கும் மறைவிடமாகவும் மாறி மங்கி விட்டது ஒரு தலைமுறையின் அழகு வீடு..!! கரித்துண்டுகளில் கிறுக்கப்பட்ட ... |
| உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்! Posted: 03 Jan 2015 08:53 PM PST "ஹேங்" - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது! இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் 'ஹேங்' ஆவதுதான். இப்பிரச்னை ஆண்டிராய்டு மொபைல்களில் மட்டுமன்றி, ஐஓஎஸ் மொபைல்கள் வரை எல்லாப் போன்களிலும் சகஜமான விஷயம் தான்! கணினிகளும் ஹேங் ஆவது உண்டு! நாம் அனைவரும் பல நேரங்களில் அவசரநிலையில் தான் இருப்போம். ... |
| இட்ஸ் ஏ அடிக்கல் மிராக்கிள்...! Posted: 03 Jan 2015 08:25 PM PST |
| ஜனஸ்ரீ பீமயோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? Posted: 03 Jan 2015 06:48 PM PST கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எது? - கொல்கத்தா - ----------------------------------------- - வடமேற்கு இரயில்வேயின் தலைமையகம் எது? - ஜெய்ப்பூர்- - --------------------------------------- - எலக்ட்ரானிக்-போஸ்ட்(மின்னணு தபால்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? - 2001 - ------------------------------------ - வணிக வங்கிகளை மறுசீரமைத்தல் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு எது? - எஸ்.என்.வர்மா குழு - ------------------------------------ - டோ ஜொன்ஸ் என்பது எதன் ... |
| ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட தேதி? - பொது அறிவு Posted: 03 Jan 2015 06:24 PM PST ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட தேதி? - ஜனவரி 1, 1949 - ------------------------------- - இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (ஐடிபிஐ) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? - 1964 - ------------------------------ - ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்பரேஷன் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? - 1977 - ----------------------------------- - நாபார்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு? - 1982 - --------------------------------- - தொழில் நலிவு குறித்து நியமிக்கப்பட்ட குழு எது? - ஓம்கர் கோஸ்மாமி குழு - ---------------------------------- ... |
| மார்கழியில் தரிசிக்க மாலவனின் திருக்கோயில்கள் - தொடர் பதிவு Posted: 03 Jan 2015 05:47 PM PST - நன்றி: ஓம் சரவணபவ - டிசம்பர் 2014 - புகைப்படங்கள்: இணையம் |
| கட்சி கூட்டத்தில் ஆம்பளைகளையே காணோம்...! Posted: 03 Jan 2015 05:33 PM PST ![]() |
| Posted: 03 Jan 2015 05:28 PM PST - - சுவைப்பதற்கும், உமிழ்வதற்கும் உயிருடன் உலவும் நா ஒன்றுள்ளது! வானில் பறப்பதற்கும் மண்ணில் நிலைப்பதற்கும் எல்லையில்லா உயரங்கள் கனவுச்சிறகுகளால் பின்னப்பட்டுள்ளன! மறப்பதற்கும் நல்லதை நினைப்பதற்கும் எண்ணிலடங்கா காரண விதைகளை மனப்பறவை – இதயத்துள் மறைத்துள்ளது! வீழ்வதற்கும், வாழ்வதற்கும் வீறுகொண்டு எழுவதற்கும் உறுதி கொண்ட கால்கள் புத்தியெங்கும் புதிதாய் முளைவிட்டுள்ளது! அழுகையும், சிரிப்புமான செயற்பெருங்கடலின் அலைகளில் மிதந்து நெஞ்சம் ஆர்ப்பரித்துக் கொண்டுள்ளது! விட்டு ... |
| Posted: 03 Jan 2015 04:54 PM PST - ராகுல் தேவ் பர்மன் (Rahul Dev Burman) (ஜூன் 27 1939 - ஜனவரி 4 1994) - - 27 June 1939 – 4 January 1994) - ஆர். டி. பர்மன் என அறியப்படும் இவர் இந்திய பாலிவுட் திரைப்படத்துறையில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்படப் பாடகரும் ஆவார். - இவரது தந்தை சச்சின் தேவ் பர்மன் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். ஆர். டி. பர்மனின் இரண்டாவது மனைவி திரைப்படப் பாடகி ஆஷா போஸ்லே. - விக்கிபீடியா ------------------------------------- இவர் இசையமைத்த பல பாடல்கள் இன்றும் இனிப்பவை - உதாணமாக கதி ... |
| சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு தங்கத்தினாலான மஞ்சம்: Posted: 03 Jan 2015 04:21 PM PST - - சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்திலான மஞ்சத்தை மும்பையை சேர்ந்த பக்தர் செய்து அர்ப்பணம் செய்துள்ளார். சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் ஒன்றே முக்கால் கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்திலான மஞ்சத்தை (ஆண்டிற்கு இருமுறை தேர் தரிசன உத்சவத்திற்கு சுவாமி புறப்பாடு செய்யும் மஞ்சம்) சனிக்கிழமை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதரிடம் மும்பையை சேர்ந்த பக்தர் வழங்கி அர்ப்பணம் செய்துள்ளார். மும்பையைச் ... |
| பொங்கலுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே: முழு விவரம் Posted: 03 Jan 2015 04:12 PM PST - பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 22 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.. சென்னை- நெல்லை இடையே 9, 10, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை - சென்னை இடையே ஆகிய தேதிகளில் 8, 9, 12, 14,19, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரீமியம் சிறப்பு ரயில்கள் சென்னை - நெல்லை இடையே 13, 14, 23, 24 ஆகிய தேதிகளில் பிரீமியம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


