Tamil News | Online Tamil News |
- தமிழக சிறைகளில் மொபைல் போன்கள் புழக்கம் தாராளம்: போலீஸ் வேட்டையில் சிக்குவதன் மூலம் அம்பலம்
- ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் புகார்கள் குறித்து சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி
- ஆறு கம்பெனிகளை விற்று அபராதம் செலுத்தாதது ஏன்? ஜெ., வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி
- முதுகில் குத்தும் கட்சி ஆம் ஆத்மி: மோடி கடும் தாக்கு
- கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி சார்பில் கிரிமினல் பின்னணி உடைய 37 பேர் போட்டி
- டில்லி சட்டசபை தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., களம் இறங்கியது: வீடு வீடாக சென்று பா.ஜ.,வுக்கு ஓட்டு சேகரிப்பு
- தமிழகம் 'மைனஸ்'வளர்ச்சி : கருணாநிதி
- சட்டசபை தேர்தலை மனதில் வைத்து ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை புறக்கணித்த சிறிய கட்சிகள்!
- எக்ஸ்பிரஸ் ரயிலில் மூட்டை பூச்சி தொல்லை: தூங்க முடியாமல் தவித்த பெண் எம்.எல்.ஏ.,
- கடற்கரைகளில் தலைவர்கள் நினைவிடங்கள்: விதிமுறைகளை மாற்றுகிறது மத்திய அரசு
- கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு
- மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி: விதிமுறைகளை வெளியிட அரசு பரிசீலனை
| தமிழக சிறைகளில் மொபைல் போன்கள் புழக்கம் தாராளம்: போலீஸ் வேட்டையில் சிக்குவதன் மூலம் அம்பலம் Posted: தமிழக சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து, கடந்த, 2014ம் ஆண்டு, 4,000 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு கைதிகள் மத்தியில், மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அவர்களின் தகவல் பரிமாற்றத்தை தடை செய்ய முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.கைதிகளுக்காக சிறை வளாகத்தில் பல்வேறு வசதிகள், அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பரிமாற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து, அதிகாரிகளின் ஆதரவுடன் கைதிகள் மத்தியில் சர்வ சாதாரணமாக ... |
| ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் புகார்கள் குறித்து சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி Posted: காங்கிரசை விட்டு விலகியுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு, பா.ஜ.,வில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விரைவில் விசாரணை நடத்த உள்ள தகவல், பா.ஜ.,வில் சேரும் அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.ஜெயந்தியை பா.ஜ.,வில் சேர விடாமல் செய்வதற்காகவே, 'ஆதித்ய பிர்லா குரூப்'பில் நடந்த சோதனையில், வருமான வரித்துறை கைப்பற்றிய டைரி பற்றிய விஷயத்தை, காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. பதவிநீக்கம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ... |
| ஆறு கம்பெனிகளை விற்று அபராதம் செலுத்தாதது ஏன்? ஜெ., வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி Posted: பெங்களூரு: "சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி முடக்கப்பட்ட, ஆறு தனியார் கம்பெனிகளை விற்று, அபராத தொகையை ஏன் செலுத்தவில்லை?" என, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், நீதிபதி குமாரசாமி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. நேற்று, 18வது நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது, 'சொத்து குவிப்பு வழக்குடன் தொடர்புடைய, மெடோ அக்ரோ பார்ம் உட்பட, ஆறு ... |
| முதுகில் குத்தும் கட்சி ஆம் ஆத்மி: மோடி கடும் தாக்கு Posted: புதுடில்லி; ''ஆம் ஆத்மி முதுகில் குத்தும் கட்சி என்பதால், கடந்த தேர்தலில், அக்கட்சிக்கு வாக்களித்தது போன்ற தவறை மீண்டும் செய்யாதீர்கள்,'' என, டில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அவர் பேசியதாவது: இந்த தேர்தலில், பா.ஜ.,விற்கு, தனிப் பெரும்பான்மை இடங் களை பெற்றுத் தாருங் கள். நீங்கள் இதுவரை காணாத வகையில் தூய்மையான, நிலையான ஆட்சியை, பா.ஜ., வழங்கும். கடந்த சட்டசபை தேர்தலில், நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ, அக்கட்சி உங்கள் முதுகில் குத்தி விட்டது. அவர்கள் உங்கள் கனவை கலைத்து, டில்லியை பாழாக்கி விட்டனர். ... |
| கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி சார்பில் கிரிமினல் பின்னணி உடைய 37 பேர் போட்டி Posted: புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 28 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். 'ஊழலை ஒழிப்போம், அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கத்தை தடுப்போம்' என, முழங்கி வரும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர்களில், 37 பேர் கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். டில்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பான - ஏ.டி.ஆர்., வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லியில், வரும், 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும், இந்தத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ... |
| Posted: புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக, முன்னாள் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி அறிவிக்கப்பட்டதால், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சோர்வடைந்து, பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபடாமல் முடங்கியுள்ளனர். இதனால், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் பணிக்காக, ஆர்.எஸ்.எஸ்., களத்தில் குதித்துள்ளது.கடந்த, 2013 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான, 35 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியில், 49 நாட்களே ... |
| தமிழகம் 'மைனஸ்'வளர்ச்சி : கருணாநிதி Posted: சென்னை: வேளாண்மை மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில், தமிழகம் 'மைனஸ்' விகிதத்தில் சென்று கொண்டுருப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை, இலங்கையில், 24 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீபவன் என்ற தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுருப்பது வரவேற்க்கத்தக்கது. நாட்டின் வளர்ச்சி அதிகமுள்ள மாநிலங்களில், தமிழகம் முதல் ஐந்து இடங்களில் இருந்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், தொழில் வளர்ச்சியில், தமிழகம் 18வது இடத்திற்கு சென்றுள்ளது. 4 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, தமிழக அரசு கடனில் மூழ்கி உள்ளது. வேளாண் துறையில், 'மைனஸ்' 12 ... |
| சட்டசபை தேர்தலை மனதில் வைத்து ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை புறக்கணித்த சிறிய கட்சிகள்! Posted: சென்னை: தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை தேர்தலில், ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன், கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் உள்ளதால், சிறிய கட்சிகளின் தலைவர்கள் புத்திசாலித்தனமாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என அறிவித்துள்ளனர்.தமிழகத்தில், ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க.,வின் பதவி காலம், அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடைபெறுவது நிச்சயம். தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள், அ.தி.மு.க., அல்லது தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தேர்தலை சந்திப்பது வழக்கம்.சிறை ... |
| எக்ஸ்பிரஸ் ரயிலில் மூட்டை பூச்சி தொல்லை: தூங்க முடியாமல் தவித்த பெண் எம்.எல்.ஏ., Posted: புதுடில்லி: மகாராஷ்டிராவில், எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த முன்னாள் மத்திய அமைச்சரின் மகளும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான பிரனீதி, மூட்டைப் பூச்சி தொல்லையால், தூங்க முடியாமல் தவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் புகார் அளித்தும், ரயில்வே அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. |
| கடற்கரைகளில் தலைவர்கள் நினைவிடங்கள்: விதிமுறைகளை மாற்றுகிறது மத்திய அரசு Posted: புதுடில்லி: கடலோர பகுதிகளில், தலைவர்களுக்கு நினைவிடங்கள் கட்டுவதை அனுமதிக்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றம் செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.மகாராஷ்டிராவில், முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, 100 கோடி ரூபாய் செலவில், மும்பை கடற்கரை பகுதியில், சத்ரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க திட்டமிட்டது. ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிமுறைகள் இதற்கு தடையாக இருந்ததால், சிலை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிராவில், புதிதாக பதவியேற்றுள்ள, பா.ஜ., அரசின் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சிவாஜி ... |
| கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு Posted: புதுடில்லி: இந்திய மாம்பழங்களுக்கு விதித்த தடையை நீக்கியதை தொடர்ந்து, கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய் உட்பட, நான்கு காய்கறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் நீக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன.இந்தியாவிலிருந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, 'அல்போன்சா' உட்பட, பல வகை மாம்பழங்கள் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் தடைப்பட்டது. இதேபோல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ... |
| மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி: விதிமுறைகளை வெளியிட அரசு பரிசீலனை Posted: மும்பை: மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் வலைதள நிறுவனங்கள் மீது, ஏராளமான புகார்கள் குவிந்து வருவதால், விரைவில் அவற்றுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளன.வலைதள நிறுவனங்கள், குண்டூசி முதல், குடியிருப்பு வரை பலவற்றையும் விற்பனை செய்கின்றன. குறைந்த விலை, வீடு தேடி வரும் சப்ளை போன்றவற்றால், இத்தகைய நிறுவனங்களிடம் இருந்து, மொபைல் போன், ஆடைகள் உட்பட, பல்வேறு பொருட்களையும் வாங்குவது அதிகரித்து உள்ளது. அதேநேரத்தில், இந்நிறுவனங்கள் தரமற்ற பொருட்களை வழங்குவதாகவும், தாமதமாக சப்ளை செய்வதாகவும், நுகர்வோர் கேட்டதற்கு மாறான பொருட்களை தலையில் கட்டி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 01,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |