Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆப்கன் தலிபான்கள் பயங்கரவாதிகள் அல்ல': அமெரிக்கா நற்சான்று!

Posted:

வாஷிங்டன்: ஆப்கன் தலிபான்கள், பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள், 'ஆயுத கிளர்ச்சியாளர்கள்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது குறித்து, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு துறை துணை செயலர் எரிக் ஸ்கல்ட்ஸ் மேலும் கூறியதாவது: ஆப்கன் தலிபான்களை, பயங்கரவாத அமைப்பினராக, அமெரிக்கா கருதவில்லை. அவர்கள் ஊடுருவிய ஆயுத கிளர்ச்சியாளர்கள். அதே சமயம், ஐ.எஸ்.ஐ.எல்., (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் லெவன்ட்), பயங்கரவாத அமைப்பு. இந்த அமைப்பின் கோரிக்கை படி, ஜோர்டான் அரசு, மரண தண்டனை கைதியை விடுவிப்பது என்பது, வழக்கமான நடைமுறை தான். இது, அமெரிக்க ராணுவ சார்ஜன்ட் போவ் பெர்க்டாலை ...

நீதித்துறை நியமன கமிஷன் செயல்பாடு நிறுத்திவைப்பு

Posted:

புதுடில்லி: நீதிபதிகள் நியமனத்திற்காக, நீதித்துறை நியமன கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், புதிய நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.சுப்ரீம் கோர்ட் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப, நீதிபதிகள் குழு என்ற, 'கொலீஜியம்' முறை இருந்தது. அந்த குழுவை நீக்கியுள்ள மத்திய அரசு, பார்லிமென்டில் சட்டம் இயற்றி, நீதித்துறை நியமன கமிட்டியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கமிட்டிக்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் மாநில உயர் நீதிமன்ற தலைமை ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்

Posted:

புதுடில்லி: 'நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில், முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா, முன்னாள் நிலக்கரி துறை செயலர் குப்தா உள்ளிட்டோர், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் உள்ளது' என, சி.பி.ஐ., கோர்ட் தெரிவித்துள்ளது.காங்., தலைமையிலான, கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் ...

பா.ஜ.,வுடன் மீண்டும் மோதும் சிவசேனா: மகாராஷ்டிரா முதல்வர் மீது கடும் பாய்ச்சல்

Posted:

மும்பை: 'மகாராஷ்டிராவில், விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கு, பா.ஜ., தலைவரும், முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இருகட்சிகளும், 25 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் நடந்த மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில், இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியாக போட்டியிட்டன. பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. இரு கட்சி தலைவர்களுக்கும் ...

'இந்திய பொருளாதாரம் ரூ.300 லட்சம் கோடியாகும்'

Posted:

புதுடில்லி: அடுத்த, 10 - 12 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம், 300 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை படைக்கும் என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்திய தனியார் மற்றும் துணிகர முதலீட்டு கூட்டமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்ட சின்கா, மேலும் கூறியதாவது: இந்திய நிறுவனங்களில் பெருமளவு முதலீடு குவிந்து வருவதையடுத்து, ரூபாய் மதிப்பு வலுவடைந்துள்ளது. அன்னிய முதலீட்டை அதிகளவில் கவர, அரசு பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அன்னிய முதலீட்டாளர்களின் வரி தொடர்பான பிரச்னைகளுக்கு, பட்ஜெட்டில் ...

காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு: ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு: வெளிச்சத்துக்கு வரும் அடுத்த மெகா ஊழல்

Posted:

மன்மோகன் சிங் அரசில், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி, அக்கட்சியிலிருந்து நேற்று ராஜினாமா செய்தார். அவர் தெரிவித்துள்ள தகவலின் படி, தொழிற்சாலைகளுக்கு அனுமதி விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசு மிகப் பெரிய முறைகேட்டை செய்திருக்கலாம் என கருதும், இப்போதைய, பா.ஜ., அரசு, அவற்றை விசாரிக்க முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜெயந்தி நடராஜன் அனுப்பிய கடிதத்தை, சென்னையிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று ...

போக்குவரத்து வசதியில் சென்னை, கோவை நகரங்கள் பரவாயில்லை: மும்பை, கோல்கட்டா மோசம்

Posted:

புதுடில்லி:சர்வதேச அளவில், மிக மோசமான போக்குவரத்து வசதி மற்றும் நெருக்கடி உடைய முதல், 10 நகரங்களின் பட்டியலில், மும்பை, புனே, கோல்கட்டா ஆகிய இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. சென்னை, கோவை ஆகிய நகரங்களில், பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி இல்லை என்றும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் முக்கிய நகரங்களின் சுகாதாரம், கட்டமைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து, 'நும்பியோ' என்ற இணையதள நிறுவனம் தகவல்களையும், கருத்துக்களையும் வெளியிடுகிறது. இணையம் மூலமாக ஓட்டெடுப்பு நடத்தி, அதுபற்றிய விவரங்களையும் வெளியிடுகிறது. சமீபத்தில், ...

வரவு - செலவு கணக்கு தாக்கலில் பா.ஜ.,வின் மெத்தனம் தொடர்கிறது...

Posted:

புதுடில்லி: கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற டில்லி சட்ட சபை தேர்தலுக்கான, வரவு - செலவு கணக்கை, இன்னும் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யாமல், பா.ஜ., இழுத்தடித்து வருகிறது என, ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்.,) தெரிவித்துள்ளது. ஏ.டி.ஆர்., இதுகுறித்து மேலும் கூறியதாவது: கடந்த, 2013ம் ஆண்டில் நடைபெற்ற டில்லி சட்ட சபை தேர்தலுக்காக, பா.ஜ., கட்சி, பல்வேறு வழிகளில், 94.72 லட்சம் ரூபாயை வசூல் செய்து உள்ளது. இத்தேர்தலுக்காக, அந்த கட்சி, 2.32 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. எனினும், அந்த கட்சி, இது தொடர்பான விவரங்களை, இன்னும், தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யாமல் உள்ளது. தேர்தல் ...

ராஜபக் ஷே 'டிவி' சேனலுக்கு ரூ.100 கோடி வரி விதிப்பு

Posted:

கொழும்பு: ராஜபக் ஷே மகன் யோஷிதா ராஜபக் ஷே நடத்தும், 'கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க்' (சி.எஸ்.என்.,) என்ற விளையாட்டு சேனலுக்கு, 100 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து, நேற்று முன்தினம், இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, நிதி அமைச்சர் ரவி கருணநாயகே, நாட்டில் உள்ள விளையாட்டு சேனல்களுக்கு, ஒருமுறை வரியாக, 100 கோடி ரூபாய் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இலங்கையில், விளையாட்டுக்கென, சி.எஸ்.என்., சேனல் மட்டுமே உள்ளது என்பதால், அந்நிறுவனம் இந்த வரியை செலுத்தினால் தான் ஒளிபரப்பை தொடர ...

மொபைல் போன் மூலம் அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி அழைப்பு

Posted:

காந்திநகர்: ''மொபைல் போன் மூலம் அரசு நிர்வாகத்தின், சில செயல்பாடுகளை மேற்கொள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல், அரசின் சேவைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்,'' என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில், பிரதமர் மோடி வல்லவர். பிற எந்த பிரதமர்களை விடவும், தகவல் தொடர்புக்கு மின்னணு கருவிகளை பயன்படுத்துவதில் மோடி முதன்மையானவர்.அந்த வகையில், இப்போது ஒரு படி மேலாக, 'டுவிட்டர்' சமூக வலைதளம் மூலம், பெரிய மாநாடு ஒன்றில், முதல் முறையாக பேசி புதுமை நிகழ்த்தியுள்ளார், மோடி. ...

கோல் இந்தியா பங்கு விற்பனையில் சாதனை: அரசுக்கு ரூ.22,600 கோடி வருவாய்

Posted:

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின், 10 சதவீத பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு, 22,600 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. இந்தியாவில், பொது, தனியார் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில் இந்த அளவிற்கு நிதி திரட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன், கடந்த, 2010ம் ஆண்டில், இதே நிறுவனம், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியதே சாதனையாக இருந்தது.தற்போது, கோல் இந்தியா, தன் முந்தைய சாதனையை, தானே முறியடித்துள்ளது. எனினும், நேற்று நடைபெற்ற பங்கு விற்பனையில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ...

சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., - காங்., கூட்டணி? தலைவர்கள் சந்திப்பால் பரபரப்பு தகவல்

Posted:

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசின் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர், நேற்று காலை, திடீர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியது, 'மீண்டும் தி.மு.க., - காங்., உறவு மலருவதற்கான துவக்கம்' என, இரு கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்த பின்னும், காங்., 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை' என்ற நிலைப்பாட்டை எடுத்து ...

அமித் ஷா அல்லது பிரதமர் மோடி அழைத்தால் மட்டுமே பிரசாரம்: விஜயகாந்த் முடிவு!

Posted:

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு பா.ஜ., அழைத்துள்ளது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ரகசிய ஆலோசனை நடத்தினார்.ஸ்ரீரங்கம் தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் பா.ஜ., போட்டியிடுகிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பிய தே.மு.தி.க., கடைசி நேரத்தில் பின்வாங்கியது. அதேநேரம், பா.ஜ.,விற்கு ஆதரவாக, தேர்தல் புறக்கணிப்பா என்பதை, இதுவரை தே.மு.தி.க., தலைமை அறிவிக்கவில்லை. ஆனால், திருச்சி மாவட்ட தே.மு.தி.க.,வினர், பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்திற்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி ...

அகதிகள் குறித்த ஆலோசனை: புறக்கணித்தது தமிழக அரசு

Posted:

இலங்கை அகதிகளை, மீண்டும் அந்நாட்டிற்கே அனுப்புவது குறித்து, மத்திய அரசு நடத்திய ஆலோசனையில், உருப்படியான முடிவுகள் எதையும் எட்டமுடியவில்லை. இருப்பினும், இப்பிரச்னை குறித்து வரும் நாட்களிலும் தொடர் ஆலோசனைகள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முகாம்கள்:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, இலங்கையைச் சேர்ந்த அகதிகள், தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில், தற்போது புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அகதிகளை மீண்டும், இலங்கைக்கே அனுப்பி குடியமர்த்துவது குறித்து, அதிகாரிகள் மட்ட அளவிலான ஆலோசனைகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™