Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திடீரென நீங்க ஏன்திருமணம் பண்ணிக்கிட்டீங்க?''

Posted: 30 Jan 2015 10:39 AM PST

- ''எல்லா தொழிலாளர்களுக்கும் ,அவங்க கேட்டபடி சம்பளத்தை கூட்டிக்குடுத்தது தப்பா போச்சு' '''ஏன்?'' கூட்டிக் குடுத்த குணசீலர் வாழ்க!-னு கோஷம் போட ஆரம்பிச்சிட்டாங்க.'' - ------------------------------------------------ - நிருபர் : திடீரென நீங்க ஏன்திருமணம் பண்ணிக்கிட்டீங்க?'' நடிகை : ''என் மகன் அப்பாவேணும். அப்பா வேணும்னு நச்சரிக்கிறான், அதான்.'' - -------------------------------------------------- - ஜட்ஜ் : ''நிறைய அழகிகளை வெச்சுபுளுஃபிலிம் எடுத்தியா?' 'கைதி : ''இல்லைங்க! ...

நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

Posted: 30 Jan 2015 10:33 AM PST


என்னத்த சொல்ல .. நீங்கதான் சொல்லணும் தோழர்களே..

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Posted: 30 Jan 2015 10:27 AM PST

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மரணம் அங்கு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சவூதியில் இன்னும் மன்னராட்சிதான் நீடிக்கிறது. அப்துல்லாவுக்கு அடுத்ததாக அவருடைய தம்பி சல்மான் பட்டத்துக்கு வந்திருக்கிறார். ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்கும் என்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் இப்போது இருக்கும்படியே தொடரும் என்றும் சல்மான் அறிவித்திருக்கிறார். சல்மானுக்கும் வயது அதிகமாகிவிட்டதால், இளவரசர் முக்ரின், முகம்மது பின் நயீஃப் ஆகியோரை அரச பதவிக்கான வாரிசுகளாக அவர் அறிவித்திருக்கிறார். அப்துல்லா ...

உணவுகளின் போட்டோகள் ! :)

Posted: 30 Jan 2015 10:20 AM PST

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

விடுகதைகள் சில - விடை சொல்லுங்கள்

Posted: 30 Jan 2015 10:17 AM PST

1. சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு அது கோட்டையும் அல்ல அது என்ன? - 2. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள் சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள் ஒற்றுமையாக ஓரே அறையில் இருப்பவர்கள் ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால் அனைவரும் எரிந்துவிடுவார்கள். இவர்கள் யார்? - 3. வானத்தில் பறக்கும் அது பறவை அல்ல நீண்ட வால் உண்டு அது குரங்கு அல்ல வானத்தில் ஆட்டம் போடும் அது மயில் அல்ல அது என்ன? - 4. வீதியில் கொட்டி வைத்த வெள்ளைப் ...

பொடுகைப் போக்க வேப்பம்பூ

Posted: 30 Jan 2015 09:55 AM PST

பொடுகைப் போக்க வேப்பம்பூ: தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது. இது கோடை காலம் ஆகையால் வேப்பம்பூ (Neem flowers) அதிகம் கிடைக்கும். நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை , இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் (Coconut Oil) கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும்பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த எண்ணையைத் தேய்த்து குளித்துவர, ...

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

Posted: 30 Jan 2015 09:50 AM PST

முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும். அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் ...

ஆங்கிலத்தில் சரளமாக பேச மோடிக்கு உதவும் அதிநவீன ‘டெலிபிராம்ப்டர்’!

Posted: 30 Jan 2015 09:37 AM PST

மேடைகளில் ஆங்கிலத்தில் சரளமாக பேச மோடிக்கு உதவும் அதிநவீன 'டெலிபிராம்ப்டர்'. டெலிபிராம்ப்டர் (இடது ஓரம்) உதவியுடன் பேசும் மோடி. கோப்புப்படம்: சந்தீப் சக்சேனா. பொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை 'டெலிபிராம்ப்டர்' உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. பொது மேடைகளில் இந்தி மொழியில் சரளமாக தனக்கே உரித்தான பாணியில் பேசுவதில் பிரதமர் மோடி மிகவும் பிரபலமாக உள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின், கைகளில் எந்தக் குறிப்புகளும் ...

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்!

Posted: 30 Jan 2015 09:14 AM PST

சர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம். ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண். இந்தக் கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட பொருள்களைச் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது. சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும், ...

இண்டர்நெட் இல்லாமலேயே 'வாட்ஸ்-ஆப்

Posted: 30 Jan 2015 09:04 AM PST

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-ஆப் ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவரும் 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர் லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் ...

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போகலாம்...!!

Posted: 30 Jan 2015 08:59 AM PST

– "நம்ம சுப்பிரமணிக்கு இங்கிலீஷ்ல ரொம்ப ஆர்வம் அதிகமாயிடிச்சி!" – "எப்படி சொல்ற?" – "அவன் பேரைக்கூட சுப்பிர"டயம்'னுல்ல சொல்றான்!" – டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி. – --------------------------------------------------- ஆசிரியர்: கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்? மாணவன்: கம்பர் ஆசிரியர்: சரி, மணிமேகலையை இயற்றியவர்? மாணவன்: மணி ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம் - ------------------------------------------------------- - தலைவர்: என் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? பி.ஏ.: ...

மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்”

Posted: 30 Jan 2015 08:55 AM PST

– "நேத்து என் மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்" – "அதுக்கு உங்க மனைவியோட ரியாக்ஷன் என்ன?" – "அதுக்குள்ள தூக்கம் கலைஞ்சுடுச்சு" – புருஸ்லி ஓவியாலயம், நாட்டரசன்கோட்டை – ------------------------------------------------------ - திருடன்: மரியாதையா எல்லா நகைகளையும் கழட்டிக் கொடு! குடும்பத் தலைவி (டி.வி.பார்த்துக்கொண்டே): இருப்பா, விளம்பர இடைவேளை வரட்டும். - ---------------------------------------------------------- - "பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு புடவை வாங்கித் தர ...

“நகை வாங்கறப்ப உரசிப் பார்த்து வாங்கணும்

Posted: 30 Jan 2015 08:38 AM PST

- "புதுசா பூட்டு சாவி பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா – "பெஸ்ட் ஆஃப் லாக்!" – ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி – ———————————————– – ஒருவர்: இப்ப வந்த படங்கள்ல உங்க படம்தான் பாக்கற மாதிரி இருக்கு – இயக்குநர்: அப்படியா? – ஒருவர்: மத்த படங்களுக்கெல்லாம் கூட்டம் ரொம்ப அதிகம். பார்க்க முடியலை. – ஜான் கிறிஸ்டோபர், கும்பகோணம் – ——————————————————- – ஒருவர்: ஏம்பா நம்ம தலைவர் இனி சட்டை போட மாட்டாராமே? – மற்றவர்: அதுவா அவரை யாரும் சட்டை செய்வதில்லையாம்! – ஜி.தண்டபாணி, ...

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Posted: 30 Jan 2015 08:32 AM PST

எதை வேண்டுமானாலும் எப்படியும் யோசிக்கலாம், கிடைக்கின்ற வார்த்தைகள் மறுபடியும் கிடைக்காது, கிடைக்கும் போதே கவர்ந்து கைது செய்து கவிதையாக்க வேண்டும்…! பார்வைகள் பலவிதம் பார்க்கப்படும் விதத்தில் தான் பக்குவம் இருக்கிறது, ஒன்றை இன்னொன்றாக வேறுவிதத்தில் பாருங்கள், கோமாளியாக தெரிந்தாலும் கோணம் வேறாக இருக்கும்…!! அக்கம் பக்கங்களை காதை தீட்டிக் கேளுங்கள், அதிகம் பேசாமல் மனசுக்குள் பேசுங்கள், நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!! கவிதையைத் தேட நேர்வழியும் ...

நிறத்தை நம்பாதே

Posted: 30 Jan 2015 08:29 AM PST

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு, சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து "ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்." அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? ...

பாறங்கல்லும் ஓர் அற்புத சிற்பியும்

Posted: 30 Jan 2015 08:28 AM PST

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார். 'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான ...

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு ரூ.3,100 அபராதம்!

Posted: 30 Jan 2015 08:19 AM PST

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு ரூ.3,100 அபராதம்: அமெரிக்காவில் இப்படி ! இந்தியாவில்...? வாஷிங்டன்: வீடு அருகே குவிந்த பனிக்குவியலை அகற்ற தவறிய, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு, பாஸ்டன் நகர்மன்றம், 3,100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த வாரம், பாஸ்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பயங்கர பனிப் பொழிவு ஏற்பட்டது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது. பாஸ்டனில், ஜான் கெரியின் 'பீகன் ஹில்' வீடும் பனியால் சூழப்பட்டது. அந்த வீட்டையொட்டி உள்ள, ...

மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”

Posted: 30 Jan 2015 07:49 AM PST

– "என்கிட்ட பத்தாயிரம் ரூபா கடன் வாங்கிட்டு ஊர விட்டு ஓடிட மாட்டீங்களே?" ""நம்ம ஊரு கந்தசாமியிடம் கேட்டுப் பாருங்க. பனிரெண்டு வருசமா அவருக்கு கடன்காரனா இதே ஊரிலதான் இருக்கேன்" – கு.அருணாசலம், தென்காசி – ————————————————————– – "சென்ஸார் பண்ணி மூணு மாசமானப்புறமும் நீங்க ஏன் படத்தை வெளியிடலை?" – "மிச்சம் ஏதாவது இருந்தாத்தானே படத்தை ரிலீஸ் பண்றதுக்கு" – பால.கோவிந்தராஜ், மதுரை – ————————————————————– – "யுத்த நேரத்தில் தளபதியார் குறட்டை விட்டாரா… அப்புறம்?" – "அப்புறமென்ன…அந்தப்புரம் ...

உதவி தேவை - காப்பி செய்வது எப்படி

Posted: 30 Jan 2015 07:47 AM PST

சில தளங்களில் உள்ள கட்டுரைகளை தனிப்பயனுக்காக வேர்டில் சேமித்து வைப்பது என் வழக்கம். குறிப்பிட்ட தளங்களில் ரைட்க்ளிக் வேலை செய்யவில்லை அது போன்ற தளங்களில் நமக்கு தேவையான டெக்ஸ்ட்டுகளை காப்பி செய்ய முடியவில்லை. இதற்கு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் நண்பர்களே...

விருப்பங்கள்- (புதுக்கவிதை -1977)

Posted: 30 Jan 2015 07:44 AM PST

- அடுத்த வீட்டு அலமேலு அடிக்கடி என்னைப் பார்த்துக் கண்களால் சாடை காட்டிக் காதல் தீயை என் நெஞ்சில் மூட்டிப் புன்னகைப் பூக்களை உதிர்த்துப் போகணும். எதிர்த்த வீட்டு இராமன் மனைவி மொட்டை மாடியில் துணிகாயப் போடும் சாக்கில் என்னைக் கண்களால் சந்தித்து உதட்டில் சிரிப்பை உரசிப் பார்க்கணும். அதோ அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி குளியல் அறைக்குள் நிற்கையிலே என்னைப் பார்த்துக் கைகளை அசைக்கணும். என்மனைவி….என்மனைவி…..அவள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றபடியே வீட்டுக்குள் ...

ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி...........

Posted: 30 Jan 2015 07:21 AM PST

ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்து செலுத்தி கைவரிசை: இன்ஜினீயர் வீட்டில் 40 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை நங்கநல்லூரில் ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்தை செலுத்தி, வீட்டில் இருந்தவர்களை மயக்கமடைய வைத்து 40 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (39). இவரது மனைவி வித்யா (35). சாப்ட்வேர் இன்ஜினீயர்களான இருவரும் சிறுசேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களின் வீடு 2 தளங்களைக் கொண்டது. ...

நன்றி! by கிருஷ்ணாம்மா !

Posted: 30 Jan 2015 06:34 AM PST

நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் இதோ மற்றும் ஒன்று எழுதிவிட்டேன் ....படித்து கருத்து சொல்லுங்கள் Guest தூங்கிக்கொண்டிருந்த ஊர்மிளாவிற்கு இடுப்பை வலிப்பது போல இருந்தது, மணி பார்த்தால் இரவு 2. சரி விடியும் வரை பொறுக்கலாம் என்று எண்ணியவாறே படுக்கை இல் கிடந்தாள். வீட்டிலிருந்து 5 கிலோமிட்டர் தான் ஹாஸ்பிடல்..............போவது ஒன்றும் சிரமம் இல்லை. பிள்ளைப்பேறுக்காக   இந்தியா போகாமல் கணவனும் மனைவியும் சௌதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.   இங்கு உதவிக்கு யாரும் ...

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Posted: 30 Jan 2015 06:26 AM PST

- நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியைக்கண்ட பலர், உண்மையாக இருக்குமோ என்று வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி நானும் ரவுடிதான் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்து இணையத்தில் ஏற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ரானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடியாக ...

18000 பாலாஜி--- வாழ்த்துக்கள்

Posted: 30 Jan 2015 06:04 AM PST

18000 பாலாஜி -- வாழ்த்துக்கள்

இவ்வாரத்தில் 18000 பதிவுகளை கடந்த
திரு பாலாஜி அவர்களை வாழ்த்துவோம்



ரமணியன்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (90)

Posted: 30 Jan 2015 06:01 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

Posted: 30 Jan 2015 01:54 AM PST

-    நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. -    தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. -    மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. -    ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. -    பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. -    பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. -    இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. -    குருவை வணங்கக் கூசி நிற்காதே. -    வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே - -    தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே. -

அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் !

Posted: 30 Jan 2015 01:34 AM PST

இது என்னுடைய 12,000மாவது பதிவு நண்பர்களே ! நான் இந்த கட்டுரையை சர்வோதயா நாள் அன்றே எழுத வேண்டும் என்று இருந்தேன். சர்வோதயா நாள் என்றால் என்ன வென்று தெரியாதவர்களும் இங்கு இருக்கலாம். அவர்களுக்காக நான் இதை விளக்க கடமைப்படிட்டிருக்கிறேன். அதாவது நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் மரணத்தை தழுவிய அந்த துக்கமான நாளை தான் நாம் சர்வோதயா நாள் என்று அழைக்கிறோம். அது ஜனவரி 30ம் தேதி. முன்பெல்லாம் நான் சிறுமியாக இருந்த போது ஜனவரி 30ம் தேதி காலை 11 மணிக்கு, எங்கள் பள்ளி இல் ஒரு மணி அடிக்கும் ...

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 29 Jan 2015 10:59 PM PST

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™