Tamil News | Online Tamil News |
- போக்குவரத்து தொழிலாளர்கள் வழியில் அரசு ஊழியர்களும் தயார்: தமிழக அரசை ஆட்டி வைக்க விரைவில் 'ஸ்டிரைக்' அறிவிப்பு?
- ரூ.6,000 கோடி கடன் சுமையை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு?
- கிராம தத்தெடுப்பு திட்டத்தில் 'டாஸ்மாக்'குக்கு தடா: குடிகாரர்கள் கலக்கம்
- ஜெ., மேல்முறையீட்டு மனு: முட்டுக்கட்டை போடும் தி.மு.க.,
- 'தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய விருதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்': 'தினமலர்' ஆசிரியர் பெருமிதம்
- வறுமையை ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்த விஞ்ஞானிகள் உதவ வேண்டும்: மோடி அழைப்பு
- எல்லையில் பாக்., அட்டூழியம்: 3 பேர் பலி
- 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை குறைந்தது: விவசாய உற்பத்தி பாதிக்கும் என நிபுணர்கள் தகவல்
- இந்தியாவை நோக்கி வந்த 2வது படகு மாயம்: தொடர்கிறது பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை
- பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் 5 விஷயங்கள்
- டில்லியில் அமைகிறது நாட்டின் முதல் 'ஸ்மார்ட் சிட்டி': திட்டமிட்ட கட்டுமானம்; தடையில்லா மின்சாரம்
- வங்கிகளின் வராக்கடன் 85 ஆயிரம் கோடி ரூபாய்
- காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு
| Posted: ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என, முயற்சித்த அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், விரைவில், வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சி முடிவடைய, இன்னும் ஓராண்டே உள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு முன், போக்குவரத்து கழக ஊழியர்கள் வழியில், நேரடியாக மோதிப்பார்க்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.தமிழக அரசில், 150க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என, 35 முதல், 50 லட்சம் பேர் வரை உள்ளனர். அரசு ஊழியர் என்ற முறையில், அரசின் சலுகைகள் அனைத்தும் ... |
| ரூ.6,000 கோடி கடன் சுமையை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு? Posted: ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு; ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 4,000 கோடி ரூபாய்; போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு, 1,465 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகை என, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் போக்குவரத்து கழகங்கள் தவிக்கின்றன.கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் என்ன வழியை பின்பற்றுவது என்பது தெரியாமல், அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி கி.மீ., தூரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கி.மீ.,க்கு, ... |
| கிராம தத்தெடுப்பு திட்டத்தில் 'டாஸ்மாக்'குக்கு தடா: குடிகாரர்கள் கலக்கம் Posted: இந்தியா முழுவதும் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், பார்லிமென்ட் உறுப்பினர்கள், ஒவ்வொரு கிராமத்தைத் தத்தெடுத்து, அதை மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என, பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தை அவரே தத்தெடுத்து, அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக, அனைத்து உதவிகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார்.கடிதம்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதும், முதல் ஆளாக சென்று, தூத்துக்குடி மாவட்டத்தின், ஸ்ரீவெங்கடேசபுரத்தை தத்தெடுத்தார் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி. ... |
| ஜெ., மேல்முறையீட்டு மனு: முட்டுக்கட்டை போடும் தி.மு.க., Posted: பெங்களூரு: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், என்னையும், எதிர்தரப்பில், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கு, நீதிபதி குமாரசாமி முன், சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. சில நாட்களுக்கு ... |
| Posted: தஞ்சாவூர் : ''தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ள விருதை, பெரும் பாக்கியமாக கருதுகிறேன்,'' என, தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 25வது ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கு துவக்க விழா, நேற்று நடந்தது. |
| வறுமையை ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்த விஞ்ஞானிகள் உதவ வேண்டும்: மோடி அழைப்பு Posted: புதுடில்லி: ''அறிவியல் விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும். ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சிவப்பு நாடா முறை ஒழிக்கப்படும். நாட்டின் வறுமையை ஒழித்து மாற்றத்தை ஏற்படுத்த விஞ்ஞானிகள் உதவ வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.நிபுணர்கள்: மும்பையில், 102வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது. ஐந்து நாள் நடக்கும் இந்த மாநாட்டில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வித் துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். ... |
| எல்லையில் பாக்., அட்டூழியம்: 3 பேர் பலி Posted: ஜம்மு: எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம் தொடருகிறது. பாக். படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவரும் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.ஜம்மு காஷ்மீரில் இந்தியா பாக். எல்லை பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடிக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்தது. கன்கயா என்ற இடத்தில் இந்திய ... |
| 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை குறைந்தது: விவசாய உற்பத்தி பாதிக்கும் என நிபுணர்கள் தகவல் Posted: புதுடில்லி: 'பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதன் முறையாக, தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும், கடந்த ஆண்டில் குறைவாக பெய்துள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், விவசாய உற்பத்தி பாதிக்கப்படலாம் என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: இந்தியாவில், ஜூன் 1 முதல், செப்டம்பர், 30ம் தேதி வரையிலான நாட்கள், தென்மேற்கு பருவமழை காலம். அதே போல், அக்டோபர் 1 முதல், டிசம்பர் 31ம் தேதி வரையிலான நாட்கள், வடகிழக்கு பருவமழை காலமாகும். கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ... |
| இந்தியாவை நோக்கி வந்த 2வது படகு மாயம்: தொடர்கிறது பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை Posted: மும்பை : இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக, பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன், பயங்கரவாதிகள் வந்த இரண்டாவது படகு மாயமாகியுள்ளது. இந்த படகை தேடும் பணியில், கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 31ம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் உள்ள, கீத் பந்தர் என்ற இடத்தில் இருந்து, இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய, பயங்கரவாதிகளின் மீன்பிடி படகை, கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர். அதில் இருந்த பயங்கரவாதிகள், படகை தகர்த்தனர். படகில் இருந்த நான்கு பயங்கரவாதிகளும் இறந்து விட்டதாக, ... |
| பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் 5 விஷயங்கள் Posted: இந்தியாவின் பொருளாதாரத்தில் சென்ற ஆண்டு ஏராளமான ஏற்றங்களும் இறக்கங்களும் நிலவின. பொதுத்தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு நிலைமை மாறியது. மத்தியில் ஸ்திரமான ஆட்சி அமைந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்த ஆண்டு நம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் 5 விஷயங்கள்: கட்டுமான திட்டங்கள்:இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த பல திட்டங்களை பட்டை தீட்ட வேண்டி உள்ளது. இத்திட்டங்கள் நிறைவேறத் தொடங்கினால் பலருக்கு வேலை வாய்ப்பு, எங்கும் எளிதில் ... |
| டில்லியில் அமைகிறது நாட்டின் முதல் 'ஸ்மார்ட் சிட்டி': திட்டமிட்ட கட்டுமானம்; தடையில்லா மின்சாரம் Posted: புதுடில்லி: ''நாட்டின் முதல், 'ஸ்மார்ட் சிட்டி' தலைநகர் டில்லியில் அமைக்கப்படும். உலகில் வேறு எந்த நகரத்திலும் இல்லாத அனைத்து சிறப்பம்சங்களும், அதில் இடம் பெறும்,'' என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.தீவிரம்: டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் நாயுடு பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை படி, நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது; அதற்கான நிலங்கள் தேர்வு நடந்து வருகிறது. நாட்டின் முதல் ஸ்மார்ட் சிட்டி, தலைநகர் டில்லியில் அமையும். இது ... |
| வங்கிகளின் வராக்கடன் 85 ஆயிரம் கோடி ரூபாய் Posted: புதுடில்லி: வங்கிகளின் வராக்கடனில், வழக்குகளில் சிக்கியுள்ள தொகை, 85 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தக் கடனை வசூலிக்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.21.4 சதவீதம்:இது குறித்து, இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு, 2014 - 15ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டு (ஜூலை - செப்.,) நிலவரப்படி, வங்கிகளின் வராக்கடன் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள தொகை, 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 21.4 சதவீதம் கூடுதலாகும்.வழக்கு: நாட்டிலேயே, மகாராஷ்டிராவில் தான், ... |
| காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு Posted: ஐதராபாத்: காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 04,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |