Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்கிரசை விட்டு சிதம்பரம் போனால் கவலையில்லை: கார்த்தி உடனான மோதலில் இளங்கோவன் ஆவேசம்

Posted:

''காங்கிரசை விட்டு சிதம்பரம் போனால் கவலையில்லை,'' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே, அவர் அப்படி தெரிவித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில், காங்கிரசில் உள்ள தன் ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்திய, அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனுமான, கார்த்தி சிதம்பரம், 'ஜி - 67' என்ற அமைப்பையும் துவக்கினார். கட்சி மேலிடத்தில் புகார்: அப்போது பேசிய கார்த்தி, காமராஜர் ஆட்சி மற்றும் தமிழக ...

அமெரிக்கா விரித்த வலையில் விழாதீங்க: இந்தியாவுக்கு சீனா அறிவுரை

Posted:

பீஜிங்: 'ஆசியாவில் ஆதிக்கம் செய்யத் துடிக்கும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளின் வலையில், இந்தியாவும், சீனாவும் விழக் கூடாது' என, சீன அரசின், 'குளோபல் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஆசியாவின் மையமாக திகழ்ந்து, ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காகவும், சீனாவின் வளர்ச்சியை தடுக்கவும், இந்தியாவுடன் அமெரிக்கா மிக நெருக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது. சீனாவால் உண்டாகக் கூடிய ஆபத்தை சமாளிக்க தயாராக இருக்கவும் என, இந்தியாவிற்கு அறிவுரை கூறி, தமது வலையில் ...

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு சாரதா சிட்பண்ட்ஸ் நிதி: முதல்வர் மம்தா பானர்ஜியை விசாரிக்க பா.ஜ., கோரிக்கை

Posted:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு, மேற்கு வங்கத்தில் செயல்பட்ட, சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனம் நிதி உதவி அளித்ததாக, வருமான வரித்துறையினர், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுவரை, வெளிநாடுகளில் இருந்து, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு, நிதியுதவி அளிக்கப்பட்டது என்ற புகார் இருந்தது. இப்போது, உள்நாட்டைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனமும், நிதி அளித்துள்ளது என்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முறைகேடு:
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா உட்பட, சில நகரங்களில் செயல்பட்ட நிறுவனம், சாரதா ...

குடியரசு தின விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்?

Posted:

புதுடில்லி: குடியரசு தின விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, 'சல்யூட்' அடிக்காதது குறித்து சமூக வலை தளங்களில், பரபரப்பாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. குடியரசு தின விழா முடிந்ததும், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின. அவற்றில், தேசிய கொடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் சல்யூட் அடித்த காட்சி இடம் பெற்றிருந்தது. அவர்களுக்கு அருகே இருந்த, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சல்யூட் அடிக்காமல் நின்றிருந்தார். இதுகுறித்து, சமூக ...

அணிவகுப்பை பார்த்து அதிபர் ஒபாமா பிரமிப்பு

Posted:

புதுடில்லி:குடியரசு தின விழாவில், இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் நடந்த பிரமாண்ட அணிவகுப்பையும், நாட்டின் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் நடந்த கலாசார நிகழ்ச்சிகளையும், அமெரிக்க அதிபர் ஒபாமா, தன் மனைவி மிச்சேலுடன் அமர்ந்து, பிரமிப்புடன் பார்த்து, ரசித்தார். கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்தனர்.நாட்டின், 66வது குடியரசு தின விழா, நேற்று டில்லியில் நடந்தது. இதையொட்டி, காலையில், டில்லி அமர்ஜோதி ஜவானில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மலர் ...

தமது வெற்றியை தடுக் ராஜபக் ஷே செய்த சதி: சிறிசேன 'திடுக்'

Posted:

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே, தமது வெற்றியை தடுக்க, சதி திட்டம் தீட்டியதாக, புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா கடந்த வாரம் இதே குற்றச்சாட்டு தொடர்பாக அளித்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இதே குற்றச்சாட்டை சிறிசேனவும் கூறியுள்ளதால், ராஜபக் ஷேவுக்கு எதிரான புகார் வலுவாகியுள்ளதாக கூறப்படுகிறது.இலங்கையின் வடக்கு மத்திய மாகாணத்தில், தன் சொந்த தொகுதியான பொலொனருவாவில் பொதுக்கூட்டத்தில் சிறிசேன மேலும் பேசியதாவது: அதிபர் ...

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்கும் மோடி

Posted:

புதுடில்லி:ராமர் பாலத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து, மூத்த அமைச்சர்களிடம், பிரதமர் நரேந்திர மோடி கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல், இந்த திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஏற்கனவே கூறியுள்ளார். ...

குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகளில் ஜெ., படம்: பன்னீர் செல்வம் படம் மிஸ்ஸிங்

Posted:

சென்னை:சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், அரசு துறைகள் சார்பில் வந்த, அலங்கார ஊர்திகள் அனைத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை ஜெயலலிதா இழந்தார். புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். எனினும், அரசு துறைகளின் இணையதளங்களில், ஜெயலலிதா படம் அகற்றப்படவில்லை.நேற்று, குடியரசு தின விழா அணிவகுப்பில், 24 துறைகள் சார்பில், அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவற்றின் முகப்பில், ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது. அதேபோல், ஜெயலலிதா துவக்கி வைத்த ...

ஸ்ரீரங்கத்தில் ஆறாக ஓடும் பணம்

Posted:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், இன்றுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது. காங்கிரஸ் போட்டியிட மறுத்து விட்டதால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என, நான்கு கட்சிகள் மட்டும் களத்தில் நிற்கின்றன. இதனால், அங்கு நான்கு முனைப்போட்டி உருவாகி உள்ளது.

தண்டனை பெற்றதால்...:
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை, ஜெயலலிதா இழந்தார். அதனால், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.க., தரப்பில், ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணியாற்றுவதற்காக, 65 ...

அலகாபாத், அஜ்மீர், விசாகபட்டினத்தில் 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்க ஒப்பந்தம்

Posted:

புதுடில்லி: அலகாபாத், அஜ்மீர் மற்றும் விசாகபட்டினத்தில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்க, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.நாடு முழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், உத்தர பிரதேசத்தின் அலகாபாத், ஆந்திராவின் விசாகபட்டினத்தில், ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க, அமெரிக்காவுடன் மூன்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது தொடர்பான ஒப்பந்தத்தில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் ...

சுவிஸ் நாட்டிலிருந்து 457 கிலோ தங்கம்: 11 மாதங்களில் இந்தியாவுக்கு ஏற்றுமதி

Posted:

புதுடில்லி: கடந்த, 2014 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாதங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 457 கிலோ தங்கம், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு, ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.சுவிட்சர்லாந்தில், இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணம், வேறு விதமான வழிகளில், நம்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த அளவு தங்கம், அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சுவிட்சர்லாந்து, பல நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்து வருகிறது. அதில், இந்தியா தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ...

பரப்பன அக்ரஹாரா சிறை வி.ஐ.பி., அறைகளில் காற்றோட்டம்: 4 ஆண்டுகளாக இடத்தை அடைத்த பிரபலங்கள்

Posted:

பெங்களூரு: சட்ட விரோதமான சுரங்கத் தொழில் குற்றச்சாட்டின் பேரில், 41 மாதம் சிறை வாசத்தை முடித்துக்கொண்டு, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியும்; 14 மாத சிறை வாசத்துக்கு பின், எம்.எல்.ஏ., ஆனந்த் சிங்கும் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியில் சென்றதன் மூலம், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த வி.ஐ.பி., அறைகள் காலியாகியுள்ளன.கடந்த, 2011லிருந்து, 2015 ஜன., 23ம் தேதி வரை, பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள, சிறப்பு பாதுகாப்பறைகள் காலியாக இருந்ததில்லை. வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, சிறைக்கு வந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களால், இந்த அறைகள் ...

எல்லை தாண்டிய சக்திகளால் காஷ்மீர் வளர்ச்சி தடங்கல்: கவர்னர் வோரா

Posted:

ஜம்மு:எல்லைத் தாண்டிய சக்திகளால் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தடையாக இருக்கின்றன என அந்த மாநில கவர்னர் வோரா தெரிவித்தார்.இதுகுறித்து ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில், நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து வோரா கூறியதாவது:ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு, எல்லைத் தாண்டிய எதிர்மறை சக்திகளும், அமைதி, சகஜநிலையை ஏற்படுத்த எழும் தொடர் சவால்களும் தடையாக இருக்கின்றன.மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதி, சட்டம் - ஒழுங்கு நிலையை பேணுவது மிகவும் முக்கியமானதாகும்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும், சர்வதேச எல்லை, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™