Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ.,வின் புதிய இலக்கு பீகார்!

Posted:

பாட்னா: இந்த ஆண்டில் சட்ட சபை தேர்தலை சந்திக்கும் பீகார் மாநிலத்தில், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்துள்ள, பா.ஜ.,வின் தலைவர் அமித் ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி தலைமையிலான பீகாரில், சமீபகாலமாக, லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி., கட்சியும், ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அவ்விரு கட்சிகளையும் வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்ற முடிவு செய்துள்ள பா.ஜ., புதிதாக, 75 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து, கட்சி வளர்ச்சிப் பணியை முடுக்கி விட ...

ஸ்ரீரங்கம் வேட்பாளரை பா.ஜ., அறிவித்ததால் விஜயகாந்த் அதிர்ச்சி: தே.மு.தி.க.,வும் தனித்து களம் இறங்க தீவிர ஆலோசனை

Posted:

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை, தமிழக பா.ஜ., தலைமை, தன்னிச்சையாக அறிவித்துள்ளதால், விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தே.மு.தி.க.,வும் தனித்து களமிறங்க, தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது.ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, அ.தி.மு.க.,- - தி.மு.க., - -மா.கம்யூ., கட்சிகள் ஏற்கனவே அறிவித்து உள்ளன.தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளராக, சுப்ரமணியம் போட்டியிடுவார் என, அக்கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று அறிவித்தார். கூட்டணி கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன், பா.ஜ., ...

மின்சாரம், மரபு சாரா எரிசக்தி: ரூ.15 லட்சம் கோடி முதலீடு

Posted:

டாவோஸ்: ''மின்சாரம் மற்றும் மரபு சாரா எரிசக்தி துறையில், வரும், 2019ம் ஆண்டிற்குள், 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு குவியும்,'' என, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.டாவோஸ் நகரில் அவர் நிருபர்களிடம் தெரிவித்த விவரம்: நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும், தொழிற்சாலைக்கும், வணிக நிறுவனத்திற்கும் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும்; விளைபொருட்களின் உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கு போதுமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பது, பிரதமர் மோடியின் லட்சியம். இந்த லட்சியத்தால், இந்தியாவில், பல ஆண்டுகளாக மந்த ...

முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி காப்பாற்றப்படுமா: கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: 'முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி காப்பாற்றப்படுமா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: முன்னாள் பிரதமர் நேரு, 'இந்தி பேசாத மக்களின் பூரண சம்மதத்தை பெறும் வரையில், ஆங்கிலம் அல்லது இந்தி நிலையில் எந்தவித மாற்றமும் செய்ய கூடாது' என்றார். இதே உறுதி மொழிகளை தான் லால்பகதூர் சாஸ்திரியும், அதன் பின்னர் இந்திராவும் தெரிவித்தனர். ஆனால், அந்த மூன்று பிரதமர்களும், இந்தி பேசாத மக்களுக்கு அளித்த உறுதிமொழியை, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவாரா அல்லது இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை கொண்டு வர முனையும் சிலருடைய ...

தயாநிதி வீட்டில் தொலைபேசி இணைப்பகம் செயல்பட்டது எப்படி? அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல்., 'மாஜி' ஊழியர்

Posted:

''மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் என்ற முறையில், சென்னையில் உள்ள தயாநிதி வீட்டுக்கு, ஒதுக்கப்பட்ட தொலைபேசியில், நவீன தொழில் நுட்பத்தை இணைத்து, சன் 'டிவி' அலுவலகத்துக்கு, மடை மாற்றி விட்டார்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாநில செயலருமான மதிவாணன் கூறினார். இவர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 'மாஜி' ஊழியர்.புகைப்படம், வீடியோ:தயாநிதி வீட்டில், சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பகம் அமைக்கப்பட்டது குறித்து, அவர் கூறியதாவது:தயாநிதி, 2004 - 2007 கால கட்டத்தில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக ...

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் 'பொய்' வழக்கு: ஜெ., வக்கீல் இறுதி வாதம்

Posted:

பெங்களூரு: "அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு பொய்யானது என்பதற்கான பல ஆதாரங்களை, சமர்ப்பித்தும் முந்தைய சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை," என வக்கீல் நாகேஸ்வரராவ் வாதத்தை நிறைவு செய்தார்.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் அவரது வக்கீல் நாகேஸ்வர ராவ் நேற்று 8 வது நாளாக வாதிட்டார்.அவர் கூறியதாவது: சுதாகரன் திருமணம் 1995 செப்., 7ல் சென்னை எம்.ஆர்.சி., மைதானத்தில் ...

பொது துறையான இந்திய உணவு கழகத்திற்கு மூடுவிழா? உணவு பாதுகாப்பு சட்டத்திலும் மாற்றம் வருது

Posted:

புதுடில்லி: மானியச் சுமையை குறைப்பதற்காக, உணவு மானியத்தை படிப்படியாக கைவிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, நாட்டின், 67 சதவீத மக்களுக்கு, உணவு பாதுகாப்புசட்டப்படி உணவு வழங்குவதற்குப் பதிலாக, 40 சதவீதம் பேருக்கு, உணவு பாதுகாப்பு வழங்கி, மானியச் சுமையிலிருந்துதப்பிக்கலாம் என, சாந்தகுமார் கமிட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.உரம், உணவு, பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றிற்கான மானியத் தொகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அந்தப் பிடியிலிருந்து விலக, மத்திய அரசு முடிவு செய்து ...

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத மாஜி பிரதமர்கள்: போட்டுக்கொடுத்த பாரிக்கர்

Posted:

புதுடில்லி: 'முன்னாள் பிரதமர்கள் சிலர், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், அரசுக்கு தகவல் அல்லது உளவு தரும் ஏற்பாடுகளை உருவாக்கி அவர்கள் தரும் தகவல்களை காப்பாற்ற தவறி விட்டனர்' என, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், 59, கூறினார். அவருக்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ராணுவ அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் உள்ளார். இந்தி பத்திரிகை ஒன்றுக்கு, நேற்று முன்தினம் பேட்டியளித்த அவர், 'ராணுவத்திற்கு உளவு தகவல் தரும் வட்டாரங்களை உருவாக்க, 20 - 30 ஆண்டுகள் ஆகும். ஆனால், நாட்டின் முன்னாள் பிரதமர்கள் சிலர், நாட்டின் ...

பயங்கரவாதிகளின் இலக்கு டில்லி அல்ல...

Posted:

புதுடில்லி: பயங்கரவாதிகள், டில்லியை தவிர்த்து, நாட்டின் பிற பகுதிகளில், தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, மாநில அரசு களை, உளவு அமைப்பு கள் எச்சரித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா, நாளை டில்லி வருவதையொட்டி, ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், டில்லியை தவிர்த்து, பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், குறிப்பாக காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என, உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அனைத்து மாநில அரசுகளும், பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. கடந்த, 2000ம் ஆண்டு, அப்போதைய ...

வெளிநாட்டினருக்கு மட்டும் குஜராத்தில் மது!

Posted:

காந்திநகர்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள, குஜராத் மாநிலத்திற்கு வரும் வெளிநாட்டினர், மதுபானம் கிடைக்காமல் அவதிப்படுவதை அறிந்த மாநில அரசு, வெளிநாட்டினருக்கு மட்டும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மதுபானத்திற்கான உரிமம் வழங்க முன்வந்து உள்ளது.

பூரண மதுவிலக்கு:
பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான குஜராத் மாநிலத்தில், நீண்ட காலமாக பூரண மதுவிலக்கு உள்ளது. அங்கு மதுபான கடைகளே கிடையாது. மாநிலம் முழுவதும், 35 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே, ஓட்டல் வாடிக்கையாளர்களுக்காக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. சமீபகாலமாக, ...

சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு: மத்திய அரசு மறுபரிசீலனை?

Posted:

டாவோஸ்: ''சமூகத்தில் பரவலான கருத்தொற்றுமை உருவானால் மட்டுமே, பல பொருட்களின் சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.உலக பொருளாதார உச்சி மாநாட்டையொட்டி, டாவோஸ் நகரில் தங்கியுள்ள அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு சீர்திருத்தத்திற்கும், அதற்கான காலம் வரும் வரை, பொறுத்திருக்க வேண்டும். பல பொருட்களின் சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க, முதலில் சமூகத்தில் பரவலான கருத்தொற்றுமை அவசியம். அவ்வாறு இல்லாமல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™