Tamil News | Online Tamil News |
- ஊழியர்கள் வேலைக்கு வராததால் அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிப்பு: கோரிக்கைகளை வலியுறுத்த திடீர் விடுப்பு போராட்டம்
- சட்ட விரோத தொலைபேசி இணைப்பு: தயாநிதி தனி செயலர் உட்பட மூவருக்கு 15 நாள் காவல்
- பிச்சை கேட்கிறேன்! பிரதமர் மோடி உருக்கம்
- ராகுல் முக்கியத்துவம் 'கட்!' கொம்பு சீவி விடப்படுகிறார் பிரியங்கா
- சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே வருவாய் அதிகரிப்பு: பொருளாதார வளர்ச்சி, கட்டண உயர்வே காரணம்
- ரேஷன் சர்க்கரை விலை உயரும்? இடைத்தேர்தலால் அரசு மவுனம்
- மோடியுடன், ஒபாமா ரேடியோவில் பேச்சு
- 'செவிடன் காதில் ஊதிய சங்கு': அரசை விமர்சிக்கும் விஜயகாந்த்
- ரிசர்வ் வங்கி உதவியை நாடும் இலங்கை: கறுப்பு பணத்தை மீட்க புதிய அரசு திட்டம்
- திரிணமுல் காங்., கூடாரம் காலி?
| Posted: சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, மாநிலம் முழுவதும், 1.5 லட்சம் ஊழியர்கள் திடீர் விடுப்பு போராட்டம் நடத்தியதால், அரசு அலுவலகங்கள் முடங்கின. இதனால், அரசு பணிகள் ஸ்தம்பித்தன. விவரம் தெரியாமல் அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்தது.தமிழக அரசு ... |
| சட்ட விரோத தொலைபேசி இணைப்பு: தயாநிதி தனி செயலர் உட்பட மூவருக்கு 15 நாள் காவல் Posted: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியின் சென்னை வீட்டில், சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் வைத்திருந்த வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது தனி செயலர் மற்றும் சன் 'டிவி' ஊழியர்கள் இருவரை, 15 நாள் காவலில் வைக்க, சி.பி.ஐ., நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.தயாநிதி, கடந்த, 2004ல் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, சென்னையில் உள்ள அவரது வீட்டில், ஐ.எஸ்.டி.என்., என்ற நவீன தொழில்நுட்பத்தில், 222 இணைப்புகள் கொண்ட, தொலைபேசி இணைப்பகம் செயல்பட்டது. இதன்மூலம், சன் 'டிவி' நிறுவனத்துக்கு, இணைப்புகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. எந்த ... |
| பிச்சை கேட்கிறேன்! பிரதமர் மோடி உருக்கம் Posted: பானிபட்: ''பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என, ஒவ்வொருவரிடமும் நான் பிச்சை கேட்கிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக கூறினார்.ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், 100 மாவட்டங்களில், 'பெண் குழந்தைகளை காப்போம்; கற்க வைப்போம்' என்ற பெயரிலான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.அந்த திட்டத்தை, அரியானா மாநிலத்தில் நேற்று துவக்கி வைத்த, பிரதமர் மோடி பேசியதாவது: கருவில் இருக்கும் சிசு, ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து, பெண் குழந்தையானால், அதை அழிக்கும் பாவச் செயலை செய்யும் டாக்டர்கள், இந்த சமுதாயத்திற்கு துரோகம் செய்கின்றனர். இத்தகைய ... |
| ராகுல் முக்கியத்துவம் 'கட்!' கொம்பு சீவி விடப்படுகிறார் பிரியங்கா Posted: புதுடில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், 44, தலைமையில், கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல், படுதோல்வியை அடுத்து, 'ராகுல் சரிப்பட்டு வர மாட்டார்' என்பதை உணர்ந்த கட்சித் தலைவர் சோனியா, பிரியங்காவுக்கு, 43, மகுடம் சூட்டும் வேலையில் ரகசியமாக ஈடுபட்டுள்ளார்.ராகுலின் உதவியாளர்கள்: அதன் ஒரு கட்டமாக, ராகுலின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தவர்களை, பிரியங்காவுக்கு உதவியாளர்களாக சோனியா மாற்றியுள்ளார். கடந்த, 13 ஆண்டுகளாக ராகுலின் உதவியாளராக விளங்கிய கனிஷ்கா சிங், 36, அந்த பொறுப்பிலிருந்து ... |
| சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே வருவாய் அதிகரிப்பு: பொருளாதார வளர்ச்சி, கட்டண உயர்வே காரணம் Posted: புதுடில்லி: பொருளாதார வளர்ச்சி, கட்டண உயர்வு போன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டின், முதல் மூன்று காலாண்டில், ரயில்கள் மூலம் சரக்கு போக்குவரத்து அதிகரித்து, ரயில்வே துறையின் வருவாயும் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, கடைசி காலாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.முந்தைய நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டில், சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே வருவாய், 12.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், 77 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. கடந்த, 2013 - 14ம் ... |
| ரேஷன் சர்க்கரை விலை உயரும்? இடைத்தேர்தலால் அரசு மவுனம் Posted: ரேஷன் சர்க்கரை விலையை மாற்றி அமைக்க, மாநில அரசு களுக்கு, மத்திய அரசு, ஒப்புதல் அளித்துள்ளதால், தமிழகத்தில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும், சர்க்கரை விலையை, 1 கிலோ, 15 ரூபாய் என உயர்த்த, அரசு, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.10 சதவீதம்: தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், கடந்த, 2002 முதல், 1 கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் வெளிச்சந்தை விலை கிலோ, 35 - 40 ரூபாய். சர்க்கரை விலை கட்டுப்பாடு மத்திய அரசு வசம் இருந்த போது, சர்க்கரை ஆலைகள் அவற்றின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், 10 சதவீதத்தை, பொது வினியோக திட்டத்தில் ... |
| மோடியுடன், ஒபாமா ரேடியோவில் பேச்சு Posted: புதுடில்லி: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 27ம் தேதி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ரேடியோவில் பேசுகிறார்.கடந்த மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மோடி, அக்டோபர் முதல், 'மன் கீ பாத்' என்ற பெயரில், தன் மனதில் பட்ட கருத்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதற்காக, ரேடியோவில் பேசி வருகிறார்; அதை, நாடு முழுவதும் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ' நிலையங்கள் ஒலிபரப்பி வருகின்றன. என்னென்ன விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் மோடி பேச வேண்டும் என, பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம்; மோடியின் இணைய தளத்தில் அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ... |
| 'செவிடன் காதில் ஊதிய சங்கு': அரசை விமர்சிக்கும் விஜயகாந்த் Posted: சென்னை: 'ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், பன்னீர்செல்வம் முதல்வராக உள்ளபோதும், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளில், மக்கள் நலனுக்கான அடிப்படை தேவைகளை, இதுவரையிலும் நிறைவேற்றவில்லை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை: ஜனநாயக நாட்டில், தங்களது கோரிக்கைகளை, ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என, அகிம்சை வழி போராட்டங்களை, மக்கள் நடத்துகின்றனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை யிலும், மக்கள் மன்றத்திலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரிக்கை விடுத்தனர். ... |
| ரிசர்வ் வங்கி உதவியை நாடும் இலங்கை: கறுப்பு பணத்தை மீட்க புதிய அரசு திட்டம் Posted: கொழும்பு: இலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான ஆட்சியின் போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் குறித்த தகவல்களை பெறவும், பதுக்கப்பட்ட பணத்தை மீட்கவும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலக வங்கியின் உதவியை நாட, அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, புதிய அரசு திட்டமிட்டு உள்ளது.இதுகுறித்து, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான, ரஜித் சேனரத்னே கூறியதாவது: முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவின் ஆட்சிக் காலத் தில், பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், முறைகேடான வகையில், சொத்துகளை குவித்து ... |
| திரிணமுல் காங்., கூடாரம் காலி? Posted: கோல்கட்டா:மேற்குவங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த ஏராளமான, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பா.ஜ.,வுக்கு தாவ தயாராக இருப்பதை அறிந்த, முதல்வர் மம்தா பானர்ஜி, 'வாங்க, பிரச்னையை பேசித் தீர்ப்போம்; கட்சி தாவ வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிடிவாத போக்கு:இந்த மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 32 ஆண்டு கால, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பி, 2011ல் ஆட்சியை கைப்பற்றிய, மம்தா பானர்ஜியின் பிடிவாத போக்கால், கட்சியின் அனைத்து மட்டத்திலும் அவருக்கு எதிரிகள், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 23,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |