Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

Posted: 22 Jan 2015 01:59 PM PST

அண்ணா பல்கலைக்கழகம் பண்ருட்டி அரசுப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க நிகழ்ச்சி பணிக்கன்குப்பம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

என்எல்சி சுரங்க மண் வெட்டும் இயந்திரம் புதுப்பிப்பு

Posted: 22 Jan 2015 01:59 PM PST

என்எல்சி சுரங்கத்தில் 30 ஆண்டுகள் பழமையான மண்வெட்டும் இயந்திரம் புனரமைக்கப்பட்டு வியாழக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை கிடைக்க நடவடிக்கை

Posted: 22 Jan 2015 01:59 PM PST

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலர் ஆர்.விருதகிரி தெரிவித்துள்ளார்.

பாஜகவை தடுக்கும் பொறுப்பு விடுதலைச் சிறுத்தைக்கு உள்ளது

Posted: 22 Jan 2015 01:59 PM PST

தமிழகத்தில் பாஜகவை தடுக்கும் பொறுப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது என்றார் அக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

மனிதக் கழிவு உரம் மூலம் விவசாயம்

Posted: 22 Jan 2015 01:58 PM PST

 சிதம்பரம் அருகே குமுடிமூலை கிராமத்தில் மனிதக் கழிவு உரம் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. இதற்காக, இக் கிராமத்தைச் சுற்றி சுமார் 500 எருக்குழி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்:கடலூர் மாவட்டத்தில் 3 குழுக்கள் அமைப்பு

Posted: 22 Jan 2015 01:58 PM PST

பிரதமர் அறிவித்துள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்த்தை செயல்படுத்த கடலூர் மாவட்டத்தில் 3 குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறின

அரசுப் பேருந்து-கார் மோதல்: என்எல்சி பொறியாளர் உள்பட 3 பேர் சாவு

Posted: 22 Jan 2015 01:58 PM PST

பண்ருட்டி அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த என்எல்சி பொறியாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இறந்த ஓய்வூதியர்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம் கையாடல்: ஒருவர் கைது

Posted: 22 Jan 2015 01:57 PM PST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையொன்றில் கணக்கு வைத்திருந்து இறந்துபோன ஓய்வூதியர்களின் கணக்கில் இருந்த ரூ. 12.10 லட்சத்தை கையாடல் செய்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

சுங்கச்சாவடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: பிப்.10-இல் அன்புமணி ஆஜராக உத்தரவு

Posted: 22 Jan 2015 01:56 PM PST

உளுந்தூர்பேட்டையில், சுங்கச்சாவடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Jan 2015 01:56 PM PST

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் நூதனப் போராட்டம்

Posted: 22 Jan 2015 01:56 PM PST

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு வியாழக்கிழமை ஆர்ப்ப

இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம்

Posted: 22 Jan 2015 01:56 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டம் அதையூரில் கிளைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் இளைஞர் மூளைச்சாவு: சான்றளிக்க அரசு மருத்துவமனை மறுப்பதால் உடலுறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை: உறவினர்கள் புகார்

Posted: 22 Jan 2015 01:56 PM PST

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு அடைந்தது குறித்த சான்றிதழ் அளிக்க மறுப்பதால், அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: ஒருவர் கைது

Posted: 22 Jan 2015 01:56 PM PST

விழுப்புரத்தில் கட்டுமானப் பொருள்களை திருடியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுப்புப் போராட்டம்

Posted: 22 Jan 2015 01:55 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஒரு நாள் விடுப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

மாநகராட்சி கணக்கு நிலைக் குழு புதிய உறுப்பினர் சிவராஜ்

Posted: 22 Jan 2015 01:55 PM PST

சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக் குழுவின் புதிய உறுப்பினராக டி. சிவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதல்: 6 பேர் காயம்

Posted: 22 Jan 2015 01:55 PM PST

மயிலம் அருகே தனியார் பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது கருத்துச் சுதந்திரம் அல்ல: இராம. கோபாலன்

Posted: 22 Jan 2015 01:55 PM PST

கருத்துச் சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் உரிமை அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என, இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் கேட்டுக் கொண்டார்.

பள்ளி ஆட்டோ ஓட்டுநர் சங்கக் கூட்டம்

Posted: 22 Jan 2015 01:54 PM PST

பள்ளி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோலப் போட்டி

Posted: 22 Jan 2015 01:54 PM PST

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில் திங்கள்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம்

Posted: 22 Jan 2015 01:54 PM PST

உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியம், சேந்தமங்கலம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிளை முகாம் அண்மையில் நடைபெற்றது.

பொருளாதார அதிகாரமே பெண் சம உரிமைக்கு வழிவகுக்கும்: தலைமை நீதிபதி

Posted: 22 Jan 2015 01:54 PM PST

பெண்ணுக்கு சம உரிமை கிடைக்க அவர்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.

புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 22 Jan 2015 01:54 PM PST

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. இதில் வணிகர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விழுப்புரம் நகராட்சிக்கு

மாவட்ட செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 22 Jan 2015 01:53 PM PST

மாவட்ட செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி செஸ் பவுண்டேஷன் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி கள்ளக்குறிச்சியில்

ராமஜெயம் கொலை வழக்கு: சீலிட்ட உறையில் சிபிசிஐடி விசாரணை விவரம் தாக்கல்

Posted: 22 Jan 2015 01:53 PM PST

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின், சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை, சீலிட்ட உறையில், சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jan 2015 01:53 PM PST

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

Posted: 22 Jan 2015 01:53 PM PST

பிரதமர் அறிவித்துள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த கடலூர் மாவட்டத்தில் 3 குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறினார்.

செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை: ஆட்சியர்

Posted: 22 Jan 2015 01:53 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் முழுமையாக செவித்திறன் குன்றிய குழந்தைகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு பயிற்சி

Posted: 22 Jan 2015 01:53 PM PST

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு பயிற்சி முகாம் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

தரமான கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்: ஆளுநர் ரோசய்யா

Posted: 22 Jan 2015 01:53 PM PST

பள்ளிகள் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சொத்துக் குவிப்பு வழக்கு:நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்

Posted: 22 Jan 2015 01:52 PM PST

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் வியாழக்கிழமை நேரில் ஆஜராயினர்.

சுங்கச்சாவடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: பிப்.10-ல் அன்புமணி ஆஜராக உத்தரவு

Posted: 22 Jan 2015 01:52 PM PST

உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை ந

சுகாதார ஆய்வாளர் வீட்டில் 50 சவரன் திருட்டு: ஒருவர் பிடிபட்டார்

Posted: 22 Jan 2015 01:52 PM PST

விழுப்புரத்தில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் 50 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

கல்லூரியில் பூட்டை உடைத்து திருட்டு

Posted: 22 Jan 2015 01:52 PM PST

மயிலம் அருகே உள்ள தனியார் கல்லூரியின் பூட்டை உடைத்து அங்கிருந்த கணிப்பொறி சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இந்திய மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தது வங்கதேச நீதிமன்றம்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

Posted: 22 Jan 2015 01:51 PM PST

இந்திய மீனவர்கள் 26 பேரை வங்கதேச நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்ததாகவும், இன்னும் ஓரிரு நாளில் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவர் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிப்.2-ல் பெத்துசெட்டிப்பேட்டை சிவசுப்ரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Posted: 22 Jan 2015 01:51 PM PST

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி, பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. ரூ.3.5 கோடி செலவில் கோயில் திருப்பணிகள்

தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது: வேல்முருகன்

Posted: 22 Jan 2015 01:51 PM PST

ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.

தேசிய இளையோர் விழா: பரத நாட்டியத்தில் புதுவை மாணவி சாதனை

Posted: 22 Jan 2015 01:51 PM PST

தேசிய அளவில் நடைபெற்ற இளையோர் விழாவில் பரத நாட்டியப் போட்டியில் புதுவை மாணவி முதலிடம் பிடித்தார்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பிப்ரவரி 3-ல் பேரணி

Posted: 22 Jan 2015 01:51 PM PST

புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு, மத்திய பாஜக அரசு ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்டித்து வரும் பிப்ரவரி 3-ம் தேதி பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இரட்டைக் கொலை வழக்கில் கைதானவர்கள் சிறையிலடைப்பு

Posted: 22 Jan 2015 01:50 PM PST

புதுவை இரட்டைக் கொலை வழக்கில் கைதான 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

குட்டையில் விழுந்த பெண் சாவு

Posted: 22 Jan 2015 01:50 PM PST

காரைக்கால் அருகே குட்டையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். காரைக்கால் அருகேயுள்ள தக்களூர் எல்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி ராணி (45). இவர் மனநலம் பாதித்த நிலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இவர்

சென்னையில் கிஸான் விகாஸ் பத்திரத்தில் ரூ.6.2 கோடி முதலீடு

Posted: 22 Jan 2015 01:50 PM PST

மறு வெளியீடு செய்யப்பட்ட கிஸான் விகாஸ் பத்திர சேமிப்புத் திட்டத்தில், இதுவரை சென்னை நகர மண்டலத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் சுமார் ரூ.6.2 கோடி அளவுக்கு முதலீட்டுத் தொகைப் பெறப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைக் கொள்ளை

Posted: 22 Jan 2015 01:50 PM PST

புதுவை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தனியார் தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் சட்டப்பேரவை முற்றுகை

Posted: 22 Jan 2015 01:49 PM PST

புதுவை அருகே உள்ள தனியார் தோல்பொருள் தொழிற்சாலை தொழிலாளர்கள் சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு கோரி சட்டப்பேரவை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

Posted: 22 Jan 2015 01:49 PM PST

புதுவையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் கண்டித்து அரசு ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jan 2015 01:49 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்புத் துணி கட்டி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வியாழக்கிழமை புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்:காரைக்கால் மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 22 Jan 2015 01:49 PM PST

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற என்.சி.சி. தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மாணவருக்கு விருது வழங்கக் கோரி உண்ணாவிரதம்

Posted: 22 Jan 2015 01:48 PM PST

ஜிப்மர் கலையரங்கில் தீவிபத்து நேரிடாமல் தடுத்த மாணவருக்கு விருது வழங்கக் கோரி ஜனவரி 26-ம் தேதி கடற்கரை காந்தி சிலை அருகே சமூக அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்

Posted: 22 Jan 2015 01:48 PM PST

மீனவர்களை பாதிக்கும் டாக்டர் மீனாகுமாரி பரிந்துரைகளை ரத்து செய்யக் கோரி 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

முத்தியால்பேட்டை மார்க்கெட் பணி முடக்கம்

Posted: 22 Jan 2015 01:48 PM PST

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகப் பணிகள் முடங்கிப் போயுள்ளது வியாபாரிகளை வேதனையடையச் செய்துள்ளது.

வருவாய், தொழில் துறைகளுக்கு பாதிப்பில்லா வரி சீரமைப்பு கொள்கை வேண்டும்

Posted: 22 Jan 2015 01:48 PM PST

வருவாய், தொழில் துறைகளுக்கு பாதிப்பில்லா வகையில் வரி சீரமைப்பு கொள்கை இருக்க வேண்டும் என புதுச்சேரி எம்.பி. ஆர்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

விலங்கு விழிப்புணர்வு ஓவியங்கள்

Posted: 22 Jan 2015 01:47 PM PST

விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் புதுவை பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.

உளுந்து சாகுபடி: அதிக மகசூல்பெற ஆலோசனை

Posted: 22 Jan 2015 01:47 PM PST

காரைக்காலில் உளுந்து, பயறு சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிகள் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கைதிகள் மோதல்: உ.பி. சிறைகளில் கண்காணிப்பு தீவிரம்

Posted: 22 Jan 2015 01:46 PM PST

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்ட சிறைச் சாலையில் கைதிகளுக்குள் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து,

பண மோசடி வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா சொத்துகள் முடக்கம்

Posted: 22 Jan 2015 01:46 PM PST

தனியார் நிறுவனத்திற்கு அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் குஜராத் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா மீது தொடரப்பட்ட வழக்கில் அவரது 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்குமாறு பண மோசடிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பஞ்சாப்: ரூ.3,342 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைப் பணிகள் தொடக்கம்

Posted: 22 Jan 2015 01:45 PM PST

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.3,342 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய நெடுஞ்சாலைப் பணிகளை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

இன்று உ.பி. மேலவைத் தேர்தல்: எம்எல்ஏக்களை வளைக்க கடும் போட்டி

Posted: 22 Jan 2015 01:44 PM PST

உத்தரப் பிரதேச மாநில மேலவைக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை (ஜன.23) நடைபெறவுள்ளதையொட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்களுக்குச் சாதகமாக வளைப்பதில் பல கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தென்கிழக்கு ஆசிய வளர்ச்சியில் மியான்மருக்கு முக்கியப் பங்கு: பிரணாப் பாராட்டு

Posted: 22 Jan 2015 01:44 PM PST

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மியான்மர் நாடு முக்கியப் பங்காற்றுவதாகக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டுத் தெரிவித்தார்.

தயாநிதி மாறன் விவகாரம்: பி.எஸ்.என்.எல். வருவாய் இழப்பை மதிப்பிட இயலாத சிபிஐ

Posted: 22 Jan 2015 01:43 PM PST

சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட மொத்த வருவாய் இழப்பு குறித்து சிபிஐயால் இதுவரை மதிப்பிட இயலவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாலை விதிமீறல்: மகாராஷ்டிர முதல்வர் மீதான வழக்கு தள்ளுபடி

Posted: 22 Jan 2015 01:42 PM PST

சாலை விதிகளை மீறியதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் மீது தொடரப்பட்ட வழக்கை புணே நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

முசாஃபர்நகர் கலவரம்: உயரதிகாரிகளுக்கு சம்மன்

Posted: 22 Jan 2015 01:42 PM PST

முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக, அப்போது பணியில் இருந்த உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கலவரம் குறித்து விசாரித்து வரும் ஒரு நபர் விசாரணை ஆணையம், இந்த சம்மனை அனுப்பியுள்ளது.

இந்தியர்களின் கருப்புப் பணத்துக்கு ஆதாரம் உள்ளது: அருண் ஜேட்லி

Posted: 22 Jan 2015 01:41 PM PST

"சுவிட்ஸர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை வைத்திருப்பதற்கு இந்தியாவிடம் ஆதாரம் உள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: சோனியா காந்தியின் உதவியாளர் விடுவிப்பு

Posted: 22 Jan 2015 01:41 PM PST

கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜை தில்லி சிபிஐ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

"ரகசியத் தகவல்களைக் காப்பாற்ற சில முன்னாள் பிரதமர்கள் தவறிவிட்டனர்'

Posted: 22 Jan 2015 01:40 PM PST

தேசியப் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களை முன்னாள் பிரதமர்கள் சிலர் காப்பாற்றத் தவறி விட்டனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் குறை கூறினார்.

நேபாள நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் முற்றுகைப் போராட்டம்

Posted: 22 Jan 2015 01:35 PM PST

நேபாளத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்க வலியுறுத்தி எதிர்க் கட்சி உறுப்பினர்கள், வியாழக்கிழமை இரவு, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் பாய்மர படகுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 22 Jan 2015 01:25 PM PST

இந்திய கடலோர பாதுகாப்புப் படையின் 38-ஆவது ஆண்டை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டிகள் சென்னை துறைமுகத்தில் வியாழக்கிழமை தொடங்கின.

ஒருதலைக் காதலால் விபரீதம்: ஆசிரியையைக் கொன்ற இளைஞர் கைது

Posted: 22 Jan 2015 01:16 PM PST

ஆண்டிபட்டியில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியையை, கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கைது

Posted: 22 Jan 2015 01:16 PM PST

நாகர்கோவிலில், ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தேவதாஸ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பிரசவ கால உயிரிழப்பு: 2.89 லட்சமாகக் குறைந்துள்ளது

Posted: 22 Jan 2015 01:15 PM PST

உலக அளவில் பிரசவ காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு 2.89 லட்சமாகக் குறைந்துள்ளது என, உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் ஜேக்கப் குமரேசன் கூறினார்.

மாதொருபாகன் நூல் விவகாரம்: மனுதாரராக சேர விரும்புவது குறித்து விளக்கமளிக்க பெருமாள் முருகனுக்கு நோட்டீஸ்

Posted: 22 Jan 2015 01:15 PM PST

மாதொருபாகன் நூல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களில், எந்த மனுவில் மனுதாரராக இணைய விரும்புகிறார் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, பெருமாள் முருகனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி உயர் பாதுகாப்பு எண் பலகை தயாரிப்பவர்களைக் கண்டறியாதது ஏன்? கூடுதல் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 22 Jan 2015 01:15 PM PST

வாகனங்களுக்கான போலி உயர் பாதுகாப்பு எண் பலகைகள் தயாரிக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து விசாரணை செய்யாதது ஏன் என, டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்

Posted: 22 Jan 2015 01:15 PM PST

ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேரைக் காணவில்லை.

அரசுப் பேருந்து - கார் மோதல்: என்எல்சி பொறியாளர் உள்பட 3 பேர் சாவு

Posted: 22 Jan 2015 01:15 PM PST

பண்ருட்டி அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த என்எல்சி பொறியாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருமணத்துக்கு எதிர்ப்பு: தாயை கொன்ற மகன் கைது

Posted: 22 Jan 2015 01:15 PM PST

நாகப்பட்டினம் சிக்கலில் காதலியைத் திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்ததால், தாயை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஒகேனக்கல் பேருந்து விபத்து: மேலும் ஒரு பெண் சாவு

Posted: 22 Jan 2015 01:14 PM PST

ஒகேனக்கல் அருகே வனப் பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.

சுட்டுரையில் ராமதாஸ்

Posted: 22 Jan 2015 01:14 PM PST

பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஃக்ழ்ழ்ஹம்க்ர்ள்ள் என்ற பெயரில் ராமதாஸின் சுட்டுரைகள் இடம்பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நியூட்ரினோ ஆய்வுக்கு தடை கோரும் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Posted: 22 Jan 2015 01:14 PM PST

நியூட்ரினோ திட்டத்துக்குத் தடை கோரும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ வியாழக்கிழமை ஆஜராகி வாதிட்டார்.

அன்பும், கருணையுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும்

Posted: 22 Jan 2015 01:14 PM PST

அன்பும் கருணையும்தான் மனிதர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் என, கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்த மயி பேசினார்.

மனநலம் பாதித்தவர்களை அன்பு காட்டி, அரவணைத்து பாதுகாக்க வேண்டும் ஆட்சியர்

Posted: 22 Jan 2015 01:14 PM PST

மனநலம் பாதித்தவர்களை அன்பு காட்டி, அரவணைத்து பாதுகாக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி.

காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் இரு காவலர்கள் பணியில் இருக்க உத்தரவு

Posted: 22 Jan 2015 01:14 PM PST

காவல் நிலையங்களில் எந்த நேரமும் குறைந்தபட்சம் இரு காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோயிலுக்குள் வந்த உணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்

Posted: 22 Jan 2015 01:14 PM PST

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கோயிலுக்குள் இருப்பதைபோன்ற உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என்றார் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெ.மோகன்.

காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Posted: 22 Jan 2015 01:13 PM PST

மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காகித ஆலை விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

Posted: 22 Jan 2015 01:13 PM PST

பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் காகித ஆலை விரிவாக்கம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தனியார் துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Jan 2015 01:13 PM PST

தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்ற விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் 24ஆம் தேதி நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 11,958 பேருக்கு இலவச மனைப்பாட்டா ஆட்சியர் தகவல்

Posted: 22 Jan 2015 01:12 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் 11,958 பேருக்கு இலவச மனைப்பாட்டா வழங்குப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

பெங்களூரு

Posted: 22 Jan 2015 01:12 PM PST

வால்பாறை வணிகர் சங்க அலுவலக கட்டடம் திறப்பு

Posted: 22 Jan 2015 01:11 PM PST

வால்பாறை வணிகர் சங்க அலுவலகத்தின் புதிய கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வணிகர் சங்கத் தலைவர் பி.சுதீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அலுவலக கட்டடத்தை

மதுரை

Posted: 22 Jan 2015 01:11 PM PST

பாளையங்கோட்டை

Posted: 22 Jan 2015 01:11 PM PST

ஈரோடு

Posted: 22 Jan 2015 01:11 PM PST

கோவை

Posted: 22 Jan 2015 01:10 PM PST

வேலூர்

Posted: 22 Jan 2015 01:09 PM PST

குடியரசு தினத்தில் கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம்: இந்து மக்கள் கட்சி மிரட்டல்

Posted: 22 Jan 2015 12:53 PM PST

குடியரசு தினத்தன்று கச்சத்தீவில் தேசியக்கொடியேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிடில், இந்து மக்கள் கட்சி சார்பில், அங்கு தேசியக்கொடி ஏற்றப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன்சம்பத் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெகதாபி ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு

Posted: 22 Jan 2015 12:18 PM PST

ஜெகதாபி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

மது அருந்தி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து: ஆட்சியர்

Posted: 22 Jan 2015 12:17 PM PST

மது அருந்தியோ அல்லது செல்லிடப்பேசியில் பேசியவாறோ வாகனங்களை ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

சாலை பாதுகாப்பு வார விழா போட்டிகள்: சேரன் பள்ளி சிறப்பிடம்

Posted: 22 Jan 2015 12:17 PM PST

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டியில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

தெற்கு தேய்கிறதே...

Posted: 22 Jan 2015 12:17 PM PST

தீபாவளி, பொங்கல் என்றால் ரயில்வேக்கும் போக்குவரத்துத் துறைக்கும் கொண்டாட்டம்தான். சென்னை எழும்பூரிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூட்டம் அலைமோதும்.

தமிழறிஞர் இளவரசு மறைவுக்கு இரங்கல்

Posted: 22 Jan 2015 12:17 PM PST

தமிழியக்கத் தலைவரும், ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முன்னாள் பேராசிரியரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன்

தத்கலில் ரயில் டிக்கெட் பெற்று கூடுதல் விலைக்கு விற்றவர் கைது

Posted: 22 Jan 2015 12:17 PM PST

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தத்கல் முறையில் ரயில் பயணச் சீட்டுகள் பெற்று அதிக விலைக்கு விற்கப்படுவதாக தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவுக்கு

அரியலூரில் குழந்தை தொழிலாளர் மீட்பு

Posted: 22 Jan 2015 12:15 PM PST

அரியலூரில் அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் குழந்தைத் தொழிலாளர் ஒருவர் மீட்கப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™