Tamil News | Online Tamil News |
- தமிழகத்தில் விரும்பி இந்தி படிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆர்வம்
- ரயில்வே பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை! பழைய திட்டங்களை நிறைவேற்ற முன்னுரிமை
- உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 13 ஆயிரம் கோடி ரூபாயாக குறைப்பு: பட்ஜெட் மறுமதிப்பீட்டில் மத்திய அரசு அதிரடி
- கூடங்குளம் மின்சாரம் அதிகாரப்பூர்வமாக சேர்ப்பு
- இலங்கை வடபகுதிக்கு வெளிநாட்டவர் செல்ல அனுமதி: போர் குற்ற விசாரணைக்கு முதல் படியா?
- ஸ்ரீரங்கம் தொகுதியில் நாளை வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது
- 'ஜல்லிக்கட்டு மேலை நாட்டு கலாசாரம்'; பா.ஜ., தொடர்ந்து எதிர்க்கும் என்கிறார் மேனகா
- லோக்சபா தேர்தலுக்கு கோடிகளில் செலவழித்த கட்சிகள்: பா.ஜ., ரூ.714 கோடி: காங்கிரஸ் ரூ. 516 கோடி
- மக்களோடு மக்களாக கலந்து போராட வேண்டும்- பிரியங்கா அட்வைஸ்; ஜூலையில் தலைவராகிறார் ராகுல்?
- ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., - தி.மு.க., கணக்கு என்ன?
| Posted: தமிழகத்தில், தமிழ், ஆங்கிலம் என, இருமொழி கல்விக் கொள்கை அமலில் இருந்தாலும், இந்திமொழியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.இந்த புள்ளி விவரம், சென்னை இந்தி பிரசார சபா, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டவை. 'தமிழகத்தில், இந்தி மொழியை கட்டாயமாக கல்வித் திட்டத்தில் திணிக்கக் கூடாது' என, பெரும் கிளர்ச்சி எழுந்து, அதன்மூலம், திராவிட கட்சிகள் ஆட்சியையும் பிடித்தன. 'இந்தி பேசும் மாநிலங்கள் ஏற்காத வரை, அந்த மாநிலங்களில், ... |
| ரயில்வே பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை! பழைய திட்டங்களை நிறைவேற்ற முன்னுரிமை Posted: புதுடில்லி: அடுத்த மாதம், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் இருக்காது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கே, முன்னுரிமை அளிக்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக, அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பெற ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், பார்லிமென்டில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அப்படி தாக்கல் செய்யும் போது, புதிய வழித்தடங்களில் ரயில் இயக்கம், மக்கள் நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள், ... |
| Posted: புதுடில்லி: நடப்பு நிதியாண்டிற்கான (2014-15) பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, 3,900 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.இது, நடப்பு கல்வி ஆண்டில், நிரந்தர கட்டடங்களுக்கு இடம் மாறும் திட்டத்தில் உள்ள, எட்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐ.ஐ.டி.,) பாதிக்கும். அவை, இறுதிக் கட்ட பணிகளுக்கான நிதியை பெற முடியாத நிலை ஏற்படும் என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில், 16 ஐ.ஐ.டி.,க்களுக்கு, 2,500 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில், ... |
| கூடங்குளம் மின்சாரம் அதிகாரப்பூர்வமாக சேர்ப்பு Posted: கூடங்குளம் மின்சாரத்தை சேர்த்து, மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம், 3,957 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, ஆந்திரா - ராமகுண்டம், சிம்ஹாத்ரி - 910; தமிழகம் - என்.எல்.சி., 706, கல்பாக்கம், 332; வல்லூர், 715; ஒடிசா - தால்சர், 498; கர்நாடகம் - கைகா, 234 மெகாவாட் என, மத்திய மின் நிலையங்களில் இருந்து, 3,395 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, என்.எல்.சி., முதல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும், 475 மெகாவாட் மின்சாரமும், மின் வாரியத்திற்கு வழங்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்கள், மின் வாரியம் சார்பில், நாள்தோறும் ... |
| இலங்கை வடபகுதிக்கு வெளிநாட்டவர் செல்ல அனுமதி: போர் குற்ற விசாரணைக்கு முதல் படியா? Posted: போரினால் நாட்டை விட்டு வெளியேறிய, இலங்கை குடிமக்கள், அந்நாட்டின் வட பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடையை, புதிய அரசு நீக்கி உள்ளது.இதன் மூலம், பல ஆண்டுகளாக உறவுகளை சந்திக்க முடியாமல் இருந்த, புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்கள் உறவுகளை புதுப்பிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு உள்ளது. தடை விதிப்பு:இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரைத் தொடர்ந்து, இலங்கையின் வட பகுதிக்கு, வெளிநாட்டினர் செல்ல, ராஜபக்ேஷ அரசு தடை விதித்து இருந்தது. இதனால், இலங்கை குடிமக்களாக இருந்தும், வெளிநாட்டில் வசிப்பவர்கள், ... |
| ஸ்ரீரங்கம் தொகுதியில் நாளை வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது Posted: சென்னை:ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, நாளை (19ம் தேதி) மனு தாக்கல் துவங்குகிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான தே.மு.தி.க., - பா.ம.க., - கம்யூ., கட்சிகள், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, எந்த முடிவும் அறிவிக்காததால், அரசியல் வட்டாரங்களில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சிறை தண்டனை பெற்று, எம்.எல்.ஏ., பதவியை இழந்ததால், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சார்பில், பெண் வழக்கறிஞர் வளர்மதி, தி.மு.க., சார்பில், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆனந்த், வேட்பாளர்களாக ... |
| 'ஜல்லிக்கட்டு மேலை நாட்டு கலாசாரம்'; பா.ஜ., தொடர்ந்து எதிர்க்கும் என்கிறார் மேனகா Posted: பிலிபிட்: ''ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது மேலை நாட்டு கலாசாரம். அந்த கலாசாரத்திற்கு எதிரானது பாரதிய ஜனதா. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை,'' என, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா கூறினார். தமிழகத்தின் சில பகுதிகளில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், விலங்கு களை காட்சிப்படுத்தும் பட்டியலில், காளையை சேர்த்து, 2011ம் ஆண்டு, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைஅடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், ... |
| லோக்சபா தேர்தலுக்கு கோடிகளில் செலவழித்த கட்சிகள்: பா.ஜ., ரூ.714 கோடி: காங்கிரஸ் ரூ. 516 கோடி Posted: புதுடில்லி: கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., சார்பில், 714 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, 516 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 'சட்டசபை தேர்தல் நடந்த, 75 நாட்களுக்குள்ளும், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த, 90 நாட்களுக்குள்ளும், அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் செலவு கணக்கை, தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்' என, விதிமுறை உள்ளது. இழுத்தடிப்பு:ஆனாலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் குறித்த செலவு கணக்கையும், அதைத் தொடர்ந்து நடந்த ஆந்திரா, ... |
| மக்களோடு மக்களாக கலந்து போராட வேண்டும்- பிரியங்கா அட்வைஸ்; ஜூலையில் தலைவராகிறார் ராகுல்? Posted: ''மக்களின் நாடித்துடிப்பை அறிய காங்கிரஸ் தவறி விட்டது. எனவே, காங்., தலைவர்கள் எல்லாம், மக்களோடு மக்களாக கலந்து அவர்களுக்காக போராட வேண்டும்; குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் காங்கிரஸ் புத்துயிர் பெறும்,'' என, சோனியாவின் மகள் பிரியங்கா ஆலோசனை தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், அடுத்ததாக, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும் தோல்வியையே தழுவியது. அத்துடன், இவற்றில், இரண்டு மாநிலங்களில், ஆட்சியைப் பறிகொடுத்து ... |
| ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., - தி.மு.க., கணக்கு என்ன? Posted: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என, கணக்கு போட்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறது. அதே நேரம், 60 ஆயிரம் ஓட்டுகளை பெற்று, டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தி.மு.க., களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறஉள்ளது. கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட்டு, 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 18,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |