Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Posted: 17 Jan 2015 12:48 PM PST

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வக்கீல் எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள 50 பேர் கொண்ட குழுவையும் அவர் அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி, ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். வக்கீல் வளர்மதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. ...

பெரிய பானை!

Posted: 17 Jan 2015 12:45 PM PST

மந்தையூர் என்னும் ஊரில் குணசீலன் என்பவன் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தான். அரண்மனைத் துணிகளையும் அவன்தான் வெளுப்பான். அவன் சிறப்பாக வேலை செய்வதால், மகிழ்ந்த அரசர் அவனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார். அவன் பக்கத்து வீட்டில் மட்பாண்டங்கள் செய்யும் சுப்பு என்பவன் குடி இருந்தான். குணசீலன் பேரும், புகழும் பெற்றதைப் பார்த்து, பொறாமை கொண்டான் சுப்பு. அரசரிடம் வந்து ""அரசர் பெருமானே! நீங்கள் வெள்ளை யானையில் அமர்ந்து பெருமிதமாக உலா வர வேண்டும். இந்நாட்டு மக்கள் அதைப் பார்த்து மகிழ வேண்டும்,'' ...

மத்திய அரசு தடை செய்துள்ள 32 இணைய தளங்கள்

Posted: 17 Jan 2015 12:40 PM PST

தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களைப் பரப்பியதற்காக, மத்திய அரசு 32 இணைய தளங்கள் இயக்கத்தினை முடக்கி வைத்துள்ளது. இவற்றில் GitHub, Internet Archive, Pastebin, மற்றும் Vimeo ஆகியவை அடங்கும். இவற்றை இந்தியாவில் இயங்கும் எவரும் தொடர்பு கொள்ள இயலாது. இவற்றை முடக்குவதற்கான ஆணை சென்ற டிசம்பர் 17ல் வெளியிடப்பட்டது. தகவல் தொடர்பு சட்டம், 2000ன் பிரிவு 69 ஏ அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. தடை செய்யப்பட்ட 32 தளங்களின் பெயர்கள் பின்வருமாறு: justpaste,it, hastebin.com, ...

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Posted: 17 Jan 2015 12:30 PM PST

சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து. பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ...

என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996

Posted: 17 Jan 2015 12:25 PM PST

Nandamuri Taraka Rama Rao தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 என்.டி.ஆர்., என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில் பிறந்தார். 1947-ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இதையடுத்து இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான 'பாதாள பைரவி' படத்தின் ...

மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் சர்ச்சை நாவல் .

Posted: 17 Jan 2015 12:25 PM PST

எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள மக்களையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அந்த நாவலுக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது: கடந்த, 1940 களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், 'மாதொரு பாகன்!' குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது ...

எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896

Posted: 17 Jan 2015 12:21 PM PST

மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர். வில்லெம் இராண்ட்ஜன் என்பவர் 1985-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊர்சுபெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சயனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதை கண்டார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும், ...

காணோம் பொங்கல்

Posted: 17 Jan 2015 11:47 AM PST

காணோம் பொங்கல் ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல் ராஜா: ஓஹோ அப்படியா சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க சிவா: நா சொல்றேன் கேளுங்க ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க ...

ஸ்கைப் ஐ பிடித்த தமிழில் முழுவதும் மாற்ற

Posted: 17 Jan 2015 10:26 AM PST

ஸ்கைப் (Skype ) இணை முழுமையாக தமிழில் மாற்றலாம் என்றவுடன் தமிழர் என்றாலும் கணினி தமிழ் புரிவதில்லை அதனால் தான் ஆங்கிலத்திலே பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது எனவே தான் நமக்கு புரிகின்ற அல்லது நமக்கு பிடித்த தமிழில் மாற்றினால் மகிழ்ச்சியான விடயம் தானே    முழுமையாக பார்க்க = >

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Posted: 17 Jan 2015 10:16 AM PST

மகாகவி பாரதியின் 133 வது பிறந்தநாள் விழாவில் (11/12/14) அன்று அவன் பிறந்த மண்ணான எட்டைய புரத்தில் பாரதி மணிமண்டபத்தில் பாரதியின் கீழ் உங்கள் ஆதிராவுக்கு 'பாரதி பணிச்செல்வர்' என்னும் விருதினை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வழங்கியது என்பதை என் ஈகரை உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு அடைகின்றேன். இந்த ஆண்டில் (2014ல்) பாரதியாரின் நினைவு நாள், பிறந்தநாள் இரண்டிலும் விருது பெற்றுள்ளேன். நினைவு நாளில் 'பாரதி கண்ட கல்வியாளர்'  விருதும் பிறந்தநாளில் 'பாரதி பணிச்செல்வர்' விருதும் பெற்றுள்ளது ...

ஏலியன்கள் பற்றிய PDF புத்தகம் தேவை -உதவுங்கள்

Posted: 17 Jan 2015 09:53 AM PST

நண்பர்களே எனக்கு ஏலியன்கள் பற்றிய PDF (ஆதி முதல் ) தேவை படுகிறது முடிந்தால் தந்து உதவவும் .

சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு

Posted: 17 Jan 2015 09:05 AM PST

- புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து, 'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில் வெளியாகி உள்ளது. ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர், 2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகார பூர்வமற்ற புத்தகத்தை எழுதினார். ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது. இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ...

தாய்மதம் திரும்புதல் என்றால் என்ன?

Posted: 17 Jan 2015 06:11 AM PST

தாய்மதம் திரும்புதல் என்றால் என்ன? ஒன்றே மனித குலம் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் – ஒரு பெண்ணில் இருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் பிறப்பால் சமமானவர்களே என்பதையும் நவீன அறிவியலும் இன்று நிரூபித்து நிற்கிறது. ஆனாலும் இவ்வுண்மை சக மனிதர்கள் மீது நிறத்தின் குலத்தின் இனத்தின் மேன்மையைக் கூறி ஆதிக்கம் செலுத்துவதற்காக சில சுயநல சக்திகளால் அவ்வப்போது மறைத்து வைக்கப்படுகிறது. இந்த சக்திகள் இந்த ஆதிக்கத்தின் மூலம் சகமனிதர்களை ஆன்மீக ...

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 17 Jan 2015 02:05 AM PST

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

அ ஞ் ச லை - சிறுகதை

Posted: 17 Jan 2015 01:29 AM PST

அந்தச்சேரிப்பகுதி குடிசை ஒன்றின் வாசலில், மிகவும் ஊர்ந்து சென்று நின்றதில் புத்தம் புதிய, அந்த தக்காளி நிற மாருதி கார், மேலும் கூடுதல் அழகாக இருப்பது போலத்தோன்றமளித்தது. காலைவேளைக்கதிரவனின் ஒளி, டிரைவர் சீட்டின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் பட்டுப்பிரதிபலித்தது. சேரியில் சைக்கிளின் பழைய டயர்களை ஒரு சிறிய குச்சியால் தட்டி வண்டியாக ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் காரைச்சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருசிலர் அந்தக்காரை ஆசையுடன் தொட்டுப்பார்த்தனர். அவர்களின் புழுதி படிந்த ...

சில பயனுள்ள தகவல்கள்

Posted: 17 Jan 2015 12:47 AM PST

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் 1. தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கைநடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே  "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2. குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும். 3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் ...

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

Posted: 17 Jan 2015 12:45 AM PST

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .(#1115680/17-1-2015) வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் , எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் , உலகம் எப்படி இருக்கும் ? மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .? சிறிது யோசிப்போமே ! 1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது . வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ...

ஓஷோ வின் சில வரிகள்

Posted: 17 Jan 2015 12:42 AM PST

உடலுக்கு எப்படி உணவு தேவையோ அது போல ஆன்மாவுக்கு(உயிர்க்கு ) தேவையானது அன்பு. அன்புக்கு தர்க்கம் கிடையாது, அன்புக்கு காரணம் கிடையாது, அன்புதான் வாழ்க்கை. அன்பு நிபந்தனைகளற்ற பரிசு, அது பேரம் பேசுவதல்ல. ============================================================================================== நான் ஒரு இறுக்கமான மனிதனல்ல விளையாட்டுத்தனத்திலிருந்தே உங்களுக்கு சொல்லவேண்டியதை சொல்கின்றேன். என்னுடைய செய்தி மிகவும் சாதாரணமானது. கடவுள் எனக்குள் இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடித்தேன். என்னுடைய ...

மறக்க மனம் கூடுதில்லையே !

Posted: 17 Jan 2015 12:33 AM PST

மெரினா கடற்கரை. நானும் என் மனைவியும் கடற்கரையில் காத்திருக்கிறோம். கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன. இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ. தூரத்தில் மிகப்பெரிய கார் ஒன்று பார்க் செய்யப்பட்டு, ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் இறங்கி ...

இதோ தென்கச்சியார் பேசுகிறார்..

Posted: 16 Jan 2015 11:57 PM PST

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க. ஆனா கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா? நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார். ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க.... வழியில ...

ஈகரை உறவுகளின் WhatsApp

Posted: 16 Jan 2015 11:38 PM PST

நாம் அனைவரும்  வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின்  வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132  [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்!  [/noguest] அல்லது Code:[code] ...

சிரிக்கிற வழியைப் பாருங்கள்...!

Posted: 16 Jan 2015 11:32 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம்(334)

Posted: 16 Jan 2015 11:30 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஸ்ரீகிருஷ்ணா சீரியலில் இக்காட்சியின் க்ளிப்..

Posted: 16 Jan 2015 10:52 PM PST

பக்திக்கு: ஸ்ரீகிருஷ்ணா சீரியலில் இக்காட்சியின் க்ளிப். ராமானந்த் சாகரின் கிருஷ்ணாவில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமாக குழல் வாசிக்கும் ஒருவனிடம் குழந்தை கண்ணன் வருகிறான். குழந்தைக்கு தானும் அதே மாதிரி வாசிக்க வேண்டும் என்ற விருப்பம், அதை அது வெளியிட, அன்புடன் குழந்தையை பார்த்து அந்த மனிதன் குழல் வாசிக்க தேவையான நீண்ட பயிற்சிகளை குறிப்பிட, குழந்தைக்கு பொறுமை இல்லை. பிறகு குழலூதுபவன் சொன்னது போல, தன் குழலை கையில் ஏந்தி பிரார்த்திக்கிறது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™