Tamil News | Online Tamil News |
- சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு
- ஐரோப்பிய தீர்மானத்தை அங்கீகரிக்க இந்தியா மறுப்பு: கேரள மீனவர் கொலை வழக்கு விவகாரம்
- மத்திய அரசு முடிவால் இப்போதைக்கு ஜல்லிக்கட்டு இல்லை
- தி.மு.க.,வை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை
- இந்தியாவில் தான் பொது விடுமுறை அதிகம்
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; உற்பத்தி வரி உயர்வு மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம்
- மூளைக்காய்ச்சல் நோயால் 6,500 குழந்தைகள் இறப்பு; தமிழகத்திலும் வேகமாக பரவுகிறது
- பிரபஞ்சத்தின் வேதம் திருக்குறள்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
- தணிக்கை துறையில் மத்திய அரசின் தலையீடும், நெருக்கடியும் உள்ளதாக தணிக்கை வாரிய தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
- ஸ்ரீரங்கத்தை கைப்பற்ற 29 மந்திரிகள், எம்.பி.,க்கள் படைகுவிப்பு: வேட்பாளர் வளர்மதி என அறிவித்து ஜெயலலிதா அதிரடி
- சோதனைகள் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது: எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் தொண்டர்களுக்கு ஜெ., கடிதம்
| சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Posted: புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து, 'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில் வெளியாகி உள்ளது.ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர், 2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகாரபூர்வமற்ற புத்தகத்தை எழுதினார். ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது. இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ஏற்பட்ட காதல், திருமணம், அரசியல் குறித்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், ... |
| ஐரோப்பிய தீர்மானத்தை அங்கீகரிக்க இந்தியா மறுப்பு: கேரள மீனவர் கொலை வழக்கு விவகாரம் Posted: பிரசல்ஸ்/புதுடில்லி: கேரள மீனவர் கொலை வழக்கு தொடர்பாக ஐரோப்பிய பார்லி மென்ட் நிறைவேற்றிய தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது என, இந்தியா மறுத்துள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, பிப்ரவரி 15ம் தேதி, இத்தாலிய கப்பல் மாலுமிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டதில், கேரள மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில், மசிமிலியனோ லட்டோர் மற்றும் சால்வடோர் கிரோன் என்ற இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை யின் போது ஆஜராவதாகக் கூறியதை அடுத்து, இவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், ஸ்ட்ராஸ்பெர்கில் உள்ள ஐரோப்பிய பார்லிமென்ட், ... |
| மத்திய அரசு முடிவால் இப்போதைக்கு ஜல்லிக்கட்டு இல்லை Posted: 'விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில் இருந்து, காளையை நீக்கும் முடிவை, உச்ச நீதிமன்ற ஆலோசனை பெறாமல் எடுக்க முடியாது' என, மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பதால், இப்போதைக்கு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில், காளையை சேர்த்து, மத்திய அரசு, 2011ல் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டை நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.'ஜல்லிக்கட்டுக்கு, விதிக்கப்பட்டுள்ள தடையை, மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பொதுநல சங்கம், ... |
| தி.மு.க.,வை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை Posted: சென்னை: 'தி.மு.க., வேட்பாளர் ஆனந்திற்கு, அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான, அவரது அறிக்கை:அ.தி.மு.க. அரசு, தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டு, ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில், எவ்வித கொள்கை முடிவுகளோ, தொலை நோக்கு திட்டங்களோ வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை நிர்வாகம் நடைபெறுகின்ற அளவுக்கு, குளறுபடிகள் ஏற்பட்டு, தமிழகத்தின் உரிமைகள், மக்களின் அடிப்படைத் தேவைகள் ... |
| இந்தியாவில் தான் பொது விடுமுறை அதிகம் Posted: மும்பை: உலகளவில், இந்தியாவில் தான், ஓர் ஆண்டில் பொது விடுமுறை நாட்கள் அதிகம் என, ஆன் - லைன் பயண வலைதளம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்து உள்ளது.இந்தியாவில், ஆண்டுக்கு, 21 நாட்கள் பொது விடுமுறை விடப்படுகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், பொது விடுமுறையை பொறுத்தவரை, அடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ் (18), சீனா (17), ஹாங்காங் (17), தாய்லாந்து (16), மலேசியா (15), வியட்னாம் (15), இந்தோனேஷியா (14), தைவான் (13), தென் கொரியா (13), சிங்கப்பூர் (11), ஆஸ்திரேலியா (10), நியூசிலாந்து (10) ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பாவில், சுவீடன் மற்றும் லிதுவேனியா நாடுகள், ஆண்டுக்கு, தலா, 15 நாட்கள் பொது விடுமுறை அளிக்கின்றன. ... |
| பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; உற்பத்தி வரி உயர்வு மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் Posted: புதுடில்லி: அனைவரும் எதிர்பார்த்தபடி, பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2.42 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு, 2.25 ரூபாயும் குறைக்கப் பட்டு உள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நள்ளிரவு அமல்: இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில், 61.33 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 58.91 ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த 44 மாதங்களுக்கு பின், இந்த அளவிற்கு பெட்ரோல் விலை சரிவடைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை, 50.51லிருந்து, 48.26 ரூபாயாகக் குறைந்துள்ளது. ... |
| மூளைக்காய்ச்சல் நோயால் 6,500 குழந்தைகள் இறப்பு; தமிழகத்திலும் வேகமாக பரவுகிறது Posted: புதுடில்லி: இந்தியாவில், மூளைக் காய்ச்சல் நோயால், கடந்த ஐந்து ஆண்டுகளில், 6,500 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேகமாக பரவுகிறது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மேற்கண்ட விவரத்தை அரசு தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம், பீகார், அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தான், மூளைக்காய்ச்சல் நோயால் ஏற்படும் இறப்பு அதிகம் என்று இருந்த நிலை மாறி வருகிறது. தற்போது, தமிழ்நாடு உட்பட, 20க்கு மேற்பட்ட மாநிலங்களில், மூளைக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தீவிர மூளை அழற்சி நோய் ... |
| பிரபஞ்சத்தின் வேதம் திருக்குறள்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் Posted: புதுடில்லி: திருக்குறளின் குஜராத்தி மொழி பெயர்ப்பை நேற்று வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் புகழாரம் சூட்டினார்.திருவள்ளுவர் தினத்தையொட்டி, டில்லியில் நேற்று நடந்த விழாவில், குஜராத்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: திருக்குறள், சாதாரணமானது அல்ல; இந்த பிரபஞ்சத்துக்கான வேதம். எளிமையான வரிகளில் ஏராளமான அர்த்தங்களை கொண்டது. மனிதநேயத்தை வலியுறுத்தும் முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எப்போதோ ... |
| Posted: புதுடில்லி: மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள லீலா சாம்சன், தணிக்கை துறையில், மத்திய அரசின் தலையீடும், நெருக்கடியும் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதை மறுத்துள்ள மத்திய அரசு, குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நடவடிக்கை எடுக்க தயார் என, அறிவித்துள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன், தன், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, நேற்று முன்தினம் இரவு, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தணிக்கை துறையில், மத்திய அரசு ... |
| Posted: சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி என, அறிவித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, தொகுதியை மீண்டும் கைப்பற்ற, 29 அமைச்சர்கள், எட்டு எம்.பி.,க்கள் உட்பட, 50 பேரை, தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்று, ஜாமினில் வெளி வந்த பிறகு, ஜெயலலிதா அமைதியாக உள்ளார். போயஸ் கார்டனை விட்டு, எங்கும் செல்வதில்லை; பொது நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்வதில்லை. இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, அடுத்த மாதம் 13ம் ... |
| சோதனைகள் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது: எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் தொண்டர்களுக்கு ஜெ., கடிதம் Posted: சென்னை: 'எம்.ஜி.ஆரின் புகழுக்கு, புகழ் சேர்க்கும் வகையில், உங்களுடைய அரசியல் பணிகள் அமைய வேண்டும்' என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்று, ஜாமினில் வெளி வந்த பிறகு, முதன் முறையாக, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, கட்சி தொண்டர்களுக்கு, நேற்று ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:எம்.ஜி.ஆரின் 98வது பிறந்த நாளையொட்டி, இந்த கடிதம் வாயிலாக, உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில், மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.தமிழ் சமூகத்தை வாழ்விக்க வந்த வள்ளல் எம்.ஜி.ஆர்., தூய்மையான உள்ளம், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 17,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |