Tamil News | Online Tamil News |
- இந்தியாவில் 3 நாள் தங்குகிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா: மோடியுடன் பேசிய பின் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
- அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி
- டி.ஆர்.டி.ஓ., தலைவர் திடீர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்கள் அம்பலம்
- பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும்? கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி
- துப்பாக்கி உரிமம் பெறுவது இனி சுலபம்
- பாதுகாப்புக்காக ஓட்டல்களை மாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
- இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி
- தமிழில் தான் பேச வேண்டும்: தமிழர்களுக்கு தருண் விஜய் வேண்டுகோள்
- பொங்கல் திருநாளுக்கு ஜெ., வாழ்த்து
| Posted: புதுடில்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, இந்தியா வரும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மூன்று நாட்கள் டில்லியில் தங்குகிறார். அவருடன், மனைவி மிச்சேல் ஒபாமா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் இந்தியா வருகின்றனர். பிரதமர் மோடியுடன், அரசு முறை பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா - அமெரிக்கா இடையே, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.அமெரிக்க அதிபர் ஒருவர், இந்திய குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது, இதுவே முதன்முறை. தலைநகர் டில்லியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ... |
| அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி Posted: ராம்பூர்: கடந்த, 2009ல், லோக்சபா தேர்தலின்போது, தடை உத்தரவை மீறிய வழக்கில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, உ.பி., கோர்ட் உத்தரவிட்டது. தண்டனை காலம், ஓராண்டு என்பதால், நக்வியின் எம்.பி., பதவி பறிபோகாது.பா.ஜ., துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி. ராஜ்யசபா எம்.பி.,யான இவர், தற்போது, மத்திய சிறுபான்மை விவகார துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். கடந்த, 2009 லோக்சபா தேர்தலின்போது, உ.பி., மாநிலம் ராம்பூரில், இரு தரப்பினருக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது.இதையடுத்து, அந்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது, ... |
| டி.ஆர்.டி.ஓ., தலைவர் திடீர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்கள் அம்பலம் Posted: புதுடில்லி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான - டி.ஆர்.டி.ஓ.,வின் செயலர் மற்றும் இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்த அவினாஷ் சந்தர், திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.டி.ஆர்.டி.ஓ.,வின் செயலர் மற்றும் இயக்குனர் ஜெனரலாகவும், ராணுவ அமைச்சருக்கான ஆலோசகராகவும் பணியாற்றிய அவினாஷ் சந்தருக்கு, 64 வயது ஆனதையொட்டி, கடந்த நவ., 30ம் தேதி ஓய்வு பெற்றார். ஆனாலும், அவர் மேலும், 18 மாதங்களுக்கு பதவியில் நீடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம், அடுத்த ஆண்டு மே மாதம் தான் முடிகிறது. அக்னி ரக ஏவுகணைகளை ... |
| பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும்? கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி Posted: புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு பீப்பாய், 45 டாலராக (2,700 ரூபாய்) வீழ்ச்சி அடைந்துள்ளதால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக, இன்றோ அல்லது நாளையோ, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம்.கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 115 டாலராக (6,900 ரூபாய்) இருந்தது. இது, படிப்படியாக குறைந்து, தற்போது, 45 டாலராக (2,700 ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது. இது, ஆறு ஆண்டுகளில் இல்லாத விலை குறைவாகும். இதனால், பொதுத் துறையை சேர்ந்த ஐ.ஓ.சி., உட்பட, மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, ... |
| துப்பாக்கி உரிமம் பெறுவது இனி சுலபம் Posted: புதுடில்லி: துப்பாக்கி உரிமம் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 55 ஆண்டுகள் பழமையான, ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஒரு டஜன் ஆவணங்கள்: தற்போது, பாதுகாப்பு கருதி ஒருவர் துப்பாக்கி வைத்து கொள்ள விண்ணப்பிப்பதற்கு, ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுத்து, உரிமம் வழங்க காலக்கெடு எதுவும் இல்லை என்பதால், மாதக்கணக்கில், அவை கோப்புகளில் தேங்கி கிடக்கின்றன. ... |
| பாதுகாப்புக்காக ஓட்டல்களை மாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Posted: ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி, மூன்று ஓட்டல்களுக்கு மாறி, மாறி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுதொடர்பாக, குஜராத் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரிக்காக, குஜராத் போலீசாரும், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், ஆமதாபாத்தில் மூன்று ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். காலை உணவை ஒரு ஓட்டலிலும், மதிய உணவை மற்றொரு ஓட்டலிலும் சாப்பிட்ட ஜான் கெரி, மூன்றாவது ஓட்டலில் 'புக்கிங்' ... |
| இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி Posted: மத்திய அரசு அறிவிப்பு வெளியாகதது, உச்ச நீதிமன்றத்தில் மனு விசாரணை எடுத்து கொள்ளப்படாதது போன்ற பிரச்னைகளால், இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.பரிசீலனை மனு: ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில், காளை சேர்க்கப்பட்டதால், இத்தடை ஏற்பட்டது. 'இத்தீர்ப்பை, பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன. ... |
| தமிழில் தான் பேச வேண்டும்: தமிழர்களுக்கு தருண் விஜய் வேண்டுகோள் Posted: திருவள்ளுவர் திருப்பயணம் என்ற பெயரில், திருவள்ளுவர் புகழைப் பரப்புவதற்காக, தமிழகத்தில் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார், உத்தரகண்ட் மாநில பா.ஜ., - எம்.பி., தருண் விஜய்.தமிழர்கள் ஒற்றுமை: கன்னியாகுமரியில், கடந்த வாரம் யாத்திரையை துவங்கியவர், மதுரை வழியாக நேற்று, தஞ்சாவூர் வந்தடைந்தார். அங்கு, பெரிய கோவிலை சுற்றிப் பார்த்தார்.பின், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தஞ்சை பெரிய கோவிலானது, தமிழர்களின் ஒற்றுமை பண்பாட்டை உணர்த்துகிறது. திருக்குறளை அனைத்து நாடுகளிலும் உள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்க ... |
| பொங்கல் திருநாளுக்கு ஜெ., வாழ்த்து Posted: சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற பிறகு, முக்கிய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஜெயலலிதா, தற்போது பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்து தெரிவித்திருப்பது, அ.தி.மு.க.,வினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, ஜாமினில் வெளி வந்த பிறகு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். போயஸ் கார்டனை விட்டு, எங்கும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 15,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |