Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


15 பொங்கல் ஜய வருடம் - தை காலண்டர்

Posted: 14 Jan 2015 03:38 PM PST

ஜனவரி
15
பொங்கல்
ஜய வருடம் - தை
1
2015-01-15 வியாழன் ரபியுல் அவ்வல்23
பொங்கல் (நல்ல நேரம் காலை 10.30 - 12.00)
கரிநாள்
நல்ல நேரம் : 10.30 - 11.30 ராகு : 1.30 - 3.00 குளிகை : 9.00 - 10.30
எமகண்டம் : 6.00 - 7.30 கரணன் : 12.00 - 1.30
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 1.41
நட்சத்திரம் : விசாகம் அ.கா 5.44
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களுக்கான விருது பெறுவோர் அறிவிப்பு

Posted: 14 Jan 2015 03:33 PM PST

தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியானவர்களை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு: 1. திருவள்ளுவர் விருது : திருக்குறள் க. பாஸ்கரன் 2. தந்தை பெரியார் விருது : டாக்டர் தாவூஜீ குப்தா 3. அண்ணல் அம்பேத்கர் விருது : ஆழி.கு. மகாலிங்கம் 4. பேரறிஞர் அண்ணா விருது : பேராசிரியர் ...

தாசில்தார் மனைவி உட்பட மூவர் மீது நில அபகரிப்பு புகார்

Posted: 14 Jan 2015 03:24 PM PST

கோவை: மேட்டுப்பாளையம் தனி தாசில்தார் மனைவி உள்ளிட்ட மூவர் மீது, நில அபகரிப்பு புகார் செய்யப்பட்டுள்ளது.கோவை, பெ.நா.பாளையத்தைச் சேர்ந்த சின்னம்மாள், ௬௫, என்பவர், மாவட்ட எஸ்.பி., சுதாகரிடம் அளித்துள்ள புகார் மனு: காரமடை அருகே, காளம்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார், ஜெயபிரகாஷ் ஆகியோர், வீட்டுமனை விற்றனர். அவர்களிடமிருந்து, ௫.௫ சென்ட் இடத்தை எனது பெயருக்கு கிரையம் செய்தேன். அந்த இடத்தை பார்க்க சென்ற போது, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, தனி தாசில்தார் ரங்கராஜின் மனைவி ஜெயந்தி, எனது இடத்தில் வீடு கட்டியிருந்தது ...

ரேஷனில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு இல்லை..!

Posted: 14 Jan 2015 03:23 PM PST

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

Posted: 14 Jan 2015 03:21 PM PST

டில்லி: - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதேபோல், போகி, மகா பிஹூ, மகர சங்கராந்தி ஆகிய பண்டிகைகள் கொண்டாடும் மக்களுக்கும், தெலுங்கு, அசாமி, குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளிலும் வாழ்த்து பதிவு ...

தமிழக கடல் பகுதியில் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

Posted: 14 Jan 2015 03:18 PM PST

நாகப்பட்டினம்: நாகை அருகே, தமிழக கடல் பகுதியில் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை மாவிடில்லா பகுதியை சேர்ந்த, 19 - 51 வயதுடைய மீனவர்கள் ஆறு பேர், நேற்று முன்தினம் நாகையில் இருந்து, 100 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர், இலங்கை மீனவர்களை கைது செய்து, நேற்று காலை, காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு அழைத்து வந்து, நாகை கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், கடந்த 2ம் தேதி, இலங்கை திரிகோணமலை ...

கங்கையில் மிதந்த 100 மனித உடல்கள்

Posted: 14 Jan 2015 03:13 PM PST

லக்னோ: கங்கையில்,100 மனித உடல்கள் மிதந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, உ.பி., மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இங்குள்ள உன்னோவா மாவட்டத்தில், கங்கை நதியில், 100க்கும் மேற்பட்ட மனித உடல்கள் தண்ணீரில் மிதந்து வந்தன; சில உடல்கள் கரை ஒதுங்கின. கழுகுகளும், நாய்களும் அங்கு சுற்றித் திரிந்தன. இதையடுத்து, இந்த விவகாரம், போலீசாரின் கவனத்துக்கு வந்தது. கங்கை நதியை தூய்மைப்படுத்த, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ...

வாழ்வின் இரகசியம்

Posted: 14 Jan 2015 03:10 PM PST

- தாலாட்டு கேட்க நினைத்தால் தவிப்புகளே மிச்சம். வசந்தகாலத்தை எதிர்பார்த்தால் இலையுதிர் காலம் காரத்தை நினைத்துத் தொட்டால் அமிலத்தின் சீற்றம். தென்றலுக்காய் ஏங்கினால் புயலின் அலைக்கழிப்பு வாழ்வின் இரகசியம் இச்சூழ்நிலை தனிலே.. முயன்றவர் வென்றார். முயல்வீர் நீவிர் அதனாலே! ———————————————- --ஜான் போஸ்கோ

நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Posted: 14 Jan 2015 03:06 PM PST

பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி (பி.பி.எம்.பி.,)யில், பொதுமக்கள் நடமாடும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்களை அகற்ற உத்தரவிட கோரி, மோகன் என்பவர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்தார்.இம்மனு மீது விசாரணை நடத்திய, தலைமை நீதிபதி வஹேலா, நீதிபதி ராம்மோகன் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டால், யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.புகாரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, கிரிமினல் வழக்கு ...

படி தாண்டாதிருப்பதே பத்திரம்..!

Posted: 14 Jan 2015 03:05 PM PST

- தொடர் வண்டியில் கடைசிப் பெட்டியே பாதுகாப்பானது - அது என்னவோ இரயில்கள் எப்போதும் நேருக்கு நேராகவே மோதி விபத்துக்குள்ளாகின்றன - பேருந்தில் நடுநிலை கொள்வது நன்று - பேருந்துகள் நேருக்கு நேராகவும் மோதிக் கொள்ளும் பின்னால் வந்தும் மோதும், நின்று கொண்டிருக்கும் போதும் - இரு சக்கர வாகனம் வீதிக்கு விரோதமானது - நடப்பதே நல்லது சாக்கடை ஓரமாக குழிபார்த்து - ஆனால் எல்லாவறையும் விட படி தாண்டாதிருப்பதே பத்திரம்..! - -------------------------------------------- கவிஞர் புவியரசு ஓம் ...

எதிர்பார்க்கிறேன்

Posted: 14 Jan 2015 03:03 PM PST

எதிர்பார்ப்பகள் இல்லாத உனது நட்பை எதிர்பாக்கிறேன் - எனது குறைகளைக் கிழித்து மனதை ரணப்படுத்தாமல் குறைகளை குணப்படுத்தும் மூலிகை வார்த்தைகளை உன்னிடம் எதிர்பார்க்கிறேன் - உலகமே என்னை ஒதுக்கினாலும் நான் ஒதுங்க நிழல் கொடுக்கும் உனது அரவணைப்பை அனுதினமும் எதிர்பார்க்கிறேன் - கணத்திற்குக் கணம் கணக்குப் பார்த்தே வாழும் மனிதர்களுக்கு மத்தியில் கணக்கில்லாமல் பழுகும் உன்னை எதிர்பார்க்கிறேன் - வெல்கின்ற போது தட்டுவதற்காக அல்ல நான் வீழ்கின்ற போது தாங்குவதற்காக உனது கைகளை எதிர்பார்க்கிறேன் - எதிர்பார்ப்புகளில் ...

காலமே 'கால'மானால்...

Posted: 14 Jan 2015 02:59 PM PST

திட்டமெல்லாம் தீட்டிவிட்டு திசை நான்கும் வட்டமிட்டு சொட்டுச் சொட்டாய் வியர்வை வர சுறுசுறுப்பாய் பாடுபட்டு கட்டுக்கட்டாய் சேர்த்த பணம் கைநழுவிப் போனாலும் ஒட்டுமொத்தமாய்த் திரும்பும் வாய்ப்பு ஒரு நாளைக்கேனும் நமக்கு வாழ்க்கும் - காரிருளோ எனும்படியாய் கவனமுடன் வளர்த்த கூந்தல் வேரோடு வீழ்ந்து வெறும் தலை ஆனாலும் ஏராள மூலிகைகள் எத்தனையோ துணைபுரிய வாராதோ எனும் முடியும் வரவழைக்க முடியும் - பனிமலர் மென்மைபோல பட்டாடை தன்மைபோல தினம் மெருகுபெற்ற தேகம் தேய்ந்துபோய் இளமை போனால் அதிநுட்ப ...

என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ..

Posted: 14 Jan 2015 02:32 PM PST

கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைந்ததற்கு என் சகோதரர்களும், மகன்களும் தான் காரணம். அவர்களால் எனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கை அழிந்து விட்டது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்ணீர் விட்டு அழுது, புலம்பி வருகிறார்.. இலங்கை அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று 3வது முறையாக அதிபராக போவதாக உறுதியாக நம்பி இருந்த ராஜபக்ஷே சிறிதும் எதிர்பாராத விதமாக, பொது வேட்பாளர் சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த பலத்த அடியை தாக்க முடியாத ராஜபக்ஷே, தோல்வியை ...

மாநகராட்சி பள்ளியில்,பொங்கல் விழா

Posted: 14 Jan 2015 02:25 PM PST

சேலம்: சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவியர், பாரம்பரிய முறைப்படி, மண் பானையில், நேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், பள்ளி நிர்வாகத்தின் மூலம் கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார்

Posted: 14 Jan 2015 02:18 PM PST

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தாலும், அதற்கான அனுமதி கிடைக்காததால் ஜல்லிக்கட்டு வீரர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். கோயில் விழாக்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கோர்ட் விதித்துள்ள தடையினால், ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற பல ஊர்களில் இந்த விளையாட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக சிறப்பு அனுமதி பெறப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதித்தால் ...

இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி

Posted: 14 Jan 2015 02:12 PM PST

மத்திய அரசு அறிவிப்பு வெளியாகதது, உச்ச நீதிமன்றத்தில் மனு விசாரணை எடுத்து கொள்ளப்படாதது போன்ற பிரச்னைகளால், இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பரிசீலனை மனு: ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில், காளை சேர்க்கப்பட்டதால், இத்தடை ஏற்பட்டது. 'இத்தீர்ப்பை, பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை, ...

சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்

Posted: 14 Jan 2015 02:08 PM PST

ஆத்தூர் : பத்தாம் வகுப்பு படித்து விட்டு, சேலம் மாவட்டத்தில் மருத்துவம் பார்த்த, போலி டாக்டர்கள்,9 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், தலைவாசல், ஓமலூர் பகுதிகளில், போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்களிடம், உதவியாளராக பணிபுரிந்த நபர்களும், சித்தா, ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் மெடிக்கல் வைத்தும், "போலி' டாக்டர்கள், பொதுமக்களுக்கு, ஊசி, மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக, புகார் எழுந்தது.மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், "போலி' டாக்டர்களை ...

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சும்

Posted: 14 Jan 2015 02:05 PM PST

வாஷிங்டன்: வரும், 2016-17ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியில், இந்தியா, சீனாவை மிஞ்சும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனரும், மூத்த துணை தலைவருமான கவுசிக் பாசு கூறியதாவது:மத்தியில் புதிய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, குறைவான வட்டி விகிதம் போன்றவற்றால், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி காணும். இதன் மூலம், 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தலா, ஏழு சதவீதமாக இருக்கும். ...

108 ஆம்புலன்சிற்கு 26 லட்சம் தவறான அழைப்புகள்

Posted: 14 Jan 2015 02:02 PM PST

சென்னை: மக்களின் உயிர் காக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள 108 என்ற எண்ணை எவராலும் எளிதாக மறக்க முடியாது. இருப்பினும் இந்த எண்ணிற்கு தவறான அழைப்பு விடுப்பதால் ஏற்படும் சிரமமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தி்ல் இதன் சேவையை பயன்படுத்திக்கொள்வதற்காக சுமார் 43 லட்சத்து 65 ஆயிரத்து 957 அழைப்புகள் வந்துள்ளது.இதில் 26 லட்சத்து 96 ஆயிரத்து 852 அழைப்புகள் அதாவது 61.77 சதவீதம் அளவிற்கு தவறாக விடுக்கப்பட்டுள்ளது. இதுமாதிரியான தவறான அழைப்புகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: ...

108 ஆம்புலன்சிற்கு 26 லட்சம் தவறான அழைப்புகள்

Posted: 14 Jan 2015 02:01 PM PST

சென்னை: மக்களின் உயிர் காக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள 108 என்ற எண்ணை எவராலும் எளிதாக மறக்க முடியாது. இருப்பினும் இந்த எண்ணிற்கு தவறான அழைப்பு விடுப்பதால் ஏற்படும் சிரமமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தி்ல் இதன் சேவையை பயன்படுத்திக்கொள்வதற்காக சுமார் 43 லட்சத்து 65 ஆயிரத்து 957 அழைப்புகள் வந்துள்ளது.இதில் 26 லட்சத்து 96 ஆயிரத்து 852 அழைப்புகள் அதாவது 61.77 சதவீதம் அளவிற்கு தவறாக விடுக்கப்பட்டுள்ளது. இதுமாதிரியான தவறான அழைப்புகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: ...

அன்பழகன் மனுவை விசாரிக்க முடியாது:கர்நாடக ஐகோர்ட்

Posted: 14 Jan 2015 01:59 PM PST

பெங்களூரு : கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக்கோரி திமுக.,வின் க.அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி அப்துல் நசீர் மறுத்துள்ளார். பவானி சிங் ஜெயலலிதாவிற்கு சாதகமாக செயல்பட்டதாக அன்பழகன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி அப்துல் நசீர், ' ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுவை மூன்று மாத கால அவகாசத்தில் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு தரப்பு ...

சல்மானுக்கு சிறை உறுதி

Posted: 14 Jan 2015 01:56 PM PST

புதுடில்லி : மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ராஜஸ்தான் ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ராஜஸ்தான் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சல்மானுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதே வழக்கில் சூட்டிங்கிற்காக லண்டன் செல்ல வேண்டி இருப்பதால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு சல்மான் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் ...

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு

Posted: 14 Jan 2015 01:51 PM PST

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் பல, சர்வதேச எண்ணெய் சந்தைக்குள் நுழைந்திருப்பதால் போட்டியை சமாளிப்பதற்காக கச்சா எண்ணெய் விலையை ஒபெக் அமைப்பு குறைத்து ...

மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.

Posted: 14 Jan 2015 01:46 PM PST

சபரிமலை: சபரிமலையில் மகர ஜோதியை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர்.சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. இன்று காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் பகல் 12.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு உச்சபூஜை முடிந்து 1.40-க்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை ...

மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி...!

Posted: 14 Jan 2015 01:23 PM PST

நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...!! :வணக்கம்:

தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Posted: 14 Jan 2015 11:21 AM PST

இந்த கட்டுரை "தெய்வ முரசு" ஆன்மீக மாத இதழில் வெளியானது. தொலைக் காட்சியில் செய்திகள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தன. திடீரென உற்சாகத்தோடு துள்ளிக் குதிக்கும் படி ஒரு செய்தி படிக்கப்பட்டது. அது இது தான்: இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு! காலையில் ...

2046 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Posted: 14 Jan 2015 11:09 AM PST



உறவுகளுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Posted: 14 Jan 2015 10:31 AM PST

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நீண்டநாள் கழித்து திரும்பவும் உங்கள் முன் உங்கள் மாணிக்!!!!!!!!! எனது ஊரின் அருகில் இருக்கும் அற்புத தலமான பிரான்மலையின் இரகசியங்கள் சில உங்களின் பார்வைக்கு மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியடுத்த பரம்புமலை என்ற பிரான்மலை கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதியில் இயற்கை சூழலில் அமைந்த தளம் இது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தளம் இது. "மயில்புல்குதண் பெடையோடு உடனாடும் வளர்சாரல் குயிலின்னிசை ...

உலக மகா கேள்வி...!

Posted: 14 Jan 2015 10:26 AM PST

சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்

Posted: 14 Jan 2015 10:21 AM PST

எனது ஊரிலே இருக்கும் சித்தர் முத்துவடுகநாதர் ஆலயத்தின் சிறப்புகள் சில உங்களின் பார்வைக்கு சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் சித்தர் ஆலயம் சித்தர் முத்துவடுகநாதர் இல்லற நிலையில் நின்று ஆன்மீக பணிபுரிந்த இச்சித்தர் சேதுபதி சீமையின் செம்பிநாடு முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெண் வாரிசு வழி வந்த பூவலத்தேவனுக்கும் குமராயி அம்மைக்கும் 1737ல் பிறந்தவர் முத்துவடுகநாதர். பூவலத்தேவனின் திடீர் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றவர்கள் அடுத்த வாரிசான ...

'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!

Posted: 14 Jan 2015 10:12 AM PST

தமிழக அரசு துவக்கியுள்ள 'அம்மா' சிமென்ட் திட்டத்தால், வெளிமார்க்கெட்டில் சிமென்ட் விலை, மூட்டைக்கு, 100 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் குமுறுகின்றனர். தமிழகத்தில், 'அம்மா' சிமென்ட் என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனையை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சியில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் டன் 'சிமென்ட்', ஏழு தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, 470 குடோன்களில் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 14 Jan 2015 07:35 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

30000 பதிவுகள் கடந்த கிருஷ்ணாம்மா....

Posted: 14 Jan 2015 04:23 AM PST

30000 பதிவுகள் கடந்த சமையல் அரசி கிருஷ்ணாம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க... தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவுமா

உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்.!!

Posted: 14 Jan 2015 04:02 AM PST

-
உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்

-
எந்த திரைப்பட பாடலில் வரும் வரிகள்..?

பட்டாம்பூச்சியைப் போல்…

Posted: 14 Jan 2015 03:51 AM PST


-

-
இருவிரல் குவித்துப்
பிடிக்கப்போகும் கணம்
அடுத்தடுத்த பூவுக்குப்
பறந்தமரும்
பட்டாம்பூச்சியைப் போல்
போக்குக் காட்டுகிறது குழந்தை
வீட்டுக்கு வரும்
அறிமுகமில்லாதவர்
அழைக்கையில்
-
———————-
-எழிலரசு

மனம் கவலையற்று இருப்பதே இன்பம்…!

Posted: 14 Jan 2015 03:50 AM PST


-

உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்
மனம் கவலையற்று இருப்பது இரண்டாவது இன்பம்
பிறருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்..!
-
————————————

ஹைக்யு

Posted: 14 Jan 2015 03:38 AM PST

ஹைக்யு

ரேசன் கடைகாரருக்கு
குழந்தை பிறந்ததது
எடை குறைவாக !

கூண்டு கிளியின் காதலில்  
பிறந்த குஞ்சு கிளிக்கு
எப்படி வந்தன
சிறகுகள் .....

இருள் என்பதால்
யாரும் "கருவறையை"
வெறுப்பதும் இல்லை.
 நிம்மதி  என்பதால்
யாரும் "கல்லறையை"
விரும்புவதும்  இல்லை .

ஐ - விமர்சனம்

Posted: 14 Jan 2015 03:30 AM PST

தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்., இயக்கம் : ஷங்கர் நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம் எடிட்டிங் : ஆண்டனி மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... 'ஐ' தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன? கதைக்களம் 'மிஸ்டர் தமிழ்நாடு' லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் ...

தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாம்பே மசால்

Posted: 14 Jan 2015 03:20 AM PST

- என்னென்ன தேவை? பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பொடியாக நறுக்கிய தக்காளி – 1/2 கப், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 7, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன், கடலை மாவு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 1 கப், எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ...

பொங்கல் வாழ்த்துகள்

Posted: 14 Jan 2015 12:57 AM PST

பிழிந்த கரும்பின் பொங்கல் வாழ்த்துகள்
கழிவுகளில்
எறும்பின் கால்களால்
ஊர்ந்து வருகிறது
தை
பசியில் குழிந்து
எலி வலைகள் ஆகின்றன
விவசாய கண்கள்
அடி மாடுகள் சுமந்து
விரையும் சிகள் அடியில்
அதிர்கிறது
வயல்களை கிழிக்கும் சாலை
மண் பானையில் சிதறி கிடக்கும் அரிசிகள்
இப்படியாம் ஒரு ஏழை  விவசாயின்  பொங்கல்

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்து விருது

Posted: 13 Jan 2015 10:50 PM PST

லண்டன்:
-

-
இங்கிலாந்து பத்திரிகையான சென்டிரல் பேங்கிங்,
2015-ம் ஆண்டுக்கான விருதுகளில்
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு
சிறந்த கவர்னர் விருது அறிவித்துள்ளது.

இந்த விருது லண்டனில் மார்ச் மாதம் 12-ந்தேதி நடை
பெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
-
--------------------
-தினமலர்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 13 Jan 2015 08:48 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 13 Jan 2015 08:37 PM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™