Tamil News | Online Tamil News |
- ஜல்லிக்கட்டு நடத்த கடைசி நேர மல்லுக்கட்டு: சிக்கலை ஏற்படுத்தும் நிபந்தனைகள்
- கனிமொழியிடம் எடுபடாத ஸ்டாலினின் முதல்வர் வேட்பாளர் ஆசை
- அரசு அலுவலகங்களில் ஜெ., படம் இருக்கலாமா? அரசே கொள்கை முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
- பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.1,000 அபராதம்: சிகரெட் சில்லரை விற்பனைக்கும் தடை விதிக்க அரசு முடிவு
- அ.தி.மு.க.,வை முந்திய தி.மு.க., : எதிர்காலத்தில் தே.மு.தி.க., - கம்யூ., கட்சிகளை கூட்டணிக்கு இழுக்க வியூகம்
- குஜராத் மாநிலத்தை பின்பற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த மாநிலங்கள் ஆர்வம்
- நிழல் யுத்தத்தை நிறுத்த முதலடி எடுப்போம்: பாக்.,கிற்கு மனோகர் பாரிக்கர் எச்சரிக்கை
- 12 அமைச்சர்களின் 21 வெளிநாட்டு பயணங்கள் ரத்து: பிரதமர் மோடியின் அதிரடியால் அமைச்சர்கள் கலக்கம்
- ரொக்கம் எதிர்பார்த்த மக்களுக்கு தமிழக அரசு கைவிரிப்பு
- பிரதமரின் 'தூய்மை இந்தியா' இயக்கத்திற்கு பில்கேட்ஸ், அமெரிக்க நிறுவனம் ஆதரவு
- மோடியின் கண்டிப்பான பேச்சு எதிரொலி: டி.ஆர்.டி.ஓ. தலைவர் திடீர் நீக்கம்
| ஜல்லிக்கட்டு நடத்த கடைசி நேர மல்லுக்கட்டு: சிக்கலை ஏற்படுத்தும் நிபந்தனைகள் Posted: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது இன்று தெரியும். உச்ச நீதிமன்றத்தில், இதற்கான அனுமதியை பெற, தமிழக அரசு அதிகாரிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.அரசாணை:விலங்குகளை, காட்சிப்படுத்த தடை விதிக்கும் அரசாணையில், சிங்கம், புலி, கரடி, குரங்கு ஆகியவற்றோடு, காளைகளையும் சேர்த்து, மத்திய அரசு, 2011ல் ஒரு அரசாணை வெளியிட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு மே மாதம் தடை விதித்தது.நீதிமன்ற தடையை மறு ஆய்வுக்கு உட்படுத்த, தமிழக அரசு, ... |
| கனிமொழியிடம் எடுபடாத ஸ்டாலினின் முதல்வர் வேட்பாளர் ஆசை Posted: தன்னை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என, தன் ஆதரவாளர்கள் மூலம், சகோதரி கனிமொழிக்கு, ஸ்டாலின் தூது அனுப்பிய தகவல் வெளியாகி இருக்கிறது.கட்சியில், பொதுச் செயலர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த, பொருளாளர் ஸ்டாலின், அடுத்ததாக, முதல்வர் வேட்பாளர் மீது கண் பதித்திருக்கிறார்.அதற்காக, தன் ஆதரவாளர்கள் மூலம், இதற்கு எதிர்ப்பாக கட்சிக்குள் இருப்பவர்களை சமாதானப்படுத்தும், தீவிரத்தில் ஸ்டாலின் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.அந்த வகையில், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் மகளிர் அணி மாநில செயலராகவும் இருக்கும் கனிமொழியை, முதற்கட்டமாக ... |
| அரசு அலுவலகங்களில் ஜெ., படம் இருக்கலாமா? அரசே கொள்கை முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு Posted: சென்னை: அரசு அலுவலகங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றி விட்டு, தற்போதைய முதல்வரின் பெயர், புகைப்படம் மட்டுமே இடம் பெறக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.உயர் நீதிமன்ற, மதுரை கிளையில், கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த மனு:அரசு அலுவலகங்களில், ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா துரை, காமராஜர், ராஜகோபாலாச்சாரி, ஈ.வெ.ரா., அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரது உருவப்படங்கள் இடம் பெறலாம்.தமிழக அரசு அலுவலகங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் காணப்படுகிறது. ஒரு ... |
| Posted: புதுடில்லி:கடைகளில் சிகரெட்டை ஒன்றிரண்டாக விற்பதை தடை செய்யவும், 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே, புகையிலை பொருட்களை விற்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிப்பதை கட்டாயமாக்கவும், மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பார்லிமென்டில் விரைவில் சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளது. நாடு முழுவதும், பொது இடங்களில் புகை பிடிக்க, 2008 அக்டோபர், 2ம் தேதி தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே, சிகரெட்டை ... |
| Posted: எதிர்கால கூட்டணி சேர்ப்புக்கு வித்திடும் விதத்தில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, அதிரடியாக வேட்பாளர் பெயரை வெளியிட்டு உள்ளது, தி.மு.க., தலைமை. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு, ஏற்கனவே தோல்வி அடைந்த ஆனந்த் என்பவரையே, வேட்பாளராக தி.மு.க., அறிவித்து உள்ளது. இதன்மூலம், அ.தி.மு.க., - பா.ஜ., தவிர்த்து, பிற கட்சிகள் நேரடியாக களமிறங்க முடியாத அளவுக்கு, மறைமுக நெருக்கடியை, தி.மு.க., ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க.,வின் இடைத்தேர்தல் வியூகத்தால், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - காங்., - பா.ம.க., - கம்யூ., போன்ற கட்சிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற ... |
| குஜராத் மாநிலத்தை பின்பற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த மாநிலங்கள் ஆர்வம் Posted: காந்தி நகர்: குஜராத்தின் ஆமதாபாத் நகரில், மூன்று நாட்கள் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 21 ஆயிரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குஜராத் மாநிலத்தில், முதல்வர் ஆனந்தி பென் படேல் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்குள்ள ஆமதாபாத் நகரில், 'வைப்ரன்ட் குஜராத்' என்ற பெயரில், சமீபத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. ''மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் போது, 21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய, உலக நாடுகளின் தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக, 21 ஆயிரம் புரிந்துணர்வு ... |
| நிழல் யுத்தத்தை நிறுத்த முதலடி எடுப்போம்: பாக்.,கிற்கு மனோகர் பாரிக்கர் எச்சரிக்கை Posted: லக்னோ: ''பாகிஸ்தான் நிழல் யுத்தத்தை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை, இந்தியா எடுக்கும். அதோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதையும், பயங்கரவாதிகளை இந்திய பகுதிக்குள் ஊடுருவச் செய்வதையும், பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்துங்க...:இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி, இங்கு தன் பயணத்தை முடிந்ததும், பாகிஸ்தான் சென்றார். அங்கு, அவரும், பாகிஸ்தான் தேசிய ... |
| 12 அமைச்சர்களின் 21 வெளிநாட்டு பயணங்கள் ரத்து: பிரதமர் மோடியின் அதிரடியால் அமைச்சர்கள் கலக்கம் Posted: புதுடில்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், 12 மத்திய அமைச்சர்களின், 21 வெளிநாட்டு பயண திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இது, மத்திய அமைச்சர்களின் மொத்த வெளிநாட்டு பயண திட்டங்களில் நான்கில் ஒரு பங்காகும். சிக்கனம்:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014 மே, 26ம் தேதி பதவியேற்றது. அது முதல், 'அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, மோடி வலியுறுத்தி வருகிறார்.இந்நிலையில், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயண திட்டங்கள் தொடர்பாக, ... |
| ரொக்கம் எதிர்பார்த்த மக்களுக்கு தமிழக அரசு கைவிரிப்பு Posted: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், இந்த ஆண்டு, பரிசு தொகுப்பு வழங்காமல், தமிழக அரசு கைவிரித்து உள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகை, பொங்கல். இதை மக்கள் சிறப்பாக கொண்டாட, கடந்த தி.மு.க., ஆட்சியில், வெல்லம், பச்சரிசி, ஏலம், முந்திரி, பாசி பயறு அடங்கிய, பரிசு தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. ரொக்க பணம்:கடந்த 2011ல், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின், பொங்கலுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் என, மொத்தம், 160 ரூபாய் மதிப்புள்ள பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசாக, உணவுப் பொருட்கள் மட்டும் ... |
| பிரதமரின் 'தூய்மை இந்தியா' இயக்கத்திற்கு பில்கேட்ஸ், அமெரிக்க நிறுவனம் ஆதரவு Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின், 'தூய்மை இந்தியா' இயக்கத்திற்கு, உலகின் முன்னணி கோடீஸ்வரரான பில்கேட்சின் அறக்கட்டளை யும், சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்கா நிறுவனமான, யு.எஸ்.ஏ.ஐ.டி.,யும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த இயக்கம் வெற்றி பெற, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 72 கோடி ரூபாய் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளன.பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையில் உருவான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னோடி திட்டம், 'தூய்மை இந்தியா' இயக்கம். மகாத்மா காந்தி யின், 150வது பிறந்த நாளான, 2019 அக்டோபர் 2ம் தேதிக்குள், நாட்டை சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுவது என்ற ... |
| மோடியின் கண்டிப்பான பேச்சு எதிரொலி: டி.ஆர்.டி.ஓ. தலைவர் திடீர் நீக்கம் Posted: டில்லி: சோம்பேறி விஞ்ஞானிகள் என பிரதமரின் கண்டிப்பான பேச்சையடுத்து, ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி மைய தலைவர் அவினாஷ் சந்தர் பதவியை திடீரென பறித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மத்திய அரசின் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி யைத்தின் (டி.ஆர்.டி.ஓ ) தலைவர் மற்றும் செயலராகவும் பதவி வகித்து வந்தவர்அவினாஷ் சந்தர், இவர் நாட்டின் புகழ்பெற்ற அக்னி ரக ஏவுகணைகளை வடிவமைத்தவர். கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். எனினும் இவரது தொழில்நுட்ப திறைமை காரணமாக ஒப்பந்த அடிப்படையில் அதே ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 14,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |