Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பீகார் முதல்வரிடம் இரு துப்பாக்கிகள்:சொத்துகளில் முந்தும் அமைச்சர்கள்

Posted:

பாட்னா:பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியிடம், இரண்டு துப்பாக்கிகள் உள்ளன. அதேநேரத்தில், சொத்துகளை ஒப்பிடுகையில், அவரின் அமைச்சரவை சகாக்கள் முன்னணியில் உள்ளனர்.பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி உள்ளது. இந்த அரசில் முதல்வராக இருக்கும் ஜிதன்ராம் மஞ்சியும், அவரின் அமைச்சரவை சகாக்கள், 30 பேரும், மாநில அரசின் விதிமுறை களின்படி, சொத்து விவரங்களை சமர்ப்பித்துஉள்ளனர். அதில்,கூறப்பட்டுள்ளதாவது:= முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு, 66.81 லட்சம் ரூபாய். அவரிடம், ஒரு லட்சம் ரூபாய் ...

அரசின் அலட்சியத்தால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.58 கோடி அவுட்: 3 நாட்கள் பட்டபாடால் பொதுமக்களிடம் அதிருப்தியும் அதிகரிப்பு

Posted:

தமிழகத்தில், போக்குவரத்துக் கழக ஊழியர் நடத்திய திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில், சராசரியாக, மூன்று நாட்களில், 30 சதவீத பஸ்களை மட்டுமே இயக்க முடிந்தது. அரசின் அலட்சியத்தால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே நஷ்டத்தில் தள்ளாடும் போக்குவரத்துக் கழகங்களுக்கு, 58 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம், 120 பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் பட்டபாடால், அரசு மீது பொதுமக்களுக்கு அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்கக் கோரி, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கி, நேற்று ...

மத்திய திட்டக்கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு: 'நிடி ஆயோக்' என்ற பெயரில் புதிய குழு அறிவிப்பு

Posted:

புதுடில்லி: மாநில வளர்ச்சிக்கான திட்டங்களுக்காக, மத்திய அரசிடமிருந்து நிதியை கெஞ்சி பெற வேண்டிய கட்டாயத்தை, கடந்த, 65 ஆண்டுகளாக ஏற்படுத்தியிருந்த திட்டக்கமிஷன் என்ற உயரிய அமைப்பாக தன்னைத் தானே கருதிக் கொண்ட அமைப்பு தூக்கி எறியப்பட்டு, அதற்குப் பதில், 'நிடி ஆயோக்' என்ற பெயரில், புதிய அமைப்பை ஏற்படுத்தி, மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.இதற்காக கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 'வெளிப்படையான நிர்வாகம், நேர்மையான செயல்பாடு, மாநிலங்களுடன் ஒருங்கிணைந்த போக்கு போன்றவற்றின் அடிப்படையில், நாட்டின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இந்த புதிய ...

கனிமொழி கொந்தளிப்பால் தத்தளிக்கிறார் கருணாநிதி

Posted:

கட்சியில் தன்னை முழுமையாக ஓரங்கட்ட முயற்சிகள் நடப்பதாகவும், அதற்காகவே, தன்னை மாணவர் அணி செயலர் பொறுப்பில் நியமிக்க, தலைமையில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் தி.மு.க., உட்கட்சித் தேர்தல், பரபரப்போடும், விறுவிறுப்போடும் கடந்த ஓராண்டாக நடந்து முடிந்து, மாவட்ட செயலர்கள் தேர்வும், முடிவுறும் நிலையை எட்டி இருக்கிறது. அடுத்த கட்டமாக, மாநில நிர்வாகிகள் தேர்வு மட்டுமே நடக்க வேண்டி உள்ளது. ...

டார்கெட் 122: அமித் ஷாவின் அதிரடி திட்டம்

Posted:

தமிழகத்தில், 2016ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து, தமிழக பா.ஜ., தன்னை தயார்படுத்தும் பணியில், தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.கட்சியின் 42 மாவட்டங்களில், 560 மண்டலங்களைப் பிரித்து, அதில் ஒருவருக்கு ஐந்து மண்டலங்கள் என, பிரித்து கொடுக்க, தலைமை முடிவெடுத்து உள்ளது. இப்படி, 100 பேர் கொண்ட குழுவிடம், உறுப்பினர் சேர்க்கும் களப் பணி உட்பட, கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பணியும் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான துவக்க நாளாக, அடுத்த மாதம் 10ம் தேதியையும், தேர்வு செய்துள்ளனர். இப்படி ஏற்படுத்தப்படும், 100 பேர் கொண்ட குழுவினர், ...

தனியார் கம்பெனிகள் பெயரில் ரயில்கள் இயக்க முடிவு: தள்ளாடும் துறையை தாங்கி பிடிக்க வல்லுனர் குழு பரிந்துரை

Posted:

புதுடில்லி: பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களில் ரயில்களை இயக்கவும், நிறுவனங்களின் பெயர்களில், ரயில் நிலையங்களை செயல்படுத்தவும் ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில், வருவாயை பெருக்கி, தள்ளாடும் ரயில்வே நிர்வாகத்தை தூக்கி நிறுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.ரயில்வே துறை அமைச்சராக, பா.ஜ.,வை சேர்ந்த சுரேஷ் பிரபு உள்ளார். ரயில்வே துறையின் நடைமுறை செலவு, 95 சதவீதமாக அதிகரித்துள்ளதால், கிடைக்கும் வருவாய் அனைத்தையும், செலவு செய்ய வேண்டியுள்ளதால், புதிய திட்டங்களுக்கும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ...

சரியான உதை கொடுத்தும் திருந்தாத பாக்., படை: 13 நிலைகளை நோக்கி நேற்றும் தாக்குதல்

Posted:

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், 13 இந்திய நிலைகளை நோக்கி, பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். உடன், இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில், நேற்று முன்தினம், பாக்., படையினர் நடத்திய திடீர் தாக்குதலில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். உடன், இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில், பாக்., வீரர்கள் நான்கு பேர் பலியாயினர். இதையடுத்து, இந்திய படையினரிடம், சமாதானத்திற்கான வெள்ளைக் கொடியை காண்பித்து, தாக்குதலை ...

ஜெ., சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு விசாரணை; ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக குமாரசுவாமி நியமனம்

Posted:

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தினந்தோறும் விசாரணை நடத்துவதற்காக, சிறப்பு நீதிமன்றத்தை, கர்நாடக உயர் நீதிமன்றம் அமைத்து உள்ளது. நீதிபதியாக, சிக்க ராசப்பா குமாரசுவாமியை நியமித்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜாமின் கோரி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய, 4 பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்ச ...

அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு: திடீர் தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம்

Posted:

சென்னை: பல்வேறு அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காததால், நோயாளிகள் திணறுகின்றனர். விலை கட்டுப்பாட்டால், மருந்து நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளதே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெரும்பாலான டாக்டர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு, 'ஜெனெரிக்' மருந்துகளை எழுதாமல், தங்களுக்கு இணக்கமாக உள்ள, மருந்து நிறுவனங்களின், 'பிராண்டட்' வகை மருந்துகளையே பரிந்துரைக்கின்றனர். 'ஜெனெரிக்' மருந்து குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. அதோடு, உடல் நலம் சார்ந்த விஷயம் என்பதால், எந்த கேள்வியும் ...

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்? விதிகள் தளர்வுக்கு கட்டுமான துறை வரவேற்பு

Posted:

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தில், நடைமுறைக்கு ஒவ்வாத விதிகள் மட்டுமே தளர்த்தப்படுகின்றன. இதை, சில கட்சிகள் எதிர்ப்பது தேவையற்றது என, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்தும் போது, பாதிக்கப்படும் மக்களுக்கு, உரிய இழப்பீடு கிடைக்க உறுதி செய்வதாகக் கூறி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு கொண்டு வந்தது. இது தொடர்பான மசோதாவுக்கு, 2013 செப்டம்பரில், ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, இச்சட்டத்திருத்தம், 2014 ஜன., 1ம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™