Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லி சட்டசபை தேர்தல்: அமித்ஷா தலைமையில் பா.ஜனதா களம் இறங்குகிறது

Posted: 12 Jan 2015 11:17 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் அமித்ஷா தலைமையில் பா.ஜனதா களம் இறங்குகிறது. டெல்லி சட்டசபைக்கு கடந்த 2013–ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்கள் முதல்– மந்திரியாக இருந்து ராஜினாமா செய்தார்.

சாக்ஷி மகாராஜ் எம்.பி.க்கு பாஜக மேலிடம் நோட்டீசு

Posted: 12 Jan 2015 10:07 PM PST

பா.ஜ.க எம்.பி.க்கள் யாரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், அதை மீறும் வகையில் பா.ஜ.க எம்.பி. சாக்ஷி மகாராஜ் கடந்த 7–ந்தேதி மீரட் நகரில் நடந்த கூட்டத்தில் பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்.

வங்காள தேச சுப்ரீம் கோர்ட்டில் முதல் இந்து தலைமை நீதிபதி நியமனம்

Posted: 12 Jan 2015 09:46 PM PST

வங்காளதேசத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆக முஷாமெல் உசேன் (67) பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் வருகிற 16–ந் தேதியுடன் முடிகிறது. அதை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத் நியமித்துள்ளார். நீதிபதி எஸ்.கே.சின்கா இந்து மதத்தை சேர்ந்தவர்.

ரெயிலில் பயணம் செய்த ஆக்கி வீராங்கனை மாயம்: பயிற்சியாளர் மீது புகார்

Posted: 12 Jan 2015 09:22 PM PST

உத்தரப்பிரதேச மாநிலம் பீலிபிட் நகரைச் சேர்ந்த 16 வயது மாணவி கரிஷ்மா சொங்கர். ஆக்கி வீராங்கனையான இவர் தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 3–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கிப் போட்டி ராஞ்சியில் நடந்தது. இதில் கரீஷ்மாவும் சக வீராங்கனைகளுடன் கலந்து கொண்டார். போட்டி முடிந்த பின்பு ராஞ்சியில் இருந்து ரெயிலில் பரேலி புறப்பட்டார். வழியில்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: கெஜ்ரிவால் முதல்வராக கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு

Posted: 12 Jan 2015 09:09 PM PST

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்றும் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு

கண்டோன்மென்ட் தேர்தல்: மோடி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வி

Posted: 12 Jan 2015 09:08 PM PST

மத்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்டோன்மென்ட் பகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. நேற்று ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி

உத்தரப்பிரதேசத்தில் விஷச்சாராயம் குடித்த 17 பேர் பலி: 100 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 12 Jan 2015 08:57 PM PST

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் கார்டா, மலிகாபாத் பகுதியில் உள்ள கிராமங்களில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தனர். நேற்று அங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் சென்று கள்ளச்சாராயம் குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் மயங்கி விழுந்

நாளை மாலை மகர விளக்கு பூஜை: சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Posted: 12 Jan 2015 08:36 PM PST

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பூஜைகளில் ஒன்றான மகரவிளக்கு பூஜை நாளை (14–ந் தேதி) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையையொட்டி கடந்த 30–ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு பூஜைகள் நடந்து

டெல்லி சட்டசபை தேர்தல்: 35 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 12 Jan 2015 08:32 PM PST

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 7–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது. டெல்லி சட்டசபையில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க.,

இத்தாலி கடற்படை வீரரின் அப்பீல் மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

Posted: 12 Jan 2015 07:33 PM PST

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்களான லத்தோர் மற்றும் ஜிரோன் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதில் லத்தோருக்கு திடீரென பக்கவாத நோய் தாக்கியதால் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியின் பேரில், 4 மாத மருத்துவ

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு: பவானிசிங்கை மாற்றும் திட்டம் இல்லை - கர்நாடக மந்திரி தகவல்

Posted: 12 Jan 2015 07:18 PM PST

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீலாக பவானிசிங் நீடிக்க கூடாது, இது

ஆசாராம் பாபுவுக்கு எதிரான சாட்சி சுட்டுக்கொலை

Posted: 12 Jan 2015 07:14 PM PST

பிரபல சாமியார் ஆசாராம் பாபுவும், அவருடைய மகன் நாராயண் சாயும் சூரத் நகரைச் சேர்ந்த 2 சகோதரிகளை கற்பழித்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான அம்ரித் பிரஜாபதி அண்மையில் சுட்டுக்

பிரதமர் மோடிக்கு அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி பாராட்டு

Posted: 12 Jan 2015 07:10 PM PST

பிரதமர் மோடி அமல்படுத்திய குஜராத் வளர்ச்சி மாதிரியை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால், எல்லோரும் பயன் அடைவார்கள் என்று அமெரிக்க மந்திரி கூறினார். குஜராத் மாநிலம் காந்தி நகரில், 'எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 12 Jan 2015 06:45 PM PST

பார்வையற்றோருக்கான தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 'மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்த விகிதாச்சார அடிப்படையில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா 3 மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்' என்று சுப்ரீ¢ம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

சுனந்தா புஷ்கர் மரணம்: சசி தரூரிடம் விரைவில் விசாரணை

Posted: 12 Jan 2015 04:18 PM PST

முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17-ந்தேதி தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை மர்ம மரணமாக பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரித்து வந்தனர்.

அணு ஆயுத தாக்குதலை தடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்: பான் கி மூன்

Posted: 12 Jan 2015 03:04 PM PST

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் டெல்லியில் சர்வதேச உறவுகள் தொடர்பான இந்திய குழுவினரின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில் குறிப்பிட்ட சில நாடுகளின் தூதர்களும், வெளியுறவுத்துறை நிபுணர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பான் கி மூன் கூறியதாவது:-

ஆப்கானை பயன்படுத்தி தாக்குதலா? பாகிஸ்தான் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு

Posted: 12 Jan 2015 01:32 PM PST

ஆப்கானிஸ்தான் மூலமாக எங்கள் மீது தாக்குதலை முன்னெடுப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. மேலும், தீவிரவாதிகளின் பாதுகாப்பான உறைவிடமாக விளங்கும் பாகிஸ்தானின் சவால்களை மூடி மறைக்கும் முயற்சி என்றும் இதை இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் மகுடமாக வட கிழக்கு பகுதி இருக்கிறது: ராஜ்நாத் சிங்

Posted: 12 Jan 2015 11:43 AM PST

இந்தியாவின் மகுடமாக வட கிழக்கு பகுதி இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதியை தேசிய அளவில் கருத்தில் கொள்ளும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இஸ்ரோவின் புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் நியமனம்

Posted: 12 Jan 2015 10:56 AM PST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் நியமிக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த இவர் சாட்டிலைட் அப்ளிகேஷன் சென்டரின் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பிய

ஏர் இந்தியா பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை

Posted: 12 Jan 2015 08:54 AM PST

ஏர் இந்தியா விமான நிறுவனம் பயணிகளை கவரும் விதமாக சிறப்பு கட்டணச் சலுகையை இன்று தொடங்கியுள்ளது. ஜனவரி 16-ம்தேதி முதல் ஏப்ரல் 30-ம்தேதி வரையில் பயணம் செய்வதற்காக இன்று முதல் ஜனவரி 18-ம் தேதி வரை முன்பதிவு செய்யும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™