Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அடுத்தவங்கள சந்தோஷப்படுத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?

Posted: 12 Jan 2015 09:00 AM PST

hqdefault (1)

hqdefault (1)

This posting includes an audio/video/photo media file: Download Now

எலிப் பொறிகளை வைத்து இவங்க செய்ற வேலையைப் பாருங்க!

Posted: 12 Jan 2015 08:53 AM PST

hqdefault

hqdefault

This posting includes an audio/video/photo media file: Download Now

அவுஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி: மார்த்தட்டிக் கொள்ளும் கோஹ்லி

Posted: 12 Jan 2015 08:46 AM PST

kohli_century_001

kohli_century_001அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும் அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்ததாக கோஹ்லி பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. கடந்த முறை மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த முறை அவுஸ்திரேலியாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தது. இதனால் மோசமான தோல்விகள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே, இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் ஒரு சில பகுதியின் போது செய்த தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும் அவுஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க தவறவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக விளையாடியபோதிலும், இந்திய அணி நிலை தடுமாறவில்லை. 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. ஆனால் அவுஸ்திரேலியா பலமாக எதிர்த்தது. எனவே ஆட்டம் டிராவில் முடிந்தது என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தென் ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி உலக சாதனை

Posted: 12 Jan 2015 08:44 AM PST

2nd_t20_001

2nd_t20_001தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இமாலய இலக்கை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. தென் ஆப்ரிக்க அணி நிர்ணயித்த இலக்கை எட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி (236 ஓட்டங்கள்), சர்வதேச டி20 அரங்கில், அதிக ஓட்ட இலக்கை விரட்டி சிறந்த வெற்றியை பதிவு செய்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன், கடந்த 2010ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 214 ஓட்டங்களை விரட்டிய அவுஸ்திரேலிய அணி அந்த போட்டியை டிரா செய்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துவிட்டதா? இதோ விரட்டியடிக்கும் உணவுகள்

Posted: 12 Jan 2015 08:41 AM PST

detox_foods_005

detox_foods_005ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் உடலில் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள நச்சுத்தன்மையை விரட்டும் உணவுகளை கண்டறிந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் கிடைக்கும். பூண்டு பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும், அது நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களே. பூண்டில் அல்லிசின் என்ற ரசாயனம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போரிடும். நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை. எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதால், அது உங்கள் சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும். அதேப்போல் இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராக போராடும். எலுமிச்சையால் உங்கள் உடலில் அல்கலைன் தாக்கமும் ஏற்படும். இதனால் உங்கள் உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்படும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Samsung Galaxy E5 அறிமுகம்

Posted: 12 Jan 2015 08:40 AM PST

samsung_e5-e71_001

samsung_e5-e71_001சம்சுங் நிறுவனம் Samsung Galaxy E5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இம்மாதம் 23ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது. முதன் முதலில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்படுகின்ற இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x720 Pixel Resolution டைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இவை தவிர 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றுடன் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான 2 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா என்பவையும் தரப்பட்டுள்ளன. இக்கைப்பேசியின் விலையானது 270 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தீவிரவாதத்தை எதிர்ப்போம்: 40 நாட்டு தலைவர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி

Posted: 12 Jan 2015 08:36 AM PST

france_rally_005

france_rally_005பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்து சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தியுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திற்குள் கடந்த 7ம் திகதி புகுந்த 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று பாரிசில் ஒற்றுமை பேரணியில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்பேரணியில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸிஸ் ஹோலண்டே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்பாகு, பாலஸ்தீன ஜனாதிபதி மக்முத் அப்பாஸ், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பிரான்சை சேர்ந்த 15 லட்சம் பொதுமக்கள் ஒன்று கூடி தெருக்களில் பேரணியாக வந்துள்ளனர். இந்த பேரணியின் முன்புறம் வெளிநாட்டு தலைவர்கள் அணிவகுத்துள்ளனர். மேலும் பிரான்சின் மற்ற நகரங்களிலும் தீவிரவாதத்துக்கு எதிராக கண்டன பேரணி நடந்தது என்றும் நாடு முழுவதும் மொத்தம் 33 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், பேரணி சென்ற முக்கிய பகுதிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

This posting includes an audio/video/photo media file: Download Now

பர்மிங்காம் முழுமையான முஸ்லிம் நகரம்! புது கருத்தால் சர்ச்சை

Posted: 12 Jan 2015 08:34 AM PST

stephen_002

stephen_002இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரை முழுமையான முஸ்லிம் நகரம் என அமெரிக்க பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஸ்டீவன் எமர்ஸன் என்ற அமெரிக்க பாதுகாப்பு பகுப்பாய்வாளர் தீவிரவாதம் தொடர்பாக நூல்களை எழுதியுள்ளார். இவர் சமீபத்தில், லண்டன் நகரின் சில பகுதிகளில் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணியாதவர்களை முஸ்லிம் மதப் பொலிஸார் தாக்குவதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். மேலும் பர்மிங்காம் நகரை முழுமையான முஸ்லிம் நகரம் என்றும் அங்கு முஸ்லிம் அல்லாதவர்கள் அங்கு செல்ல மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து, தான் மோசமான தவற்றை இழைத்துள்ளதாக ஸ்டீவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்களால் தோற்றேன் என்று மகிந்த சொன்னது ஏன்?

Posted: 12 Jan 2015 08:29 AM PST

Rajapaksa_AFP1

Rajapaksa_AFP1செத்தும் கொடுப்பர் சிலர். இன்னும் சிலர் செத்தும் கெடுப்பர். உலகம் எல்லா விதமான மனிதர்களையும் கொண்டுள்ளது. தனியாள் வேறுபாடுகளுக்குள் இருக்கக் கூடிய குணவியல்புகள் மிகப் பெரிய வியப்புகளைத் தரவல்லன. எதுவாயினும் இந்த உலகம் இயற்கையின் நியதிக்கு உட்பட்டது. எதற்கும் ஒரு தீர்ப்பு உண்டு. அத் தீர்ப்புக்காக காத்திருப்பது கட்டாயமானது. இது காலத்தின் கட்டளை என்று கூறலாம். இயற்கை, இறைவன் வழங்கும் தீர்ப்பு என்பது எந்த மனிதர்களாலும் வெல்ல முடியாதது. அத்தகைய தீர்ப்புக்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தீர்ப்புகள் இல்லையாயின் இறைவன் இல்லை என்றாகி விடும். கடந்த 8ந் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச­ தோல்வி கண்டார். தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் போது மகிந்த கொண்டிருந்த மகிழ்வுக்கு எல்லையில்லை. தனக்கு ஈடிணை யாரும் இல்லை என்பதன் நினைப்பே அதற்குக் காரணமாக இருந்தது. கடவுள் மீதும் சோதிடத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதில் எந்தத் தவறுமில்லை. அவை தேவையானவை. அதேநேரம் நாம் செய்யும் பாவம், பழிகள் நம்மையும் நம் சுற்றத்தையும் சூழும் என்ற உண்மையையும் அறிந்திருத்தல் வேண்டும். ஊழ்வினை வந்துறுத்தும் என்ற தத்துவத்தை உணராமல், திருப்பதிக்குச் சென்று ஏழு மலையானை வழிபட்டால் மட்டும் போதுமா? என்ன? திருப்பதியான் ஆட்சி தலைவர்களுக்கான கடவுள் அன்று. அவன் சாதாரண ஏழை மக்களின் இதயங்களில் குடியிருக்கும் கருணைக்கடவுள். எனவே கடவுள் மீதான நம்பிக்கைகளுக்கு அப்பால், தர்மவாழ்வு வாழப் பழகுவது மிகவும் அவசியம் என்ற உண்மையை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந்த உலகிற்குப் போதித்து நிற்கின்றது. தோல்விகள் தான் பலருக்கு ஞானத்தைக் கொடுத்தது. எனினும் தோல்வியிலும் ஞானத்தை உணராத சூனியங்கள் இருக்கவே செய்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்ச­ தனது சொந்த இடமான அம்பாந்தோட்டைக்குச் சென்றார். தனது தோல்விக்குக் காரணம் தமிழர்களே! என்று அவர் பகிரங்கமாக கூறியிருந்தார். மகிந்தவின் தோல்வியால் கடுப்படைந்துள்ள ஆதரவாளர்களிடம்; எனது தோல்விக்குக் காரணம் தமிழர்களே! என்று கூறுவதன் மூலம், தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது சொன்னவரின் உள்நோக்கமாக இருந்ததா? என்ற சந்தேகம் ஏற்படுவது நியாயமே. பொதுவில் தேர்தல்கள் நடைபெறும் போது வெற்றியும் தோல்வியும் ஏற்கப்பட வேண்டிய முடிவுகள். தேர்தலில் தோற்றவர்கள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம் என்று கூறுவதே வழமை. அதுவே ஒரு தலைவனுக்கு அழகு. ஆனால் மகிந்த ராஜபக்­ச அப்படி எதுவும் சொல்லவில்லை. மாறாக தமிழர்கள் என்னைத் தோற்கடித்து விட்டனர் என்றே அவர் கூறியிருந்தார். அவ்வாறு கூறியிருப்பதற்குள் தமிழர்களுக்கு எதிரான குரோதத்தை சிங்களவர்களிடம் ஏற்படுத்துவது மகிந்த ராஜபக்­சவின் எண்ணமா? என்று கேள்வி எழுவதில் தவறில்லை. எதுவாயினும் தமிழர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்று மகிந்த கூறிய போதிலும் அவரின் ஆதரவாளர்கள் அதுபற்றி கோபம் கொள்ளவில்லை. இதன் அடிப்படையில், சிங்கள மக்கள் பேரினவாத நோயில் இருந்து குணம் அடைந்து வருகின்றனர் என்று உணர முடிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்!- ஜனாதிபதி

Posted: 12 Jan 2015 08:28 AM PST

maithripala_sirisena

maithripala_sirisenaஎவராவது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்களாக இருந்தால் அவர்கள் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன இன்று தெரிவித்தார். நடைபெற்று முடிந்த புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி மை்த்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், எந்தவொரு அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவராவது ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து, முரணாக செயற்பட்டால் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதிகாரமும் ஆட்சியும் நிலையானதல்ல. உலகில் மரணத்தை வென்ற மனிதன் போன்று செயற்படுவது சிறந்த பழக்கமல்ல. நாம் தேர்தலில் அளித்த வாக்குறுதியைப் போன்று அமைச்சரவையை 30ற்குள் குறைத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா சொன்னதால்அடங்கினேன்…. மகிந்த

Posted: 12 Jan 2015 08:23 AM PST

USA-MR

USA-MRஅமைதியான முறையில் தேர்தலை நடத்தும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பில் நேற்றுமாலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு வெளியே கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தான் அதிகாரப் பசி கொண்டவன் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மைத்திரி யுகம் தொடர்வதற்கு மைத்திரிபால சிறிசேனவை வாழ்த்துவதாக கூறிய மகிந்த ராஜபக்ச, தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் தமது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். அமைதியான முறையில் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையாளருக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், முன்னதாக அமைதியான முறையில் தேர்தலை நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் கோரியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் கூறினார். தோல்வி நெருங்குவதை உணர்ந்ததும் தான் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு, அலரி மாளிகையை விட்டு வெளியேற விருப்பம் வெளியிட்டதாகவும், மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐந்து நிமிடம் கூட இங்கு தங்கியிருப்பதற்குத் தாம் விரும்பவில்லை என்றும், எந்த நேரமும், இங்கு வரலாம் என்றும், நாம் அவருக்கு ஆதரவளிப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறீலங்காவுடன் புதிய சகாப்தத்தை எதிர்பார்க்கும் கனடா!

Posted: 12 Jan 2015 08:21 AM PST

Baird-and-Harper-PMO-photo-600x380

Baird-and-Harper-PMO-photo-600x380தங்களது வாக்குப்பலத்தைப் பிரயோகிப்பதற்காக எந்தவித தயக்கமுமின்றி வாக்களித்த லட்சக்கணக்கணக்கான வாக்காளர்களை கனடா பாராட்டும் அதேவேளை, இலங்கையின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைத்திரிபாலா சிறிசேன அவர்களையும் கனடா வரவேற்கிறது என, சிறீலங்காவின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையிட்டு கனடிய அரசின் சார்பில் வெளியிட்ட செய்தியிலே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயாட் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தத் தேர்தலின் போது பிரதான பாத்திரத்தை வகித்த சிறீலங்காவின் சிவில் சமூகம் மற்றும் சிவில் சமூகம்சார் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்கை கனடா மதிப்பதாகவும், அத்தோடு இலங்கையின் வாக்காளர்கள் தங்களின் அபிலாசைகளை சுதந்திரமாக வெளியிட காத்திரமான பங்குவகித்த தேர்தல் ஆணையரின் காத்திரமான பங்கை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா இலங்கையில் ஒரு பன்முக ஆட்சி இடம்பெறுவதற்கும் நேர்மையான அதிகாரப் பகிர்விற்கும் உண்மையான இனங்களிற்கிடையேயான மீளிணக்கத்திற்கு உழைப்பார் என்று நம்புவதாகவும், இலங்கையுடான வரலாற்று உறவில் ஒரு புதிய சாதப்பதை கனடா எதிர்பார்ப்பதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™