மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்: சசிதரூர்
- காளஹஸ்தி கோவிலில் மந்திரி தரிசனம் செய்ததால் 1 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
- திருவனந்தபுரம் அருகே தண்டவாள விரிசலை கண்டு பிடித்து ரெயிலை நிறுத்திய மாணவர்
- திருப்பதி கோவிலில் லட்டு டோக்கன் வாங்க நெரிசல்: பெண்கள்–குழந்தைகள் காயம்
- சசிதரூர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்
- சிறுத்தை புலிகள் நடமாட்டம்: திருப்பதிக்கு நடந்து வரும் பக்தர்கள் தனியாக வர வேண்டாம்
- ஆந்திராவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி: 30 பேர் படுகாயம்
- மகர விளக்கு பூஜைக்காக அய்யப்பன் திருவாபரணங்கள் ஊர்வலம்: 12–ந்தேதி புறப்பாடு
- பொங்கலை முன்னிட்டு கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் யாத்திரை: தருண் விஜய் தகவல்
- ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பவானிசிங்கை நீக்க க.அன்பழகன் புதிய மனு
- ஐ.என்.எஸ். தலைவராக கிரண் வதோதாரியா தேர்வு
- மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் 7 லட்சம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
- மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்
- தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
- விடுதியில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காண்காணிப்பாளர்
- மத்திய பிரதேசத்தில் இனி ரேசன் கார்டுகளில் பெண்கள்தான் தலைவர்
- வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு
- கிருஷ்ணா ஆற்றில் தொழில்நுட்ப ஆய்வு நடத்திய 3 என்ஜினீயரிங் மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி
- மோடி பாணியில் சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.
- உ.பி.யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல்
| போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்: சசிதரூர் Posted: 06 Jan 2015 10:14 PM PST சுனந்தா புஷ்கர் சாவு கொலை வழக்காக மாற்றப்பட்ட தகவல் அறிந்து சசிதரூர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்போவதாக டெல்லி போலீசார் அறிவித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வழக்கில் யாருடைய பெயரும் |
| காளஹஸ்தி கோவிலில் மந்திரி தரிசனம் செய்ததால் 1 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் Posted: 06 Jan 2015 10:12 PM PST காளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற வாயு லிங்கேஸ்வரர் எனப்படும் சிவன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதே கோவிலில் உள்ள ஞானபிரசுனாம்பிகா தாயார் சன்னதியில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதற்கிடையே அங்கு ஆந்திர மாநில வனத்துறை |
| திருவனந்தபுரம் அருகே தண்டவாள விரிசலை கண்டு பிடித்து ரெயிலை நிறுத்திய மாணவர் Posted: 06 Jan 2015 10:02 PM PST கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலுவா பகுதியில் நெல்லையைச் சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பழைய இரும்புகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களின் மகன் பரமசிவன். இவர் நெல்லையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்து வருகிறார்கள். |
| திருப்பதி கோவிலில் லட்டு டோக்கன் வாங்க நெரிசல்: பெண்கள்–குழந்தைகள் காயம் Posted: 06 Jan 2015 09:33 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு தரிசன டிக்கெட்டுடன் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு போக தனியாகவும் ஒரு பக்தருக்கு 50 ரூபாய்க்கு 2 லட்டுகளும், 100 ரூபாய்க்கு 4 |
| சசிதரூர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம் Posted: 06 Jan 2015 09:17 PM PST காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர் சசிதரூர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது, மத்திய இணை மந்திரியாகவும் பதவி வகித்தார். தற்போது இவர் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் |
| சிறுத்தை புலிகள் நடமாட்டம்: திருப்பதிக்கு நடந்து வரும் பக்தர்கள் தனியாக வர வேண்டாம் Posted: 06 Jan 2015 09:00 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் பாத யாத்திரையாக திருமலைக்கு வருகின்றனர். அதேபோல், நேற்று முன்தினம் மாலை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் |
| ஆந்திராவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி: 30 பேர் படுகாயம் Posted: 06 Jan 2015 08:59 PM PST ஆந்திர மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா அருகே அம்மாநில அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். அம்மாநிலத்தின் சுற்றுலா நகரமான பெனுகொண்டாவிலிருந்து மடகசிரா நோக்கி அப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. |
| மகர விளக்கு பூஜைக்காக அய்யப்பன் திருவாபரணங்கள் ஊர்வலம்: 12–ந்தேதி புறப்பாடு Posted: 06 Jan 2015 08:52 PM PST மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகர விளக்கு பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பம்பையில் இருந்தே பக்தர்களை வரிசையில் சன்னிதானம் நோக்கி போலீசார் அனுப்புகிறார்கள். வருகிற 11–ந்தேதி சபரி மலை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் 14–ந்தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜையின் போது சுவாமி அய்யப்பனு |
| பொங்கலை முன்னிட்டு கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் யாத்திரை: தருண் விஜய் தகவல் Posted: 06 Jan 2015 07:39 PM PST டெல்லியில் பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 11-ந்தேதி காலை திருவள்ளுவர் யாத்திரை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து தொடங்குகிறது. இந்த யாத்திரை சென்னையில் |
| ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பவானிசிங்கை நீக்க க.அன்பழகன் புதிய மனு Posted: 06 Jan 2015 07:02 PM PST சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி சி.ஆர்.குமாரசாமி |
| ஐ.என்.எஸ். தலைவராக கிரண் வதோதாரியா தேர்வு Posted: 06 Jan 2015 07:00 PM PST இந்திய பத்திரிகைகள் சங்கம் (ஐ.என்.எஸ்.) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் புதுடெல்லியில் நடந்தது. சங்கத்துக்கு 2014-15-ம் ஆண்டுக்கான தலைவராக கிரண் வதோதாரியா (சம்பாவ் மெட்ரோ) தேர்ந்து எடுக்கப்பட்டார். |
| Posted: 06 Jan 2015 03:43 PM PST பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 7 லட்சம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 5 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் மின்உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. |
| மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல் Posted: 06 Jan 2015 02:47 PM PST கொல்கத்தாவை தொடர்ந்து, மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கும் விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசி மிரட்டல் வந்து உள்ளது. மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். |
| தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது Posted: 06 Jan 2015 09:37 AM PST பெங்களூரு புறநகர் ஆனேக்கல் டவுனில் உள்ள ஒரு கோவில் அருகே மர்மநபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக ஆனேக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு சாக்கு மூட்டைகளுடன் நின்றிருந்த 5 பேர் தப்பி ஓடினார்கள். |
| விடுதியில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காண்காணிப்பாளர் Posted: 06 Jan 2015 08:24 AM PST சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு விடுதி கண்காணிப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில் அரசால் நடத்தப்படும் உண்டு உறைவிட மாதிரி பள்ளியின் விடுதியில் துளசிராம் யாலம் (வயது 38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் |
| மத்திய பிரதேசத்தில் இனி ரேசன் கார்டுகளில் பெண்கள்தான் தலைவர் Posted: 06 Jan 2015 07:41 AM PST மத்திய பிரதேசத்தில் பெண்களின் பெயர்களில் ரேசன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. ரேசன் கார்டுகளில் குடும்பத்தில் உள்ள மூத்த ஆண்மகன் பெயர்தான் பெயர்தான் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிந்தது. அவரது படம் மட்டும்தான் ரேசன் கார்டில் இருக்கும். குடும்பத்தல் ஆண்கள் இல்லாதபட்சத்தில், குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். ஆனால், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய பிரதேச அரசு ரேசன் கார்டுகளில் மாற்றம் கொண்டு வருகிறது. குடும்பத்தின் மூத்த பெண்களின் பெயரில் ரேசன் கார்டுகளை வழங்கப்படும் |
| வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு Posted: 06 Jan 2015 06:49 AM PST நாடு முழுவதும் நாளை நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக போராட்டம் நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 9 வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்த சங்கம் (யுஎப்பியு) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சுமார் 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட |
| கிருஷ்ணா ஆற்றில் தொழில்நுட்ப ஆய்வு நடத்திய 3 என்ஜினீயரிங் மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி Posted: 06 Jan 2015 06:21 AM PST ஆந்திராவில் கிருஷ்ணா ஆற்றில் தொழில்நுட்ப கணக்கெடுப்பு நடத்தச் சென்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விஜயவாடாவில் ஆர்.சித்தார்தா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அவர்களது பாடத்திட்டத்தில் ஒரு பகுதியான தொழில்நுட்ப ஆய்வுப் பணிக்காக கிருஷ்ணா நதியை தேர்வு செய்தனர். |
| மோடி பாணியில் சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ. Posted: 06 Jan 2015 05:39 AM PST பிரதமர் மோடி பாணியில் ஜார்க்கணட் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ராஜ் பலிவார் சட்டசபை வாசலில் மண்டியிட்டு வணங்கி விட்டு உள்ளே சென்ற நிகழ்வு அனைவரையும் பிரமிக்க வைத்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ரகுபர் தாஸ் முதல் மந்திரயாக பதவி ஏற்றார். இதையடுத்து, சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் |
| உ.பி.யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல் Posted: 06 Jan 2015 04:46 AM PST உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வீட்டில் தனியாக இருந்த 45 வயது பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கான்கெர் கேரா என்ற பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அவரது கணவன் வெளியில் சென்றுவிட்ட காரணத்தினால், அவர் வீட்டில் தனியாக இருந்தார். அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |