Tamil Star |
- கருணா,பிள்ளையான் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்!- யோகேஸ்வரன்
- தாயின் அன்பால் உயிர் பிழைத்த உலகின் மிகச்சிறிய குழந்தை
- கனடாவில் தேசிய நெடுஞ்சாலையில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பேருந்து. 21 பேர் காயம்
- இருமடங்காகும் பென்டிரைவ் விலை
- தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்: திரளாக இயங்கும் ரோபோக்கள்
- கூகுள் கிளாஸ்க்கு போட்டியாய் வருகிறது புதிய OTG கிளாஸ்!
- இன்று ஓவியம், நாளை பொம்மை: சுட்டிகளை அசத்தும் சைல்ட் ஒன் நிறுவனம்!
- 13ம் தேதி ஐதராபாத்தில் துவங்குகிறது விஷால்-சுசீந்திரன் இணையும் படப்பிடிப்பு!
- ஓமன் நாட்டிற்கு பறக்கும் இந்தியா-பாகிஸ்தான் படக்குழு!
- மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்
- இ-ரீடர்கள் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்
- 160 முட்டைகளை 40 நிமிடங்களில் உட்கொண்ட நபர்
- கண்ணில் தெரியும் இரு முகடுகள்
- பெஷாவரை விட அதிபயங்கர தாக்குதலை அரங்கேற்றுவோம்: மிரட்டும் தலிபான் தலைவர்
- ஏர் ஏசியா விபத்தில் திருப்பம்: கசிந்த முக்கிய ஆவணம்
- ஜெயலலிதா மனு…விசாரணையில் அரசியல் வேண்டாம்: நீதிபதி அட்வைஸ்
- விஷம் வைத்து கொல்லப்பட்ட சுனந்தா: திடுக்கிடும் தகவல்
- Garmin Vivoactive ஸ்மார்ட் கடிகாரம் விரைவில் அறிமுகம்
- மின்னல் வேக இணைய வலையமைப்பை தரும் Router
- ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம்: சம்பந்தன்
| கருணா,பிள்ளையான் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்!- யோகேஸ்வரன் Posted: 06 Jan 2015 11:29 AM PST
மைத்திபால த This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாயின் அன்பால் உயிர் பிழைத்த உலகின் மிகச்சிறிய குழந்தை Posted: 06 Jan 2015 11:24 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் தேசிய நெடுஞ்சாலையில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பேருந்து. 21 பேர் காயம் Posted: 06 Jan 2015 11:22 AM PST
கனடாவில் இன்று காலை பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக தேசிய நெடுஞ்சாலையில் ஓடியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்தில் பயணம் செய்த 21 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள Prince George, British Columbia என்ற பகுதியில் இருந்து Edmonton என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். பேருந்து தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக சென்ற பேருந்து இறுதியில் சாலையை விட்டு விலகிசென்று நின்றது. இந்த சிறிய விபத்தில் பேருந்தில் இருந்த 21 பேர் சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடையாத பயணிகள் மாற்று பேருந்து மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Jan 2015 11:19 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்: திரளாக இயங்கும் ரோபோக்கள் Posted: 06 Jan 2015 11:18 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| கூகுள் கிளாஸ்க்கு போட்டியாய் வருகிறது புதிய OTG கிளாஸ்! Posted: 06 Jan 2015 04:45 AM PST
இந்த கிளாஸ் மூலம் ஹை-டெஃபனிஷன் வீடியோக்களை காணலாம். புதிதாக வீடியோவையும் பதிவு செய்யலாம். இந்த கிளாஸ் சுருக்கமாக ஓடிஜி கிளாஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஓடிஜி கிளாஸ் Qualcomm Snapdragon 805 பிராசசரை கொண்டு இயங்கும். இதில் வைஃபை, ப்ளூடூத், சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற இணைப்பு சேவைகள் உள்ளது. அதுமட்டுமின்றி நாம் எங்கே, எதை பார்க்கிறோம் என்பதை அறிய சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது தலை அசைவுகளை 3டி படமாக காணலாம். இது சற்றே மாற்றியமைக்கப்பட்ட ஆண்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் முதல 2 மணி நேரம் வரை மட்டுமே தாங்கும். இதனை அறிமுகப்படுத்த உள்ள ஓடிஜி நிறுவனம் கூடிய விரைவில் இந்த கிளாஸ்க்கு எனப் பிரத்யேகமாக ஆப்ஸ்களை உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் வெளியிட்ட கிளாஸ் கடினமாகவும், அடிபுடிகளுக்கு தாங்கும் வகையிலும் ராணுவ பயன்பாட்டிற்கு தாங்கும் வகையிலும் இருந்தது. ஆனால் இதன் விலை 5,000 அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த கிளாஸ்க்கான காப்புரிமையை சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க உள்ளது. கூகுள் கிளாஸ்க்கு போட்டியாக அறிமுகமாகும் இந்த ஓடிஜி கிளாஸ்-ன் அதிகப்பட்ச விலை 1,000 அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. ஆனால், கூகுள் கிளாஸ்-ன் விலை 1,500 அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்று ஓவியம், நாளை பொம்மை: சுட்டிகளை அசத்தும் சைல்ட் ஒன் நிறுவனம்! Posted: 06 Jan 2015 04:44 AM PST
சாதாரண பாராட்டுக்கே இப்படி என்றால், அப்படி அவர்கள் வரைந்த ஓவியங்களை சுடச்சுடப் பொம்மைகளாக தயாரித்துக் கொடுத்தால், எப்படி இருக்கும்..? அமெரிக்காவைச் சேர்ந்த வெண்டி டிசோ (Wendy Tsao), வின் சைல்ட் ஒன் நிறுவனம் அதைத்தான் செய்து சுட்டி களை சந்தோஷக்கடலில் தள்ளி ஆழ்த்துகிறது. வெண்டிக்கு இந்த யோசனை வந்தது எப்படி?.... கொஞ்ச வருடங்களுக்கு முன் அவரது நான்கு வயது மகன், அப்போதுதான் சிறு சிறு படங்கள் வரைய ஆரம் பித்தான். ஒரு நாள், தன் படத்தைப் பார்த்து, தானே வரைய ஆரம்பித்தான். பெரிய பெரிய கண்கள், நீளமான கைகள் எனக் கிறுக்கிய ஓவியத்தை அம்மாவிடம் காண்பித்து, 'அழகா இருக்கா?' என்று கேட்டான். அதைப் பார்த்த அம்மா, அவன் வரைந்த ஓவியங்களைப் போலவே ஒரு 'மெத்து மெத்தென ஒரு பொம்மையைத் தயாரித்து அவனிடம் தந்தார். 'அடடே! இது நான்தான். என்னைப் போலவே இருக்கே' என்று வியந்தவன், அந்தப் பொம்மையை மார்போடு அணைத்தபடியே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். மகனின் சந்தோஷத்தைப் பார்த்த வெண்டிக்கு சட்டென ஒரு ஐடியா உதித்தது. சுட்டிகள் வரையும் ஓவியங் களையே பொம்மைகளாகத் தயாரிக்கும் கம்பெனியைத் தொடங்கலாமே என்று. அப்படி உருவானதுதான், இந்த 'சைல்ட்ஸ் ஒன்' நிறுவனம். இதனால், சுட்டிகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது ஒரு பக்கமிருந்தாலும், ஒரு நல்ல நிறுவனத்தையும் உருவாக்கி செம லாபம் பார்த்து வருகிறார் சாமர்த்திய அம்மா வெண்டி டிசோ. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 13ம் தேதி ஐதராபாத்தில் துவங்குகிறது விஷால்-சுசீந்திரன் இணையும் படப்பிடிப்பு! Posted: 06 Jan 2015 04:40 AM PST
இப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 15ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருப்பதால் டப்பிங், சென்சார், புரமோஷன் வேலைகளில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து தன்னை வைத்து வெற்றிப் படம் கொடுத்த 'பாண்டியநாடு' சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். இதில் அவருக்கு ஜோடியாக முதன் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜல் அகர்வால் தற்போது தனுஷுடன் 'மாரி' படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். ஜனவரி 13ம் தேதி முதல் சுசீந்திரன் இயக்கும் படத்திற்காக விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஐதராபாத்தில் துவங்குகிறது. அதேபோல், இன்னொரு புறம் இயக்குனர் சுசீந்திரனும் ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சம்க்ருதி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்து ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்பதால் அவற்றையெல்லாம் முடித்துவிட்டு ஜனவரி 13ம் தேதி முதல் விஷால் படத்தை இயக்க வருகிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓமன் நாட்டிற்கு பறக்கும் இந்தியா-பாகிஸ்தான் படக்குழு! Posted: 06 Jan 2015 04:39 AM PST
இந்தப் படத்தை என். ஆனந்த் இயக்குகிறார். இவர் யாரடி நீ மோகினி மித்ரன் ஜவஹரிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவரது தம்பி ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தீனா தேவராஜன் இசையமைக்கிறார். விஜய் ஆண்டனியின் படத்துக்கு இன்னொருவர் இசையமைப்பது இதுதான் முதல் முறை. விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேசன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். படத்தின் பெயர்தான் இந்தியா-பாகிஸ்தான், ஆனால் இது ஒரு ரொமான்டிக் காதல் கதையாம். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்டமாக ஒரு பாடல் காட்சியை படமாக்க உள்ளனர். இதற்காக படக்குழுவினர் ஓமன் நாட்டிற்கு செல்லவுள்ளனர். ஜனவரி 11ம் தேதி முதல் ஓமனில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். அனைத்து பணிகளையும் முடித்து படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர விஜய் ஆண்டனி திருடன், சைத்தான், பிச்சைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் Posted: 06 Jan 2015 04:38 AM PST
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு ரக மாதுளை பழங்களில் அதிக அளவு சக்தி உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. புளிப்பு மாதுளை வயிற்று கடுப்பை நீக்குகிறது. ரத்த வயிற்றுப்போக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய அனைத்து வகையான அல்சரையும் குணமாக்குகிறது. இதய நோய்கள், இதய பலகீனம் போன்றவை குணமாகும். ரத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது. புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாக சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2 அல்லது 5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும். மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்த நோய்களும் தீரும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு நீங்கும். உடல் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரம் போட்டு அதில் பாதாம் எண்ணெய் 15 மில்லி அளவு ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பிறகு தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடல் ஆரோக்கியம் பெறும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே பூவின் பொடியை மூன்று தினங்களுக்கு கொடுத்தால் பலன் கிடைக்கும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் போன்றவை தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும். மாதுளம் மொட்டுக்களை காய வைத்து பொடித்துக்கொண்டு சிறிதளவு ஏலம், கசகசா ஆகியவற்றை பொடித்து கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும். உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தை கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களை தலையில் வைத்து கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். மாதுளம் பூக்களுடன் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் ஆகியவற்றை சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து 30 மில்லி எடுத்துக்கொண்டு அதில் பசு வெண்ணெய் சேர்த்து கலக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜியை குணமாக்கும். மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் விலகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றை சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பம் தொடர்பான நோய்கள் குணமாகும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது. செக்ஸ் உணர்வு இல்லாதவர்களுக்கு மாதுளம்பழச்சாறு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத அருமருந்து என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனவும், ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகிறது. மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்பம் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இ-ரீடர்கள் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் Posted: 06 Jan 2015 04:35 AM PST
புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா உலக மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒருவர் படுத்து உறங்கச்செல்வதற்கு முன்னர் புத்தகங்கள் படிப்பது பலருக்கும் விருப்பமான பழக்கம். சமீபகாலமாக புத்தகங்களுக்கு பதில் மின்னொளி உமிழும் மின்படிகளில் இருக்கும் கதை, கட்டுரை அல்லது கவிதையைப் படிக்கும் பழக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இப்படி அதிகரித்துவரும் மின்படிகளின் பயன்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்தின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகள் தற்போது அதிகரித்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக, மனிதர்கள் தூங்குவதற்கு முன்னர் புத்தகம் படிப்பதற்கும் இ-ரீடர்கள் எனப்படும் மின்படிகளைப் படிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஹாவர்ட் மருத்துவ பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். மின்படிகள் படித்தால் ஆழ்ந்த நித்திரைகொள்ள முடியாது இந்த ஆய்வின் முடிவில் தூங்கச் செல்வதற்கு முன் மின்படிகளை படிப்பவர்களுக்குத் தூக்கம் வருவதற்கு நீண்டநேரம் பிடிப்பதாகவும், அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்றும் இதன் காரணமாக மறுநாள் காலை அவர்கள் களைப்புடனே கண்விழிப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. திரை ஒளிரா மின்படிகளால் பிரச்சனையில்லை மின்படிகள் என்னும்போது முதன்முதலில் வந்த அமேசானின் கிண்டில் மின்படியில் திரையில் தெரியும் எழுத்துக்களுக்கு பின்னிருந்து எந்த ஒளியும் உமிழும் வசதியிருக்கவில்லை. அந்த முதல் தலைமுறை கிண்டில் மின்படியை நீங்கள் படிக்கவேண்டுமானால், மற்ற சாதாரண காகிதப் புத்தகங்களைப்போல சூரிய வெளிச்சம் அல்லது விளக்கு வெளிச்சத்தில் தான் அவற்றைப் படிக்கமுடியும். ஆனால் தற்போதைய மின்படிகளின் திரை ஒளிரும் திரையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் போன்களின் திரையைப்போல திரைக்குப் பின்னிருந்து ஒளி உமிழும் தன்மை கொண்டவையாக இவை இருக்கின்றன. இப்படி திரையில் இருந்து ஒளி உமிழும் மின்படிகள் தான் மனிதர்களின் தூக்கத்தை பாதிப்பதாக இந்த ஆய்வுக்கு தலைமைவகித்த மூத்த ஆய்வாளர் பேராசிரியர் சார்ல்ஸ் செஸ்லர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த மாதிரியான ஒளிரும் மின்படிகளின் திரையில் இருந்து வெளிப்படும் கூடுதல் வெளிச்சமானது நேரடியாக கண்களுக்குள் செல்வதால், மனிதர்களின் உடம்பில் இருக்கும் இயற்கை கடிகார சமநிலை பாதிக்கப்படுவதாகவும், அதனால் அவரது தூக்கம் கெடுவதாகவும் சார்ல்ஸ் செஸ்லர் தெரிவித்திருக்கிறார். இதற்கு நேர்மாறாக, புத்தகங்கள் மற்றும் திரை ஒளிரா மின்படிகள் இப்படியான அதிகப்படியான ஒளி எதனையும் கண்களுக்குள் நேரடியாக செலுத்துவதில்லை என்பதால் அவற்றால் ஒருவரின் தூக்கம் கெடுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே ஆழ்ந்த அமைதியான தூக்கம் விரும்புபவர்கள், தாங்கள் தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் இரண்டுமணி நேரத்துக்கு முன்னதாகவே தங்களின் ஸ்மார்ட்போன்கள், ஒளி உமிழும் மின்படிகள் போன்ற கூடுதல் ஒளியை நேரடியாக கண்ணுக்குள் செலுத்தும் கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 160 முட்டைகளை 40 நிமிடங்களில் உட்கொண்ட நபர் Posted: 06 Jan 2015 04:32 AM PST
நத்தாரை முன்னிட்டு இந்த முட்டை உண்ணும் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இப்போட்டியில் 46 வயதான யிங்ஸோங் என்பவர் 150 காடை முட்டைகளையும் 10 கோழி முட்டைகளையும் உட்கொண்டார். 40 நிமிடங்களுக்குள் அவர் 160 அவித்த முட்டைகளையும் உட்கொண்டமை குறிப்பிடத்தக்கது. கோழி முட்டைகளைவிட காடை முட்டைகள் சிறியவை ஆகையால் ஒரே தடவையில் பல காடை முட்டைகளை வாயில் திணித்துக்கொண்டார் பான் யிங்ஸோங். "160 முட்டைகளை உட்கொண்ட போது அவற்றின் சுவையூட்டி காரணமாக நான் நிறுத்திவிட்டேன். எனது வயிறு நிரம்பியமை இதற்கு காரணமல்ல" என அவர் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே சீனாவில் பல்வேறு உணவு உண்ணும் போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்றவர். 15 நிமிடங்களில் 40 கோப்பை நூடில்ஸ் உட்கொண்டமையும் இவரின் சாதனைகளில் அடங்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Jan 2015 04:31 AM PST
வளர்ந்த நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு வெகுவாக அதிகரித்துவருவது 2014-ல்தான் உரிய கவனத்தைப் பெற்றது. தாமஸ் பிக்கட்டி எழுதிய 'இருபத்து ஓராவது நூற்றாண்டில் மூலதனம்' என்ற நூல் அந்த அதிசயத்தை நிகழ்த்தியதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. இந்த நூல் கூறும் உண்மைகளையும் சந்தேகப் பிராணிகள் வழக்கம்போல நம்ப மறுத்தாலும், வருமானமும் செல்வமும் ஒரு சிலருடைய கைகளில்தான் போய்ச் சேருகின்றன என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை இப்போதைக்கு மாறும் என்ற அறிகுறியும் ஏற்படவில்லை. வருமானமும் செல்வமும் ஒரு சிலர் கைகளுக்கே மீண்டும் போய்ச் சேருவது என்பது, நாடுகளுக்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், பிக்கட்டியின் அலசல்களை ஆராய்ந்தால், நாம் வாழும் உலகு ஒரே மாதிரியானது அல்ல என்று புரிகிறது. அதில் நல்லது, மோசமானது, சகிக்க முடியாதது என்று மூன்று வகைகள் இருக்கின்றன. சீனா, இந்தியாவில்… நியூயார்க் பட்டதாரிகள் மையத்தைச் சேர்ந்த சிட்டி யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பிராங்கோ மிலனோவிக் தயாரித்துள்ள உலக வருமான வரைபடத்தை ஆய்வு செய்துபாருங்கள். ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது முதல் – உலகின் வருமானம் உயர் பணக்காரர்களிடமே தொடர்ந்து சேர்ந்துவருகிறது. அதாவது, பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகிக்கொண்டு வருகின்றனர். அதே சமயம், சீனாவிலும் இந்தியாவிலும் நடுத்தர வர்க்கம் வருமான உயர்வால் பலனடைந்துவருகிறது. வளரும் நாடுகளில் வருமானம் உயர்வதால் ஏராளமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயிருந்து மீண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறது. துயரமான செய்தி உலக வருமானம் உயருகிறது, அது பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே சேர்கிறது என்பதுடன் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடுத்தர வர்க்கமும் பயனடைந்துவருகிறது என்பதுடன் இன்னொரு துயரச் செய்தியும் சேர்ந்தே வருகிறது. அதுதான், இவ்விரு உதாரணங்களுக்கு இடையே வாழும் 'பிற மக்களுக்கு'வருமான உயர்வு என்பது மிகமிக மந்தமாகத்தான் இருந்துவருகிறது. யார் இவர்கள்? வளர்ந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தினர்தான். மிலனோவிக்கின் புத்தகம் 2008 வரையிலான வருமான உயர்வை மட்டும்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றாலும், அதற்குப் பிறகும் வளர்ந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தவரின் ஊதியம் பெரிதாக உயர்ந்துவிடவில்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பு, முடங்கிவிட்ட ஊதியம், அரசின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இவர்களுடைய நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. வளரும் நாடுகளின் தொழிலாளர்களுடைய துயரம் என்பது அவர்களைவிட அதிக ஊதியம் பெறுவோருக்கும் குறைந்த ஊதியம் பெறுவோருக்கும் கிடைக்கும் சில சலுகைகள், உயர்வுகளைக்கூடப் பெற முடியாத இக்கட்டான சூழலாகும். வளரும் நாடுகள் தங்களுடைய ஏற்றுமதிகளைப் பெருக்கிக்கொள்ளக் கடுமையாக முயற்சிப்பதால் வளர்ந்த நாடுகளில் ஊதியத்தை மேலும் உயர்த்த முடியவில்லை. கீழே இருக்கும் பலருடைய ஊதியங்களை வெட்டித்தான் மேலே இருக்கும் நிர்வாகிகளுக்கு ஊதியங்களை உயர்த்தித் தருகின்றனர். ஊதியங்களை மட்டும் வெட்டுவதில்லை, சலுகைகளைப் பறிக்கின்றனர், தொழிற்சங்கங்களை நசுக்குகின்றனர், கிடைக்கும் மூலதனத்தை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் வேறு முதலீடுகளுக்கும் லாபங்களுக்கும் திருப்பிவிடுகின்றனர். பணக்காரர்கள் ஆதிக்கம் பெரும் பணக்காரர்களும் தொழிலதிபர்களும்தான் அரசின் கொள்கைகளுக்குத் திசைவழி காட்டுகின்றனர். தங்களுக்கு வேண்டிய சலுகைகளைத் தாராளமாகக் கேட்டுப் பெறுகின்றனர். மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுக்கின்றனர். அரசின் முக்கிய கடமை பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் என்று கூறி, அரசின் செலவைக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் சமூக நலத் திட்டங்களுக்கும் மக்களுடைய நல்வாழ்வுக்கும் அரசுகளால் அதிகம் செலவழிக்க முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதனாலும், வருவாயிலும் செல்வத்திலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. பெரும் பணக்காரர்களுக்கும் நவீன நடுத்தரவர்க்கத்துக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் பெரும்பாலான உழைக்கும் மக்க ளுக்காகப் பரிந்துபேச யார் இருக்கிறார்கள்? வழக்கமான இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களைத்தானே எதிர்பார்க்கிறீர் கள்? ஆனால், பிரான்ஸின் அதிபர் பிராங்குவா ஹொலாண் டேவும் பிரிட்டனின் எட் மிலிபேண்டும் குரல் கொடுக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவுக் குரல் மிகச் சன்னமாக ஒலிக்கிறது. அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவாக ஒபாமா செயல்பட்டிருந்தாலும் அவருடைய நிலைமையே இப்போது பரிதாபகரமாக இருக்கிறது. தலைவர்களின் பிரச்சினை உழைக்கும் வர்க்கத்துக்காகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், பணக்காரர்கள் முன்னிலைப்படுத்தும் விஷயங்களைக் கண்டிப்பதற்குத் தயங்குகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையை மையமாகக் கொண்டு அரசின் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதைக் கண்டித்தால், பொறுப்பற்றவர்கள் என்று தங்களைக் கூறிவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்க, இதுவரை தலைமை தாங்கியிராத புதுமுகங்கள் முன்வரத் தொடங்கியிருக்கிறார்கள். சாதாரண மக்களுடைய கவலை, கோபம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முற்படும் அவர்களைப் பார்த்தால் சிறிது அச்சம்கூட ஏற்படுகிறது. கிரேக்க நாட்டில் இம்மாத இறுதியில் இடதுசாரிகள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர்கள் கடன் நிவாரணத்தையும் அரசின் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதையும்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். பிற நாடுகளில் தேசியவாதிகள், குடியேறிகளுக்கு எதிரானவர்கள்தான் தலைதூக்குவார்கள் என்று தெரிகிறது. பிரான்ஸில் தேசிய முன்னணியினர், பிரிட்டனில் இண்டிபெண்டன்ஸ் கட்சியினர் போலப் பலர் காத்திருக்கின்றனர். இவையெல்லாம் வரலாற்றுரீதியிலான சில சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. பொருளாதார மந்தநிலை இத்தனை ஆண்டுகள் நீடிப்பதும் அதன் பிறகு நிதி நெருக்கடி ஏற்படுவதும் உலக அளவில் இப்போதுதான் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. அப்போதும்கூட இப்போதிருப்பதைப்போலத்தான், அரசின் வருவாயும் செலவும் சமமாக இருக்க வேண்டும், செலாவணியின் மாற்று மதிப்பு சரியக் கூடாது என்றெல்லாம் அரசுகளுக்கு ஆலோசனைகள் கூறிக்கொண்டிருந்தனர். கடைசியில் என்ன ஆனது, மக்களுடைய கைகளுக்கு அதிகாரம் சென்றது; அப்படி நேரடியாகச் செல்வது நல்லதில்லை அல்லவா? 1930-களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார வீழ்ச்சி இப்போது ஏற்பட்டுவிட்டது என்று நான் கூறவில்லை. அரசியல் தலைவர்களும் மக்களுடைய எண்ணங்களை மதிக்கிறவர்களும் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது நாம் ஏற்படுத்தியிருக்கும் உலகப் பொருளாதார முறைமை எல்லோருக்கும் ஏற்றதாக இல்லை. பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாக இருக்கிறது, வளரும் சில நாடுகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்த எல்லைக்கு அப்பாலிருக்கும் மக்களுடைய எண்ணிக்கை மிகமிக அதிகம். அவர்களுடைய நிலைமையைக் கவனித்து நாம் பரிகார நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெஷாவரை விட அதிபயங்கர தாக்குதலை அரங்கேற்றுவோம்: மிரட்டும் தலிபான் தலைவர் Posted: 06 Jan 2015 04:28 AM PST
கடந்த 16ம் திகதி பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 7 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாகி உள்ளனர். இது மட்டுமின்றி 500க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் பெஷாவர் தாக்குதலை விட அதிபயங்கரமான தாக்குதலை இனி நடத்தப்போவதாக தெஹ்ரீக் இ தலிபான் தலைவர் பஸ்லுல்லா வீடியோ ஒன்றில் மிரட்டியுள்ளார். அந்த வீடியோவில் பஸ்லுல்லா பேசியதாவது, பெஷாவர் பள்ளி மாணவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து சிறையில் உள்ள தலிபான்களை ஒப்படைத்தால் அவர்களை திருப்பி அனுப்புவோம் என்று கூறலாம் என இருந்தோம். ஆனால் ராணுவம் தாக்கியதால் தான் மாணவர்களை கொலை செய்தோம். நாங்கள் கொன்றவர்கள் ராணுவத்தாரின் பிள்ளைகள். உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் வளர்ந்து ராணுவத்தில் சேர்ந்து எங்களுக்கு எதிராக போராடுவார்கள். எனவே சிறையில் இருக்கும் எங்கள் ஆட்களை துன்புறுத்துவதை நிறுத்தாவிட்டால் பெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம் என்று அரசை எச்சரிக்கிறேன் என பேசியுள்ளார். மேலும் இது ராணுவத்திற்கும், எங்களுக்கும் இடையேயான போர் என்றும் நீங்கள் எங்கள் ஆட்களை கொன்றால் நாங்கள் உங்கள் ஆட்களை கொலை செய்வோம் எனவும் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏர் ஏசியா விபத்தில் திருப்பம்: கசிந்த முக்கிய ஆவணம் Posted: 06 Jan 2015 04:27 AM PST
கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. விமானம் கிளம்ப காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அதிகாலை 5.33 மணிக்கு எல்லாம் விமானம் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வானிலை அறிக்கை குறித்த தகவல் இந்தோனேஷியா வானிலை மைய அதிகாரி அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் இக்னேஷியஸ் ஜோனானுக்கு அனுப்பிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவண தகவல் கசிந்து தான் தற்போது உண்மை தெரிய வந்துள்ளது. எனவே ஏர்ஏசியா இந்தோனேஷியா பிரிவின் விதிமீறலால் தான் விமானம் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டை ஏர்ஏசியாவின் இந்தோனேஷிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெயலலிதா மனு…விசாரணையில் அரசியல் வேண்டாம்: நீதிபதி அட்வைஸ் Posted: 06 Jan 2015 04:26 AM PST
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த அக்டோபர் 17ம் திகதி இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும் படியும், அதற்காக தனி பெஞ்ச் நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமனம் செய்யப்பட்டார். இதன்படி தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் குமாரும் ஆஜரானார்கள். மேலும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் 3வது நபராக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் குமரேசன் தெரிவித்தார். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல் நிறுத்தி வைத்ததுடன், அன்பழகனுக்கும், சொத்துகுவிப்பு வழக்குக்கும் உள்ள தொடர்பு குறித்து குமரேசனிடம் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசனிடம் தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விஷம் வைத்து கொல்லப்பட்ட சுனந்தா: திடுக்கிடும் தகவல் Posted: 06 Jan 2015 04:24 AM PST
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி டெல்லியில் உள்ள லீலா ஹொட்டலில் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுனந்தாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு இறுதி அறிக்கையை டெல்லி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளது. அந்த அறிக்கையில், சுனந்தாவின் மரணம் இயற்கை இல்லை என்றும் அவர் இறக்க விஷம் தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி பொலிசார் சுனந்தாவின் மரணம் குறித்த வழக்கை தற்கொலையில் இருந்து கொலையாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து டெல்லி பொலிஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி கூறுகையில், சுனந்தா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாயில் விஷத்தை ஊற்றியிருக்கலாம் அல்லது ஊசியாகவும் போட்டிருக்கலாம். ஆனால் அதை தற்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது என கூறியுள்ளார். பாம்பு விஷம் வைத்து சுனந்தா கொலை! சுனந்தா மரணம் குறித்து அடுத்தடுத்து திகிலூட்டும் தகவல்கள் வெளியே வந்து கொண்டு இருக்கின்றன. சுனந்தா மரணம் குறித்து மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சுனந்தா இறப்பதற்கு முன்பு அவருக்கு எந்தவித நோயும் இல்லை. அவர் நலமாக இருந்துள்ளார். அவர் பதற்றத்திற்கான மருந்தான ஆல்பிராக்ஸை எடுத்துக் கொள்ளவில்லை. அவரது உடலில் கபைன், கோட்டினைன், எதில் ஆல்கஹால், பொலோனியம் 210, தாலியம், அசிட்டாமினோபென், நீரியம் ஓலியாண்டர், பாம்பு விஷம் ஆகியவை இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் ஊசிப் போட்ட தடயமும் உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொலோனியம் 210 என்பது ரஷ்யாவில் கிடைக்கும் கொடிய விஷம் ஆகும். பொலோனியம் கிடைக்கும் இடங்கள் ரஷ்யாவில் தான் அதிகம் உள்ளன. பொலோனியம் சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய விஷம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுனந்தாவின் மரணம் கொலையா? அதிர்ச்சியில் உறைந்த சசி தருர் தனது மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மனைவி சுனந்தா மரணம் குறித்து பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் மனைவியின் மரணத்தில் ஏதும் வில்லங்கம் இருக்காது என்று தான் நினைத்தோம். நாங்கள் விரிவான விசாரணையையே விரும்புகிறோம். இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படுவதை பார்க்க விரும்புகிறேன். பொலிசாருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை அளிக்குமாறு கேட்க உள்ளேன். மேலும் விசாரணை குறித்த விவரங்களையும் கேட்டு பெற உள்ளேன் என கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Garmin Vivoactive ஸ்மார்ட் கடிகாரம் விரைவில் அறிமுகம் Posted: 06 Jan 2015 04:23 AM PST
ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ளன. இவற்றில் Garmin எ இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Garmin Vivoactive கடிகாரமானது GPS தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன், விளையாட்டுத்துறை சார்ந்த விருத்திகளுக்கான அப்பிளிக்கேஷன்களையும் உள்ளடக்கியுள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் கிடைக்கக்கூடிய இக்கடிகாரத்தின் விலை 249.99 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதயத்துடிப்பு வீதத்தினை அறிந்து கொள்ளும் வசதியினையும் உள்ளடக்கிய கடிகாரம் 299.99 டொலர்களாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மின்னல் வேக இணைய வலையமைப்பை தரும் Router Posted: 06 Jan 2015 04:22 AM PST
5.3 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் இச்சாதனத்தில் 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Dual Core Processor உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது 310 டொலர்கள் ஆகும். இதேவேளை USB இணைப்பி மூலம் லேப்டொப் கணனிகளில் இணைத்து பயன்படுத்தக்கூடிய WiFi Router ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம்: சம்பந்தன் Posted: 06 Jan 2015 03:21 AM PST
ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலதிகமாக முடிவை அறிவித்திருக்கிறோம். அந்த முடிவில் உறுதியாக உள்ளோம் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார். போலிப் பிரசாரங்களை நம்பாது மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்!- சம்பந்தன் பா.உ. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8ம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம் எப்போதும் கிடைப்பதில்லை. எனவே, தற்போது கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் தவறாது பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது பெயர் மற்றும் உருவத்தையொத்த வேறொரு வேட்பாளரின் (கொடி சின்னத்தில்) பிரசாரங்கள் மஹிந்த அரசால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பொய்யான வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொது எதிரணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சர்வாதிகார ஆட்சியாளர்கள் தங்களது இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களைத் திசைதிருப்பி இதன்மூலம் தமது ஊழல்கள் மற்றும் திருட்டுகளை மறைக்க முயற்சி செய்கின்றனர் என்றும் பொது எதிரணியினர் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மேற்படி விடயங்களைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- நாம் கவனமாக ஆலோசித்துத்தான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். இந்த நாட்டின் நன்மைக்காகவும், யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்காகவும், அவர்களுடைய உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே மைத்திரிபாலவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, எமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது. இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி நிலவ வடக்கு, கிழக்குத் தமிழ் பேசும் மக்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மைத்திரிபாலவின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் என்றார். தென் இலங்கையில் பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு அதிகமாக காணப்படுகின்றது: மாவை தென் இலங்கையில் அரசுக்கு எதிராக பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற தீவிரம் வலுவாக இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மலையகம் போன்ற பிரதேசங்களில் கூட மஹிந்தவிற்கான எதிர்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி ஊழியர்களை தமக்கு ஆதரவாக அரசு திரட்டியுள்ளது. இராணுவத்தினர், உளவுத்துறையினர் மஹிந்தவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







































ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலதிகமாக முடிவை அறிவித்திருக்கிறோம். அந்த முடிவில் உறுதியாக உள்ளோம் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார். போலிப் பிரசாரங்களை நம்பாது மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்!- சம்பந்தன் பா.உ. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8ம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம் எப்போதும் கிடைப்பதில்லை. எனவே, தற்போது கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் தவறாது பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது பெயர் மற்றும் உருவத்தையொத்த வேறொரு வேட்பாளரின் (கொடி சின்னத்தில்) பிரசாரங்கள் மஹிந்த அரசால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பொய்யான வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொது எதிரணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சர்வாதிகார ஆட்சியாளர்கள் தங்களது இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களைத் திசைதிருப்பி இதன்மூலம் தமது ஊழல்கள் மற்றும் திருட்டுகளை மறைக்க முயற்சி செய்கின்றனர் என்றும் பொது எதிரணியினர் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மேற்படி விடயங்களைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- நாம் கவனமாக ஆலோசித்துத்தான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். இந்த நாட்டின் நன்மைக்காகவும், யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்காகவும், அவர்களுடைய உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே மைத்திரிபாலவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, எமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது. இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி நிலவ வடக்கு, கிழக்குத் தமிழ் பேசும் மக்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மைத்திரிபாலவின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் என்றார். தென் இலங்கையில் பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு அதிகமாக காணப்படுகின்றது: மாவை தென் இலங்கையில் அரசுக்கு எதிராக பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற தீவிரம் வலுவாக இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மலையகம் போன்ற பிரதேசங்களில் கூட மஹிந்தவிற்கான எதிர்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி ஊழியர்களை தமக்கு ஆதரவாக அரசு திரட்டியுள்ளது. இராணுவத்தினர், உளவுத்துறையினர் மஹிந்தவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.