மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஒபாமாவின் வருகைக்கு கண்டனம்: வயநாடு அரசு ஓட்டலில் மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதல்
- ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வக்கீல் பவானிசிங் திடீர் ராஜினாமா
- திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
- இந்தியா வந்தார் ஒபாமா: கட்டித்தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி
- ஒபாமாவுக்காக அமெரிக்காவில் இருந்து சுத்தமான காற்றை கொண்டு வர திட்டமா?
- சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு: கர்நாடக ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு
- ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷன் முடிவு
- ஒபாமா மனைவிக்காக 100 பட்டு சேலைகள் கொள்முதல்
- நேபாளத்துக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல தடை நீங்கியது
- இந்திய குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் கிளின்டன்தான்: முன்னாள் வெளியுறவுச் செயலாளர்
- உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்: அப்துல் கலாம்
- மோடி-ஒபாமா கலந்துரையாடும் சிறப்பு மன் கி பாத் ரேடியோ பேட்டி: 27-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒலிபரப்பு
- பத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறுப்பு
- 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து விடுதலையான ஐரோம் ஷர்மிளா மீண்டும் கைது
- குடியரசு தின விழாவுக்கு அழைப்பு இல்லை: டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் வேதனை
- பாகிஸ்தானில் உள்ள எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல: ராஜ்நாத் சிங் பேட்டி
- லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை ரூ.35 கோடிக்கு மராட்டிய அரசு விலைக்கு வாங்கியது
- ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகளை ஆதார் திட்டத்துடன் இணையுங்கள்: வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
- ஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்ன?: புதிய தகவல்
- ஒபாமாவின் தாஜ்மகால் பயணம் திடீர் ரத்து
| ஒபாமாவின் வருகைக்கு கண்டனம்: வயநாடு அரசு ஓட்டலில் மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதல் Posted: 24 Jan 2015 09:37 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அப்போது இந்தியா–அமெரிக்கா கூட்டு ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாகின்றன. அதில் தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்தும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. |
| ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வக்கீல் பவானிசிங் திடீர் ராஜினாமா Posted: 24 Jan 2015 09:33 PM PST அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 2005–ம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது. |
| திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை Posted: 24 Jan 2015 09:31 PM PST திருவனந்தபுரம் அருகே உள்ள காரமனை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, (வயது 47), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 12 வயதில் 6–ம் வகுப்பு படிக்கும் மகளும், 4–ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மகளும் உள்ளனர். கடந்த 2012–ம் ஆண்டு |
| இந்தியா வந்தார் ஒபாமா: கட்டித்தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி Posted: 24 Jan 2015 09:16 PM PST குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்தியாவின் 66–வது குடியரசு தின விழா வருகிற 26–ந்தேதி நாடெங்கும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் |
| ஒபாமாவுக்காக அமெரிக்காவில் இருந்து சுத்தமான காற்றை கொண்டு வர திட்டமா? Posted: 24 Jan 2015 07:14 PM PST ஒபாமாவுக்காக, அமெரிக்காவில் இருந்து சுத்தமான காற்றை கொண்டுவர அந்த நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வருகையையொட்டி, அமெரிக்க பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே டெல்லி வந்து |
| சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு: கர்நாடக ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு Posted: 24 Jan 2015 06:30 PM PST சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னை 3-வது நபராக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய |
| ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷன் முடிவு Posted: 24 Jan 2015 04:21 PM PST இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் பட்டியலை தயாரிப்பதும், அதை ஆண்டாண்டு புதுப்பிப்பதும் மிகப்பெரிய பணியாகும். இதில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய தலைவலி. |
| ஒபாமா மனைவிக்காக 100 பட்டு சேலைகள் கொள்முதல் Posted: 24 Jan 2015 01:54 PM PST அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் அவருடைய மனைவி மிச்செலும் இன்று இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையில், மிச்செலை கவருவதற்காக, மத்திய அரசு நிறுவனமான மத்திய குடிசைத்தொழில் கழகம், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 100 பனாரஸ் பட்டு சேலைகளை கொள்முதல் செய்துள்ளது. |
| நேபாளத்துக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல தடை நீங்கியது Posted: 24 Jan 2015 12:53 PM PST இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளிலும் பெரிய அளவு பண மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தினால் கள்ள நோட்டுகள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால் 100 ரூபாயைவிட அதிக மதிப்புடைய நோட்டுகளை நேபாளத்தில் தடை செய்யவேண்டும் என இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. |
| Posted: 24 Jan 2015 11:17 AM PST வரும் திங்கட்கிழமை 66-வது இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபராக ஒபாமா இருக்கலாம். ஆனால், உண்மையில் குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் கிளின்டன்தான் என முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கே.சீனிவாசன் தெரிவித்தார். |
| உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்: அப்துல் கலாம் Posted: 24 Jan 2015 09:09 AM PST ஜெய்ப்பூரில் நடந்து வரும் லிட்ரேச்சர் திருவிழாவில் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல்கலாம் இளைஞர்களுக்கு தன் வாழ்க்கையில் இருந்து அனுபவங்களை தொகுத்து வழங்கிய அறிவுரைகள் பின்வருமாறு:- |
| மோடி-ஒபாமா கலந்துரையாடும் சிறப்பு மன் கி பாத் ரேடியோ பேட்டி: 27-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒலிபரப்பு Posted: 24 Jan 2015 07:36 AM PST பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி வழியாக நாட்டு மக்களிடையே 'மன் கி பாத்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் 3–ஆம் தேதியன்று முதன் முறையாக உரையாடினார். அப்போது அவர் மக்கள் கதர் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதன் பின்னர் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாட்டு மக்களுடன் மன் கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று |
| பத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறுப்பு Posted: 24 Jan 2015 07:04 AM PST யோகாசன குரு பாபா ராம்தேவ் தனக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த பத்ம விபூஷன் விருதை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு இன்று அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். துறவு நிலையை |
| 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து விடுதலையான ஐரோம் ஷர்மிளா மீண்டும் கைது Posted: 24 Jan 2015 06:53 AM PST சிறையில் இருந்து விடுதலையாகி மீண்டும் உண்ணாவிரதப் போரட்டத்தை தொடங்கிய மணிப்பூர் மாநில இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா இன்று கைது மீண்டும் செய்யப்பட்டு, போலீஸ் காவலில் அடைக்கப்பட்டார். மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000–ம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். |
| குடியரசு தின விழாவுக்கு அழைப்பு இல்லை: டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் வேதனை Posted: 24 Jan 2015 05:54 AM PST டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க தனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கெஜ்ரிவால், மரபுகளின்படி எனக்கு அழைப்பு அனுப்பலாம் என்றால் இந்நேரம் |
| பாகிஸ்தானில் உள்ள எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல: ராஜ்நாத் சிங் பேட்டி Posted: 24 Jan 2015 04:47 AM PST உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் உள்ள எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சியில் கடந்த 6 மாத காலமாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் உள்ள |
| லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை ரூ.35 கோடிக்கு மராட்டிய அரசு விலைக்கு வாங்கியது Posted: 24 Jan 2015 03:29 AM PST லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை மராட்டிய அரசு ரூ.35 கோடி ரூபாய்க்கு இன்று விலைக்கு வாங்கியுள்ளது. அம்பேத்கரின் பிறந்தநாளான வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் இந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சிற்பியாக உலக மக்களால் |
| ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகளை ஆதார் திட்டத்துடன் இணையுங்கள்: வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் Posted: 24 Jan 2015 03:02 AM PST பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக்கணக்குகளை தொடங்கியவர்களின் எண்ணிக்கை 11.5 கோடியை எட்டியுள்ள நிலையில் இந்த கணக்குகள் அனைத்தையும் ஆதார் திட்டத்துடன் இணைக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வங்கிகளின் தலைமை அதிகாரிகளுக்கு இன்று ஒரு கடிதத்தை இ-மெயில் வாயிலாக பிரதமர் அனுப்பியுள்ளார். பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற நீங்கள் பணியாற்றிய விதம் எனக்கு மகிழ்வளிக்கும் |
| ஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்ன?: புதிய தகவல் Posted: 24 Jan 2015 01:56 AM PST இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க நாளை புது டெல்லி வந்து சேரும் ஒபாமா வரும் 27-ம் தேதி உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை தனது மனைவியுடன் பார்வையிட திட்டமிட்டிருந்தார். அவரது வருகையை முன்னிட்டு தாஜ் மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்திய பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி அமெரிக்க ரகசியப் பிரிவு போலீசாரும் |
| ஒபாமாவின் தாஜ்மகால் பயணம் திடீர் ரத்து Posted: 24 Jan 2015 12:38 AM PST இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க நாளை புது டெல்லி வந்து சேரும் ஒபாமா வரும் 27-ம் தேதி உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை தனது மனைவியுடன் பார்வையிட திட்டமிட்டிருந்தார். அவரது வருகையை முன்னிட்டு தாஜ் மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்திய பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி அமெரிக்க ரகசிய பிரிவு போலீசாரும் தாஜ் மகாலை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |