Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வாட்ஸ்-அப் மற்றும் டாக்கத்தான் சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம்

Posted: 10 Jan 2015 11:12 PM PST

புதிய ஊடகங்கள் மூலம் தகவல்களை அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்தி வருவதை அடுத்து, 'வாட்ஸ் அப்' மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக குரல் ஒலிப்பதிவு எனப்படும் 'டாக்கத்தான்' சேவையை பயன்படுத்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை திட்டமிட்டுள்ளது.

குஜராத்தில் ஒரு லட்சம் கோடி முதலீடு: வைப்ரண்ட் உச்சி மாநாட்டில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

Posted: 10 Jan 2015 11:01 PM PST

இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி குஜராத்தில் நடைபெறும் வைப்ரண்ட் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அம்மாநிலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.

சென்ட்ரல் குண்டு வெடிப்பில் கைதான தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்தவர்கள்: திடுக்கிடும் வாக்குமூலம்

Posted: 10 Jan 2015 10:44 PM PST

சென்னை சென்ட்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் கவுகாத்தி ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் பலியானார். இந்த ரெயில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை வழியாக கவுகாத்தி செல்லக் கூடியது ஆகும். இந்த குண்டு வெடிப்பு பற்றி தமிழக–கர்நாடக போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். இதில் இந்தியன் முஜாகிதீன்

14–ந்தேதி மகர விளக்கு, மகர சங்கரம பூஜை: பக்தர்கள் குவிவதால் பலத்த பாதுகாப்பு

Posted: 10 Jan 2015 10:37 PM PST

பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 14–ந்தேதி மாலை மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று பொன்னம் பலமேட்டில் ஜோதி வடிவில் சுவாமி அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவது ஐதீகம். இதையொட்டி மகர விளக்கு பூஜையில் பங்கேற்று மகர ஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மேக் இன் இந்தியாவை உருவாக்குவோம்-வறுமையின் பிடியிலிருந்து உலகை விடுவிப்போம்: உலக வங்கி தலைவர்

Posted: 10 Jan 2015 10:35 PM PST

குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் "வைப்ரண்ட் குஜராத்" மாநாட்டில் பாரத பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

டெல்லியில் மீண்டும் இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

Posted: 10 Jan 2015 09:46 PM PST

தலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் தீயில் எரிந்து நாசம்

Posted: 10 Jan 2015 09:45 PM PST

திருவனந்தபுரம் தம்பானூர் ரெயில் நிலையத்தில், திருவனந்தபுரம் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை மற்றொரு தண்டவாளத்திற்கு மாற்றும் பணி நேற்று பகல் நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அப்போது வேகமாக காற்றும் வீசியதால், தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வாலிபர் கைது

Posted: 10 Jan 2015 09:35 PM PST

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஷான் முகம்மது. இவர் மஸ்கட்டிற்கு செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது ஷான் முகம்மது கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பையில் 5 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஷான் முகம்மது கைது செய்யப்பட்டார். அவரிடம்

திருப்பதி மலை பாதையில் 2 பஸ்கள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

Posted: 10 Jan 2015 09:12 PM PST

திருப்பதியில் இருந்து திருமலைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. 2–வது மலை பாதையில் 12–வது மைல் கல் அருகே சென்ற போது முன்னாள் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல டிரைவர் முயன்றார்.

திருப்பதி கோவிலில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் குடும்பத்துடன் தரிசனம்

Posted: 10 Jan 2015 09:11 PM PST

திருப்பதி ஏழுமலையானை உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபட்டார். உத்தரபிரதேச முதல்– மந்திரி அகிலேஷ் யாதவ் தனது மனைவியும், எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் மற்றும் குழந்தையுடன் நேற்று திருமலை

சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்

Posted: 10 Jan 2015 08:05 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

பெல்காம் பெட்ரோல் கிடங்கில் 2 டேங்கர்கள் தீப்பிடித்து சேதம்

Posted: 10 Jan 2015 07:30 PM PST

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட தேசூரில் பெட்ரோல் கிடங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிடங்குக்கு மும்பை பனேவடியில் இருந்து சரக்கு (டேங்கர்) ரெயில் மூலம் பெட்ரோல் கொண்டு வரப்பட்டது. 37 டேங்கர்களில் கொண்டு வரப்பட்ட இந்த பெட்ரோலை ஊழியர்கள்

2022-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லாத இந்தியாவை உருவாக்குவது எங்கள் கனவு: பிரதமர் மோடி

Posted: 10 Jan 2015 07:12 PM PST

2022-ம் ஆண்டுக்குள், குடிசை இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்கள் கனவு என்று டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மிரட்டல் எதிரொலி: மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Posted: 10 Jan 2015 04:10 PM PST

மும்பை விமான நிலையம் 2–ம் முனையத்தில் உள்ள கழிவறை சுவற்றில் நேற்று மும்பை விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும், என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மும்பை உள்நாட்டு,

பெங்களூரில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை படம் பிடித்த பெயிண்டர் கைது

Posted: 10 Jan 2015 03:09 PM PST

பெங்களூரில் கட்டிடத்திற்கு பெயிண்டிங் அடிக்க வந்த இடத்தில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை தன் செல்போனில் படம் பிடித்த பெயிண்டரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரிடையே மோதல்: போலீசார் காயம்

Posted: 10 Jan 2015 01:19 PM PST

மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள பாருயி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மோதலை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மீது தாக்குதல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்

Posted: 10 Jan 2015 11:48 AM PST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன். இவரை சுருக்கமாக 'கே.பி.' என்று அழைப்பார்கள். குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலாளராக இருந்தவர்.

கொல்கத்தா டம் டம் ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 2 பேர் காயம்

Posted: 10 Jan 2015 09:32 AM PST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள டம் டம் ரெயில் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை ரெயில்வே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலை கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

75-வது பிறந்த நாளையொட்டி கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் கே.ஜே. யேசுதாஸ் இசை ஆராதனை

Posted: 10 Jan 2015 07:54 AM PST

பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தனது 75-வது பிறந்த நாளையொட்டி கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனுக்கு இசை ஆராதனை செய்து இன்று சிறப்பு வழிபாடு செய்தார். 1961-ம் ஆண்டு எம்.பி. சீனிவாசன் என்பவரது இசையமைப்பில் 'காலப்பாடுகள்' என்ற மலையாளப் படத்தில் தனது முதல் பாடலை பாடிய கே.ஜே. யேசுதாஸ், 'நீயும் பொம்மை-நானும் பொம்மை' என்ற மனதை வருடிச் செல்லும் சோகப் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் தனது இனிய குரலால் தடம் பதித்தார்.

ஆசாராம் பாபுவால் கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போலி பிறப்புச் சான்றிதழ் அளித்த தலைமையாசிரியர் கைது

Posted: 10 Jan 2015 07:20 AM PST

மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™