Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அல்சரால் அவதியா? கவலைய விடுங்க

Posted: 10 Jan 2015 08:34 AM PST

ulcer_004

ulcer_004இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது "அல்சர்". ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். அல்சர் என்பது என்ன? தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக 'பெப்டிக் அல்சர்' (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் 'கேஸ்ட்ரிக் அல்சர்' (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்' (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம். இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது. உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன. தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குக் காரணம், நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால் இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும், புண் உள்ள இடத்தில் அமிலம்படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவைச் சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம் புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது. இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), 'பிபிஐ' (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை, மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். 1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும். 2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும். 3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது. 4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும். 5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும். 6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும். 7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது. 8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம். 9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது. 10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும். 11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். 12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும். 13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும். 14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பயணிகளை கதிகலங்க வைத்த விமானத் தரையிறக்கம்!

Posted: 10 Jan 2015 08:29 AM PST

49a92c16775c_sf_9

49a92c16775c_sf_9

This posting includes an audio/video/photo media file: Download Now

கொடூரமான புயலில் சிக்கித்தவிக்கும் கப்பல்களின் தொகுப்பு

Posted: 10 Jan 2015 08:25 AM PST

download

download

This posting includes an audio/video/photo media file: Download Now

Fruits பிரியர்களே! எந்த பழத்தை எப்படி சாப்பிடனும்னு தெரியுமா?

Posted: 10 Jan 2015 08:22 AM PST

6-fruits-youre-eating-wrong-680x365

6-fruits-youre-eating-wrong-680x365

This posting includes an audio/video/photo media file: Download Now

வெற்றிகரமாக “டிரா” செய்த இந்தியா: ஆட்ட நாயகன் விருதை தட்டிய ஸ்மித்

Posted: 10 Jan 2015 08:16 AM PST

ind_aus4th_006

ind_aus4th_006சிட்னி டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி போராடி "டிரா" செய்துள்ளது. இந்தியா– அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 475 ஓட்டங்கள் குவித்தது. 97 ஓட்டங்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா நேற்றைய 4–வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. இதனால் அவுஸ்திரேலியா 348 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. இன்று (சனிக்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடாமல் அதே ஓட்டங்களில் 'டிக்ளேர்' செய்தது. இதனால் 90 ஓவர்களில் இந்தியாவுக்கு 349 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முரளி விஜய்யும், ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த ராகுல் 16 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 2–வது விக்கெட்டுக்கு முரளி விஜய்யுடன் ரோகித்சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியது. சிறப்பாக ஆடி வந்த ரோகித்சர்மா 39 ஓட்டங்களில் வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரது கேட்சை சுமித் அபாரமாக பிடித்தார். 90 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் இந்த ஓட்டங்களை எடுத்தார். அடுத்து அணித்தலைவர் விராட் கோஹ்லி களம் இறங்கினார். மறுமுனையில் இருந்த முரளிவிஜய் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 135 பந்தில் 50 ஓட்டங்களை (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். சிறப்பாக ஆடி வந்த முரளிவிஜய் 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கோஹ்லி 46 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 201 ஆக இருந்தது. அதை தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. 217 ஓட்டங்களில் 7 விக்கெட்டை இழந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது 11.4 ஓவர் எஞ்சி இருந்தது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த ரகானே பொறுப்புடன் விளையாடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றினார். அவருக்கு புவனேஸ்வர்குமார் உதவியாக இருந்தார். இந்திய அணி போராடி 'டிரா' செய்தது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 89.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. சிட்னி டெஸ்ட் 'டிரா' ஆனதன் மூலம் அவுஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சிட்னி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்மித் தட்டிச்சென்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாய் வார்த்தைகளால் விளாசும் கோஹ்லி! யுக்தியை தீட்டும் அவுஸ்திரேலியா

Posted: 10 Jan 2015 08:13 AM PST

viratkohli_fight_002

viratkohli_fight_002இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி, வாய் வார்த்தைகளால் அவுஸ்திரேலிய வீரர்களை விரட்டி வருகிறார். இந்திய அணி டெஸ்ட் தொடரை பறி கொடுத்தபோதிலும், தனது அபார ஆட்டத்தால் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அச்சம்கொள்ள வைத்தார் கோஹ்லி. கோஹ்லியின் அதிரடி பற்றி அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேஸவுட் கூறுகையில், அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி சிறப்பாக விளையாடினார். அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தொடர் தாக்குதலைத் தொடுத்து அவரது விக்கெட்டை சீக்கிரம் கைப்பற்றி விட்டோம் என்றால், மற்ற விக்கெட்டுகள் விரைவில் விழுந்து விடும். விராட் கோஹ்லியை சாய்க்க நாங்கள் ஏதாவது ஒரு புது யுக்தியை வகுப்போம். அவர் வேகமாக, சுதந்திரமாக ஓட்டங்கள் குவிக்க விரும்புவார். எனவே அவருக்கு தொடர்ந்து மிகச் சிறப்பாகப் பந்து வீசி ஓட்டங்கள் எடுக்க விடாமல் தடுமாற வைக்க வேண்டும். அவரை நீண்ட நேரம் ஓட்டங்கள் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்திவிட்டால், அதன் பிறகு நெருக்கடியில் தவறான ஷாட் அடித்து ஆட்டம் இழந்து விடுவார் என்று நம்புகிறோம். பொதுவான இந்திய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் உணர்ச்சி வேகத்தைக் காட்டாதவர்கள். எதிராளி எவ்வளவு சீண்டினாலும் புத்தரைப் போல அமைதி காத்து நிற்பார்கள். முன்னாள் ஜாம்பவான்களான டெண்டுல்கர், டிராவிட் போன்றோர் எதிராளிக்கு பேட் மூலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நிற்கிறார், விராட் கோஹ்லி. இந்தியாவின் வேகமான இளந்தலைமுறையை இவர் பிரதிபலிக்கிறார் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அறிமுகமானது Egreat i5 mini PC

Posted: 10 Jan 2015 08:06 AM PST

egrate_002

egrate_002இந்த வருடத்திற்கான CES நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் புதிய இலத்திரனியல் சாதனங்கள் பல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது Egreat i5 mini PC எனும் சிறிய அளவிலான கணனியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கணனியானது Intel Atom Z3735F Bay Trail Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 32GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ள இக்கணனியில் விண்டோஸ் 8.1 இங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இக்கணனியின் விலையானது 100 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரஞ்சு பழத் தோலின் அசத்தலான நன்மைகள்!

Posted: 10 Jan 2015 08:03 AM PST

orange_peels_002

orange_peels_002ஆரஞ்சு பழம் மட்டுமின்றி அதன் தோலில் பல வியக்கவைக்கும் நன்மைகள் அடங்கியுள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கொழுப்பை குறைக்கும் ஆரஞ்சு பழத் தோல் உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும். எனவே உணவில் ஆரஞ்சு பழத் தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம். நெஞ்செரிச்சல் ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு விடை காணலாம். சுவாசம் மற்றும் வயிறு பிரச்னைகள் 100 கிராம் ஆரஞ்சுப் பழத் தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சுப் பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு. மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி, ப்ளூ ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பளபளக்கும் பற்கள் ஆரஞ்சு பழத் தோலை பசையாகவோ அல்லது நேரடியாகவோ பற்களில் தேய்த்தால் பளிச்சென்று மாறும். அதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் ஏற்படும் கூச்சத்தையும் சரிசெய்யலாம். சருமத்திற்கு ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தடவினால், தோல் பகுதி மென்மையாகும், கருப்பான கறைகள் மறையும். இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்லாவின் சாபத்தை அனுபவிப்பீங்க! டாட்டூக்களை அழிக்க மிரட்டும் இஸ்லாமிய அமைப்பு

Posted: 10 Jan 2015 07:57 AM PST

tattoo_banned_002

tattoo_banned_002உடலில் பொறித்துள்ள டாட்டூக்களை துருக்கிய இஸ்லாமியர்கள் அகற்ற வேண்டும் என அந்நாட்டு இஸ்லாமிய அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆசிய நாடான துருக்கியில் ஆண்களும், பெண்களும் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள். இந்நாட்டின் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் டாட்டூ எனப்படும் பச்சைகுத்திக் கொள்ளும் மோகம் அதிகம். ஆனால் இந்த டாட்டூவிற்கு இஸ்லாமிய அமைப்பு தியானெட் பத்வா தற்போது பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த பத்வா அமைப்பு கூறியதாவது, டாட்டூ பொறித்துக்கொள்வது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. டாட்டூவை அகற்ற முடிந்தால் அதை அகற்றிவிடுங்கள் அல்லது அதை பொறித்துக் கொண்ட ஆணோ, பெண்ணோ கடவுளின் முன்னாள் மன்றாடி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் உடலில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான அழகு கலைகளையும் இறைதூதர் முகமது தடை செய்துள்ளார். மேலும் இறைவன் படைத்த உடல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவோர், அல்லாவின் சாபத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நமது இறை தூதர் கூறியுள்ளார். எனவே லேசர் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை செய்தோ உடலிலுள்ள டாட்டூவை அகற்றுவதே நல்லது என்றும் முகத்தில் இருந்து முடியை அகற்றுவதோ, கண்புருவத்தை திருத்துவதோ கூடாது மற்றும் வெள்ளை முடியை கறுப்பாக்க மை பூசக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை கௌரவப்படுத்திய கனடா!

Posted: 10 Jan 2015 07:53 AM PST

france_flag_001

france_flag_001கனடாவின் ரொறொன்ரோ நகரசபையில் பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை கௌரவப்படுத்த வெள்ளிக் கிழமையன்று பிரான்ஸ் நாட்டு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பாரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12 பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார். பிரதம மந்திரி Stephen Harper, சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார். பாரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சில கனடிய பிரசுரங்கள் பாரிஸ்-சார்ந்த பத்திரிகையுடனான தங்கள் ஒருமைப்பாட்டை காட்டும் முகமாக கார்ட்டூன்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய அரசாங்கத்தை குழப்ப முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!

Posted: 10 Jan 2015 07:45 AM PST

Rajapaksa_AFP1

Rajapaksa_AFP1நாடாளுமன்ற சபை முதல்வரான நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை நேற்று பிரதமராக நியமித்த போதிலும் அவருக்கு நாடாளுமன்றத்தில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலைமையில், நிமல் சிறிபாடி சில்வாவுக்கு பிரதமர் பதவியை வழங்க கோரி பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்றை சபாநாயகரிடம் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இதனிடையே டி.எம். ஜயரத்ன பிரதமர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை பெற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று பல முறை முயற்சித்துள்ளார். பதவி விலகும் கடிதத்தை கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளதாக டி.எம். ஜயரத்ன கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியம்: மைத்திரிபால

Posted: 10 Jan 2015 07:41 AM PST

maithripala_sirisena

maithripala_sirisenaஇந்தியாவுடனான உறவை மேம்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனா 51.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். 47.6 சதவீத வாக்குகளுடன் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். ஊழலை வேரறுப்பதுடன், அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் ஜனநாயக சீர்திருத்தத்தைக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்த சிறிசேன, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாடெங்கும் மக்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை பங்குச் சந்தையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜபக்சவைப் போல மைத்திரிபால சிறிசேனாவும் புத்த மதப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவையும் அவர் பெற்றிருந்ததே இந்த வெற்றிக்குக் காரணமாகும். புதிதாக ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ள சிறிசேன, வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்துள்ள நிலையில் இருந்து நாட்டை சமநிலைக்குக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றவுடன் முதலாவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த மாற்றத்தை வரவேற்றதுடன் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்காக‌ ராஜபக்சவையும் பாராட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிசேனவை தொலைபேசியில் அழைத்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பல ஆண்டுகளாக வரலாற்று ரீதியான உறவை இலங்கை கொண்டிருக்கிறது. சமீபகாலமாக ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வந்தது. ஆனால் மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுடனான எங்கள் உறவை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவர், இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியம். ஆனால் அதேசமயம் நாங்கள் சீன முதலீட்டாளர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. சீனாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருப்போம் என்றார். சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ, சீனாவுடன் நட்புறவை இலங்கை பின்பற்றும் என்று நம்புவதோடு, ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கும் அது ஆதரவளிக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார். நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்கள பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் ராஜபக்ச பிரபலமாக இருந்தாலும், வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் ஆதரவுகளை மிக அதிகளவு பெற்றதாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருக்கிறார் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளை அழித்ததைத் தொடர்ந்து 2010ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரும்பாண்மையான வெற்றியைப் பெற்று ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானார். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், சர்வாதிகாரம் ஆகிய காரணங்களால் அவர் தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வந்தார். அவரின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் அதில் நிறைந்திருந்த‌ ஊழல் குற்றங்கள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் அதிபர் பதவியில் அமரலாம் என்ற நோக்கத்தில் தன் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை அறிவித்தார். ஆனால் தன்னுடன் இரவு உணவை எடுத்துக்கொண்ட சிறிசேனவே அடுத்த நாள் காலையில் தனக்கு எதிரான போட்டி வேட்பாளராக நிற்பார் என்று ராஜபக்ச நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. ராஜபக்ச பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்றும் அதன் காரணமாகவே அவருக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டனர்" என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்'ஸ் ரேட்டிங் சர்வீஸஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு இருக்கக் கூடிய அதிகபட்ச அதிகாரங்கள் குறைக்கப்படும் என்று தெரிவித்த சிறிசேன இன்னும் 100 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடனான 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல்கள் உள்ளிட்ட பல ஊழல் குற்றங்களை விசாரிக்க உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை முயற்சி தோல்வி! – தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

Posted: 10 Jan 2015 07:38 AM PST

robber-1-600x337

robber-1-600x337ரொறன்ரோவின் நகை மாளிகை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காபுரோவைச் சேர்ந்த 26 வயதான ஆதவன் ரேனு-வசந்தகுமார் (Arthavan Rehnu-Vasanthakumar, 26) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 1920 Eglinton Ave வீதி கிழக்கில் அமைந்துள்ள Jewellery Exchange இல் இவர் மேற்கொண்ட துப்பாக்கி முனையிலான கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. இவர் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா ஒட்டாவாவில் இரு சகோதரர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது!

Posted: 10 Jan 2015 07:35 AM PST

20130726-161233-g

20130726-161233-gஒட்டாவாவைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கனேடிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இரட்டையர்கள் என்று நம்பப்படுகின்ற இந்த இருவரின் பெயர்களும் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஷ்டன் கார்ல்டன் மற்றும் கார்லோஸ் லார்மோண்ட் ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியல் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, பயங்கரவாத நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல முயன்றபோது கார்லோஸ் லார்மோண்ட் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறுகின்றது. பயங்கரவாத நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் பயங்கரவாத குழுவொன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு தாக்குதல்களைத் தொடர்ந்து கனடாவில் பாதுகாப்பு எச்சரிக்கை உச்ச அளவில் உள்ள நிலையில் இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபரில் கனடாவின் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™