Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கேரளாவில் மோட்டார் சைக்கிள் திருடி மார்த்தாண்டத்தில் விற்ற வாலிபர் கைது

Posted: 09 Jan 2015 11:06 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் பத்தினம் திட்டா மாவட்டங்களில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போனது. அந்த வாகனங்களை போலீசார் தேடியபோது அவை குமரி மாவட்டத்தில் விற்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவற்றை திருடி குமரி மாவட்டத்தில்

சுனந்தா கொலை வழக்கு: சசி தரூரிடம் நாளை விசாரணை?

Posted: 09 Jan 2015 10:02 PM PST

முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சசி தரூர், அவரது மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக நாளை சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனியாவை தாக்கி பேசியதால் சாமியார் அசாராம் பழிவாங்கப்பட்டார்: விசுவ இந்து பரிஷத் தலைவர் பேட்டி

Posted: 09 Jan 2015 09:58 PM PST

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் அசாராம் பாபு ஆசிரமத்தில் தங்கி இருந்த உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1–ந் தேதி சாமியார் அசாராம் பாபு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருப்பதியில் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

Posted: 09 Jan 2015 09:55 PM PST

திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் ஆஸ்பத்திரி அருகே வசித்து வரும் ஒருவர், ஆடு–மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது ஆடு–மாடுகள் மேய்ச்சலுக்காக அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று, மாலையில் திரும்பி வருவது வழக்கம்.

குருவாயூர் கோவிலில் சசிதரூர் துலாபாரம் காணிக்கை செலுத்தி பிரார்த்தனை

Posted: 09 Jan 2015 09:51 PM PST

முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17–ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

500 ரூபாய் திருட்டு போனதால் 13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட பள்ளி ஆசிரியர்

Posted: 09 Jan 2015 09:22 PM PST

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7–ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் மாயமானது. மாணவிகள்தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டார்.

ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தலைவர்களுக்கு அமித்ஷா அதிரடி உத்தரவு

Posted: 09 Jan 2015 09:21 PM PST

பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். நேற்று விஜயவாடாவில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காலை முதல் மாலை வரை இந்த கூட்டம் நடைபெற்றது. பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது ஆந்திராவில் 2019–ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் வகையில் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது பல உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

வழுக்கைத் தலையில் முடி முளைக்க பசு மாட்டு சிறுநீர் குடிக்கும் வட இந்தியர்கள்

Posted: 09 Jan 2015 09:20 PM PST

வட இந்தியாவில் சாலையில் பராமரிப்பின்றி அலையும் மாடுகளைப் பராமரித்து வரும் தொண்டு நிறுவனம் அந்த மாடுகளின் சிறுநீரிலிருந்து சுத்தம் செய்யும் பொருட்களை உருவாக்க இருக்கிறது. விரைவில் அது அரசாங்க அலுவலகங்களால் வாங்கி உபயோகப்படுத்தப்பட இருப்பதாக "புனித பசு அறக்கட்டளை"யைச் சேர்ந்த அனுராதா மோடி தெரிவித்துள்ளார். மேலும், முதலில் மாட்டின் சிறுநீரை வைத்து நாங்கள் பொருட்களை

மகரவிளக்கு பூஜைக்கு வந்த பக்தர்களால் சபரிமலையில் 8 நாளில் ரூ.30 கோடி காணிக்கை

Posted: 09 Jan 2015 09:03 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30–ந்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 31–ந்தேதி அதிகாலை முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் போன்றவை நடந்து வருகிறது. 14–ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்று சபரிமலை பொன்னம்பலமேட்டில் அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். இதனை காண நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ச

சுனந்தா கொலை வழக்கு: அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை

Posted: 09 Jan 2015 07:00 PM PST

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர் இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி புதிய கோணத்தில்

டெல்லியில் 15-ந் தேதி போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு: ரெயில்வே மந்திரி அறிவிப்பு

Posted: 09 Jan 2015 06:54 PM PST

டெல்லியில், அகில இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சொத்துக்குவிப்பு வழக்கு: வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 09 Jan 2015 06:38 PM PST

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சேலம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது.

குஜராத்தில் தொழில் வளர்ச்சி மாநாடு நாளை தொடக்கம்: சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கேற்பு

Posted: 09 Jan 2015 03:18 PM PST

தொழில் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாக குஜராத்தில் 3 நாட்கள் நடைபெறும் தொழில் வளர்ச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில், சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் பங்கேற்கின்றனர். நாட்டின் ஜவுளி உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. மின் மிகை மாநிலமாகவும் விளங்குவதால், தொழில் துறையில் முதலீட்டை அதிகரித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

உ.பி.யில் ஓடும் ரெயிலில் ஈவ் டீசிங்: ஆப்கானிஸ்தான் வாலிபர் கைது

Posted: 09 Jan 2015 09:15 AM PST

புதுடெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பெண்ணை ஈவ் டீசிங் செய்ததாக ஆப்கானிஸ்தான் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சேர்ந்த இசாத் கான் என்பவர் டெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று பயணம் செய்தார். அலகாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டபோது தனது பெட்டியில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், ஈவ் டிசிங் செய்ததாகவும் அந்தப் பெண் புகார் அளித்தார்.

பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை வெட்டிக் கொன்று நக்சல்கள் அட்டூழியம்

Posted: 09 Jan 2015 08:09 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் அட்டூழியம் செய்துவரும் நக்சலைட் தீவிரவாதிகள் இன்று பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டன்ட்டேவாடா மாவட்டத்தில் உள்ள கர்ட்டே கல்யான் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிவந்த சங்கர் பிரசாத் ஜோஷி(45) இன்று

முசாபர்நகர் கற்பழிப்பு வழக்கை முடிக்கும் சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையை கோர்ட் நிராகரித்தது

Posted: 09 Jan 2015 07:31 AM PST

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் கற்பழிப்பு வழக்கினை முடித்துக்கொள்ள பரிந்துரை செய்து அளித்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை கோர்ட் நிராகரித்தது. முசாபர்நகரில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, சில இடங்களில் பெண்களையும் வன்முறைக் கும்பல் கற்பழித்தது. புங்கானா

ரூ.3600 கோடி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கவுதம் கெய்தான் ஜாமினில் விடுதலை

Posted: 09 Jan 2015 07:30 AM PST

ரூ.3600 கோடி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கைது செய்யப்பட்ட கவுதம் கெய்தானை இன்று ஜாமினில் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பயணம் செய்வதற்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது

Posted: 09 Jan 2015 05:35 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காபந்து முதல் மந்திரியாக இருந்த உமர் அப்துல்லா அப்பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததையடுத்து அம்மாநிலத்தில் இன்று முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி–28, பா.ஜ.க–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன.

கோவில் யாகசாலையில் மர்மமாக இறந்து கிடந்த மூன்று வாலிபர்கள்

Posted: 09 Jan 2015 05:13 AM PST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவிலுக்கு அருகேயுள்ள யாக சாலையில் மர்மமான முறையில் மூன்று வாலிபர்கள் இன்று இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்று பேரும் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் புதிய அரசு 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்: வெங்கையா நாயுடு

Posted: 09 Jan 2015 05:11 AM PST

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. 4 மணியளவுடன் முடிவடைந்த தேர்தல் வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் ராஜபக்சே தோல்வியடைந்தார். பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட சிறீசேனா அமோக வெற்றி பெற்று அதிபரானார். இந்நிலையில் புதிய அரசு தமிழர்கள் வாழும் மாகாணத்திற்கு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™