Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரி அமைச்சரவை நாளை பதவியேற்பு(?)

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது. 


Read more ...

இலங்கையில் புதிதாக அமையவிருக்கும் மைத்ரி அரசும் சீன உறவுக்கு உதவி செய்யும்:சீன வெளியுறவுத் துறை

Posted:

இலங்கையில் புதிதாக அமையவிருக்கும் மைத்ரி அரசும் இலங்கை -சீன உறவுக்கு ஒரு பாலமாக இருந்து உதவி செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


Read more ...

மைத்திரி: மூவினங்களின் ஜனாதிபதி (?)

Posted:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன (மைத்திரிபால சிறிசேன), உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 06.21 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் பதவியேற்றார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் இலங்கை சர்வாதிகார ஆட்சி முறையொன்றை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பெரும்பான்மை மக்கள் கருதிய நிலையில் நாட்டில் ஆட்சிமாற்றமொன்று நடைபெற்றிருக்கின்றது. கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 08, 2015) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவதற்கும், மைத்திரிபால சிறிசேன வெற்றியடைவதற்கும் அதுவே முக்கிய காரணமாக இருந்தது.

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த பிரிவினைவாத ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்று சிங்கள மக்களினால் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ கொண்டாடப்பட்டு வந்தார். ஆனால், அந்த சிங்கள மக்களில் 45 வீதத்துக்கும் அதிகமானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்திருக்கிறார்கள் என்பது நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய விடயம். அதுதான், தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை இந்தத் தேர்தலில் யார் வெற்றியாளர் என்பதை ‘இறுதியாக’ தீர்மானிக்கும் சத்தியாக மாற்றியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ
அதனை, மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. மாறாக, தமிழ் பேசும் மக்களின் இறுதித் தீர்மானம் என்பது சிங்கள பௌத்த வாக்குகளின் பிளவுடனேயே சாத்தியமாகின்றது. அதனை, தமிழ் பேசும் சிறுபான்மை மக்களும், அதன் தலைமைகளும் மறந்துவிடக் கூடாது. ஏனெனில், இனவாதமும், மதவாதமும் சடுதியாக ஆட்சி அதிகாரங்களை நிர்ணயிக்கும் நாடாக இலங்கை தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

சிங்கள பௌத்த மக்கள் ஒரே இடத்தில் இணைந்தார்கள் என்றால் சிறுபான்மைச் சமூகங்களின் தீர்மானிக்கும் நிலை காணாமற்போய்விடும். அதற்கு, போர் முடிவுக்கு பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை உதாரணமாகக் கொள்ள முடியும்.  

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் குடும்ப அங்கத்தவர்களின் ஆதிக்கம், ஊழல் மோசடிகளின் கோலொச்சுகை, நீதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீரின்மை, சட்ட ஆட்சியில் தலையீடு, வாழ்வாதார சிக்கல் என்று நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் நோக்கி அத்துமீறல்கள் அதிகரித்த போது மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்ந்தார்கள். அதுதான், பொது எதிரணியை அடுத்த கட்டம் நோக்கி தள்ளியது. அது, இனவாத அடிப்படைகளை ஓரளவுக்கு மறந்து (அல்லது மறந்தது போல காட்ட) வைத்தது. அப்படியில்லை என்றால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜாதிக ஹெல உறுமயவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரே புள்ளியில் இணைவதற்கான சாத்தியங்கள் இல்லை.

தமிழ் பேசும் (தமிழ்- முஸ்லிம்) மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்தை நோக்கி பெருமெடுப்பில் வாக்களித்து சிங்களப் பெரும்பான்மை மக்களையே அதிகமாக காப்பாற்றியிருக்கிறார்கள் என்று கொள்ளவும் முடியும். ஏனெனில், தமிழ் பேசும் மக்களை நோக்கி பொது எதிரணியோ, மைத்திரிபால சிறிசேனவோ சரியான செய்திகளையோ, திட்டங்களையோ முன்வைத்திருக்கவில்லை. ஆனாலும், கட்சிகள், தலைமைகள் தீர்மானிப்பதற்கு முன்னரேயே தமிழ் பேசும் மக்கள் எதிரணியின் பக்கம் திரண்டிருந்தனர். அதுதான், மூவினங்களின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைத்திருக்கிறது.

1.   நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம்

2.   18வது திருத்த சட்டத்தின் ஒழிப்பு

3.   ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்தல்

4.   சிவில் நிர்வாகத்தினை செயற்படுத்தல்

5.   நீதித்துறையின் சுயாதீனம்

6.   சட்டத்தின் ஆட்சி

7.   பொருளாதார அபிவிருத்தி

மேற்குறிப்பிட்ட காரணங்களையே பொது எதிரணி தன்னுடைய செயற்திட்டமாக முன்னிறுத்தியது. இது, நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான தேவை. ஆனால், சிறுபான்மையினங்கள் எதிர்நோக்கும் முக்கியமான தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொது எதிரணியோ, மைத்திரிபால சிறிசேனவோ வெளிப்படுத்தியிருக்கவில்லை. 100 நாட்கள் செயற்திட்டத்திலும் அது உள்ளடக்கப்படவில்லை. அதனை அறிந்து கொண்டே சிறுபான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆனால், சிவில் நிர்வாகம் என்கிற விடயத்தினூடு வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரின் தலையீடுகள் குறைக்கப்பட்டு (இராணுவம்) முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்று தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதுபோல, தம்முடைய அரசியல் அதிகாரங்கள் நோக்கி நகர்வதற்கான ஜனநாயக சூழலை பொது எதிரணியின் ஆட்சிக்காலம் வழங்கும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள். அதனை, மறுதலிப்பதற்கில்லை.

மாறாக, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவதோ- தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த அரசாங்கம் உடனடியாக பெற்றுத் தந்துவிடும் என்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்திலிருந்து ஆட்சி மாற்றமொன்று ஜனநாயக ரீதியிலான சிறிய சுதந்திரத்தைப் பெற்றுத் தரும் என்ற விடயமே கருத்திலேற்கப்பட்டு வாக்களிக்கப்பட்டது. இல்லையென்றால் தமிழ் மக்கள் தேர்தலில் இவ்வளவுக்கு ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள். ஆக, இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடமை.

அதனைத் தவிர்த்துவிட்டு தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் மீது சிங்கள பௌத்த தேசியவாதம் மேற்கொண்டு வரும் அத்துமீறல்களை அனுமதிக்கும் போது அது, நல்லிணக்கம் நோக்கி கைகளை நீட்டிக் கொண்டுவரும் சிறுபான்மை மக்களை விலகிச் செல்ல வைக்கும்.

நல்லிணக்கம் என்பது பேச்சளவிலிருந்து செயற்பாட்டு நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான பழியுணர்ச்சி மாத்திரம் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் பேசும் மக்கள் பெரும் ஆதரவை வழங்க போதுமானது அல்ல.  

எனவே, நல்லிணக்கத்தின் பக்கத்தில் தமிழ் பேசும் மக்கள் நகர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். மாறாக, மீண்டும் சிங்கள பௌத்த தேசியவாதம் தன்னுடைய கோர முகத்தைக் காட்டுமாக இருந்தால் இலங்கை என்கிற அழகிய தீவினை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!


Read more ...

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உண்ணாவிரதம்!

Posted:

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்க குத்தகைதாரர்கள் சுமார் 500 பேர் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.


Read more ...

உலகின் சிறந்த திருமண புகைப்படங்களுக்கான போட்டி : தெரிவு செய்யும் ISPWP

Posted:

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச சமூகத்தின் தொழிழ்முறை திருமண புகைப்படங்கள் அதாவது International Society of Professional Wedding Photographer (or ISPWP) எனும் அமைப்பு சிறந்த திருமண புகைப்படங்களுக்கான போட்டியை நடாத்துகிறது.


Read more ...

மதுரையில் சகாயம் ஐஏஎஸ் ஆய்வில் தொடரும் திடுக்கிடும் தகவல்கள்!

Posted:

மதுரையில் முறைகேடான கிரானைட் கல் குவாரிகள் குறித்து சகாயம் ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டு வருவதில் தொடர்ந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Read more ...

இலக்கின்றி தாக்குதல் நடத்துவது வேண்டாம்:இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவு

Posted:

இலக்கின்றி தாக்குதல் நடத்துவது வேண்டாம் என்று இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தின் லெஃப்டினென்ட் ஜெனரல் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வை மிக்கவர்:நீதிபதி ஹெச்.எல்.தத்து.

Posted:

பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வை மிக்கவர் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கூறியுள்ளார்.


Read more ...

நடிகர் சஞ்சய் தத் பரோல் நீட்டிப்பு மனு நிராகரிப்பு:மாஹாராஷ்டிர அரசு

Posted:

மும்பைத் தாக்குதல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று தற்போது பரோலில் வெளிவந்துள்ள நடிகர் சஞ்சய் தத்தின் பரோல் நீட்டிப்பு மனுவை மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது.


Read more ...

வருகிற செவ்வாய் கிழமை டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம்!

Posted:

வருகிற செவ்வாய் கிழமை 13ம் திகதி டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது.


Read more ...

இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசின் அம்மா மலிவு விலை சிமெண்ட் திட்டம்!

Posted:

திருச்சியைத் தொடர்ந்து இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசின் அம்மா மலிவு விலை சிமெண்ட் விற்பனைத் திட்டம் தொடங்கியுள்ளது.


Read more ...

தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டியிருக்கும்: த.தே.கூ

Posted:

ஜனநாயக மாண்புகளின் உண்மையான பெறுபேறுகளை தமிழ் மக்களும் பெறக்கூடிய வகையில் தேசியப் பிரச்சினைக்கு ஒரு கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொள்ளுவது உட்பட இந்த நாடு எதிர்கொள்ளும் பல அவசரமான ஆழமான நெருக்கடி விடயங்கள் குறித்து புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

வடக்கு, கிழக்கு, மலையக வாக்குகளினாலேயே தோற்றுள்ளேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து அளிக்கப்பட்ட வாக்குகளினாலேயே தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரான்ஸ் சார்லி ஹெப்டோ தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டனர்!

Posted:

பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


Read more ...

போக்கோ ஹராமுடன் போராட சர்வதேச இராணுவத்தின் துணையை நாடும் கமெரூன்

Posted:

நைஜீரியா மற்றும் கமெரூன் ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் போக்கோ ஹராம் போராளிகளை எதிர்கொள்ள சர்வதேச இராணுவத்தின் உதவியை நாடியுள்ளார் கமெரூன் அதிபர் போல் பியா.


Read more ...

சார்லி ஹெப்டோ தாக்குதல் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு:பிரான்சில் நீடித்து வரும் அச்சுறுத்தல்

Posted:

பாரிஸின் சார்லி ஹெப்டோ அலுவலகத்துக்குள் புகுந்து 8 பத்திரிகை ஆசிரியர்கள் உட்பட 12 சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்ற தீவிரவாதிகள் குவாச்சி சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர்களைப் பின் தொடர்ந்த போலிஸ் மற்றும் அதிரடிப் படையினர் கையில் சிக்காமல் தப்ப இவர்கள் தற்போது தம்மார்டின் டி கோயல் நகரிலுள்ள தொழிற்சாலைக்குள் ஆயுதங்களுடன் ஒழிந்துள்ளனர்.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுனர் ஆட்சி அமலுக்கு வந்தது!

Posted:

ஜம்மு-காஷ்மீரில் எந்த ஒரு கட்சியையும் பெரும்பான்மை பிடிக்காததால், அங்கு ஆளுநர் ஆட்சி இன்று முதல் அமலுக்கு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாரம்பரிய குளங்கள், கம்மாய்கள் அழிக்கப்பட்டதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தது ஏன்?

Posted:

மதுரையை சுற்றியுள்ள கிராமங்களின் பாரம்பரிய குளங்கள், கம்மாய்கள் அழிக்கப்பட்டதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தது ஏன் என்று, அதிகாரிகளுக்கு சகாயம் ஐஏஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

எதிர்கால சந்ததியை கருத்திலேற்று செயற்படுவோம்; மீண்டும் ஜனாதிபதியாக மாட்டேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டின் எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு செயற்படுவோம் என்று இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்!

Posted:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார். 


Read more ...

இலங்கையின் 6வது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்!

Posted:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார். 


Read more ...

மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றோம்; நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: பஷில், நாமல்

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலை வணக்குவதாகவும், எந்தவொரு தருணத்திலும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், பதவி விலகிச் செல்லும் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களுமான பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளனர். 


Read more ...

இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 251/6

Posted:

ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 6 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களை எடுத்துள்ளது.


Read more ...

கொடூர குற்றங்களை செய்துவிட்டு சிறையில் இருப்பவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு இல்லை

Posted:

கொடூர குற்றங்களை செய்துவிட்டு சிறையில் இருப்பவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு இல்லை என்று, அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

அமைச்சர்கள் குறித்த குறிப்புக்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறலாம்

Posted:

அமைச்சர்கள் குறித்த குறிப்புக்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறலாம் என்று, தகவல் உரிமை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™