Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


என்னை அறிந்தால் சஸ்பென்ஸ் உடைந்ததா? அதிர்ச்சியில் படக்குழு

Posted: 09 Jan 2015 06:49 AM PST

B617xz5IQAAUnxe

B617xz5IQAAUnxeஎன்னை அறிந்தால் குறித்து நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படத்தின் கதை இது தான் என்று எல்லோரும் ஒரு கதை கட்ட ஆரம்பித்து விட்டனர். தற்போது இப்படத்தின் புதுப்போஸ்டர்கள் நெட்டில் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த போஸ்டர் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது போல் தெரியவில்லை. இப்படத்தில் டேனியல் பாலாஜியும் இருக்கிறார். இவர் படத்தில் இருக்கிறார் என்று எந்த ஒரு பேட்டியிலும் கௌதம் கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போஸ்டரை யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி?

Posted: 09 Jan 2015 06:47 AM PST

012

012நயன்தாரா பற்றி வந்ததிகளுக்கா பஞ்சம், எப்போதும் அவரை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த முறை கொஞ்சம் டீசன்ட்டான சர்ச்சை தான். இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நயன் காது கேளாதவராக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி அப்படி ஏதும் இல்லை, எதுவாக இருந்தாலும் நாங்களே முறைப்படி அறிவிப்போம் என படக்குழு தரப்பில் கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொஞ்சும் தமிழில் “செல்பி புள்ள” பாடலை பாடி அசத்தும் சீன மனிதர்

Posted: 09 Jan 2015 06:39 AM PST

lets_take_a_selfie_pulla_cover_stephen_yoong_img_2_0_1415010791

lets_take_a_selfie_pulla_cover_stephen_yoong_img_2_0_1415010791

This posting includes an audio/video/photo media file: Download Now

கோரவிபத்திலிருந்து உயிர்தப்பும் நபரின் திக் திக் நிமிடம்

Posted: 09 Jan 2015 06:36 AM PST

0

0

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிப்புல என்னமா பட்டையைக் கிளப்புறாங்க பாருங்க….

Posted: 09 Jan 2015 06:33 AM PST

video-undefined-248215BE00000578-933_636x358

video-undefined-248215BE00000578-933_636x358

This posting includes an audio/video/photo media file: Download Now

மூல நோயின் பாதிப்பா? தீர்வு தரும் நாவல்பழம்

Posted: 09 Jan 2015 06:27 AM PST

naaval_palam_002

naaval_palam_002நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது பழங்கள் தான் என்று சொன்னால் அது மிகையல்ல. நாவல் மரத்தின் பட்டை, பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும். இதில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது, மேலும் சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. நாவல் பழத்தின் மகத்துவங்கள் * நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைந்துவிடும், மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம். * மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். * நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்புகள் சரியாகும். * நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். மேலும் சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். * நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும். * வயிற்று போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்சரால் அவதியா? அகத்திகீரை சாப்பிடுங்க

Posted: 09 Jan 2015 06:25 AM PST

agathikirai_002

agathikirai_002அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும். அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும். அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும். இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும். அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அப்பிள் நிறுவனத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

Posted: 09 Jan 2015 06:20 AM PST

itunes_002

itunes_002அப்பிள் நிறுவனம் தனது சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை iTunes அப்ஸ் ஸ்டோரில் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை செலுத்தியே அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியியை வழங்கியிருந்த அந்நிறுவனம் தற்போது சில நாடுகளில் அப்பிளிக்கேஷன்களுக்கான விலையினை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷ்யா, கனடா, நோர்வே, ஐஸ்லான்ட் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவற்றில் இந்த விலை அதிகரிப்பு அடுத்த 36 மணி நேரத்தில் நடைமுறைக்கு வருகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஸ்வினை சீண்டிப் பார்த்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்: ஐ.சி.சி கடும் எச்சரிக்கை

Posted: 09 Jan 2015 06:15 AM PST

aswin_starc_001

aswin_starc_001இந்திய வீரர்களை சீண்டி வரும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் தனது முதல் ஓவரிலே முக்கிய விக்கெட்டான முரளி விஜய்யை வீழ்த்தினார். டக்-அவுட் ஆக வெளியேறிய விஜய்யை பார்த்து ஆக்ரோஷமாக கத்தியபடி அவரை வெறுப்பேற்றினார். ஸ்டார்க்கின் இந்த செயல் வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அவரை கடுமையாக எச்சரித்துள்ளது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எச்சரிக்கையோடு தப்பினார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு அவர் அஸ்வினை பார்த்து தேவையில்லாமல் முனுமுனுத்தார். இதற்கு அஸ்வினும் பதிலடியாக வாக்குவாதம் செய்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் கோஹ்லி

Posted: 09 Jan 2015 06:12 AM PST

anushka_virat

anushka_viratஉலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர். தற்போது அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்றுள்ள கோஹ்லியை பார்க்க அனுஷ்கா அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிய புகைப்படங்களும் வெளிவந்தன. ஒரு பார்ட்டியில் கூட இருவரும் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகின. அதில் சக வீரர்களான இஷாந்த சர்மா, சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 09 Jan 2015 06:06 AM PST

Boko-Haram-US-Terrorist-Blacklist

Boko-Haram-US-Terrorist-Blacklistபிரான்ஸ் பாணியில் இங்கிலாந்தை தாக்க அல்கொய்தா சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் நேற்று முன்தினம் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தையும் தாக்க அல்கொய்தா திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம்ஐ5-ன் டைரக்டர் ஜெனரல் ஆன்ட்ரூ பார்கர் கூறுகையில், சமீபகாலமாக இங்கிலாந்து பொலிஸார் மற்றும் எம்ஐ5 சேர்ந்து மூன்று தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். இங்கிலாந்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து திட்டங்களையும் முறியடிப்பது கடினமான ஒன்று. பிரான்ஸ் தாக்குதல் பாணியில் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இங்கிலாந்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாலிவுட் படத்தை பார்த்த போப் ஆண்டவர்!

Posted: 09 Jan 2015 06:04 AM PST

jolie_pope_002

jolie_pope_002உலக கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர், பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி இயக்கிய ஹாலிவுட் படத்தை பார்த்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் இயக்கத்தில் உருவான UnBroken படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் நேற்று வாடிகன் வந்த ஏஞ்சலினா ஜோலி, படத்தை போப் ஆண்டவருக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய துருப்புகளிடம் மாட்டிக் கொண்ட லூயிஸ் ஜாம்பர்ன்னி(Louis Zamperini) என்ற அமெரிக்க வீரரை பற்றிய திரைப்படம் இதுவாகும், இவர் ஒரு கிறிஸ்துவ மத போதகராகவும், பேச்சாளராகவும் இருந்துள்ளார். இதன் அடிப்படையிலேயே போப் ஆண்டவர் இந்த படத்தை பார்த்தாக கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு!

Posted: 09 Jan 2015 05:49 AM PST

maithripala_sirisena

maithripala_sirisenaபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளியிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன 6, 217, 162 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியை இழந்தார் மஹிந்த

Posted: 09 Jan 2015 05:44 AM PST

Rajapaksa_AFP1

Rajapaksa_AFP1இலங்கையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவ பதவியில் இருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுழற்சி முறை மூலம் பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவ பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. தேர்தலில் தோல்வி அடைந்தமையை அடுத்து அந்தப் பதவியும் இயல்பாக பறி போயுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைத்திரிபாலா மகிந்தாவைக் காட்டிக் கொடுக்க மாட்டார்!

Posted: 09 Jan 2015 05:37 AM PST

maithripala_sirisena

maithripala_sirisenaமைத்திரிபாலாவின் வெற்றி மகிந்தாவின் தான், தன் குடும்பம் என்ற மமதைப் போக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய கற்பிதம் என்றும், தனது கட்சியின் செயலரே கட்சியை விட்டு விலகி பொது வேட்பாளராக வந்தார் என்பதும்,.. 27 ஆளும்கட்சி உறுப்பினர்கள் பொது அணியென்ற பெயரில் தாவியது மகிந்தாவிற்கான ஊழ்வினை என்றும், இன்றைய தேர்தல் தொடர்பாக நடந்த நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுதர்மா அவர்கள் கருத்தத் தெரிவித்தார். மைத்திரிபாலா சொல்லும் விடயங்களில் 25 வீதமானவை கூடச் அவரால் நிறைவேற்றப்பட முடியாதவை என்றும், அடுத்த பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பாண்மை எட்டப்படாதவிடத்து சிறுபாண்மையின தேசியம் பேசும் கட்சிகளின் ஆதரவுடன் அரசை அமைக்கும் ஒரு நிலை ஏற்படும் என்றும், அவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலீக்க வேண்டிய தேவையை காலம் இப்போது ஏற்படுத்தியுள்ளது. மகிந்தா வெளிநாடுகளிற்குத் தப்பிச் செல்லமாட்டார். இலங்கையில் இருப்பதே அவருக்குப் பாதுகாப்பு. மைத்திரி கூட அவரின் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பார் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைத்திரிக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் வாழ்த்து தெரிவித்தார் !

Posted: 09 Jan 2015 05:31 AM PST

john-kerry-has-been-pushing-for-air-strikes-in-syria

john-kerry-has-been-pushing-for-air-strikes-in-syriaஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் முடிவினை ஏற்றுக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம். இலங்கை மக்கள் சிறந்த முறையில் வாக்களித்து ஜனநாயக உரிமைகளை உறுதி செய்து கொண்டுள்ளன. அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமைக்காக இலங்கை தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பினை பாராட்டுகின்றோம் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™