மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சாரதா சிட்பண்ட் மோசடியில் கைது செய்யப்பட்ட மதன்மித்ரா ஆஸ்பத்திரியில் அனுமதி
- குஜராத் கடலோரத்தில் யாரும் இல்லாமல் கரை ஒதுங்கிய படகு: தீவிரவாதிகள் ஊடுருவலா?
- எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய பாக். ராணுவத்தினர் 3 பேர் சுட்டுக்கொலை
- பாக். தீவிரவாதிகளின் அட்டூழியம்: வெடிகுண்டுகளுடன் வந்த மேலும் ஒரு படகு இந்திய கடற்படை விரைந்ததும் தப்பியது
- டெல்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால் மீண்டும் புதுடெல்லி தொகுதியில் போட்டி
- மகர விளக்கையொட்டி சபரிமலை அய்யப்பனுக்கு 12–ந்தேதி படி சுத்தி பூஜை
- ஒபாமா வருகையின்போது தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: பாக். துப்பாக்கி சூடு அம்பலம்
- தாக்குதல் நடத்துவதற்காக படகில் வந்த தீவிரவாதிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்
- கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு
- முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க சதி: வங்காள தேசத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது
- வைகுண்ட துவாதசி: திருப்பதியில் சக்கர ஸ்நானம்
- தூய்மை இந்தியா திட்ட பாணியில் கட்சிக்கு நிதி திரட்ட தொடங்கினார்: அரவிந்த் கெஜ்ரிவால்
- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ராகுல் வர்மா டெல்லி வந்தடைந்தார்
- ஒடிசாவில் ரூ.53 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகள் அழிப்பு
- பாதுகாப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மோடியின் மனைவி மேல் முறையீடு
- ரூ.19 ஆயிரத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கிச்சென்ற பலே திருடர்கள்
- குஜராத் கடற்பகுதி அருகே வெடிப்பொருட்களுடன் ஊடுருவிய பாகிஸ்தான் கப்பல் வெடித்து சிதறியது
- கெட்ட நேரம் அதிகரித்தால் புற்றுநோய் வரும்: மருத்துவ ஆய்வு தகவல்
- சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை
- கதகதப்புக்கு மூட்டிய தீ குடிசையை பதம் பார்த்தது: 3 குழந்தைகள் உடல் கருகி பலி
| சாரதா சிட்பண்ட் மோசடியில் கைது செய்யப்பட்ட மதன்மித்ரா ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 02 Jan 2015 11:19 PM PST மேற்கு வங்காளத்தில் நடந்த பல ஆயிரம் கோடி சாரதா சிட்பண்ட் மோசடியில் 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜி மந்திரி சபையில் போக்குவரத்துதுறை மந்திரியாக இருந்த மதன் மித்ராவை இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 12–ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. |
| குஜராத் கடலோரத்தில் யாரும் இல்லாமல் கரை ஒதுங்கிய படகு: தீவிரவாதிகள் ஊடுருவலா? Posted: 02 Jan 2015 10:13 PM PST பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக மீண்டும் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர் என்ற தகவலால், கடந்த 10 நாட்களுக்கு முன்பே இந்திய கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. |
| எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய பாக். ராணுவத்தினர் 3 பேர் சுட்டுக்கொலை Posted: 02 Jan 2015 09:54 PM PST இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலை செய்யும் திட்டத்துடன் சுமார் 300 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை நெடுக பதுங்கி உள்ளனர். 9 குழுக்களாக உள்ள அவர்களை எப்படியாவது காஷ்மீருக்குள் அனுப்பி விட வேண்டும் என்ற திட்டத்துடன் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. கடந்த 31–ந்தேதி புத்தாண்டு தினத்தன்று இரவு சம்பா மற்றும் கதுவா |
| Posted: 02 Jan 2015 09:48 PM PST இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை அடைந்துள்ள பாகிஸ்தான் தன் நாட்டில் உள்ள தீவிரவாதிகளை தூண்டி விட்டு இந்தியாவில் நாசவேலைகளை செய்து வருகிறது. இரண்டு தடவை போர் நடத்திய சமயத்திலும், ஏராளமான தடவை தீவிரவாதிகளை ஊடுருவ வைத்த போதும் உதை வாங்கிய பாகிஸ்தான் தன்னை திருத்திக் கொள்ளாமல் மீண்டும், மீண்டும் இந்தியாவுக்கு எதிராக |
| டெல்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால் மீண்டும் புதுடெல்லி தொகுதியில் போட்டி Posted: 02 Jan 2015 09:37 PM PST டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. தனிப் பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் – மந்திரி ஆனார். ஆனால் 49 நாட்களில் அவர் ராஜினாமா |
| மகர விளக்கையொட்டி சபரிமலை அய்யப்பனுக்கு 12–ந்தேதி படி சுத்தி பூஜை Posted: 02 Jan 2015 08:37 PM PST கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27–ந்தேதி நடந்தது. இதையடுத்து அடைக்கப்பட்ட கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30–ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அய்யப்பன் மகர ஜோதியாக பக்தர்களுக்கு வருகிற 15–ந்தேதி தரிசனம் அளிக்கிறார். இதற்காக இருமுடி கட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மண்டல பூஜையின்போது, திருவிதாங்கூர் ராஜ குடும்ப ஆபரணங்களை அணிந்து பக்தர் |
| ஒபாமா வருகையின்போது தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: பாக். துப்பாக்கி சூடு அம்பலம் Posted: 02 Jan 2015 07:26 PM PST இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி முதல் சண்டை நிறுத்த உடன்படிக்கை அமலில் இருந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்த உடன்படிக்கையை மதிக்காமல், காஷ்மீரில் |
| தாக்குதல் நடத்துவதற்காக படகில் வந்த தீவிரவாதிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் Posted: 02 Jan 2015 07:12 PM PST இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்களுடன் படகில் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உரையாடலை ஒட்டுக்கேட்ட போது, அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்ட தகவல் கிடைத்து உள்ளது. |
| கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு Posted: 02 Jan 2015 07:08 PM PST மும்பையில், ஒரு தனியார் வங்கி தத்தெடுத்த கிராமத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கருப்பு பணத்தை ஒழிக்கும் எத்தனையோ வழிகளில், கரன்சி நோட்டுகள் இல்லாமல், ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யும் வழி முக்கியமானது. |
| முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க சதி: வங்காள தேசத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது Posted: 02 Jan 2015 07:05 PM PST கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி மேற்கு வங்க மற்றும் உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூட்டாக இணைந்து டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து மடிக்கணினி ஒன்றும், சில வரைபடங்களும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. |
| வைகுண்ட துவாதசி: திருப்பதியில் சக்கர ஸ்நானம் Posted: 02 Jan 2015 03:52 PM PST வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் நேற்று காலை சக்கர ஸ்நானம் நடைபெற்றது. அதையொட்டி, நேற்று அதிகாலை சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து காலை 5 மணியளவில், திருமலை- |
| தூய்மை இந்தியா திட்ட பாணியில் கட்சிக்கு நிதி திரட்ட தொடங்கினார்: அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 02 Jan 2015 12:56 PM PST தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை பணியில் ஈடுபட சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த பிரபலங்களும் தூய்மை பணியில் ஈடுபட்டதுடன், பிற பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தனர். |
| இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ராகுல் வர்மா டெல்லி வந்தடைந்தார் Posted: 02 Jan 2015 07:55 AM PST இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவின் முன்னேற்றமாக ஒபாமாவால் நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியினரான ரிச்சர்ட் ராகுல் வர்மா இன்று டெல்லி வந்து சேர்ந்தார். டெல்லியில் வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளார். |
| ஒடிசாவில் ரூ.53 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகள் அழிப்பு Posted: 02 Jan 2015 07:29 AM PST ஒடிசா மாநிலத்தின், மல்காங்கிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக பயிரிடப்பட்டிருந்த நான்கரை லட்சத்துக்கும் அதிகமான கஞ்சா செடிகளை போலீசார் உதவியுடன் மாவட்ட கலால் துறையினர் இன்று தீயிட்டு அழித்தனர். இங்குள்ள சித்ரகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 கிராமங்களில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 4,51,200 கஞ்சா செடிகள் இன்று |
| பாதுகாப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மோடியின் மனைவி மேல் முறையீடு Posted: 02 Jan 2015 05:54 AM PST பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியாக தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? எனபது தொடர்பாக மேஹ்சானா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூலம் அறிந்து தனக்கு தெரியப்படுத்தும்படி மோடியின் மனைவி ஜசோதா பென் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். |
| ரூ.19 ஆயிரத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கிச்சென்ற பலே திருடர்கள் Posted: 02 Jan 2015 04:38 AM PST ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க வந்தவரிடம் கொள்ளை, ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் போட வந்தவரிடம் கொள்ளை, காவலாளியை கொன்று ஏ.டி.எம்.மை உடைத்துக்கொள்ளை போன்ற செய்திகளையே திரும்பத்திரும்ப மக்கள் எத்தனை காலத்துக்கு தான் கேட்டுக்கொண்டிருப்பார்கள்? என்று யோசித்த ஒரு கும்பல் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையடித்து சென்றுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| குஜராத் கடற்பகுதி அருகே வெடிப்பொருட்களுடன் ஊடுருவிய பாகிஸ்தான் கப்பல் வெடித்து சிதறியது Posted: 02 Jan 2015 03:43 AM PST இந்தியாவின் நில எல்லைப்பகுதியில் அத்துமீறல் செய்துவரும் பாகிஸ்தான், அவ்வப்போது கடல் எல்லை வழியாகவும் அத்துமீற முயற்சித்து வருகின்றது. அவ்வகையில், குஜராத்தின் போர்பந்தர் நகரில் இருந்து சுமார் 365 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடற்பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டு மீன்பிடி கப்பலை கடந்த 31-ம் தேதி இரவு இந்திய கடலோரக்காவல் படையினர் விரட்டிச்சென்றனர். |
| கெட்ட நேரம் அதிகரித்தால் புற்றுநோய் வரும்: மருத்துவ ஆய்வு தகவல் Posted: 02 Jan 2015 03:43 AM PST ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுக்கட்டுப்பாடு, பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருந்தது இவற்றையெல்லாம் விட கெட்ட நேரத்தின் காரணமாகவே நிறைய பேருக்கு புற்றுநோய் வருவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மெல் புற்றுநோய் மையத்தின் விஞ்ஞானிகள் |
| சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை Posted: 02 Jan 2015 03:43 AM PST புத்தாண்டை புதுமையாகவும், சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக விழிப்புணர்வினை ஊட்டும் விதமாகவும் கொண்டாட நினைத்த பஞ்சாப் போக்குவரத்து போலீசார், தண்டித்து, அபராதம் விதிக்கப்பட வேண்டிய வாகன ஓட்டிகளுக்கு நேற்று சிகப்பு நிற ரோஜாப்பூக்களை அன்பளிப்பாக வழங்கி அசத்தலான எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீட் பெல்ட்களை அணியாமல் கார்களை ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் |
| கதகதப்புக்கு மூட்டிய தீ குடிசையை பதம் பார்த்தது: 3 குழந்தைகள் உடல் கருகி பலி Posted: 02 Jan 2015 03:43 AM PST உத்தரப்பிரதேசம் மாநிலம், பால்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கதகதப்புக்கு மூட்டிய தீ குடிசையை பதம் பார்த்ததால் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பாசுதேவா கிராமத்தில் நேற்றிரவு வாட்டிய கடும்குளிருக்கு கதகதப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு வீட்டினுள் தீ மூட்டம் போட்டு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |