Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது: மைத்திரிபால

Posted: 02 Jan 2015 02:31 AM PST

Maithripala_Si

Maithripala_Siதன் நிர்வாகத்தில் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடக்கின் இராணுவ முகாம்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று பொய்யான பரப்புரையை அரசாங்க தரப்பினர் மேற்கொண்ட வருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, இவ்வாறான பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றனர். இவை முற்றாக பொய் என தெரிவித்தார். அதே வேளை கட்டான பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் இன்று நடுத்தர வர்க்கத்தினர் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர். மைத்திரியின் ஆட்சியில் அவர்களை அழுத்ததிலிருந்து விடுதலை பெற செய்வோம் என்று தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம்! சந்திரிகா

Posted: 02 Jan 2015 02:29 AM PST

_71105347_71105346

_71105347_71105346பழிவாங்கும் அரசியல் எம்மிடமில்லை. ராஜபக்ச குடும்பத்தினரே வைராக்கிய அரசியலை முன்னெடுப்பதாகவும், நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக்சவிடமிருந்து நாட்டை பாதுகாக்கவே தாம் முனைவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட எம்.பி.யும் பிரதி அமைச்சருமான நந்திமித்திர ஏக்கநாயக்க எதிரணியுடன் இணைந்து கொள்ளும் ஊடகவியலாளர் மாநாடு அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில். பழிவாங்கல் அரசியல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச பிரசார கூட்டங்களில் எம்மீது பழி போடுகிறார். பழிவாங்கல் அரசியல் தொடர்பில் நான் அவ்வரசிற்கு கூற வேண்டிய தேவைப்பாடும் கிடையாது. எம்மிடம் ஒரு போதும் அரசியல் பழிவாங்கல் இருந்ததில்லை. நாம் அவ்வாறு செயற்பட போவதுமில்லை. எனது ஆட்சி காலத்தில் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய நான் ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அரசியலை நாம் செய்ய கற்றுக்கொள்ளவில்லை. எனினும் ஜனாதிபதி கதிரைக்கு மஹிந்த ராஜபக்சவை அமர வைத்தது நானே. எனினும் சுமார் 9 வருடம் எனக்கு செய்யாத அநியாயம் இல்லை. 7 வருடம் என்னை நாட்டிற்கு வர இடமளிக்கவில்லை. இவ்வாறு என்னை பழிவாங்கியது ராஜபக்சவினரே. எனவே பழிவாங்கல் அரசியல் ராஜபக்ச குடும்பத்தினரிடமே உள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏர் ஏசியா விமான பணிப்பெண் கடைசியாக காதலனுக்கு அனுப்பிய லவ் மெசேஜ்!

Posted: 02 Jan 2015 02:22 AM PST

AirA-1-600x399

AirA-1-600x399இந்தோனேஷியா விமான விபத்தில் பலியான விமான பணிப்பெண் ஒருவர் கடைசியாக தனது மொபைலில் இருந்து காதலனுக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ8501 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நிஷா என்ற 22 வயது இளம்பெண், விமானத்தில் இருந்து தனது காதலருக்கு இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் இருந்து ஐ லவ் யூ என்ற மெசேஜ் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இவரது உடலை பார்த்து இவரது காதலர் தியோ என்பவர் கதறி கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சம் கலங்கும்படி இருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் பலியான உடல்களை மீட்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மீட்புக்குழுவினர் அடுத்ததாக் கருப்புப்பெட்டியை மீட்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் கருப்புப்பெட்டியை கண்டுபித்து வெளியே எடுக்க ஒரு மாதம் வரை ஆகும் என கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் 2015-ன் முதல் குழந்தை மிசிசாகாவில் பிறந்தது!

Posted: 02 Jan 2015 02:20 AM PST

mag_ap_feat_084_4x3

mag_ap_feat_084_4x3கனடா- ஒரு விசித்திரமான சாமர்த்தியத்துடன் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் முதல் குழந்தை சரியாக நடுஇரவு பிறந்துள்ளது. மிசிசாகா வைத்தியசாலை வைத்தியர்கள் கிரேய்சன் ஜே லெஸ்லி என்ற ஆண்குழந்தையை வியாழக்கிழமை நள்ளிரவு — சரியாக அதிகாலை 12-மணிக்கு உலகத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இவன் 6-நாட்கள் முன்பாக 7-இறாத்தல் 14-அவுன்ஸ் எடையுடன் பிறந்துள்ளான். 34-வயதுடைய குழந்தையின் தாய் ஸ்ரேசியும் பிறந்த குழந்தையும் சேமமாக உள்ளனரென ட்றிலியம் சுகாதார மையத்தினர் தெரிவித்துள்ளனர். 12.15-மணியளவில் அடுத்த ஆண் குழந்தை ஒசாவாவில் பிறந்துள்ளான். வியாழக்கிழமை மேலும் 3-குழந்தைகள் பிறந்துள்ளனரென கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™