மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரள நிதி மந்திரியை பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம்: மார்க். கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம்
- மாரடைப்பால் பலியான பயணி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ஐதராபாத்தில் பூமி அதிர்ச்சி: வீடுகள் குலுங்கியதால் பீதி
- தொடர் விடுமுறை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு - வி.ஐ.பி. தரிசனம் நாளை ரத்து
- ஆந்திராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 2 பேர் பலி- 12 பேர் பாதிப்பு
- டெல்லி சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
- ஐதராபாத்தில் கொத்தடிமைகளாக இருந்த 200 குழந்தை தொழிலாளர்கள் காவல் துறையினரால் மீட்பு: 10 பேர் கைது
- முதல்வர் ரேசில் கெஜ்ரிவாலை நெருங்கும் கிரண் பேடி: கருத்துக்கணிப்பில் தகவல்
- 26-ந் தேதி ஒபாமாவுடன் சோனியா, ராகுல் சந்திப்பு
- ஒபாமாவின் இந்திய வருகையின்போது அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
- மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது?: உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்- அருண் ஜெட்லி சூசகம்
- தேர்தல் விதிமீறல் புகார்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
- இந்தியாவில் பயன்படுத்துவதற்காக ஒபாமாவின் அதிநவீன பீஸ்ட் கார் டெல்லி வந்தது
- பொறுப்புகளை கண்டு நான் வெட்கப்பட்டு போவது இல்லை: உத்தவ் தாக்கரே சொல்கிறார்
- 7800 கோடி ரூபாய் கேட்டு ஒபாமாவுக்கு கடிதம் தயாரித்த நபர் பீகாரில் பிடிபட்டார்
- டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பின்போது 6 மெட்ரோ ரெயில் நிலையங்களை மூட ஏற்பாடு
- ஐ.எஸ். தீவிரவாதிகள் எந்த இடத்தில் இருந்து தகவல்களை பதிவிடுகின்றனர்?: டுவிட்டரிடம் விளக்கம் கேட்கும் உளவுத்துறை
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: ஹிண்டால்கோ நிறுவனம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு
- 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா
- ஆம் ஆத்மி வேட்பாளர் உள்பட 3 பேர் தேர்தலில் போட்டியிட தடை
| கேரள நிதி மந்திரியை பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம்: மார்க். கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம் Posted: 23 Jan 2015 11:03 PM PST கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் கேரள காங்கிரஸ் (மானி) கட்சியின் தலைவர் மானி நிதி மந்திரியாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்–மந்திரி உம்மன் சாண்டி மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக அறிவித்தார். அதன் |
| மாரடைப்பால் பலியான பயணி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 23 Jan 2015 10:35 PM PST திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை சோமநாதன். இவர் கடந்த 2007–ம் ஆண்டு மார்ச் மாதம் 4–ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து கும்பகோணத்துக்கு தனது மனைவி மகளுடன் ரெயிலில் செல்ல டிக்கெட் எடுத்து இருந்தார். |
| ஐதராபாத்தில் பூமி அதிர்ச்சி: வீடுகள் குலுங்கியதால் பீதி Posted: 23 Jan 2015 09:57 PM PST ஐதராபாத் நகரில் நேற்று இரவு திடீர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இரவு 10.30 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வு 1½ நிமிடம் நீடித்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜேந்திர நகர், அக்தாபூர், ஹைதர்கூடா, கிருஷ்ணபுரா, புத்வேல், பகதூர்புரா, காட்டேதான், பத்மசாலிபுரம் போன்ற பகுதிகளில் பூமி அதிர்வு உணரப்பட்டது. |
| தொடர் விடுமுறை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு - வி.ஐ.பி. தரிசனம் நாளை ரத்து Posted: 23 Jan 2015 09:52 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் இயல்பாக இருந்தது. கடும் குளிர் நிலவியதால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. நேற்று காலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மாலையில் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் கூட்டம் |
| ஆந்திராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 2 பேர் பலி- 12 பேர் பாதிப்பு Posted: 23 Jan 2015 09:45 PM PST தெலுங்கானாவை தொடர்ந்து ஆந்திராவிலும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. ஏற்கெனவே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஐதராபாத் மருத்துவமனையில் பலியானார். |
| டெல்லி சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி Posted: 23 Jan 2015 09:45 PM PST டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி உருவாகி உள்ளது. பா.ஜனதா முதல்–மந்திரி வேட்பாளராக கிரண்பேடியை அறிவித்துள்ளது. அவர் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். |
| ஐதராபாத்தில் கொத்தடிமைகளாக இருந்த 200 குழந்தை தொழிலாளர்கள் காவல் துறையினரால் மீட்பு: 10 பேர் கைது Posted: 23 Jan 2015 08:24 PM PST ஐதராபாத்தில், பவானி நகர் பகுதியில் இன்று அதிகாலை காவல் துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் கொத்தடிமைகளாக இருந்த 200 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 500 போலீசார், போலி பைனான்சியர்கள் மற்றும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பவானி நகர் பகுதியில் உள்ள ஒரு |
| முதல்வர் ரேசில் கெஜ்ரிவாலை நெருங்கும் கிரண் பேடி: கருத்துக்கணிப்பில் தகவல் Posted: 23 Jan 2015 08:17 PM PST நாட்டின் தலைநகரான டெல்லியில் வரும் பிப்ரவரி 7-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு மீண்டும் யாருக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதி பெரும்பான்மை |
| 26-ந் தேதி ஒபாமாவுடன் சோனியா, ராகுல் சந்திப்பு Posted: 23 Jan 2015 07:06 PM PST டெல்லி வரும் ஒபாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் சந்தித்து பேசுகின்றனர். இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் செய்தி |
| ஒபாமாவின் இந்திய வருகையின்போது அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகிறது Posted: 23 Jan 2015 04:28 PM PST ஒபாமாவின் இந்திய வருகையின்போது, அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நாளை இந்தியாவுக்கு வருகிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒபாமாவின் இந்திய வருகையின்போது, இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. |
| Posted: 23 Jan 2015 02:34 PM PST மத்தியில் கடந்த மே மாதம் பதவி ஏற்றுள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதலாவது முழு அளவிலான பட்ஜெட், அடுத்த மாதம் 28-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது. நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி |
| தேர்தல் விதிமீறல் புகார்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் Posted: 23 Jan 2015 01:50 PM PST தேர்தல் விதிமீறல் புகாருக்குள்ளான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்தது. மேலும், வாக்காளர்களை பணம் வாங்க சொன்னதற்காக அவருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்பி உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த 14-ந்தேதி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த ஒரு பேட்டி தொடர்பாக, அவர் மீது மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் உபாத்யாயா தேர்தல் கமிஷனில் ஒரு |
| இந்தியாவில் பயன்படுத்துவதற்காக ஒபாமாவின் அதிநவீன பீஸ்ட் கார் டெல்லி வந்தது Posted: 23 Jan 2015 01:27 PM PST அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக, அவரது அதிநவீன 'பீஸ்ட்' கார் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. குறிப்பாக குடியரசுத்தின விழாவுக்காக ராஜபாதையில் ஒபாமா வரும்போது, இந்த காரில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர், இந்திய ஜனாதிபதியுடன் இணைந்தே வர வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இந்த |
| பொறுப்புகளை கண்டு நான் வெட்கப்பட்டு போவது இல்லை: உத்தவ் தாக்கரே சொல்கிறார் Posted: 23 Jan 2015 10:20 AM PST பொறுப்புகளை கண்டு தான் வெட்கப்பட்டு போவது இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் 89–வது பிறந்தநாளையொட்டி மும்பை மராத்தி பத்ரகர் சங்கத்தில், பல்வேறு புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்ட பால்தாக்கரேயின் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதை நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– |
| 7800 கோடி ரூபாய் கேட்டு ஒபாமாவுக்கு கடிதம் தயாரித்த நபர் பீகாரில் பிடிபட்டார் Posted: 23 Jan 2015 08:44 AM PST அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி டெல்லி வரவுள்ள நிலையில் அவரிடம் 130 கோடி டாலர்கள் பணம் கேட்டு இ-மெயில் அனுப்ப முயன்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள ஆலய நகரமான போதி கயாவில் உள்ள இண்டர்நெட் மையத்துக்கு வந்த ஒருவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்று கூறி மையத்தின் உரிமையாளரின் அனுமதி பெற்று ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பித்தார். |
| டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பின்போது 6 மெட்ரோ ரெயில் நிலையங்களை மூட ஏற்பாடு Posted: 23 Jan 2015 08:17 AM PST டெல்லியில் திங்கட்கிழமை குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் வேளையில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராஜபாட்டையை சுற்றியுள்ள 6 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுகின்றன. மத்திய செயலகம், உத்யோக் பவன், பட்டேல் சவுக், ரேஸ் கோர்ஸ், மண்டி ஹவுஸ் மற்றும் பிரகதி மைதான் ஆகிய ரெயில் நிலையங்கள் சில மணி நேரம் மூடப்படும் என்று டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் |
| Posted: 23 Jan 2015 07:39 AM PST இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நாளை மறுநாள் புதுடெல்லி வரவுள்ள நிலையில் இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் வெகு மும்முரமாக திட்டமிட்டு வருவதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்து வருகின்றன. சமூக வலைத்தளங்களான 'பேஸ்புக்' மற்றும் 'டுவிட்டர்' மூலமாக சில தீவிரவாத இயக்கங்கள் தங்களது ஆதரவாளர்களிடையே நச்சுக் கருத்துகளை பரப்பி வருகின்றன. இதைப்போன்ற |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: ஹிண்டால்கோ நிறுவனம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு Posted: 23 Jan 2015 07:20 AM PST நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கினை பதிவு செய்ய உள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இதுவரை நடைபெற்ற விசாரணை மற்றும் வழக்கின் தற்போதைய நிலவரம் தொடர்பான சிறப்பு அறிக்கையை வரும் 27-ம்தேதி சிறப்பு நீதிமன்றத்தில் |
| 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா Posted: 23 Jan 2015 06:34 AM PST ஆன்மிகவாதிகள் என்றாலே மக்கள் அலறியடித்துக் கொண்டு நூறடி தூரம் ஓடும் இந்த ஏமாற்று யுகத்தில் ஆந்திர மாநிலத்தில் வாழும் 'பிரியாணி பாபா' என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில் அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் 'பிரியாணி பாபா' என்றழைக்கின்றனர். இவரது |
| ஆம் ஆத்மி வேட்பாளர் உள்பட 3 பேர் தேர்தலில் போட்டியிட தடை Posted: 23 Jan 2015 05:59 AM PST மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் உள்ளிட்ட 3 பேர் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாததால் மிசோரம் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் மிக்கேல் லால்மன்சுவாலா 3 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |