Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரே நேரத்தில் ஐந்து படங்கள்...!

Posted:

இயக்குனர் லிங்குசாமி, அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பாளர்களாக இருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. "உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன், ரா ரா ராஜசேகர், நான்தான் சிவா" ஆகிய ஐந்து படங்களை ஒரே நேரத்தில் அவர்கள் தயாரித்து வருவது தமிழ்த் திரையுலகில் ...

இந்திய சினிமாவின் பவர்புல் நடிகர் தனுஷ் - பால்கி புகழாரம்!

Posted:

ராஞ்சனா படத்திற்கு பிறகு இந்தியில் தனுஷ் நடித்துள்ள இரண்டாவது படம் ஷமிதாப். நம்மூர் இயக்குநர் பால்கி, நம்மூர் இசையமைப்பாளர் இளையராஜா, நம்மூர் ஔிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரது கூட்டணியில், பாலிவுட்டின் ''பிக் பி'' அமிதாப் உடன் தனுஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவருடன் கமலின் இரண்டாவது வாரிசான அக்ஷ்ராஹாசன், நடிகையாக ...

டைரக்டர் ஆகிறார் பிருத்விராஜ்..!

Posted:

பொதுவாக தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களுக்கு நடிக்க வந்த இருபது வருடங்கள் கழித்து வரும் ஆசை தான் ஒரு படத்தை டைரக்ட் செய்யவேண்டும் என்பது.. கமல். விஜயகாந்த், ஆகியோர் படம் இயக்கியதும் அப்படித்தான். ஆனால் வருடத்தில் ஆறு படங்களாவது நடித்துவிடும் மலையாள ஹீரோக்களுக்கு இப்படி ஒரு எண்ணம் துளியும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் ...

ராணுவத்தை விட்டு விலகி குடும்பத்திற்குள் நுழைந்தார் மேஜர் ரவி..!

Posted:

பிரிக்கமுடியாதது எது என திருவிளையாடல் தருமி பாணியில் கேட்டால், தயங்காமல், மேஜர் ரவியும் அவரது ராணுவ படங்களும் என தாராளமாக சொல்லலாம்.. ராணுவத்தில் மேஜராக பணியாற்றிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்த அவர் மம்முட்டி, மோகன்லாலை வைத்து சகட்டுமேனிக்கு ராணுவப்படங்களாக இயக்கித்தள்ளினார். பிருத்விராஜ் நடிப்பில் மேஜர் ரவி இயக்கத்தில் ...

நடித்த படம் வெளியான நாளில் மரணத்தை தழுவிய தெலுங்கு நடிகர்..!

Posted:

தெலுங்கு சினிமாவின் சீனியர் காமெடி நடிகரான எம்.எஸ்.நாராயணா இன்று(ஜன.,23ம் தேதி) காலை காலமானார்.. இவரது சிறப்பு என்னவென்றால், ஜூனியர் என்.டி.ஆர் படத்திலும் இருப்பார், பவன் கல்யாண் படத்திலும் இருப்பார்.. நாகர்ஜுனா படத்திலும் இருப்பார்.. அவ்வளவு ஏன் கடந்த வருடங்களில் வெளியான இளம் ஹீரோக்களின் படங்களில் இவர் இல்லாத படங்களே இருக்காது.. கதை ...

ஏஞ்சலினா ஜோலி போன்று நடிக்க ஆசை : சோனம் கபூர்

Posted:

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா போன்று ஆக்ஷன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நடிக்க மிகுந்த விருப்பமாக இருப்பதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார்.

டாலி கி டோலி படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த நடிகை சோனம் கபூர், டாலி கி டோலி படத்தில் தனது கேரக்டர் பற்றியும், பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் அனுபவங்கள் ...

'ஹேராம்'ல் இளையராஜா செய்த சாகசம்...!

Posted:

இசையமைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக தற்போது சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல சவுண்ட் இஞ்சினியர்கள் எல்லாம் இன்று இசையமைப்பாளர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இசை என்பது ஒரு உணர்வு, அது உள்ளத்தை உருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசைக்குச் சொந்தக்காரர்தான் இளையராஜா.

1000 படங்களுக்கு மேல் இளையராஜா ...

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் மஞ்சு மனோஜ்

Posted:

சர்ச்சைகளின் நாயகரான இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் மஞ்சு மனோஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ராம்கோபால் வர்மா இயக்கத்தில், மஞ்சு விஷ்ணு நடித்த ரவுடி படம், பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. தற்போது, ராம்கோபால் வர்மா இயக்கத்தில், மஞ்சு மனோஜ் நடிக்க உள்ளார். இந்த படமும், வெற்றிப் ...

திரிவிக்ரமுடன் மீண்டும் இணையும் மகேஷ்பாபு

Posted:

தெலுங்கு திரையுலகின் இளவரசர் மகேஷ்பாபு, மீண்டும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் மீண்டும் இணைய உள்ளார். தி்ரிவிக்ரம் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்த அத்தடு மற்றும் கலேஜா படங்கள் பெரும் வெற்றிப்படங்களாக உருவெடுத்தன. இந்நிலையில், மீண்டும் அவர்கள் இணைய உள்ளனர். மகேஷ்பாபு, தற்போது ஸ்ரீமந்தடு படத்தில் நடித்துவருகிறார். இதன்பின், அவர் ...

நயன்தாராவுடன் டூயட் பாடும் பாலகிருஷ்ணா

Posted:

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, தனது 99வது படத்தில், நயன்தாராவுடன் டூயட் பாட உள்ளார். இந்த படத்தை ஸ்ரீவாஸ் இயக்க உள்ளார். இதுகுறித்து ஸ்ரீவாஸ் கூறியதாவது, பாலகிருஷ்ணா, நயன்தாரவுடன் இணைந்து நடித்த சிம்ஹா மற்றும் ஸ்ரீராமராஜ்யம் படங்கள் பெரும்வெற்றி பெற்றன. 99வது படத்தையும், வெற்றிப்படமாக்க, பாலகிருஷ்ணா விரும்புவதாக ஸ்ரீவாஸ் கூறினார். ...

த்ரிஷா - வருண் மணியன் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது!

Posted:

நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் இன்று(ஜன., 23ம் தேதி) சிறப்பாக நடந்தது. சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த சில வருடங்களாகவே இவரது திருமணம் பற்றிய செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக ...

தெலுங்கு நடிகர் நாராயணா காலமானார்

Posted:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய எம்.எஸ்.நாராயணா (63), ஐதராபாத்தில் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் திடீரென கோமா நிலைக்கு சென்றார். இதனிடையே, சிகிச்சைபலனின்றி, இன்று அவர் காலமானார். 800க்கும் மேற்பட்ட படங்களில் ...

'ஆம்பள' வசூல் எவ்வளவு...?

Posted:

ஊரெங்கும் 'ஐ' படத்தைப் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் வசூல் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களுடன் வந்த 'ஆம்பள, டார்லிங்' ஆகிய படங்களைப் பற்றிய பேச்சுக்கள் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் அந்த இரண்டு படங்களும் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் நல்ல ...

கௌதம் ஜோடியாக சனா மக்பூல்...!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவருடைய உதவியாளரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் 'ரங்கூன்' படத்தின் நாயகியாக சனா மக்பூல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சில ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து விட்டு, தெலுங்கில் 'திக்குலு சூடக்கு ராமையா' என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் ...

மீண்டும் தள்ளிப்போனது அஜீத்தின் என்னை அறிந்தால்!

Posted:

பொங்கலுக்கே வெளியாகி இருக்க வேண்டிய கௌதம் மேனனின் என்னை அறிந்தால் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார். பிறகு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிஐ என்கிற கலர் கிரேடிங் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதற்கு சில ...

80களின் நாயகன் நாயகிகள் சந்திப்பு

Posted:

1980 முதல் 1990 வரையிலான காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, ஸ்ரீப்ரியா, ரேவதி, நதியா என நட்சத்திரங்கள் ஆட்சிபுரிந்த கனவு காலம் அது. அந்த பத்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர்கள் இன்னும் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகை சுஹாசினி, ...

எஸ்.ஏ.சந்திரசேகரின் டூரிங் டாக்கீஸ் திடீர் ரிலீஸ்

Posted:

எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது இயக்கி வரும் படம் டூரிங் டாக்கீஸ். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒரு கதையின் நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகரே நடிக்கிறார். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். காஷ்மீரில் இளம் வயதில் தான் தொலைத்த காதலியை தேடுகிற கதை. எஸ்.ஏ.சந்திரசேகரின் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளையராஜா இசை ...

15 பாடல்களை யூ டியூப்பில் வெளியிட்டார் ஜேம்ஸ் வசந்தன்

Posted:

இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ''வானவில் வாழ்க்கை'' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது ஹாலிவுட் பாணியிலான இன்னிசை சித்திரம். அவரே இசையமமைத்தும் பாடல்களை எழுதியும் உள்ளார். கல்லூரி கலைக்குழுக்களுக்கு இடையே நடக்கும் போட்டியும், ஜாலியும்தான் கதை. இதில் முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களே பாடியும், ...

படம் முடிந்தது: பாட்டு எடுக்குறாங்க

Posted:

அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் புரமோசனுக்காக ஒரு பாடலை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் கனிரசம்... என்று தொடங்கும் பாடலை ரம்யா நம்பீசன் பாடி உள்ளார். இந்த பாடல் படத்தில் இடம்பெற வைக்க முயற்சித்தார்கள். அதற்கான ...

மேஜிக் நிபுணரும், மந்திரவாதியும் மோதும் ஐயங்கன்

Posted:

புதுமுகங்கள் இணைந்து ஐயங்கன் என்ற படத்தை தயாரிக்கிறார்கள். ஐயங்கன் என்ற தூய தமிழ் சொல்லுக்கு நம்மை சுற்றியுள்ள அமானுஷ்ய சக்தி என்று பொருளாம். அதிக சக்திகளை பெற ஒரு மந்திரவாதி ஒரு குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை நரபலி கொடுக்க தேடுகிறான். அப்படி ஒரு பெண்ணை அதாவது ஹீரோயினை கண்டுபிடிக்கிறான். அந்த பெண் மேஜிக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™