மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திரிணாமுல் காங். எம்.பி.யை தாக்கியவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்
- உ.பி. போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது
- ஆந்திரா, தெலுங்கானாவில் திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் தபால் நிலையங்களில் விற்பனை
- பீகார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்ணை கற்பழித்த ஐந்து பேர் கும்பல்
- திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்ற முரளிதரராவுக்கு திடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: பாக். அத்துமீறலால் 57 கிராமங்களில் பாதிப்பு- பள்ளிகளுக்கு விடுமுறை
- திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவம்: செப்டம்பர், அக்டோபர் மாதம் நடக்கிறது
- தூய்மை இந்தியா திட்டம் சட்டமாக்கப்படும்: வெங்கய்யா நாயுடு தகவல்
- கேரளாவில் மந்திரிகள் ரமேஷ்சென்னிதலா, பாபு ரூ.19 கோடி லஞ்சம் வாங்கினர்: அச்சுதானந்தன் புகார்
- உட்கட்சி எதிர்ப்பை திசைதிருப்ப அச்சுதானந்தன் நடத்தும் நாடகம்: கேரள மந்திரி பாபு பேட்டி
- மங்கரை ரெயில் நிலையத்தில் ரெயில் மோதி கணவன்–மனைவி பலி
- டெல்லி சட்டசபை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி 12 இடங்களில் பிரசாரம்
- சபரிமலை கோவிலில் 16–ந் தேதி படி பூஜை
- காஷ்மீரில் மீண்டும் அத்துமீறல்: பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் பலி
- தமிழகத்தில் பரவும் மூளைக் காய்ச்சல்: எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல்
- தீவிரவாதத்தை தடுப்பதாக பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்காவுக்கு இந்தியா கடுமையான பதில்
- குஜராத் கடல் பகுதியில் படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான்: பாரிக்கர் திட்டவட்டம்
- தொண்டு நிறுவன வரவு-செலவு கணக்கு விவகாரம்: தமிழகம், தெலுங்கானா மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
- ஹூப்லி-தார்வார் நகரில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் மையங்கள்
- ஷிமோகா அருகே கார்-தனியார் பஸ் மோதல்: பெண் உள்பட 2 பேர் சாவு
| திரிணாமுல் காங். எம்.பி.யை தாக்கியவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் Posted: 05 Jan 2015 10:55 PM PST மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சண்டிப்பூர் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் எம்.பி.யும், முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி பேசினார். அப்போது திடீர் என்று மேடையில் ஏறிய ஒரு வாலிபர் எம்.பி.யை நோக்கி வேகமாக சென்று அவரை கன்னத்தில் அறைந்தார். உடனே அந்த வாலிபரை மேடையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து உதைத்தனர். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்றாலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் |
| உ.பி. போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது Posted: 05 Jan 2015 10:10 PM PST உத்தரப்பிரதேச மாநிலம் பதான் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 31–ந் தேதி இரவு 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்தே 2 போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| ஆந்திரா, தெலுங்கானாவில் திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் தபால் நிலையங்களில் விற்பனை Posted: 05 Jan 2015 09:45 PM PST திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெறுவதற்காக கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் |
| பீகார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்ணை கற்பழித்த ஐந்து பேர் கும்பல் Posted: 05 Jan 2015 09:23 PM PST பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். தன் உறவினர்களைச் சந்திப்பதற்காக பீகாருக்கு வந்த அந்தப் பெண், |
| திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்ற முரளிதரராவுக்கு திடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Posted: 05 Jan 2015 09:21 PM PST பாரதீய ஜனதா கட்சியின் தேசிய முதன்மை செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்றார். அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக செல்ல முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அலிபிரியில் இருந்து |
| காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: பாக். அத்துமீறலால் 57 கிராமங்களில் பாதிப்பு- பள்ளிகளுக்கு விடுமுறை Posted: 05 Jan 2015 09:12 PM PST பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்றும் எல்லைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் காஷ்மீர் மாநிலம் சம்பா, கதுவா பகுதிகளில் சிறு ரக பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். |
| திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவம்: செப்டம்பர், அக்டோபர் மாதம் நடக்கிறது Posted: 05 Jan 2015 09:11 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை 2 பிரமோற்சவம் வருவது உண்டு. அதன்படி இந்த ஆண்டு 2 பிரமோற்சவம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 14–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறுகிறது. இதே போல் அக்டோபர் 14–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை |
| தூய்மை இந்தியா திட்டம் சட்டமாக்கப்படும்: வெங்கய்யா நாயுடு தகவல் Posted: 05 Jan 2015 09:09 PM PST மகாத்மா காந்தியின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் தூய்மையான இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 2–ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல ஒவ்வொரு மாநிலத்தில் பல்வேறு துறையில் இருக்கும் பிரபலங்களை பிரசார தூதராக நியமித்து |
| கேரளாவில் மந்திரிகள் ரமேஷ்சென்னிதலா, பாபு ரூ.19 கோடி லஞ்சம் வாங்கினர்: அச்சுதானந்தன் புகார் Posted: 05 Jan 2015 09:04 PM PST கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த போவதாக அறிவித்தது. அதன்படி கேரளா முழுவதும் 700க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் மூடப்பட்டன. இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாநிலத்தின் நிதி நிலைமை இதனால் மோசமாகும் என்றும் எச்சரித்தனர். இதற்கிடையே கேரள அரசு குறிப்பிட்ட பார்களை திறந்து பீர் மற்றும் ஒயின் விற்க அனுமதி வழங்க முடிவு செய்தது. இதற்கு பின்னணியில் முறைகேடு இருப்பதாக கேரள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. |
| உட்கட்சி எதிர்ப்பை திசைதிருப்ப அச்சுதானந்தன் நடத்தும் நாடகம்: கேரள மந்திரி பாபு பேட்டி Posted: 05 Jan 2015 09:00 PM PST அச்சுதானந்தன் கூறிய ஊழல் புகாருக்கு கேரள உள்துறை மந்திரி ரமேஷ்சென்னிதலா மறுப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:– அச்சுதானந்தன் கூறிய புகாருக்கு ஆதாரத்தைக் காட்ட வேண்டும். ஆதாரம் இல்லாமல் கூறப்படும் புகார்கள் எடுபடாது. அவர் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நல்லெண்ணத்தை திசை திருப்ப இவ்வாறு பேசி உள்ளார். சமீபத்தில் பி.கே.கிருஷ்ணபிள்ளை நினைவகம் |
| மங்கரை ரெயில் நிலையத்தில் ரெயில் மோதி கணவன்–மனைவி பலி Posted: 05 Jan 2015 08:44 PM PST கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டாய் அருகேயுள்ள மாத்தூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 51). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பார்வதி தேவி(49). மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். மலப்புரத்துக்கு செல்வதற்காக பார்வதி தேவி மங்கரை ரெயில் நிலையத்துக்கு |
| டெல்லி சட்டசபை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி 12 இடங்களில் பிரசாரம் Posted: 05 Jan 2015 08:43 PM PST டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) இரண்டாவது வாரம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை இன்னும் சில தினங்களில் வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. டெல்லி தேர்தலில் பாஜக, |
| சபரிமலை கோவிலில் 16–ந் தேதி படி பூஜை Posted: 05 Jan 2015 08:22 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந்த மாதம் 30–ந் தேதி திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை வருகிற 14–ந் தேதி மாலை 6.45 மணிக்கு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தரும் அய்யப்பனை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். மகரவிளக்கு பூஜையில் கலந்து கொள்வதற்காக நடைதிறந்தது முதலே பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகு தான் சுவாமி அய்யப்பனை தரிசன |
| காஷ்மீரில் மீண்டும் அத்துமீறல்: பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் பலி Posted: 05 Jan 2015 08:07 PM PST இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அத்துமீறிய தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன |
| தமிழகத்தில் பரவும் மூளைக் காய்ச்சல்: எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் Posted: 05 Jan 2015 07:16 PM PST மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கடந்த சனிக்கிழமை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா சென்னையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை |
| தீவிரவாதத்தை தடுப்பதாக பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்காவுக்கு இந்தியா கடுமையான பதில் Posted: 05 Jan 2015 06:49 PM PST அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்த மாதம் பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அதேசமயம், அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்பது தொடர்பாக ஜான்கெர்ரி இந்தியாவுக்கும் வருகை தர இருக்கிறார். |
| குஜராத் கடல் பகுதியில் படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான்: பாரிக்கர் திட்டவட்டம் Posted: 05 Jan 2015 06:48 PM PST கடந்த மாதம் 31-ந் தேதி நள்ளிரவு குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் இருந்து 365 கி.மீ. தொலைவில் அரேபிய கடலில், இந்திய கடல் எல்லை பகுதிக்குள் நுழைந்த ஒரு மர்ம படகை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து துரத்திச் சென்றனர். அந்த படகில் வந்த தீவிரவாதிகள் |
| Posted: 05 Jan 2015 02:52 PM PST தொண்டு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்படும் விவகாரத்தில் பதிலளிக்குமாறு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. காந்தியவாதியும், ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருபவருமான அன்னா ஹசாரே தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த |
| ஹூப்லி-தார்வார் நகரில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் மையங்கள் Posted: 05 Jan 2015 01:59 PM PST ஹூப்லி-தார்வார் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரசோழன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஹூப்லி- தார்வார் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி முடிவடைந்து, அடையாள அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து 2-வது கட்டமாக |
| ஷிமோகா அருகே கார்-தனியார் பஸ் மோதல்: பெண் உள்பட 2 பேர் சாவு Posted: 05 Jan 2015 01:43 PM PST ஷிமோகா அருகே கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |