Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன?

Posted: 05 Jan 2015 09:30 AM PST

nurse_cameron_002

nurse_cameron_002எபோலாவால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய செவிலிய பெண்ணுக்காக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரார்த்தனை செய்கிறார். பிரித்தானியாவின் மருத்துவமனை ஒன்றில் பாலின் கேபர்கே(Pauline Cafferkey Age-39) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆப்ரிக்க நாடான சியர்ரா லியோனியில் எபோலா நோய் தாக்கத் தொடங்கியதும், இவர் அங்கு குழந்தைகளை காப்போம் என்ற மருத்துவ முகாமில் பணியாற்ற விருப்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்த அவர் எபோலா நோயாளியின் ரத்தத்தை பரிசோதிக்க எடுத்தபோது, அந்த ரத்த மாதிரி அவர் மீது சிதறியுள்ளது. இதனால் கடந்த மாதம் அவரை எபோலா நோய் தாக்கியுள்ளது. இதனையடுத்து பிரித்தானியாவுக்கு பாதுகாப்பாக வரவழைக்கப்பட்ட இவருக்கு, ராயல் ப்ரீ(Royal Free) மருத்துவமனையில் வைத்து தனியறை ஒன்றில் மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் கடந்த 2 நாட்களாக அவரது உடல் எடை மிகவும் குறைவதுடன், இதயத்துடிப்பும் சரியாக இல்லை என கூறப்படுகிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டாலும் அவர் பலவீனமாக காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போது கவலைக்கிடமாக உள்ள அவர் விரைவில் குணமடைந்து, அவரது குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மக்களை அச்சுறுத்தும் 3000 வெடிகுண்டுகள்!

Posted: 05 Jan 2015 09:28 AM PST

berlin_bombs_002

berlin_bombs_002ஜேர்மனியின் இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப்பட்ட 3000 வெடிகுண்டுகள் இன்னும் வெடிக்காமல் பெர்லின் நகரின் கீழே இருக்கலாம் என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெர்லினில் கடந்த 2014ம் ஆண்டில், சுமார் 54 டன் எடை கொண்ட குண்டுகள் மற்றும் போர்க் கருவிகள் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1945ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1.8 மில்லியன் டன் எடையுள்ள கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பெர்லினில் கட்டிட வேலை நடக்கும் போதெல்லாம் வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் அதாவது ஆண்டிற்கு சுமார் 1000 முறையாவது வெடிகுண்டு அகற்றும் படையினர் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் Potsdam-ல் சுமார் 250 கிலோ எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை பாதுகாப்பாக அப்புறபடுத்த சுமார் 1000 பேர் அந்த இடத்தை வெளியேற்றப்பட்டதாகவும் தெரிகிறது. பொலிசார் இதுபற்றி கூறுகையில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கைவிடப்பட்ட இந்த வெடிகுண்டுகள் யாருடைய தலையீடாவது இருக்கும் போது தான் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகளால் நகரின் எந்தெந்த பகுதிகளில் மிஞ்சிய வெடிகுண்டு புதைந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிரிக்கெட்டை மிரட்டியெடுத்த சச்சின், சங்கக்காரா

Posted: 05 Jan 2015 09:17 AM PST

sachin_001

sachin_001கிரிக்கெட் விளையாட்டை புரட்டியெடுத்த வீரர்களில் சச்சின், சங்கக்காரா முக்கியமானவர்களாக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். தற்போது பிக்பாஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மெல்பொர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு பயிற்சியாளராக விவியன் ரிச்சர்ட்ஸ் பணியாற்றி வருகிறார். இவர் மூன்று வகையான (டி20, டெஸ்ட், ஒருநாள்) கிரிக்கெட் போட்டிகளிலும் மிரட்டல் வீரர்களாக சச்சின், சங்கக்காரா இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா மற்றும் சில வீரர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. மேலும் கோஹ்லியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை புகழ்ந்துள்ள ரிச்சர்ட்ஸ், அணித்தலைவராக களமிறங்கும் அவருக்கு ஆதரவளித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டோனியின் ஓய்வால் அதிர்ச்சியில் உறைந்தேன்: மவுனம் கலைத்த கோஹ்லி

Posted: 05 Jan 2015 09:13 AM PST

kohli_002

kohli_002இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாக கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி அணித்தலைவர் டோனி, மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட டோனியின் இந்த திடீர் ஓய்வு முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டோனி ஓய்வு பெற்றதால் இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவராக விராட் கோஹ்லி பொறுப்பேற்றார். டோனி பற்றி கோஹ்லி இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், இன்று தனது மவுனத்தை கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். அவரது இந்த முடிவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் டோனியின் ஓய்வால் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால் அவர் திடீரென இந்த முடிவை எடுத்தார். டோனியிடம் இருந்து நான் ஏராளமான பாடம் கற்று இருக்கிறேன். மன அமைதியை கொண்டவர். முக்கியமான நேரங்களில் சிறந்த முடிவை எடுப்பார். அவரது ஆலோசனையை தொடர்ந்து பெறுவேன். குறிப்பாக இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி அவரிடம் இருந்து அறிந்தேன் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனுஷ்காவிற்கு பிரம்மாண்ட சிலை வைக்க முடிவு?

Posted: 05 Jan 2015 08:58 AM PST

anushka-shetty_625x300_61415095346

anushka-shetty_625x300_61415095346தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் அனுஷ்காவிற்கு தான் முதலிடம். இவர் நடித்து வரும் பாஹுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சூது கவ்வும் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பாபி சிம்ஹா நடிகை நயன்தாராவிற்கு சிலை வைப்பார். அதேபோல் டோலிவுட்டில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அனுஷ்காவிற்கு சிலை வைப்பது போல் காட்சிகள் எடுக்கவிருக்கிறார்களாம். இதனால், அனுஷ்காவிற்கு பிரம்மாண்ட சிலை ஒன்று ரெடியாகி வருகிறதாம். ஆனால், அனுஷ்கா தரப்பில் இருந்து இன்னும் இதற்கு சம்மதம் வரவில்லை என கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் பாணியில் அதர்வா?

Posted: 05 Jan 2015 08:57 AM PST

atharva001

atharva001விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கத்தி. இப்படத்தில் விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் பற்றி ஆழமாக கூறப்பட்டது. தற்போது அதர்வா, சற்குணம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக "கயல்" ஆனந்தி நடிக்க, இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படமும் கத்தி பாணியில் விவசாயம், தண்ணீர் பிரச்சனைகளை அலசி ஆராயும் கதை தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தக் கண்கொள்ளாக் காட்சியை ரசிக்க 1000 கண் இருந்தாலும் போதாது!

Posted: 05 Jan 2015 08:53 AM PST

hqdefault

hqdefault

This posting includes an audio/video/photo media file: Download Now

ராட்சத மலைப்பாம்புடன் ஜாலியாக விளையாடும் சுட்டிக் குழந்தை!

Posted: 05 Jan 2015 08:49 AM PST

Alyssa-Guarino

Alyssa-Guarino

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத்துல எல்லா ஆண்களுக்கு கெட்டவர்கள் இல்லை…. அனைவரும் காணவேண்டிய காட்சி!

Posted: 05 Jan 2015 08:45 AM PST

Watch-What-This-Taxi-Driver-Does-To-This-Drunk-Girl

Watch-What-This-Taxi-Driver-Does-To-This-Drunk-Girl

This posting includes an audio/video/photo media file: Download Now

தினமும் ஊறுகாய் சாப்பிடுறீங்களா? அப்போ கண்டிப்பா இதை படிங்க

Posted: 05 Jan 2015 08:39 AM PST

pickle_001

pickle_001நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய். பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். செரிமான பிரச்சனைகள் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும். அல்சர் ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோய் ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும். இதய நோய் ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். வயிற்றில் உப்புச உணர்வு ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இதய நோயால் அவதியா? தக்காளி சாப்பிடுங்க

Posted: 05 Jan 2015 08:36 AM PST

tomato_002

tomato_002தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை. தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே உள்ளது. தங்கள் எடையைக் குறித்து அக்கறையுள்ளவர்கள் தக்காளியில் கலோரிகள் மிகக் குறைவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 100 கிராம் தக்காளிப் பழத்தில் 20 கலோரி தான் உள்ளது. எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் பழுத்த இரு தக்காளிப் பழங்களை சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படி சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். இதற்கு முக்கிய காரணம், அதில் மாவு சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம். இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். தக்காளி செடியின் இலைகளை பறித்த உடன் 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியவை தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும். காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்க போகும்போது ஒரு டம்ளர் தக்காளி சாறுடன் அதில் தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும். முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை(மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு தக்காளி சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த பயனை அளிக்கும் சிகிச்சை முறையாகும்

This posting includes an audio/video/photo media file: Download Now

Acer Liquid Z410 கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Posted: 05 Jan 2015 08:33 AM PST

acer_liquid_z410_001

acer_liquid_z410_001Acer நிறுவனம் Liquid Z410 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது. இதன்படி இவ்வருடம் இடம்பெறவுள்ள CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 4G இணைப்பு வசியினைக் கொண்ட இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடையதும் IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இதன் விலையானது 129 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாதுகாப்பு காரணமாக மைத்திரிபால கூட்டங்களை தவிர்த்தார்!

Posted: 05 Jan 2015 08:30 AM PST

maithripala_sirisena

maithripala_sirisenaபொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பை கருத்திற்கொண்டு நேற்று பல பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லாமல் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியின் ஊடாகவே உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி, கலகெதர அமைப்பாளரின் வீட்டில் கூடியிருந்தோர் மத்தியில் இதன்போது உரையாற்றிய அவர் தமது உயிருக்கு ஆபத்து உள்ளமை காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டார். பொலநறுவை, அரலகங்விலவில் ஜனவரி 3ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3பேர் காயமடைந்தனர். இதேவேளை இரத்தினபுரி பெல்மதுல்லையில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமடைந்தனர். அத்துடன் இன்று அதிகாலை இரத்தினபுரி கஹவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்!- ஹிருனிகா

Posted: 05 Jan 2015 08:27 AM PST

Hirunika1

Hirunika1போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கொலையாளிகள் பாலியல் வன்கொடுமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை விதிக்கப்படும். எதிர்வரும் 11ம் திகதி இந்தக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். புதிய அரசாங்கத்தின் கீழ் தூய்மையான அரசாங்கமொன்று அமைக்கப்படும். மாத்தறை தெவினுநுவரவில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு திரட்டி நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹிருனிகா என்னை அப்பா என்றாள்! மகிந்தவின் புதிய சர்ச்சை….

Posted: 05 Jan 2015 08:21 AM PST

Rajapaksa_AFP1

Rajapaksa_AFP1அரசிலிருந்து சில தவளைகள் பாய்வதினால் எவ்வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை. எனினும் இந்த நாட்டின் மக்கள் அங்கும் இங்கும் பாயக்கூடியவர்கள் அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது பாருங்கள் இங்கிருந்து சென்ற அனைத்து அவன், அவள்களும் உயிர் அச்சுறுத்தல் என்றே சொல்கிறார்கள். நன்றாக சொல்லிக் கொடுத்து சொல்லப்படுவதனை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஒருகாலத்தில் என்னை ஹிருனிகா தந்தை எனக் கூறிக்கொண்ட ஒருத்தி, உயிர் அச்சுறுத்தல் என கூறிவருவதாகவும் அவளை தாம் ஒருத்தி என கூறமுடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறியவர்கள் பற்றி தாம் பேச போவதில்லை. எனினும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புவதாகவும் அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும். இளம் அரசியல்வாதிகள் கட்சி தாவுவதனை அனுமதிக்க முடியாது. அது பிழையான ஒரு நடவடிக்கை ஆகும் எனவும், கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு இளம் அரசியல்வாதிகள் கல் எறியக்கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாக்குரிமை எமது பிறப்புரிமை அதை முழுமையாகப் பயன்படுத்துவோம்! கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted: 05 Jan 2015 08:18 AM PST

TNA logo_CI

TNA logo_CIவாக்குரிமை எமது பிறப்புரிமை அதை முழுமையாகப் பயன்படுத்துவோம்! கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தேர்தல் புறக்கணிப்புகள் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவித்துள்ளன. யூன், 1931 இல் சட்ட சபைக்கு நடந்த தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) புறக்கணிக்கச் சொன்னது. அதன் விளைவாகத் தனிச் சிங்கள வாரியம் (Pan Sinhala Board of Ministers)ஒன்று உருவாகியது. அதன் விளைவுகளைத் தமிழ் மக்கள் பின்னாளில் அனுபவித்தனர். 1994 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தார்கள். அதன் விளைவாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சி 10,744 வாக்குகளை மட்டும் பெற்று 9 உறுப்பினர்கயோடு நாடாளுமன்றம் சென்றது. அதன் விளைவுகளை இப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 2005 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் உத்தியோகப் பற்றற்ற முறையில் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார்கள், புறக்கணிப்புக் காரணமாக மகிந்த இராசபக்சா சொற்ப பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தார். அதன் விளைவை நாளும் பொழுதும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே மீண்டும் ஒருமுறை அப்படியான தவறைச் செய்யாமல் மதிப்புக்குரிய இரா . சம்பந்தன் ஐயா, மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா முதலியோர் கேட்டுக் கொண்டபடி சனவரி 8 ஆம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் எமது தாயக உறவுகள் முதல் கடமையாக வாக்குச்சாவடிக்கு வேளையோடு சென்று அன்னனச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் . நன்றி கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) தமிழ்மக்கள் வாக்குரிமை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி ராஜக்ஸவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக் கூடிய எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறும் ஜனவரி 8 ஆம் நாள் மைத்திரிபாலாவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித்தேர்தலில் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலாவை வெல்ல வைக்குமாறு வட மாகாண சபை மாண்புமிகு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்மக்களைக் கேட்டுள்ளார். மே 2009 க்குப் பிறகு தமிழ்மக்கள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்சேயின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ் சிங்கள – பெளத்த மேலாதிகத்தைக் கட்டிக் காக்கும் சனாதிபதி மகிந்த ராஜபக்ஸதமிழ்மக்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து வருகிறார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. வலிகாமம் வடக்கில் 6,382 ஏக்கர் நிலத்தை இராணுவம் அடாத்தாகப் பறித்துள்ளது. அதே போல் கிழக்கு மாகாணத்தில் சம்பூர் மக்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் காணியை சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தக் காணி பறிப்பால் சுமார் 90,000 பேர் தங்களது சொந்த இடத்தில் மீளக் குடியமர முடியாத நிலை எழுந்துள்ளது. இந்த மக்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாது குடிசைகளிலும் கொட்டில்களிலும் முகாம்களிலும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் பல ஆண்டுகளாக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இப்போது முதல்முறையாக தென்னிலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்மக்களைப் போலவே ஜனாதிபதி மகிந்த இராஜபக்சேயின் சர்வாதிகார குடும்ப ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களில் ஒரு சாராரும் ஓர் ஆட்சிமாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவர தமிழ்மக்கள் தங்களது கையிலுள்ள வாக்குச் சீட்டு என்று ஆயுதத்தை எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது பயன்படுத்த வேண்டும். எமக்கு எஞ்சியுள்ள ஆயுதம் இந்த வாக்குரிமைதான் என்பதை மறந்து விடக் கூடாது. சற்றும் எதிர்பாராத வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கோட்டையில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சியில் இருந்து இதுவரை 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள். எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா நாட்டில் மீண்டும் நல்லாட்சியை, சட்டதின் ஆட்சியை, மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவேன் என உறுதிபடக் கூறிவருகிறார். குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும் என்கிறார். ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இலங்கையில் உள்ள சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ வழி அமைப்பேன் என்று மைத்திரிபால சிறிசேனா உறுதிமொழி வழங்கியுள்ளார். எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களை புன்மைத் தேரைகளாக, வாயில்லாப் பூச்சிகளாக, புழுக்களிலும் கேவலமாக, அடிமைகளாக நடத்தும் சனாதிபதி இராஜபக்சேயின் கொடுங்கோல் ஆட்சியை தமிழ்மக்கள் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். வலி தந்தவர்களுக்கு வட்டியும் முதலுமாக நாங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும். எமது வாழ்வுரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பை எதிர்பாராத விதமாக சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட்டியே வழங்கியுள்ளார். வீதிகள் அமைப்பதற்கும் தொடர்வண்டி ஓட விட்டதற்கும் ஈடாக தமிழ்மக்கள் தங்கள் தன்மானத்தை இழக்கமாட்டார்கள் என்பதை நாங்கள் உலகத்துக்கு எண்பித்துக் காட்ட வேண்டும். என தமிழ் படைப்பாளிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™