Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டியாகிறது சண்டிகர்:ஜெட்லி

Posted: 12 Jan 2015 03:32 PM PST

காந்திநகர்: இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டியாகிறது சண்டிகர். நாடு முழுவதும் 100 ஹை டெக் சி்ட்டிகளை உருவாக்க அரசு தயாராகி வருகிறது.அதன்படி, இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டியாகிறது சண்டிகர். இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய திட்டமான, நாடு முழுவதும் நூறு ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதும், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டியாக சண்டிகர் உருவாக்கப்படுவதுதான். சண்டிகரை சுற்றி செயற்கைகோள் நகரங்கள் இருப்பதால் தான் முதல் இந்திய ...

பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?

Posted: 12 Jan 2015 12:35 PM PST

பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.? நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அதனால் இந்த புவியில் மனிதப் பிறவியாய் பிறந்திருக்கின்றோம். நாம் எவ்வளவோ பாவ புண்ணியங்கள் செய்திருந்தாலும் அவற்றை மாற்றக்கூடிய வல்லமையோடு இந்த பிறவியில் பிறந்திருக்கிறோம் அப்படிப் பிறந்த நாளை நாம் கண்டிப்பாக கொண்டாடியாகவேண்டும். நம்முடைய பிறந்தநாளில் நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களும் ஆசிகளும் அந்த வருடம் முழுவதும் நிறைந்து கிடைக்கும் என்பது உறுதி. பிறந்தநாளில் கேக் வெட்டி, மெழுகுவர்த்தி அணைத்து கொண்டாடுவது ...

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!

Posted: 12 Jan 2015 12:22 PM PST

நவக்கிரகங்களை வழிபடலாமா?

Posted: 12 Jan 2015 12:21 PM PST

நவக்கிரகங்களை வழிபடலாமா? வேண்டாம். ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு? சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது. நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா? தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள். ...

விலங்குகளின் கர்ப்ப காலம்

Posted: 12 Jan 2015 11:06 AM PST


-

குண்டுக் குள்ளனுக்குகுடுமி நிமிர்ந்து நிற்குது..! - விடுகதைகள்

Posted: 12 Jan 2015 11:04 AM PST


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

கொண்டையில் தாழம்பூ...!!!-Mano Red

Posted: 12 Jan 2015 09:45 AM PST

கொசுக்கடிச்சாலும் பரவால்ல, கோனார் கடை கொசுவத்தி சுருளுக்கு மணிக்கணக்கா காத்துக் கெடப்பேன், ஏன்னா கண்மை வாங்க அவ அங்க தான வரணும்..!! சேறு தெறிச்ச சட்டயோட கால்ல முள்ளு தைக்க வாய்க்கா வரப்புல ஓடி மரத்துக்கு பின்னால ஒளிஞ்சு கண்டும் காணாம நானிருப்பேன், ஏன்னா அங்க தான அவ குளிக்க வரணும்...!! அர்ச்சனை தட்டு கையில இல்ல, கோயிலுக்குள்ள போக தகுதியில்ல, உயர் சாதி சாமி கும்பிட எனக்கு கொடுத்தும் வைக்கல, இப்போ நான் அதிகமா பேசவும் இல்ல, இருந்தாலும் அவள பாக்க காத்துக் கெடக்கேன், ஏன்னா ...

தமிழில் சர்ச்சை நடிகை பூனம் பாண்டே

Posted: 12 Jan 2015 09:06 AM PST

- கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி யின் போது, "இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாகக் காட்சி அளிப்பேன்," என்று அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி யவர் பூனம் பாண்டே. இவர் தற்போது 'மைதிலி அன் கோ' என்ற படத்தில் நடிக் கிறார். இதில் அவருடன் பாண்டிய ராஜன், சுமன், துப்பாக்கி வில்லன் ஜாகீர் உசேன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப் பதிவு சி.ராம்; பாடல்கள் சினேகன், இந்து. "இப் படம் வித்தியாசமான கதைக் களம் கொண்டது. சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் ...

நடிகை அஞ்சலியின் சாதுர்யம்

Posted: 12 Jan 2015 08:55 AM PST

-- தற்போது 'அப்பாடக்கர்' படத்தில் நடிக்கும் அஞ்சலி, அப்பட நாயகன் ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறார். இதே படத்தில் இன்னொரு நாயகியாக திரிஷா இருந்த போதும், அஞ்சலி காட்டும் நெருக்கத்தால் அவரிடமே படப்பிடிப்புத் தளத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி. இந்த நட்பைப் பயன்படுத்தி அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் தனக்கு நாயகி வாய்ப்பு கேட்டு, அதே இடத்தில் ஒப்பந்தம் போடுகிறாராம் அஞ்சலி

osho books - தந்திரசாஸ்திரம்

Posted: 12 Jan 2015 07:26 AM PST

ஹலோ நண்பர்களே
                      ஓஷோ வின் புக் இருந்தால் என்னக்கு தெரியபடுத்துங்கள் ....தந்திரசாஸ்திரம்

அண்ணா – என்று சொன்னதால் பல காதல்கள் அழிந்துள்ளன…!

Posted: 12 Jan 2015 06:25 AM PST

- - கோயில் நிர்வாகத்தினர் …கடவுளை விட கண்காணிப்பு கேமராக்களை அதிகம் நம்புகின்றனர் - -தமிழ் ரிப்போர்ட்டர் - ———————————————————————- - ஒரு கையில் குடையை பிடிச்சுக்கிட்டு, இன்னொரு கையில் போனை நோண்டிக்கிட்டே நம்மளையும் பார்த்துட்டு, பஸ் வருதான்னும் …பாவம்தான் இந்த பொண்ணுங்க…! - –யெஸ் டி.என் - ————————————————————————- - பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறீங்கன்னு என்பது பெறோருக்கான வாழ்நாள் சாதனை விருது…! - – பிரியா - —————————————————————————– - அண்ணா என்று சொல்லி பல கட்சிகள் வளர்ந்ததுண்டு, பல ...

உதய சூரியன் நாடு - பொது அறிவு தகவல்

Posted: 12 Jan 2015 03:52 AM PST

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 12 Jan 2015 02:48 AM PST

நித்திய வாழ்க்கை…!! * நல்ல காலம் பிறந்து விட்டதென்று அவசர அவசரமாய் கல்யாணப் பொறுப்புகளைப் படபடவென்று பார்க்கத் தொடங்கினர். ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது ஒன்பது பொருத்தம் பார்த்தனர். இலட்சங்களை வாரி இரைத்து இறுமாப்போடு ஊர்ப் போற்றும் சீர்வரிசையோடு திருமணம் செய்து முடித்தனர். எத்தனை நொடிகள்? நிமிடங்கள்? எத்தனை நாள்கள்? மாதங்கள்? எத்தனை வருடங்கள்? தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியோடு வாழ்ந்தாய். சின்னச் சின்னச் சிணுங்களின் சிக்கல்களில் விழுந்தாய். சிந்தைத் தடுமாறினாய் மனஇறுக்கமானாய் மனமுறிவு ...

அப்படியா..! பொது அறிவு தகவல்

Posted: 12 Jan 2015 02:12 AM PST

 இந்தியாவில் பலாப்பழமும், சீனாவில் சாத்துக்குடி பழமும், அமெரிக்காவில் சீத்தாப்பழமும் தோன்றியது. - ------------------------------------------------------- -  1888-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் தொடர்ச்சியாக மணியடித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் சைக்கிளை ஒரு வாகனமாக அங்கீகாரம் செய்தது. ---------------------------------------------------------------------- -  இடது கைப்பழக்கம் உள்ளவர்களை விட வலது கைப்பழக்கம் உடையவர்கள் ஒன்பது ஆண்டுகள் அதிக ஆயுளுடன் வாழ்வர். - ---------------------------------------------------------------------- -  ...

கன்னியர் படையை நியமித்ததுதான் காரணம்..!

Posted: 12 Jan 2015 02:03 AM PST

மகாராணி ரொம்ப ஒல்லியா இருக்கிறாராம்…!

Posted: 12 Jan 2015 01:57 AM PST

- என்னோட காதல் கல்யாணத்துல முடிஞ்சுட்டுது..! - சந்தோஷம்தானே..? - அவ வேறொருத்தனைக் கட்டிக்கிட்டது செம சந்தோசம்தான்…! - ————————————————————————————— - என் மனைவி பேசினா என்னை 'வியக்க' வெச்சிடுவா…! - என் மனைவி பேசியே என்னை 'வியர்க்க' வெச்சிடுவா…! - ———————————————————————————- - நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்கே..! - அட அது மன்னர் வளைகுடா இல்லை, மன்னார் வளைகுடா…! - —————————————————————————————— - மன்னர் 3டி கண்ணாடி வேண்டும்னு அடம் பிடிக்கிறாரே…! - மகாராணி ரொம்ப ...

ஹா…ஹா… என சிரியுங்கள் ‘ஹார்ட் அட்டாக்’ வராது…!

Posted: 12 Jan 2015 01:53 AM PST

- கண்ணீர் விடும் அளவுக்கு சிரிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது. நாம் சிரிக்கும் பொழுது சுரக்கும் 'என்டார்பின்' உடல் வலியை நீக்கி, உற்சாகமான மனநிலையை உண்டாக்குகிறது. மூளையின் 'ஹைப்போதலமாஸ்' நைட்ரிக் ஆக்சைடை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் இருதயத்தின் ரத்தக்குழாய்களில் உள்ள 'என்டோ' திசுக்கள் விரிவடைகின்றன. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்தம் உறைதலும் தடுக்கப்படுகிறது. சிரிக்கும் பொழுது மூளையில் உள்ள ஒரு லட்சம் மைல் நீளமுள்ள ரத்தக்குழாய்களுக்கும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறது. கன்னத்தின் ...

சிங்கப்பூர் சுற்றுலா - ரிவர் ச்பாரி - புகைப்படங்கள்!

Posted: 12 Jan 2015 01:43 AM PST


-

-

-

=
-தொடரும்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Posted: 11 Jan 2015 10:12 PM PST

- நீ கண்ணாடி உன்னைப் பார்ப்பதென்பது என்னைப் பார்ப்பதாகும் - நான் இருளும்போது என் நட்சத்திரங்கள் வெளிப்படுகின்றன - காதலர்கள் தரும் உயிர்ப் பிச்சையால் பிழைத்துக் கொண்டிருக்கிறது காதல் - வாழ்க்கை என்பது புதினம் எழுதப்படுவதற்கு முன்பே அதன் முன்னுரையும் முடிவுரையும் எழுதப்பட்டு விடுகின்றன . இந்தப் பூக்களில் எவை மணமாலைக்கு ? எவை பிணமாலைக்கு ? என் பயணத்தின்போது கேள்விகளையே என் பெட்டி படுக்கையாய் எடுத்துச் செல்கிறேன் . - நிலாவுக்குக் கொஞ்சம் கூட வெட்கமில்லை என்னைப் பார்க்கும்போதெல்லாம் அழைக்கிறாள் ...

செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Posted: 11 Jan 2015 08:50 PM PST


-
பொங்கல் திருநாளை முன்னிட்டு,
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு இடங்களில்
இருந்து கரும்புகள் வரத்தொடங்கி விட்டது.
-
-தினகரன்
-

பிள்ளையார் பிள்ளையார்

Posted: 11 Jan 2015 08:48 PM PST

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரையின் ஓரத்திலே அரசமரத்தின் நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் மண்ணினாலே செய்திடினும் மஞ்சளினாலே செய்திடினும் ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார் அவல்பொரி கடலையும் அரிசிகொழுக் கட்டையும் கவலையின்றி தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார் கலியுகத்தின் விந்தையை காணவேண்டி அனுதினமும் எலியின்மீது ஏறியே இஷ்டம்போல சுற்றுவார் பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்

இருள் என்பது குறைந்தபட்ச ஒளி

Posted: 11 Jan 2015 06:36 PM PST

- இந்தக்காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் ! - >அமுதபாரதி - ———————————————- -'"இருள் என்பது இருட்டு அல்ல குறைந்தபட்ச ஒளி - பாரதியார் - ————————————- - ஒளி எல்லா இடங்களில் ஒளிந்திருக்கிறது அது சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது மேகத்திலிருந்து மின்னலைப் போல் கல்லிலிருந்து தீப்பொறி போல் கவிதையும் அப்படித்தான் ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது ! கவிஞனுக்குள்ளும் இருக்கிறது ! - கவிக்கோ அப்துல் ரகுமான் (கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை – நூல் முன்னுரையில்) —————————

பிள்ளையார் நால்வர்

Posted: 11 Jan 2015 05:54 PM PST

சின்னஞ்சிறு குழந்தைகளைப் பிள்ளை என்று அழைப்பார்கள். விநாயகப்பெருமான் சிவபெருமானுக்குப் பிள்ளை என்பதால் "ஆர்' என்பதைச் சேர்த்து இவர் "பிள்ளையார்' என்று போற்றி வணங்குகிறோம். இலக்கியங்களில் பிள்ளையார் என்று நால்வரைப் போற்றுகிறார்கள். விநாயகர் ஈசனின் முதல்பிள்ளை என்பதால் "மூத்த பிள்ளையார்' ஆனார். முருகப் பெருமானை இளையபிள்ளை என்பதால் "இளைய பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். சீர்காழியில் அவதரித்த ஞான சம்பந்தருக்கு "காழிப்பிள்ளையார்' என்று பெயர். சேய்ஞலூரில் பிறந்த ...

பாடிய முதல் பாட்டு

Posted: 11 Jan 2015 04:49 PM PST

- -  பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. -  டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. -  பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' -  ...

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று

Posted: 11 Jan 2015 04:06 PM PST

- விவேகானந்தர் மறைவதற்கு முன் உலகிற்கு வழங்கிய கடைசி உபதேசம் இது: இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி. உலக வரலாற்றில் சில நாடுகள் சில சமயங்களில் எழுச்சி பெற்றிருக்கும்; உலக வரலாற்றில் சில சமயங்களில் சில நாடுகள் வீழ்ச்சி பெற்றிருக்கும். ஆனால் இந்தியா அமரத்துவம் வாய்ந்த பூமி. இறைவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றும் வாழும். அரசியலையும், சமூகச் சச்சரவுகளையும் தேடிப் போனால் இந்தியா செத்துவிடும். - ----------------------

பிப்.25 முதல் 2ஜி அலைக்கற்றை ஏலம்

Posted: 11 Jan 2015 03:35 PM PST

2ஜி, 3ஜி அலைக்கற்றைக்கான அடுத்த கட்ட ஏலம் பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: 800 மெகாஹெர்ட்ஸ், 900 மெகாஹெர்ட்ஸ், 1,800 மெகாஹெர்ட்ஸ், 2,100 மெகாஹெர்ட்ஸ் ஆகிய நான்கு அலைவரிசைகளுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் தருவதற்கான கடைசித் தேதி, பிப்ரவரி 6-ஆம் தேதியாகும். ஏலம் பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கும். 2-ஜி தொழில்நுட்பத்திலான 800, 900, 1,800 மெகாஹெர்ட்ஸ் ...

பிலாய் இரும்பு ஆலையில் டெக்னீசியன் பணி

Posted: 11 Jan 2015 03:32 PM PST

இந்திய ஸ்டீல் ஆணையத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிலாய் இரும்பு ஆலையில் காலியாக உள்ள Operator-cum-Technician (Trainee) மற்றும் Attendant -cum-Technician(Trainee) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Operator-cum-Technician (Trainee) காலியிடங்கள்: 439 சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110 வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் மூன்று வருட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™