Tamil News | Online Tamil News |
- மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?
- குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
- 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா ஜெ.? அ.தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு
- ஐ.எம்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: வெளிநாடுகளில் வெடிகுண்டு பயிற்சி
- 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
- காங்., தலைவராக பிரியங்காவை நியமிக்கணும்! அலகாபாத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை
- மின்சார இணைப்பு உள்ள வீடுகளுக்கு மண்ணெண்ணெய் வினியோகம் 'கட்?'
- ஓட்டலில் பா.ஜ., - எம்.பி.,க்கள் சுகவாசம்: கோடிக்கணக்கில் அரசு பணம் 'ஸ்வாகா'
- டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7 தேர்தல்: பா.ஜ., - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., மோதல்
- திருவாரூர் கருணாநிதியாக மாறுவேன்: சென்னை கூட்டத்தில் கருணாநிதி பேச்சு
- சிட்பண்ட் மோசடி விசாரணைக்கு ஆஜராகுங்க: மம்தா பானர்ஜி உதவியாளருக்கு சி.பி.ஐ., 'சம்மன்'
- சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு
- ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம்
| மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? Posted: 'மது அருந்த விட்டு, வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளால், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என, தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதால், தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 6,830 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயித்துள்ள விலையில், நாள்தோறும் சராசரியாக, 70 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன. மொத்தம் உள்ள டாஸ்மாக் கடைகளில், தேசிய நெடுஞ்சாலை, 504; மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, 1,500 கடைகள் உள்ளன. 'குடித்து விட்டு வாகனம் ... |
| குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை Posted: ''தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யக் கூடாது,'' என, விஜயகாந்த் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகண்டை கூட்டு ரோட்டில், நேற்று நடந்த பொங்கல் விழாவில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: தமிழகத்தில், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்புக்கு, 300 ரூபாய் கூடுதலாக கொடுக்கும்படி கூறிய பின்னும், தனியார் ஆலைகள் தர மறுக்கின்றன. விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசே இப்பணத்தை தர வேண்டும்.தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை ... |
| 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா ஜெ.? அ.தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு Posted: 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு, ஜெயலலிதா வருவாரா?' என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டு உள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். தற்போது ஜாமினில் வெளி வந்தாலும், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால், இத்தேர்தலில், அவர் போட்டியிட முடியாது. எனினும், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய, அவர் ... |
| ஐ.எம்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: வெளிநாடுகளில் வெடிகுண்டு பயிற்சி Posted: பெங்களூரு: பெங்களூரு, சர்ச் தெரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட, நான்கு பயங்கரவாதிகளிடம் இருந்து, இந்தியன் முஜாஹுதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உட்பட, பல, 'திடுக்' தகவல்கள் கிடைத்துள்ளன.பெங்களூரு, சர்ச் தெரு குண்டு வெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு குழுவினர், நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சையது இஸ்மாயில் அபக், சதாம் உசேன், அப்துல் சுபூர், ரியாஸ் அஹமது ஆகியோரிடம், தேசிய புலனாய்வு குழுவினரும் (என்.ஐ.ஏ.,), வெவ்வேறு மாநிலங்களின் விசாரணை குழுவினரும் தீவிர விசாரணை நடத்தியபோது, பல அதிர்ச்சிகரமான, பயங்கரவாத செயல்பாடுகள் தெரிய ... |
| Posted: தமிழக அரசு துவக்கியுள்ள 'அம்மா' சிமென்ட் திட்டத்தால், வெளிமார்க்கெட்டில் சிமென்ட் விலை, மூட்டைக்கு, 100 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் குமுறுகின்றனர்.தமிழகத்தில், 'அம்மா' சிமென்ட் என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனையை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சியில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் டன் 'சிமென்ட்', ஏழு தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, 470 குடோன்களில் இருப்பு வைக்கப்படவுள்ளது.'ஒரு மூட்டை (50 கிலோ), 185 ரூபாய்க்கு ... |
| காங்., தலைவராக பிரியங்காவை நியமிக்கணும்! அலகாபாத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை Posted: அலகாபாத்: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில் இன்று கூட உள்ள நிலையில், 'பிரியங்காவை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும்; கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங்கை வெளியேற்ற வேண்டும்' என, அலகாபாத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை கிளம்பி உள்ளது.அடுத்தடுத்து தோல்வி: லோக்சபா தேர்தலிலும், அடுத்து சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. லோக்சபாவில், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்ததால், கட்சியை புனரமைப்பதற்கான செயல் திட்டத்தை ... |
| மின்சார இணைப்பு உள்ள வீடுகளுக்கு மண்ணெண்ணெய் வினியோகம் 'கட்?' Posted: புதுடில்லி: ''மின் இணைப்பை கொண்டுள்ள வீடுகளுக்கு, மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கக் கூடாது என, மத்திய அரசுக்கு பலர் யோசனை தெரிவித்துள்ளனர்,'' என்று, மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். |
| ஓட்டலில் பா.ஜ., - எம்.பி.,க்கள் சுகவாசம்: கோடிக்கணக்கில் அரசு பணம் 'ஸ்வாகா' Posted: புதுடில்லி: பிரதமர் மோடி, 'சிக்கனம் தேவை இக்கணம்' என, கொள்கை முழக்கமிட, அவரது கட்சி எம்.பி.,க்களோ, கோடிக்கணக்கான அரசு பணத்தில், ஓட்டல்களில் சுகவாசம் செய்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. |
| டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7 தேர்தல்: பா.ஜ., - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி Posted: புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு, பிப்., 7ம் தேதி, தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 14ம் தேதி துவங்கி, 21ம் தேதி முடிவடைகிறது. சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், பிப்., 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.டில்லி சட்டசபைக்கு, 2013 டிச., 4ம் தேதி, தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், பா.ஜ., - 31, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி - 28, காங்., - 8, இதர கட்சி கள் மூன்று இடங்களையும் பிடித்தன. |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., மோதல் Posted: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.,வாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், பிப்., 13ம் தேதி நடைபெறும் என, தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத், டில்லியில் நேற்று அறிவித்தார். இத்தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., கட்சிகள் தனித்தனியே களம் இறங்க உள்ளதால், நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நேற்று இரவே கரைவேட்டியினர், திருச்சிக்கு புறப்பட்டனர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா 1,05,328 ஓட்டுகள் பெற்றார். 41,840 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி ... |
| திருவாரூர் கருணாநிதியாக மாறுவேன்: சென்னை கூட்டத்தில் கருணாநிதி பேச்சு Posted: சென்னை: ''மயிலாப்பூர் கருணாநிதியாக இருக்க மாட்டேன்; திருவாரூர் கருணாநிதியாக மாறிவிடுவேன்; தி.மு.க., கழகத்தை சுலபமாக யாரும் அழிக்க விட மாட்டேன்,''என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.சென்னை மயிலாப்பூரில் நேற்று இரவு நடந்த, தி.மு.க., பொதுகூட்டத்தில் கருணாநிதி பேசியாவது:தி.மு.க., என்பது போஸ்டர்கள் ஒட்டும் கட்சியல்ல. திராவிட இன உணர்வுள்ள கட்சி. தி.மு.க, தொடர்ந்து நீடிக்க கூடாது என, தமிழகத்தில் சிலர் எண்ணுகின்றனர். தி.மு.க., வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் எல்லா நிலைகளையும் சமமாக கருதி, தியாகத்தால் வளர்ந்த கட்சி.என் கழகம், என் கட்சி என, நான் ... |
| சிட்பண்ட் மோசடி விசாரணைக்கு ஆஜராகுங்க: மம்தா பானர்ஜி உதவியாளருக்கு சி.பி.ஐ., 'சம்மன்' Posted: கோல்கட்டா:சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக, மம்தாவின் முக்கிய உதவியாளரான, முகுல் ராயிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஏமாற்றம்:மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா உட்பட, சில நகரங்களில் செயல்பட்ட நிறுவனம் சாரதா சிட்பண்ட். கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் நிதி திரட்டிய இந்நிறுவனம், சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. முதலீடு செய்த ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், இந்த மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சாரதா சிட்பண்ட் நிறுவன நிர்வாகி, திரிணமுல் காங்கிரசை சேர்ந்த சிலர் ... |
| சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு Posted: புதுடில்லி:காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், தங்கள் மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளதை அடுத்து, டில்லி போலீசார் இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணையை துவங்கியுள்ளனர். டில்லி சென்றார்:இதற்கிடையே, சில நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த காங்., - எம்.பி., சசி தரூர், நேற்று டில்லி சென்றார். இதனால், சுனந்தா கொலை வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தக் கூடும் ... |
| ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம் Posted: புது டில்லி:ஆந்திராவில் உள்ள 1.2 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ.150 கட்டணத்தில் வினாடிக்கு 15 எம்.பி. வேகத்துடன் கூடிய இணையதள சேவை அளிக்க அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.இதுதொடர்பாக ஆந்திர அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிப்பதாவது:இணையதள வசதிக்காக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில், தேசிய கண்ணாடி இழைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திரத்தில் இந்த திட்டத்தை மாநில அரசே செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 13,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |