ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழர்களால் நான் தோற்கடிக்கபட்டிருக்கிறேன் ராஜபக்ஷே
- தமிழர்களால் நான் தோற்கடிக்கபட்டிருக்கிறேன். .
- கொடுக்கும் குணம் இருந்தால்...
- எல்லாராலும் செய்ய முடிந்த வழிபாட்டு முறைகள்
- சுறுசுறுப்புடன் வாழ்வோம்!
- ஒரு நிமிடக் கதை: உளவியல் !
- அடுத்த தலைமுறை பொங்கல்!
- கட்சிக்குத் தேவைப்பட்டல் கவர்ச்சி காட்டுவேன்..!
- 108
- - மாரப்பன் (எ) அய்யனார்
- காது வலிக்கான யோகா
- ஈகரையில் என் முதல் பதிவு.
- உதவி தேவை
- ஜென் கதை: கோபம் இயல்பா?
- ஒரு நிமிடக் கதை- மனசு!
- ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!
- ஒரு நிமிட கதை- பரிவு !
- ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை !
- காசோலை எங்கே - சிறுவர் கதை
- பெண்களின் கருமுட்டையைஉறைய வைப்பதற்காக சுமார் 20,000 டாலர்கள்!
- கடி ஜோக்ஸ்
- உணவுகளின் போட்டோகள் ! :)
- நாளை மார்கழி 27 கூடாரவல்லி-எனது 30000வது பதிவு -கிரிஷ்ணாம்மா!
- அது ஒரு நிலா காலம் - ஸ்டெல்லா புரூஸ் நாவல் .
- ஃபிளைட் –731 - இரும்புக்கை மாயாவி தோன்றும் காமிக்ஸ் .
- என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?
- சென்னை - புத்தகத் திருவிழா
- பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன?
- படிப்புல ரொம்ப அசைவமா இருக்கான்..!
- அருமையான வீடியோக்கள் ..............
- நேரம் கழித்து வீட்டுக்குப் போனால் மனைவி...
- எம்.பி.கட்டின புது பங்களாவை ஏன் அப்படி பார்க்கிறே..?
- பழநி - பொள்ளாச்சி ரயில் சேவை துவக்கம்
- இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory
- வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு
| தமிழர்களால் நான் தோற்கடிக்கபட்டிருக்கிறேன் ராஜபக்ஷே Posted: 10 Jan 2015 02:37 PM PST தமிழர்கள் ஓட்டளிக்கவில்லை :அவர் தன் ஊர்க்காரர்கள் மத்தியில் பேசியதாவது : வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் எனக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு ஓட்டளிக்கவில்லை. இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டளிக்காததால் நான் தோல்வி அடைந்தேன். தமிழர்களால் நான் தோற்கடிக்கபட்டிருக்கிறேன். தமிழர்களின் ஓட்டுக்களால் கிடைத்த இந்த தோல்வியை ஒருபோதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நான் தோல்வியாக கருதவில்லை. நான் அதிபர் தேர்தலில் தோற்றாலும் சிங்களர்களிடம் ... |
| தமிழர்களால் நான் தோற்கடிக்கபட்டிருக்கிறேன். . Posted: 10 Jan 2015 02:35 PM PST தமிழர்கள் ஓட்டளிக்கவில்லை வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் எனக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு ஓட்டளிக்கவில்லை. இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டளிக்காததால் நான் தோல்வி அடைந்தேன். தமிழர்களால் நான் தோற்கடிக்கபட்டிருக்கிறேன். இவ்வாறு ராஜபக்ஷே கூறினார். |
| Posted: 10 Jan 2015 02:22 PM PST கொடுக்கும் குணம், எல்லாருக்கும் வராது. அந்த குணம், கோடியில் ஒருவருக்குத் தான் இருக்கும் என்கிறார் அவ்வையார். மகாபாரத நூல்கள் பலவும், கர்ணனைப் பற்றி பலவிதமாகக் கூறினாலும், கர்ணனின் கொடைத் தன்மையைப் பற்றி பேச, அந்நூல்கள் தவறவில்லை. விளைவு? 'கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை; கார்த்திகைக்குப்பின் மழையும் இல்லை...' என்ற பழமொழியே உருவாகி விட்டது. அடுத்தவர்கள், நமக்கு அன்பளிப்பாக 1,000 ரூபாய் கொடுத்தாலும், அதிலிருந்து ஐந்து ரூபாயை, தர்மம் செய்ய மனம் வர மாட்டேன் ... |
| எல்லாராலும் செய்ய முடிந்த வழிபாட்டு முறைகள் Posted: 10 Jan 2015 02:13 PM PST திருமந்திரம் - யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒருவாய் உறை யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே. - பொருள்: ஒரு பச்சிலையை எடுத்து இறை வனுக்கு சாற்றலாம்; ஒரு பிடி புல்லை பசுவிற்கு தரலாம்; பசியால் தவிப்பவருக்கு ஒரு பிடி உணவு அளிக்கலாம்; அடுத்தவர்களிடம் இனிமையாக பேசலாம்; எல்லாராலும் செய்ய முடிந்த வழிபாட்டு முறைகள் தான் இவை. இவற்றை செய்வதற்கு பொருள் வசதி வேண்டும் என்பதில்லை; மனமிருந்தால் போதும். 0 |
| Posted: 10 Jan 2015 02:09 PM PST - பறவை, விலங்கு, ஏன்...மனிதனுக்கும் கூட இருட்டைக் கண்டால் பயம் வந்து விடுகிறது. பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் பறவையினங்கள் தங்கள் இனிய குரலில் கூவுகின்றன. இரை தேடக் கிளம்புகின்றன. இவ்வகையில் சூரியன் பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும் திகழ்கிறார். சூரிய புராணத்தில் ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் துர்வாச முனிவர், பாண்டவர்களின் தாய்வழி தாத்தாவான குந்திபோஜனின் அரண்மனைக்கு வந்திருந்தார். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருந்த அவருக்கு பணிவிடை செய்ய, தன் மகள் ... |
| Posted: 10 Jan 2015 02:02 PM PST உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த குருமூர்த்தி குழந்தைகள் கையில் பழங்களைக் கொடுத்தபடி மனைவி வித்யாவை அழைத்தான். "வித்யா! 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல புதிய வேலை கிடைச்சிருக்கு. இனியும் இந்த பாவப்பட்ட ஜனங்க வசிக்கிற இடத்துல இருக்க வேண்டாம்னு தோணுது. கொஞ்சம் வசதியானவங்க இருக்கிற இடத்துக்கு மாறிடலாம்னு தீர்மானிச்சுட்டேன்" – உற்சாகமாய்ச் சொன்னான் குருமூர்த்தி. "10 வருஷமா இங்கதானே இருக்கோம். இப்போ எதுக்கு இடம் மாறணும்?" –வித்யா புருவத்தைச் சுருக்கியபடி கேட்டாள். "அடுத்த வாரமே கார் வாங்கப்போறேன். ... |
| Posted: 10 Jan 2015 02:00 PM PST - இரண்டொரு நாட்களுக்கு முன் தேரில் வருவாள் என எதிர்பார்த்த என் தைமகள் காரில் வந்திறங்கி, ஒரு கவிஞனின் கைபற்றி கதறி அழுததை, கனவில் கண்டேன்! அடுத்த தலைமுறையின், 'அபாக்கஸ்' ஆதிக்கத்தில் அழிந்து போன தமிழனின் தைத்திருநாள் கொண்டாட்டம்தான் அவள் அழுகையின் அர்த்தம் எனப் புரிந்தது! ஏ போக்கத்த அடுத்த தலைமுறையே கொஞ்சம் போகியை பற்றி கேள்... வாசலில் மாக்கோலம்... நடுவிலே பூசணிப்பூ வீடு சுற்றி மா, வேம்பு, ஆவாரம் பூ என கட்டிய பின், ஊர் திரளும் ஓரிடத்தில் சொக்கபானை கொளுத்தி, சொக்கி போய் ... |
| கட்சிக்குத் தேவைப்பட்டல் கவர்ச்சி காட்டுவேன்..! Posted: 10 Jan 2015 01:55 PM PST ![]() |
| Posted: 10 Jan 2015 01:04 PM PST தமிழ் டீச்சர், ஆங்கில டீச்சர், கணித டீச்சர் மூவரும் ஒரு விபத்தில் சிக்கினார்கள். தமிழ் டீச்சர் ' உதவி...உதவி...' என்று கத்தினார். ஆங்கில டீச்சர் ' ஹெல்ப்.. ஹெல்ப்...' என்று கத்தினார். கணித டீச்சர் ..... ' 108... 108....' என்று கத்தினார். !!! |
| Posted: 10 Jan 2015 12:35 PM PST - வழக்கத்துக்கு மாறாக மாரப்பன் மீது அய்யனார் வந்தது இதுவே முதல்முறை - ஒரு போத்தல் சாராயமும் வறுத்த முழுக் கோழியும் நாட்டாமைதான் படைக்க வேண்டுமென உத்தரவிட்டதால் நாட்டாமை பொண்டாட்டி நடுங்கியபடி கொண்டுவந்து படையலிட்டாள் - நாக்கைச் சுழற்றியபடி மிச்சம் வைக்காமல் உருட்டிய விழிகளுடன் தின்று முடித்தார் மாரப்பன் (எ) அய்யனார் - கைதுடைக்க நாட்டாமை தோளில் கிடந்த துண்டை பவ்யமாக தந்தபோது அய்யனார் (எ) மாரப்பனுக்கு நினைவு வந்தது ஒரு வாரம் முன்னதாக நாட்டாமை முன்பாக தோளில் துண்டோடு நின்றதற்காக மாரப்பன் ... |
| Posted: 10 Jan 2015 12:32 PM PST Shunya mudra. காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும். |
| Posted: 10 Jan 2015 12:24 PM PST இவரை பாராட்டலாம் வாங்க ! புதுச்சேரி கடற்கரையில் சுண்டல் விற்பனை செய்யும் Mr பழனிராஜ் படிப்புக்காக தனது அண்ணனுடன் கைகோர்த்து சுண்டல் வாளியை தூக்கியபடி, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் சுண்டல் விற்பனை செய்து வருகிறார், பிஎச்டி பட்டதாரியான பழனிராஜ். புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞரை பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் ... |
| Posted: 10 Jan 2015 12:09 PM PST பதிவில் நேரம் தவறாக உள்ளது. எப்படி சரி செய்வது ? படம். ஸ்மைலீஸ். மேற்கோள் போன்றவை இணைப்பது எவ்வாறு ? பெயரை தமிழில் மாற்ற ? |
| Posted: 10 Jan 2015 12:04 PM PST கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று முறையிட்டான், "என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை குருவே. கோபத்திலிருந்து மீள ஏதாவது வழி சொல்லுங்கள்." குரு அவனிடம்,"கோபம் கோபம் என்கிறாயே, அந்த உனது கோபத்தை எனக்குக் கொஞ்சம் காட்டு" என்றார். கோபத்தை எப்படிக் காட்டுவது என சீடனுக்குக் குழப்பமும் ஆச்சரியமும். "தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது" என்று பதில் சொன்னான். குரு அதற்குப் பொறுமையாக, "அதனால் பிரச்சினை இல்லை. உனக்குக் கோபம் ... |
| Posted: 10 Jan 2015 12:03 PM PST விவாகரத்து கிடைத்து விட்டது. நிர்மலா நீதிபதியை நன்றியோடு பார்த்தாள். நரேனின் முகம் வாடிப்போயிருந்தது. குமரன் மகளிடம் வந்தார். "இனி என்னம்மா பண்ணப் போறே?" என்று கேட்டார். "அப்பா!... என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. ஆண்டவன் இருக்கான்!" ஏனோ தெரியவில்லை. முதல் பார்வையிலே அவளுக்கு நரேனை பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் சொல்லிப் பார்த்தாள். எடுபடவில்லை. அப்பா பிடிவாதமாக இருந்தார். கல்யாணத்தை முடித்தார். ஒட்டுதல் இல்லாமலே ஆரம்பித்த வாழ்க்கை. வெறுப்பைத்தான் தந்தது. அவள் மனசை தொடும் விதமாக ... |
| Posted: 10 Jan 2015 12:01 PM PST உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். "ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!" என்று கெஞ்சினார். "என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க" ... |
| Posted: 10 Jan 2015 12:00 PM PST "ஏம்மா, உன்னை சீக்கிரமா கிளம்பத் தானே சொன்னேன்?..."- என்று அம்மாவிடம் சிடுசிடுத்த ராகவன், மனைவியிடம் சென்று, "ஏய்...அம்மாவுக்கு சீக்கிரம் டிபன் வை. நான் ஆபிஸ் போகும்போது அவங்களை பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுப் போயிடறேன்" என்றான். "ஊருக்கு கிளம்பற அம்மாகிட்ட ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்க? நீங்க கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்ட மாதிரி படபடக்கறது அவங்களுக்கு சரிப்பட்டு வராது. நீங்க கிளம்புங்க. அவங்க வயசானவங்க. நிதானமா கிளம்பி ஆட்டோவுல போவாங்க. நான் அவங்களை வழி அனுப்பி வைக்கிறேன்!" ரமா சொன்னாள். ரமா ... |
| ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை ! Posted: 10 Jan 2015 11:58 AM PST "நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க யாரோட அவ்வளவு சுவாரஸ்யமா போன்ல பேசிட்டு இருக்கீங்க?!" சுதா கேட்கிறாள். அதைப் பொருட்படுத்தாத அருண் போனில் நிதானமாக "நான் வீட்லதான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...!" என்று பேசிவிட்டு போனைத் துண்டித்தான். "இப்ப சொல்லு. என்ன உன் பிரச்சினை?... எதுக்கு நீ இப்ப இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கே?" அருண், மனைவியிடம் கேட்டான். அதற்கு சுதா, "என்னால இனி இங்க ஒரு நிமிஷம்கூட இருக்க ... |
| Posted: 10 Jan 2015 11:50 AM PST |
| பெண்களின் கருமுட்டையைஉறைய வைப்பதற்காக சுமார் 20,000 டாலர்கள்! Posted: 10 Jan 2015 11:43 AM PST பெண்களின் கருமுட்டையைச் சேமிக்க புதிய சலுகைகள்: கார்ப்பரேட் நிறுவனங்கள் தருவது வரமா சாபமா? தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் கரு முட்டையை உறைய வைக்கும் மருத்துவ செலவை முற்றிலும் தாமே ஏற்றுக்கொள்வோம் என்ற சலுகையை பிரபல கணிகனி மற்றும் இணையதள நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் கடந்த மாதம் அறிவிததுள்ளன. இச்செய்தி உலகம் முழுவதும் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அலுவலகப் பணியின்மீதுள்ள ஆர்வத்தினாலும் வேலைச்சுமையாளும் இளம்பெண்கள் தாய்மையை தவறவிடும் அவலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ... |
| Posted: 10 Jan 2015 11:32 AM PST - "ஒரு நாய் வேகமா ஓடி வந்து ஒரு கடை முன்னால நின்னு மூச்சு வாங்கிச்சு.." - "அந்த கடையிலே மூச்சு விக்கறாங்களா என்ன?" - ம.அக்ஷயா, அரூர். - ————————————— - "தம்பி, நீ என்ன படிச்சிருக்கே?" - ""பி.ஏ…." - "படிச்சது ரெண்டு எழுத்து, அதையும் தலைகீழா படிச்சிருக்கியே" - மு.சுகாரா, தொண்டி. ————————————- "சுதந்திர தேவியின் சிலை ஒரு கையில் புத்தகமும் இன்னொரு கையில் விளக்கும் ஏன் வைத்திருக்கிறது தெரியுமா?" ""தெரியலையே" ""இருட்டு வந்தா விளக்கு வெளிச்சத்துல படிக்கத்தான்" - ஜி.எஸ்.சபரி, - ——————————————- - "சார், ... |
| Posted: 10 Jan 2015 11:29 AM PST நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| நாளை மார்கழி 27 கூடாரவல்லி-எனது 30000வது பதிவு -கிரிஷ்ணாம்மா! Posted: 10 Jan 2015 10:37 AM PST மார்கழி 27 - 11.01.2015 - ஞாயிறு ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம் ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம் கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி. (திருக்கோவிலூர், ஞானானந்தா மிஷன், தபோவனத்திலிருந்து வெளிவரும் அருமையான ஆன்மீக இதழான ஞான ஒளி எனும் புத்தகத்தின் ஆசிரியர் மேன்மை மிகு ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன்அவர்கள் இதில் கீழ்காணும் கட்டுரையை மையமாகக் கொண்டும் மற்றும் பிற எழுத்தாளர்களின் ஆக்கங்களை துணை கொண்டும், தனக்கே உரித்தான ஆன்மீகத்தையும் அறிவியலையும் ... |
| அது ஒரு நிலா காலம் - ஸ்டெல்லா புரூஸ் நாவல் . Posted: 10 Jan 2015 09:39 AM PST ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரது வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். மூவருமே அவனை விரும்புகிறார்கள். ஒருத்தியை (சுகந்தா) அவன் மனதாரக் காதலிக்கிறான்; ஒருத்தி (லிஸா) மேல் அவனுக்கு லேசாக சபலம் ஏற்படுகிறது, ஒருத்தியை (ரோஸி) அவன் தன் மகளாக பாவிக்கிறான். மூவருடனான தனது உறவுநிலையைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் ராம்குமார், அந்த எல்லைக்குள்ளேயே அவர்களுடன் பழகி வருகிறான். அதை ... |
| ஃபிளைட் –731 - இரும்புக்கை மாயாவி தோன்றும் காமிக்ஸ் . Posted: 10 Jan 2015 09:38 AM PST லயன்&முத்துகாமிக்ஸில்வெளிவந்திருந்த சிறந்த கிளாசிக் கதைகளை தேர்ந்தெடுத்து காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிட்டு வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர். ஃபிளைட் –731 காமிக்ஸும் அதில் இடம்பெற்று காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தது என்பதின் மாற்று கருத்து இல்லை . ஃபிளைட் –731 & ஜானி in இலண்டன் (லாரன்ஸ்&ஜானிநீரோ) 2000 http://www.mediafire.com/download/hw9rq0g8f68cvwf/flight731-521080956.pdf |
| என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ? Posted: 10 Jan 2015 09:07 AM PST தூய்மை இந்தியா .கழிவு மேலாண்மையில்(Waste management) கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது எவ்வளவு அபத்தம்.எளிதில் மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் ,எலக்ட்ரானிக் கழிவுகளை பிரித்தாலே போதும் மற்ற குப்பைகள் ( காய்கறி கழிவுகள், காகிதங்கள், இறந்த உடல்கள் ,etc) மட்குண்ணிகளால் (decomposers) ஒரு சில மாதங்களில் சிதைக்கப்பட்டு மண்ணிற்கு உரமாகிவிடும். இதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் மண் எங்கே ? நகரத்தையும் ,கிராமத் தெருக்களையும் கான்கிரிட்டால் மூடிவிட்டோம். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. குப்பை ... |
| Posted: 10 Jan 2015 08:31 AM PST 09/01/15 (நேற்று) முதல் 21/01/15 வரை .. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கிவிட்டது புத்தகத் திருவிழா. நான் புத்தகத் திருவிழாவுக்குக் கிளம்பிட்டேன். நீங்கல்லாம்..? சும்மா ஒரு குறிப்பு..... நண்பர் Vediyappan Discovery Book Palace டிஸ்கவரி புக் பேலஸ்- அரங்கு எண் 543,544, 587,588 என் பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதை நூல் கிடைக்கும் |
| பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Posted: 10 Jan 2015 08:28 AM PST 1) வெள்ளைக்காரிக்கு வெள்ளைநிற மேலங்கி! - அது என்ன? - 2) பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? - 3) முத்துவெள்ளை உடம்பு! தண்ணீரில் மிதக்குது! - அது என்ன? - 4) மழையில்லே, வெய்யிலில்லே ஆகாயத்தில் பெரிய குடை!- அது என்ன? - 5) செக்கச்செவேல் சொம்பிற்குள் கருப்பு மணி முத்துக்கள்!- அது என்ன? - 6) அப்பன் சொரியன்,ஆத்தாள் சடைச்சி, பிள்ளை சர்க்கரைக்கட்டி!- அது என்ன? - 7) நாலுகால் உண்டு நகர முடியலே! சுமைதாங்கி ஆனேன் நான்!- அது என்ன? - 8) செம்பு நிறைய சிவப்பு முத்து!- அது என்ன? - --------------------------------------------------------------------- விடை ... |
| படிப்புல ரொம்ப அசைவமா இருக்கான்..! Posted: 10 Jan 2015 07:25 AM PST ![]() |
| அருமையான வீடியோக்கள் .............. Posted: 10 Jan 2015 07:15 AM PST இந்த சில வீடியோ க்கள் நான் தினமலரில் 'whats up ' பகுதி இல் பார்த்து ரசித்தது..........உங்களுக்காக அவற்றை 'டவுன்லோட்' செய்து ' you tube இல் போட்டு இங்கே பகிறுகிறேன் ...................ரசிக்கவும் எவ்வளவு simple , அவர்களின் டிரஸ் அப்படி இருப்பதால் நாம் ஏதோ 'கருப்பு டிரஸ் மனிதர்கள்'....'வெள்ளை டிரஸ் மனிதர்கள்' என்று நினைத்து விடுகிறோம் பாருங்கள் |
| நேரம் கழித்து வீட்டுக்குப் போனால் மனைவி... Posted: 10 Jan 2015 07:09 AM PST ![]() |
| எம்.பி.கட்டின புது பங்களாவை ஏன் அப்படி பார்க்கிறே..? Posted: 10 Jan 2015 06:55 AM PST - ஆனந்த விகடன் |
| பழநி - பொள்ளாச்சி ரயில் சேவை துவக்கம் Posted: 10 Jan 2015 03:46 AM PST பழநி: பழநி - பொள்ளாச்சி ரயில் பாதையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், நேற்று முதல், சிறப்பு ரயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. மதுரை கோட்டத்தில் இருந்து கேரள மாநிலம், பாலக்காடு வரை, 2008ல், ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த வழித்தடத்தில், ராமேஸ்வரம் - பாலக்காடு, கோவை - ராமேஸ்வரம் ரயில்கள் சென்று வந்தன. அகல ரயில்பாதை பணிக்காக, 2009ல், திண்டுக்கல் - பாலக்காடு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. இதில் முதற்கட்டமாக, திண்டுக்கல் - பழநி ... |
| இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory Posted: 10 Jan 2015 02:31 AM PST இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. இந்திய நியூட்ரினோ வானாய்வகம் (India-based Neutrino Observatory, INO) என்பது இந்தியாவின் தெற்கே தமிழ்நாட்டில் அமைக்கப்படவிருக்கும் துகள் இயற்பியல் ஆய்வு மையம் ஆகும். இங்கு முக்கியமாக வளிமண்டல நியூட்ரினோக்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெறும். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் குன்றுகளின் அடிவாரத்தில் 1300 மீட்டர் ஆழக் குகையில் 1359 கோடி உரூபாய் செலவில் இது அமைக்கப்படவிருக்கிறது. இந்தியாவில் ... |
| வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Posted: 09 Jan 2015 10:35 PM PST புதுடில்லி: வளர்ந்து வரும் நாடுகளுக்குசாதகமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக உலக வங்கி ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வருகிறது. வரும் ஆண்டிலும் இதே நிலைநீடிக்க கூடும். கச்சா .எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் இடையேயான வருமான பகிர்வு மாறி விட்டது.உற்பத்தி அதிகரித்த போதிலும் தேவை குறைந்து காணப்படுவதால் கச்சா எண்.ணெய் விலை சரிந்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


