Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


குழப்பம் விளைவிக்கும் ஆம் ஆத்மி கட்சி மீது மோடி பாய்ச்சல்: டில்லியில் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேச்சு

Posted:

புதுடில்லி: ''டில்லியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரமும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்,'' என, நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் உறுதி அளித்த பிரதமர் மோடி, ''குழப்பம் விளைவிக்கும் புரட்சிக்காரரான, ஆத் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தண்டிக்க வேண்டும்,'' என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். டில்லியில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், பா.ஜ., சார்பில், டில்லி ராம் லீலா மைதானத்தில், நேற்று பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொது வினியோக திட்ட உணவு தானியங்கள் திருட்டு

Posted:

புதுடில்லி:ஏழை, நடுத்தர மக்களுக்காக, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்கள், பயனாளிகளை முழுமையாக சென்றடைவதில்லை. அதனால், மத்திய அரசின் மானியச் சுமை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பொது வினியோக திட்டத்தில், 2011 - 12ம் நிதியாண்டில், 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் திருட்டு போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் திருடப்பட்டு வெளி சந்தையில் விற்கப்படுவது, போலி ரேஷன் கார்டுகள் மூலம் இந்தப் பொருட்களை ...

அவசர சட்ட மசோதாக்களை நிறைவேற்ற பார்லி., கூட்டு கூட்டம்: அருண் ஜெட்லி சூசக தகவல்

Posted:

புதுடில்லி: பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த, இரு வாரங்களுக்குள், ஏழு அவசர சட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமல்படுத்தியது, பல தரப்பிலும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.எனவே, இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க, நிலம் கையகப்படுத்துதல் உட்பட, சில சட்டங்களை நிறைவேற்ற, விரைவில் பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

விவாதம்:
இன்சூரன்ஸ் துறையில், அன்னிய நேரடி முதலீட்டை, 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க வகை ...

செய்யூர் அல்ட்ரா மெகா மின் திட்டம் கை நழுவியது: வங்கிகள் நிதி கொடுக்காததால் ஏலம் கேட்க தனியார் நிறுவனங்கள் தயாரில்லை

Posted:

புதுடில்லி: தமிழகத்தின் செய்யூர் மற்றும் ஒடிசாவின் பெடாபஹால் என்ற இடத்தில், அல்ட்ரா மெகா மின் திட்டங்களை துவக்கும் திட்டத்தை இப்போதைக்கு கைவிட்டுள்ளதாக, மத்திய அரசு நேற்று அறிவித்தது. அந்த திட்டங்களைச் செயல்படுத்த, தனியார் நிறுவனங்கள் முன்வராததால், இரு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டதாக, மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.இதனால், மின் பற்றாக்குறையால் திணறி வரும் தமிழகத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெண்டர்:
தமிழகத்தின் செய்யூரில், 4,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், அல்ட்ரா மெகா மின் ...

மானிய விலையில் சமையல் காஸ் வாங்காதீங்க! தினம் ஒரு வி.ஐ.பி.,யிடம் அமைச்சர் கெஞ்சல்

Posted:

புதுடில்:மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தினமும் ஒரு வி.ஐ.பி.,யை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'மானிய விலையில் சமையல் காஸ் பெறுவதை, கைவிட வேண்டும்' என, கேட்டு வருகிறார்.

சந்தை விலையில்...
:நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மானிய விலையில் சமையல் எரிவாயுவை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில், வசதி படைத்த பணக்காரர்களும் மானிய விலை காஸ் சிலிண்டரை வாங்கி வருகின்றனர். இதனால், 'அதிகரித்து வரும் மத்திய அரசின் மானியச் சுமை குறைய, வசதி படைத்தவர்கள், மானிய விலை சமையல் காஸ் வாங்குவதை கைவிட்டு, சந்தை விலையில் வாங்க வேண்டும்' என, ...

சகாயம் விசாரணையில் மதுரையில் 48 கி.மீ., நீளத்தில் 'கிரானைட் கோட்டை' கண்டுபிடிப்பு

Posted:

மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் 48 கி.மீ., நீளத்தில் கிரானைட் கற்களை அடுக்கி 'கிரானைட் கோட்டை' அமைத்தது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையில் நேற்று அம்பலமானது.கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று மதுரை மாவட்டம் இடையபட்டியில் விசாரணை நடத்தினார். 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியசூரியனேந்தல் கண்மாயில் 2009 முதல் 2011 வரை மீன் பிடிக்க பி.கே.மூர்த்தி என்பவர் ரூ.30 ஆயிரத்துக்கு டெண்டர் எடுத்தார். மீன் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், கண்மாயையொட்டி கிரானைட் குவாரி தனியாரால் துவக்கப்பட்டது. கண்மாயில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து கண்மாயை ...

குறைந்த விலைக்கு நெல் வாங்க வியாபாரிகள் அமைத்த கூட்டணியால் விவசாயிகள் கவலை

Posted:

தஞ்சாவூர்:காவிரி டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடை துவங்கிய நிலையில், வியாபாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து, நெல் கொள்முதல் விலையை குறைத்து வாங்குவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அமோக விளைச்சல் இருந்தும், கட்டுபடியாக கூடிய விலை கிடைக்க வில்லை என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில், 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. கடந்த ஆண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக, அதிகளவில் காவிரியில் தண்ணீர் வந்தது. இதையடுத்து, சம்பா பருவ ...

தமிழர்கள் தயவில் ஆட்சியை பிடித்தவர் என்ன செய்ய போகிறார்?

Posted:

இலங்கையில், புதிய அரசு அமர்ந்துள்ளதால், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று பேருக்கு, அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில், மைத்ரி பால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். தமிழர்களின் ஓட்டுகள் தான், இவரது வெற்றியை நிர்ணயித்து உள்ளன. இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில், இவருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.தேர்தல் முடிவு வெளியானதை அடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம், கொழும்பில் நடந்தது. இதில், புதிய அதிபரிடம் முன் வைக்க வேண்டிய கோரிக்கைகள் பற்றி அலசப்பட்டது. இதில் முக்கியமானவை:* வடக்கு மாகாண ...

ஈழ தமிழர் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்படும்: கருணாநிதி

Posted:

சென்னை:'இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், ஈழத் தமிழர்கள் விரும்பும், அரசியல் மாற்றம் ஏற்படும் என, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.இலங்கை தேர்தல் முடிவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்டை நாடு ஒன்றில், நடந்த தேர்தலில், ஒருவர் தோல்வியடைந்ததற்கு, மகிழ்ச்சி கொள்வது, நகாரிகமற்றது. இருந்தாலும், தொப்புள் கொடி உறவுகளை, மிருகத்தனமாக வேட்டையாடிய, ராஜபக் ஷே தோல்வியடைந்தது, வரவேற்கத்தக்கது தான். இனப் படுகொலைக்கும், போர்க் குற்றங்களுக்காகவும் அவருக்கு, தண்டனை வழங்கும் போது தான், இயற்கை நீதி ...

மோடியை சந்திக்க ஆவலாக உள்ளேன்: டேவிட் கேமரூன்

Posted:

லண்டன்: இங்கிலாந்தில், பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், இதற்குநீண்ட நாட்களாகாது எனவும் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகில் வளர்ந்து வரும் சக்திமிக்க நாடு இந்தியா. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடனான பொருளாதார உறவு வலுப்படுத்தப்படும். இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். முன்பை விட இந்தியாவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில் தான் இந்தியா அதிகளவில் முதலீடு செய்துள்ளது. நான் பிரதமரான பின்பு இங்கிலாந்தில், 5 பில்லியன் பவுண்ட் அளவிற்கு இந்தியா முதலீடு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™