Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இறந்த சுறா மீனின் வயிற்றிலிருந்து குட்டி மீன்களை காப்பாற்றும் மனிதர்….

Posted: 05 Dec 2014 04:07 AM PST

shark

shark

This posting includes an audio/video/photo media file: Download Now

வாவ் பச்சை கலர்ல பூனையா?

Posted: 05 Dec 2014 04:01 AM PST

0b1fb0a91322_sf_1

0b1fb0a91322_sf_1

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியில் இருந்து அனுபவ வீரர்களை கழற்றிவிட்டது ஏன்?

Posted: 05 Dec 2014 03:57 AM PST

sanay_001

sanay_001அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண போட்டிக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் விளக்கம் கொடுத்துள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணியை அறிவித்த பின்னர் சஞ்சய் பட்டேல் அளித்த பேட்டியில், உலகக்கிண்ண போட்டிக்கான இந்திய உத்தேச கிரிக்கெட் அணி தெரிவில் சீனியர் வீரர்களின் பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால் வீரர்களின் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இளம் வீரர்கள் உள்ளூர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்களது பெயரை தவிர்க்க முடியாது. மேலும் உத்தேச அணியில் இடம் கிடைக்காததால் ஷேவாக், யுவராஜ்சிங் போன்றோரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதா? என்ற கேள்விக்கு நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நிறைய இளம் வீரர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகக்கிண்ணப் போட்டியில் எனது விருப்பம்: குஷியில் உத்தப்பா

Posted: 05 Dec 2014 03:51 AM PST

uttappa_001

uttappa_001உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க இந்திய வீரர் உத்தப்பா விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் உத்தப்பாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பெங்களூரில் உலகக்கிண்ண மாதிரி அறிமுக விழாவில் கலந்து கொண்ட இந்திய வீரர் ராபின் உத்தப்பா பின்னர் அளித்த பேட்டியில், 'தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பதே எனது முதல் விருப்பம். அணியில், ஒரு விக்கெட் கீப்பர்- துடுப்பாட்டக்காரராக நான் சேர்க்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. உலகக்கிண்ணப் போட்டிக்கான உத்தேச அணியில் இடம்பிடித்திருக்கும் நான் 15 பேர் கொண்ட இறுதி அணியிலும் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று நம்புகிறேன். விக்கெட் கீப்பராக தெரிவு செய்யப்பட்டாலும் முதல் 3 வரிசைக்குள் என்னால் இறங்க முடியும். ஆனால் எல்லாமே தெரிவாளர்களின் முடிவை பொறுத்தது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரை எனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். உலகக்கிண்ண அணியில் வாய்ப்பை பெறுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக அளவில் அடித்தளம் அமைத்த “QR குறியீடு”

Posted: 05 Dec 2014 03:47 AM PST

qr_code

qr_codeQR code (Quick Response) உலக அளவில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. பலரும் இந்த வாக்கியத்தை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது எதற்காக? இதனால் என்ன பயன்? தவல்களை விரைந்து பெறுவதற்காக தொழில் அமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு முத்திரை தான் இந்த QR Code. இது முதன்முதலில் ஜப்பானில் உள்ள ஒரு வாகனத்துறை சார்ந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒரு பொருளின் தகவல்கள் அனைத்தும் ஒரு மிஷின் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஆப்டிகல் லேபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த பொருளின் தகவல்கள் அனைத்தும் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் numeric, alphanumeric, byte / binary, and kanji என்ற Encoding முறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்தில் பொருட்கள் கண்காணிப்பு, அடையாளம் காணுதல், நேரத்தை கண்காணித்தல், ஆவணங்களை முறைப்படுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் என அனைத்து வேலையும் எளிதாக முடிகிறது. QR Code அமைப்பு டென்ஸோ வேவ் என்பவரால் 1994ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வாகன தயாரிப்புகளை கண்காணிக்க பெரிதும் உதவிய இந்த அமைப்பு, தற்போது வணிக கண்காணிப்பு முதல் பல வசதிக்காகவும் மொபைல் போன்களிலே வந்து விட்டது. ஸ்மார்ட் போன் இந்த வகையில் ஸ்கேன்னர் ஆக பயன்படுகிறது. இது பின்னிப் பிணைந்த அந்த குறீயீட்டில் இருந்து தகவலை எளிதாக பெற உதவுகிறது. கடந்த 2011ம் ஆண்டு யூன் மாதத்தில் தனது மொபைல் போன்களில் QR Code அமைப்பை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 14 மில்லியனை தொட்டது. இதில் 58% பேர் வீட்டில் இருந்தும், 53% மக்கள் கடைகளில் இருந்தும் பயன்படுத்த தொடங்கினர். இந்த 14 மில்லியன் மக்களில் 53% பேர் 18 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தென் கொரியா, அர்ஜென்டினா என தொடங்கி இப்போது உலக அளவில் உள்ள பெரிய கடைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷக் காய்ச்சலால் அவஸ்தையா? இதோ சூப்பர் மருந்து

Posted: 05 Dec 2014 03:42 AM PST

dried_ginger_004

dried_ginger_004தற்போதைய காலத்தில் அதிக மாசினால் பெரும்பாலான மக்களுக்கு தீராத காய்ச்சல் பிரச்சனை வருவதுண்டு. இதற்காக மருத்துவமனைக்கு ஓடுவதை விட வீட்டிலே எளிதான முறையில் நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். நம்மை பாதுகாக்கும் ஒரு மருந்து தான் "சுக்கு". இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது இந்த சுக்கு. இதனை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வப்போது பயன்படுத்தலாம். சுக்கின் மகத்துவங்கள் சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்ப நிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும். சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ''சுக்கு நீர்'' காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். புளி, வெல்லம் இரண்டையும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். புளி ஊறியதும் கொட்டை, நார்களை நீக்கி விடவும். பிறகு வெல்லத்தைப் பிசைந்து சுத்தம் செய்த புளிக்கரைசலில் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் வாணலியல் மிளகுப்பொடி, சீரகப்பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றையும் சேர்த்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். இந்த கலவை நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கினால் சுக்கு சட்னி ரெடி. பயன்கள் சுக்கு சட்னி உடலை சீரிக வைக்கவும் கொழுப்பை குறைக்கவும் மிகவும் உதவும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு ஒரு வாரம் சுக்கு சட்னியை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, எள், நசுக்கிய சுக்கு சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிட்டு பொடிக்கவும். புளியை ஊறவைத்து கரைத்து, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வாணலியில் கொதிக்கவிடவும். பிறகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கியவற்றை புளிக்கரைசலில் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு சுண்டி வந்ததும் அரைத்த பொடி சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கினால் சுக்கு குழம்பு தயார். பயன்கள் அஜீரணம், வாயுத்தொல்லை, தொண்டைக்கட்டு உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது சுக்கு குழம்பு. விஷக்காய்ச்சல், சளி போன்ற வியாதிகளை போக்க சுக்கு குழப்பு ஒரு சிறந்த மருந்து.

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்திரிகையாளரின் தலை உருளும்: ஐ.எஸ் பாணியில் மிரட்டும் அல்கொய்தா

Posted: 05 Dec 2014 03:15 AM PST

yeman_hostage_002

yeman_hostage_002அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை கொல்லப்போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த லூக் சோமர்ஸ்(Luke Somers Age-33) என்ற நபர், கடந்த 2013ம் ஆண்டு செம்டம்பர் மாதம் தலைநகர் சனாவில்(Sanaa) அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக பிணைக்கைதியாக உள்ள அவரை கொல்லப் போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் வீடியோ ஒன்றின் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோவில் தீவிரவாதிகள் பேசியதாவது, எங்களது கோரிக்கைகள் குறித்து அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை 3 நாள்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் பிணைக்கைதி லூக் சோமர்ஸை கொலை செய்துவிடுவோம் என பேசியுள்ளனர். ஆனால் அந்த கோரிக்கைகள் என்னென்ன என்பதை அவர்கள் வீடியோவில் பகிரங்கமாய் கூற மறுத்துள்ளனர். மேலும் 3 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் லூக் சோமர்ஸ் கூறியதாவது, பிரித்தானியாவில் பிறந்த நான் அங்கிருந்து அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளேன், இங்கிருந்து விடுதலையாக விரும்புகிறேன். என்னை மீட்டெடுக்க உதவியை எதிர்பார்க்கிறேன், எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை நான் நிச்சயமாக சொல்வேன், எனவே ஏதாவது செய்ய முடியுமென்றால் அதைச் செய்யுங்கள் நன்றி என கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூமிக்கு அடியில் புதைந்த பிரம்மாண்ட அரண்மனை: சுவாரஸ்ய தகவல்

Posted: 05 Dec 2014 03:13 AM PST

underground_palace_002

underground_palace_002பூமிக்கடியில் புதைந்த அரண்மனை ஒன்றை பிரித்தானிய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த தொல்லியல் துறையினர், கடந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய அரண்மனையை செலிஸ்பரி(Salisbury) பகுதியில் உள்ள அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 3 மீற்றர் கனமான சுவரால் சூழப்பட்ட இந்த அரண்மனை, 170 மீற்றர் நீளமும் 65 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு வளாகத்தையும், 60 மீற்றர் நீளம் கொண்ட அரங்கம் மேல்தளம் மற்றும் பல்வேறு தடுப்புச்சுவர்களை கொண்டுள்ளது. பிரதேசவியல் மற்றும் புவிஇயற்பியல் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அந்த அரண்மனையின் உட்புற மற்றும் வெளிப்புற முற்றங்களை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆய்வில் பூமிக்கடியில் நிறைய கட்டிடங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அந்த நகர எல்லைக்குள் உள்ள கட்டிடங்களின் விரிவான புகைப்படமும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த அரண்மனை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும் வலுவான இந்த அரண்மனையின் உள் மற்றும் வெளித்தோற்றம் ரோமானிய அரசின் உலோகக் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்! தமிழர்களிடம் மஹிந்த உறுதி

Posted: 05 Dec 2014 03:02 AM PST

north_gold_mahinda

north_gold_mahindaபோரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைகும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வடக்கின் பல பாகங்களிலிருந்து ரயில் மூலம் அழைத்து வரப்பட்ட தமிழ் மக்களுக்கு, ஜனாதிபதி மஹிந்த அவர்களின் தங்க நகைகளை கையளித்தார். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, மூன்று தசாப்த கால யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நீங்களே. மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள உங்களை அலரிமாளிகையில் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். முப்பது வருட துரதிஷ்டமான சூழ்நிலையை முடிவுக்குக்கொண்டு வருவதற்காக நாம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தோம். அந்தப் பிரயத்தனம் தோல்வியுற்ற நிலையிலேயே அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய நேரிட்டது. எனினும், இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தம். புலிகள் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டிருந்தனர். அந்த நிலையிலிருந்து நாம் உங்களை மீட்டுள்ளோம். நீங்கள் கொழும்புக்கு இன்று யாழ் தேவி ரயிலில் வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். நீண்டகாலத்திற்குப் பின் யாழ் தேவி ரயில் சேவையை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். யுத்தம் முடிவுற்ற பின் குறுகிய நான்கு வருடங்களுக்குள் நீங்கள் இழந்தவற்றை நாங்கள் பெற்றுக்கொடுத்துள்ளோம். மின்சாரம், வீதி, பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம். நீங்கள் யுத்தத்தில் இழந்தவற்றை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்வேன். வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் போது வெளிநாட்டு நிபுணர்கள் அச்செயற்பாடுகளை நிறைவு செய்துவிட்டு சுமார் 14 வருடங்கள் எடுக்கும் என்று தெரிவித்தனர். எனினும், நாம் எமது இராணுவத்தின் உதவியை நாடினோம். அதனால் குறுகிய நான்கு வருட காலத்துக்குள் கண்ணிவெடிகளை முழுமையாக எம்மால் அகற்ற முடிந்தது. நாம் வடக்கை பாரிய அபிவிருத்திக்குள்ளாக்கி வருகின்றோம். 30 வருட அபிவிருத்தியின் பின்னடைவை சமப்படுத்தவே நாம் துரித அபிவிருத்தியை மேற்கொள்கின்றோம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திலும் நாம் உரிய கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களுக்கான கல்வி பாடசாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதுடன், வடக்கில் மாத்திரம் 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் மட்டுமன்றி உலகளவில் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். தங்கத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுறும் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தங்கம் போன்ற தேசமொன்றை உருவாக்கித் தருவேன். புலிகள் உங்களிடம் ஏமாற்றிப்பெற்றுக் கொண்ட தங்கத்தை நாம் அரசுடமையாக்கிக் கொண்டிருக்க முடியும். எனினும் நாம் அப்படிச் செய்யவில்லை. உங்கள் சொத்துக்களை மீள உங்களிடமே ஒப்படைத்துள்ளோம். அது உங்களுக்கு மகிழ்ச்சி தருவது போன்றே எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு!

Posted: 05 Dec 2014 02:58 AM PST

gothapaya

gothapayaபாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த நிலையத்திற்காக ஒரு கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடியான தலையீட்டின் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியின் செலவினங்களில் சம்பளம், கொடுப்பனவுகள் என்பவற்றிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. வெறுமனே பயண செலவுகள், பராமரிப்பு செலவுகள், சேவை செலவுகள், விநியோக செலவுகள் போன்ற அன்றாட செலவுகளுக்காக இந்த ஒரு கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் ஹுலுகல்ல நியமிக்கப்பட்டிருந்தார். கொழும்பு சலாகா நிறுவனத்திற்குள் இயங்கிய சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அதனை நடத்தி வந்த பெண் உட்பட சிலரை கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்ய லக்ஷ்மன் ஹுலுகல்ல தலையீடுகளை செய்திருந்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அப்போது அறிவித்தார். எனினும் பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்த லக்ஷ்மன் ஹுலுகல்ல, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரின் அறிவித்தலை நிராகரித்ததுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தொடர்ந்தும் இயங்குவதாக அறிவித்தார். இதன் பின்னர் உலுகல்ல தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தொடர்ந்தும் இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவின் நோர்த் யோர்க் குடியிருப்பு பகுதிகளில் பத்தே மாதத்தில் 506 வீடுகள் உடைத்து திருட்டு

Posted: 05 Dec 2014 02:52 AM PST

burgler

burglerகனடாவின் நோர்த் யோர்க் குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் மீண்டும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் கவலையுற்றுள்ள மக்கள், தமது வீடுகளின் பாதுகாப்பினை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வருகின்றனர். டஃப்பிரின் வீதி மற்றும் பின்ச் அவனியூ மேற்கு பகுதியில் அமைந்துள்ள Bathurst Manor காவல்துறை தொகுதியில் மட்டும் இந்த வருடத்தில், ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் 16ஆம் திகதி வரையில் 506 வீடுடைப்பு திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த இந்த காலப்பகுதியில் ஐந்நூறுக்கும் அதிகமான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள காவல்துறை தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல காவல்த்துறை தொகுதி 32 யிலும் கார் உடைத்து திருடும் சம்பவங்கள் 337 பதிவாகியுள்ளதாகவும், ஹம்பர் ரிவரின் மேற்கு பகுதியில் இருந்து ஸ்டீல்ஸ் அவனியூ மேற்கினை உள்ளடக்கிய 23ஆவது இலக்க காவல்த்துறை தொகுதியிலும் இதுவரை 400ற்கும் அதிகமான வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெடுஞ்சாலைக்கு சமீபமாக உள்ள இந்த பிரபலமான பகுதிகளில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் திருடர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் காணப்படுவதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனை கட்டுப்படுத்துவதற்கு தாம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தமது மிக முக்கிய பணிகளில் ஒன்றாக அது விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பகுதிளில் இடம்பெற்று வந்த பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கடந்த கோடை காலத்தின் போது மேற்கொண்ட "யெலோ பேர்ட்" என்ற விசேட நடவடிக்கையின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் இயங்கிவந்த பாரிய கொள்ளை கும்பல் ஒன்றினை கைது செய்திருந்தனர். உயர்தர கார்கள், பெறுமதி வாய்ந்த பொருட்கள் உள்ளிட்ட ஐந்து மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறையினரால் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்த பகுதியில் வாகன திருட்டுகள், வீடு புகுந்து திருடுதல், வழிப்பறிகள் போன்றன இன்னமும் தொடர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய வருமான வரித் திணைக்கள இணையத்தளத்தை ஊடறுத்தவருக்கு எதிராக 16 குற்றச்சாட்டுக்கள்!

Posted: 05 Dec 2014 02:45 AM PST

stephen-arthuro-solis-reyes-yearbook-picture

stephen-arthuro-solis-reyes-yearbook-pictureகனேடிய வருமான வரித் திணைகளத்தின் இணையத்தளம் ஊடறுக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஒன்றாரியோவின் லண்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக ஆர்சீஎம்பியினர் மேலும் 16 குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். ஸ்ரீஃபென் ஆதுறோ சோலிஸ் றெயெஸ் (Stephen Arthuro Solis-Reyes) என்ற அந்த நபர் மீது ஏப்ரல் மாதம், கணினியை அனுமதிக்கப்படாத வகையில் பயன்படுத்தியமை, குழப்பம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் மட்டும் சுமத்தப்பட்டன. கணினி விஞ்ஞான மாணவரான அவர், கனடா வருமான வரித் திணைக்கள இணையத்தை மட்டுமின்றி வேறு இணையத்தளங்களையும் ஊடறுத்தாரென ஆர்சீஎம்பியினர் குற்றம் சுமத்துகிறார்கள். இவர் எதிர்வரும் 19 ஆந் திகதி ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என கூறபட்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™