மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- முக்கிய பிரமுகர்களுக்கு தீவிரவாதிகள் குறி: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
- கார்த்திகை தீப விழா: திருப்பதி கோவிலில் பலத்த பாதுகாப்பு
- கோழிக்கோட்டில் நாளை மீண்டும் முத்தம் கொடுக்கும் போராட்டம்
- நடன ஆசிரியை கழுத்து அறுத்து கொலை: நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் வெறிச்செயல்
- ஜிசாட்–16 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவது இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு
- திருப்பதி லட்டு தயாரிக்க நவீன எந்திரங்கள் வாங்க தேவஸ்தானம் முடிவு
- சபரிமலையில் பக்தர்கள் படி பூஜை நடத்த வருகிற 2030–ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது
- கேரள சட்டசபையில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: காயமின்றி தப்பிய 3 மந்திரிகள்
- பஞ்சாபில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 60 பேரின் பார்வை பறிபோனது: 2 பேர் கைது
- விசாரணை கைதிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
- சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்க பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி கடிதம்
- தீவிரவாதிகள் தாக்குதலில் 23 பேர் பலி: பிரதமர் மோடி கடும் கண்டனம்
- பாரதியார் பிறந்த நாளும் தேசிய அளவில் கொண்டாடப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
- காஷ்மீர்: மேதார் தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு
- கிலானி குடும்பம் அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டும்: பா.ஜனதா அழைப்பு
- இந்திய கடற்படைக்கு ரூ.6 ஆயிரம் கோடியில் 16 நவீன ஹெலிகாப்டர்கள்: அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்
- அதிக வாக்குப்பதிவு: விரக்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்- ராஜ்நாத் சிங்
- மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
- மராட்டிய மந்திரி சபை விஸ்தரிப்பு: சிவசேனாவைச் சேர்ந்த 5 பேர் கேபினட் மந்திரியாக பதவி ஏற்பு
- பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்யும் நாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது- பாரிக்கர்
| முக்கிய பிரமுகர்களுக்கு தீவிரவாதிகள் குறி: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு Posted: 05 Dec 2014 10:45 PM PST உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 22–வது ஆண்டு தினம் இன்று நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திடீர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக ஐ.எஸ்.தீவிரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடைபெறக் கூடும் என்று |
| கார்த்திகை தீப விழா: திருப்பதி கோவிலில் பலத்த பாதுகாப்பு Posted: 05 Dec 2014 10:19 PM PST திருப்பதி கோவிலில் இன்று கார்த்திகை தீபவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில் மற்றும் தெப்பக்குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கோவிலில் இன்று காலையில் வசந்த உற்சவம், சகஸ்வரத்தில் அலங்காரசேவை ரத்து செய்யப்பட்டது. |
| கோழிக்கோட்டில் நாளை மீண்டும் முத்தம் கொடுக்கும் போராட்டம் Posted: 05 Dec 2014 10:08 PM PST கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அநாகரீக செயல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சில சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு கண்டனம் தெரிவித்து பேஸ்புக் ஆர்வலர்கள் கடந்த மாதம் கொச்சியில் முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நாடு முழுவதும் |
| நடன ஆசிரியை கழுத்து அறுத்து கொலை: நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் வெறிச்செயல் Posted: 05 Dec 2014 09:48 PM PST களியக்காவிளையை அடுத்த பாறசாலை, பாலூர் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 36). இவரது மனைவி சந்தியா, நடன ஆசிரியை. இவர்களுக்கு ஆதித்யா, அகல்யா, அனித் என 3 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கணவர் வீட்டில் |
| ஜிசாட்–16 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவது இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு Posted: 05 Dec 2014 09:30 PM PST மோசமான வானிலை காரணமாக ஜிசாட்-16 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவது இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வுகழகமான 'இஸ்ரோ' ஜிசாட்–16 என்ற செயற்கை கோள் |
| திருப்பதி லட்டு தயாரிக்க நவீன எந்திரங்கள் வாங்க தேவஸ்தானம் முடிவு Posted: 05 Dec 2014 09:25 PM PST திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் தற்போது பக்தர்களின் தரிசன டிக்கெட்டுக்கு தகுந்த வகையில் அதிகபட்சமாக 4 லட்டுகளே வழங்கப்படுகிறது. திருப்பதி சென்று வரும் பக்தர்களிடம் அவரது உறவினர்களும், நண்பர்களும் கேட்பது எங்கே லட்டு என்பது தான். ஆனால் தேவஸ்தானம் கொடுக்கும் |
| சபரிமலையில் பக்தர்கள் படி பூஜை நடத்த வருகிற 2030–ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது Posted: 05 Dec 2014 09:10 PM PST கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொள்ள பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை வரும் பக்தர்கள் அய்யப்பனுக்கு காணிக்கை செலுத்துவதோடு அங்கு நடக்கும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் செய்வது உண்டு. இதற்காக அவர்கள், கோவில் நடைதிறந்திருக்கும் நாட்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை செய்ய கோவில் நிர்வாகத்திடம் பணம் கட்டி முன் பதிவு செய்திருக்க வேண்டும். படி பூஜைக்கு ரூ.40 ஆயிரமும், உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.25 ஆயி |
| கேரள சட்டசபையில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: காயமின்றி தப்பிய 3 மந்திரிகள் Posted: 05 Dec 2014 07:39 PM PST கேரளாவில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று சபை கூடியதும், மறைந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினர். |
| பஞ்சாபில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 60 பேரின் பார்வை பறிபோனது: 2 பேர் கைது Posted: 05 Dec 2014 07:11 PM PST பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் குமான் கிராமத்தில் 10 நாட்களுக்கு முன்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமை குருநானக் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மஞ்சித்சிங் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். ஜலந்தரில் தனியார் கண் மருத்துவமனை |
| விசாரணை கைதிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி Posted: 05 Dec 2014 07:08 PM PST விசாரணை கைதிகள், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. |
| சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்க பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி கடிதம் Posted: 05 Dec 2014 06:45 PM PST சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்கும் யோசனைக்கு சில மத்திய மந்திரிகளும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த தடை நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மும்பையைச் சேர்ந்த |
| தீவிரவாதிகள் தாக்குதலில் 23 பேர் பலி: பிரதமர் மோடி கடும் கண்டனம் Posted: 05 Dec 2014 06:18 PM PST காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்த போதிலும், இதுவரை நடந்து முடிந்த 2 கட்ட வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 71 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த நிலையில், 3-வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது. |
| பாரதியார் பிறந்த நாளும் தேசிய அளவில் கொண்டாடப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் Posted: 05 Dec 2014 01:32 PM PST பாரதியார் பிறந்த நாளும் தேசிய அளவில் கொண்டாடப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு நம் நாட்டின் சரித்திரத்தில் முதன் |
| காஷ்மீர்: மேதார் தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு Posted: 05 Dec 2014 09:50 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், மேதர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 7-ந்தேதி மறு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேதர் தொகுதியில் உள்ள சுங்கான்-பி, வாக்குச்சாவடி எண் 34-ல் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. |
| கிலானி குடும்பம் அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டும்: பா.ஜனதா அழைப்பு Posted: 05 Dec 2014 09:10 AM PST ஜம்மு-காஷ்மீரின் பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானியின் குடும்பத்தினர் அரசியல் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் என்றும், ஜனநாயகத்தை கொண்டாட வேண்டும் என்றும் பா.ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| இந்திய கடற்படைக்கு ரூ.6 ஆயிரம் கோடியில் 16 நவீன ஹெலிகாப்டர்கள்: அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம் Posted: 05 Dec 2014 07:56 AM PST அமெரிக்காவின் 'சிகோர்ஸ்கை' என்ற ஹெலிகாப்டர் நிறுவனம் இந்திய கடற்படைக்கு 6000 கோடி ரூபாயில் 16 நவீன ஹெலிகாப்டர்களை தயாரித்து கொடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதற்கான டெண்டர் நேற்று திறக்கப்பட்டபோது இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு, இந்த ஒரு கம்பெனி மட்டுமே போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அகஸ்ட்டா வெஸ்லேண்ட்-ன் துணை கம்பெனியான பின்மெக்கானிக்கா இந்தியாவிற்கு வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் தயாரித்து வழங்க 3550 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை |
| அதிக வாக்குப்பதிவு: விரக்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்- ராஜ்நாத் சிங் Posted: 05 Dec 2014 06:35 AM PST மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு- காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத விரக்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்று ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "நடைபெற்று வரும் தேர்தலில் பொதுமக்களின் பேராதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது. இதனாலேயே வரலாற்றுமிக்க வாக்குப்பதிவான 71 முதல் 72 சதவீத |
| மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார் Posted: 05 Dec 2014 05:30 AM PST உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் மணமகனுக்கு அவரது அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. |
| மராட்டிய மந்திரி சபை விஸ்தரிப்பு: சிவசேனாவைச் சேர்ந்த 5 பேர் கேபினட் மந்திரியாக பதவி ஏற்பு Posted: 05 Dec 2014 05:23 AM PST மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிற்கு ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனாவின் ஆதரவை கோரியது. ஆனால், நாங்கள் கேட்கும் மந்திரி சபையை தராவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்றது. இருந்தாலும், பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி ஏற்றார். இந்நிலையில், சிவசேனா ஆதரவு இல்லாமல் சட்டசபையில் பா.ஜனதா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இருந்தாலும், |
| பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்யும் நாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது- பாரிக்கர் Posted: 05 Dec 2014 05:13 AM PST பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ராணுவம் மற்றும் நிதியுதவி செய்யும் பல நாடுகளின் செயல்பாடுகளை இந்தியா தொடர்ச்சியாக கவனித்து வருகிறது என்று பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ''பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ராணுவம் மற்றும் நிதியுதவி செய்து வருகிறது. இதை இந்தியா தொடர்ந்து |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |